குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை

  கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடலின் கைகளில் இன்னும் காயவில்லை மலம் அள்ளிய ஈரம். ஒருமுறை கைதட்டிக் கொள்வோம் ஐந்து செயற்கைக் கோளுடன் வெற்றிரமாக ஏவப்பட்டது ராக்கெட்.   வெமுலாக்கள் சாதி வெறியால் மரணம் ஆனால் என்ன? தலித்தா இல்லையா ஆய்வு செய்வோம். கொஞ்சம் பாராட்டலாம் ஊனமுற்றோர்க்கு மோடி சக்கர நாற்காலி வழங்கினார்.   இடுகாட்டுக்கு பாதையில்லை போலீசே பிணம் திருடி புதைத்த கொடூரம். பெருமிதம் கொண்டால் என்ன? பன்னாட்டு தரத்தில் எட்டு வழி வழுக்கும் சாலைகள்.   … குடியரசு கொண்டாட்டம் ஒரு முரண்தொடை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பதான்கோட் – இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே

கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் என்னுமிடத்தில் உள்ள விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஐந்து நாட்கள் நீண்ட இந்த தாக்குதலில் ஏழு வீரர்களை இழந்து ஆறு பயங்கரவாதிகளைக் கொன்றிருக்கிறார்கள். முதலில் ஜெய்ஷ் இ முகம்மது எனும் அமைப்பு நடத்தியதாக கூறப்பட்டாலும் பின்னர் ஐக்கிய ஜிஹாத் எனும் அமைப்பு இத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஒப்பீட்டளவில் இந்த முறை தேச பக்தி பொங்கி பெருக்கெடுத்து ஓடவில்லை. அது போலவே ஊடகங்களில் வழியும் இஸ்லாமிய வெறுப்பும் … பதான்கோட் – இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே-ஐ படிப்பதைத் தொடரவும்.