குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத எல்லை கடந்து அனைத்து மக்களும் இந்திய உணர்வோடு போராடும் இந்தப் போராட்டத்தை ஒரு மதப் போராட்டம் போல் சித்தரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும் நின்று போகாமல் இடையறாது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கர்னாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 20ம் தேதி (20.02.2020) ஒவைசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒரு போராட்டத்தில் கலந்து … ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பன்னாட்டு நிறுவனங்கள்
ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு
ஜூலை 1ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி யை முன்வைத்து உருவாக்கி உலவ விடப்பட்டுள்ள ஏராளமான பொய்களில் மிகவும் கொடூரமானது, “சாமானிய மனிதன் ஜி.எஸ்.டி யை வரவேற்கிறான்” என்பது. சாதாரண உழைக்கும் அடித்தட்டு மக்களை விட்டு விடுவோம், படித்து ஓரளவு நல்ல வேலையில், ஊதியத்தில் இருக்கும் பலருக்கும் ஜி.எஸ்.டி என்றால் என்ன? எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பது தெரியாது. ஏதோ ஒரு புதிய வரிமுறை என்பதைத் தாண்டி இங்கே … ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சுடுகாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
இது வேற தமிழ்நாடுடா!
நெடுவயல் இன்னொரு மெரினாவாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். காவி பண்டாரங்களைத் தவிர வேறெவரும் அதை ஆதரிக்கவில்லை. அந்த பண்டாரங்கள் கூட நேரடியாக ஆதரிக்க முடியாமல் பசப்பலான சொற்களால் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களிடம் அறுவறுக்கத்தக்க காவித் திமிர் வெளிப்படவே செய்கிறது. மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். அப்படியென்றால் நெடுவயலில் குவிந்திருக்கும் மக்களைக் குறித்து இந்த காவிக் … இது வேற தமிழ்நாடுடா!-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடுப்பு ஊசி: எது வதந்தி?
இன்றிலிருந்து பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து 28ம் தேதி வரை தமிழகத்தில் 9 மாத குழந்தையிலிருந்து 15 வயது வரை உள்ளவர்களுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பு ஊசி இலவசமாக போடப்படும் என அறிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டாயத் தடுப்பு ஊசி திட்டத்தில் இந்தியாவும் இணைந்திருக்கிறது எனவே குறிப்பிட்ட வயதுக்குறிய அனைவரும் கண்டிப்பாக தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும் என்று செய்திகள் வந்தன. தடுப்பு ஊசிக்கு எதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி எதிர்ப்பு வந்ததும் கட்டாயமாக … தடுப்பு ஊசி: எது வதந்தி?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?
அண்மையில் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற படம் என்றால் அது ஜோக்கர் தான். சமூக வலைத் தளங்கள் எழுதப்பட்ட மதிப்புரைகள், பார்த்தவர்களிடம் கேட்ட கருத்துகள் அனைத்துமே சிறப்பான படம், சமகால அரசியலை படம் பிடித்துக் காட்டும் படம் என்பதாகவே இருந்தன. இவையே, படத்தை பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது, கூடவே, ‘வாழ்வது தான் கஷ்டம் என்றால் இப்போது பேலுவதும் கஷ்டமாகி விட்டது’ எனும் அதன் விளம்பர வாசகம். சிறந்த அரசியல் நையாண்டிப் படமாகவே இருக்கிறது. ஆனாலும், … ஜோக்கர்: நாம் எதற்கு ஆயத்தமாய் இருக்கிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..
காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு (ஆடு தாண்டும் காவிரி) எனும் இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசியல்வாதிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதற்கு எதிராக சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. பெரும்பாலான இடங்களில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. என்றாலும், மக்களின் உணர்வுபூர்வமான பங்களிப்புடன் நடந்தது என்று கூற முடியவில்லை. ஏன் இது உணர்வுபூர்வமான பிரச்சனை இல்லையா? தமிழகம் கடைமடை மாநிலமாக இருப்பதன் … ஆடு தாண்டும் காவிரியை மக்கள் தாண்டினால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?
திரெண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள்! தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம்! எதுவன்முறை? யார் வன்முறையாளர்கள்? தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்! பொதுக்கூட்டங்கள் தெருமுனைக்கூட்டங்கள் கலை நிகழ்ச்சிகள் அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாருதி கார் ஆலைத் தொழிலாளர்கள் பொங்கியெழுந்தனர். அவர்களின் கோபத்தீயில் வெந்து மடிந்தான் ஆலையின் மனித வளப் பொது மேலாளர் அவனீஷ்குமார் தேவ். முதலாளிகள் சங்கங்களும், ஓட்டுக் கட்சிகளும் பெருங்குரலெடுத்துக் கண்டனம் செய்தனர். அன்னிய மூலதனம் வராது, வளர்ச்சி குறையும் என ஓலமிட்டனர். தொழிலாளி வர்க்கத்தையே கொலைகார … எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பயங்கரவாத பீதியூட்டும் பயங்கரவாதிகள்
கேரளாவில் நக்சல் பயங்கரவாதிகள் ஊடுறுவி விட்டதாக மன்மோகன் சிங் பத்திரிக்கையாளர்களைக் கூட்டி அண்மையில் அறிவித்திருக்கிறார். குற்றால மலையில் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாக தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. உள்நாட்டு அச்சுறுத்தல் எல்லைமீறி போய்விட்டதாக ப.சிதம்பரம் அவ்வப்போது திருவாய் மலர்ந்தருளுகிறார். சல்வாஜுடும் போன்ற ஆயுதக் குழுக்களை மாநில அரசுகள் கட்டியமைத்திருக்கின்றன. பல்லாயிரம் கோடி செலவில் ‘ஆப்பரேசன் கிரீன் ஹண்ட்’ எனும் படையெடுப்பை சொந்த மக்களின் மீது ஏவி விட்டிருக்கிறது மைய அரசு. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது நாட்டில்? எது … பயங்கரவாத பீதியூட்டும் பயங்கரவாதிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்
இந்தியாவில் அரசவைக் கோமாளி என்று ஒருவர் இருந்தார். போகுமிடமெல்லாம் தூங்குங்கள் கனவு காணுங்கள் என்று கூவிக் கொண்டிருப்பது தான் அவர் வேலை. மார்டின் லூதர் கனவு கண்டார்,விகடர் ஹியூகோ கனவு கண்டார் என்று கூறிக் கொண்டு தமிழ் நாட்டிலும் ஒருவர் தான் கனவு கண்டதாய் தொலைநோக்கு திட்டம் 2023 என்று அறிவித்திருக்கிறார். அதாவது ஆசிய வளர்ச்சி வங்கி போட்டுக் கொடுத்த திட்டத்திற்கு வாயசைத்திருக்கிறார். கிராமப் பகுதிகளில் கதை ஒன்று கூறுவார்கள். களத்து மேட்டில் அப்பாவும் மகனும் … எல்லோரும் ஜோரா கை தட்டுங்கள்: 2023 ல் ஏழைகளே இருக்க மாட்டார்களாம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு
கடந்த ஏழு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான். இதில் அந்த பகுதிக்கு வெளியில் உள்ள மக்களில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம். கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் அணு உலை அமைவதை தீரத்துடன் எதிர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. 200 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. … கூடங்குளத்துடன் போர் தொடுத்திருக்கும் தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.