தேசபக்தி - அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் … இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பசு
ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி
பொதுவாக நான் ஆங்கிலக் கட்டுரைகளை வாசிக்க முயல்வதில்லை. ஏனென்றால் என் ஆங்கிலப் புலமையின் உயரம் அவ்வளவு தான். தேவை ஏற்படும் போது மொழிபெயர்ப்புகளை நாடுவதும், கிடைக்காவிட்டால் மொழிபெயர்ப்பு கருவிகளை நாடுவதும் தான் என் வழக்கம். மொழிபெயர்ப்புக் கருவிகள் வழியாக புரிந்து கொள்ள முயல்வது என்பது இடியாப்ப இழைகளை நேர்படுத்தும் திறமையை ஒத்தது. அண்மையில் ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். படித்து முடிக்க முடியாத அளவுக்கு எரிச்சல் வந்தது. அந்த அளவுக்கு மனம்போனபடி, கட்டுரையின் கருத்தை … ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி-ஐ படிப்பதைத் தொடரவும்.