ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உலகளாவிய பட்டினிக் குறியீடு உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இதில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பட்டினிக் குறியீடு 107 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 121 நாடுகளின் பட்டினி, ஊட்டக் குறைப்பாடு தொடர்பானபுள்ளி விவரங்களைத் தொகுத்துப் பார்த்ததில் இந்தியாவின் இடம் 107. இந்தியாவுக்கு முன்னால் 106 நாடுகளும், இந்தியாவுக்குப் பின்னால் 14 நாடுகளும் இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள் உள்ளிட்ட பல … பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பட்டினி
பொறுமைக்கும் அளவிருக்கிறது மன்னர்களே!
செய்தி: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் பெர்லினில் திரண்ட 20,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர். கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், ‘எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது’ என்று முழக்கமிட்டனர். இந்த ஊர்வலத்தில் அரசியல்வாதிகள் உட்பட, ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் … பொறுமைக்கும் அளவிருக்கிறது மன்னர்களே!-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊரடங்கு தொடரும், ரேசன் தொடராது
செய்தி: ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கால் பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதத்திற்கு அரிசியோடு சர்க்கரை, பருப்பு, எண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்கி … ஊரடங்கு தொடரும், ரேசன் தொடராது-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்
வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்
எந்த வர்க்கத்தினரின் உயிரை கொரோனாவிடமிருந்து பாதுகாப்பதற்காக, எந்த வர்க்கத்தினர் சாக வேண்டும்? மும்பை – பாந்த்ராவில் நேற்று நடைபெற்றிருக்கும் தடியடி, சிதறிக் கிடக்கும் செருப்புகள், ஏழைத் தொழிலாளிகளின் கண்ணீர் – இவற்றைக் காணச் சகிக்கவில்லை. “யாரோ ஒருவர் சோறுபோடுவார் என்று நாங்கள் எப்படி கையேந்தி நிற்க முடியும்?” என்று கேட்கிறார் ஒரு தொழிலாளி. “சோறு போட வக்கில்லாத அரசுக்கு எங்களைத் தடுத்து வைக்க என்ன உரிமை இருக்கிறது?” என்று அந்த அப்பாவி மக்களுக்கு கேட்கத் தெரியவில்லை. எல்லோருக்கும் … பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2
இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படித்து விட்டு இதை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அதை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்: கொரோனா: ஊரடங்கின் பிறகு? திருட்டு அதிகரித்து விட்டது அதானால் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். பிற நாட்டினர் இங்கு சட்ட விரோதமாக வசிக்கிறார்கள் அதனால் குடியுரிமை சட்டம் திருத்தப்படலாம். மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. முறைகேடு நடக்கிறது. அதனால், தேசிய அடையாள அட்டையை உருவாக்கி … கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: ஊரடங்கின் பிறகு?
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் அதிகரிக்குமோ எனும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு எனும் வீட்டுச் சிறைக்குள் மக்கள் தங்களைத் தாங்களே பிணைத்துக் கொண்டுள்ளார்கள். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் 200 கிமீ தூரம் கூட மக்கள் நடந்தே கடக்கிறார்கள் எனும் செய்திகளையும், ஊரடங்கு காலத்தில் இதுவரை பட்டினியால் 22 பேர் மரணமடைந்துள்ளார்கள் எனும் செய்தியையும், விளைந்தும் அறுவடை செய்ய முடியாத, கறந்த பாலை சாக்கடையில் கொட்டும் செய்திகளையும் காணும் போது, மழுங்கிய … கொரோனா: ஊரடங்கின் பிறகு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி
கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் அனைத்து பிரச்சனைகளும் மறக்கடிக்கப்பட்டு அதிமுக அடிமைக் கூடாரத்தின் கொள்ளைக் கூட்டத் தலைவனாக கோலோச்சப் போவது யார்? எனும் பிரச்சனையே முதன்மையான மக்கள் பிரச்சனையாக மாற்றப்பட்டது. ஊடக விலங்குகள் அப்படிக் கருதிக் கொண்டதால் மக்களும் அவ்வாறே கருதும்படி ‘வைத்து’ செய்யப்பட்டனர். ஆனால் மக்கள் பிரச்சனைகள் மேலும் மேலும் தீவிரமடைந்தன. அவற்றில் குறிப்பானதும், முதன்மையானதுமான பிரச்சனை விவசாயிகளின் மரணம். விவசாயிகள் மரணமடைவது இந்தியாவில் புதிய விடயமல்ல. கடந்த 25 ஆண்டுகளில் சற்றேறக் குறைய … பன்னீர் சசி எடப்பாடி, விவசாயி போகுறான் பாடையேறி-ஐ படிப்பதைத் தொடரவும்.
மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து
அண்மையில் நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது. வைரமுத்து எழுதி வெளியிட்ட ‘மூன்றாம் உலகப் போர்’ எனும் நாவலை ஒரே வாரத்தில் மூன்றாம் பதிப்பு வெளியிட்டார்களாம். ஆச்சரியமாக இருந்தது. முதல் பதிப்பை வெளியிடும் போதே, இது இரண்டாம் பதிப்புக்கு, இது மூன்றாம் பதிப்புக்கு என்று ஒதுக்கி வைத்து விட்டார்களோ. கவிஞர் வைரமுத்து வெகுவாக அறியப்பட்டவர் தான். இன்னும் பாட்டெழுதிக் கொண்டிருக்கும், போன தலைமுறை திரைப்பட பாடலாசிரியர். பாரதிராஜா போன்ற இயக்குனர்களுக்கு … மூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.