காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

rss

கடந்த 29ம் தேதி சென்னையிலும் சில இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் பேரணி நடந்திருக்கிறது. 15 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். இனி இந்த காவி வானரங்கள் தமிழகத்தில் தங்கள் பயங்கரவாத செயல்களை எந்தத் தடையுமின்றி அரங்கேற்றும். தமிழகத்தில் தற்போது இருக்கும் ஓபிஎஸ் அரசாங்கம் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும். அதாவது அதிமுகவின் போர்வையில் பாஜக ஆட்சி செய்யும். இதன் அண்மை எடுத்துக்காட்டு தான் மாணவர்கள் போராட்டம் குண்டாந்தடியால் கலைக்கப்பட்டதும், தொடர்ந்து மீனவர் குடியிருப்புகள் சிதைக்கப்பட்டதும், அவர்களின் வாழ்வாதாரம் தகர்க்கப்பட்டதும். இது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான ஒப்பந்தம் மிச்சமிருக்கும் நானகாண்டுகளும் அதிமுகவினர் தமிழகத்தை மொட்டையடிக்க அனுமதிக்கப்படுவார்கள், பதிலாக, காவி பயங்கரவாதிகள் தமிழகத்தை தாங்களின் பரிசோதனைக் கூடமாக மாற்றியமைப்பார்கள். ஆக மொத்தம், கொள்ளையடிப்பதற்கு, பார்ப்பனியத்துக்கு ஆதரவு தெரிவிக்காத, இசைவளிக்காத யாரும் இரக்கமின்றி ஒடுக்கப்படுவார்கள்.

 

இதன் பொருள் இதற்கு முன்னர் தமிழகத்தில் காவி பயங்கரவாதிகள் எதுவும் செய்ய முடியாதிருந்தார்கள் என்பதல்ல. இந்திய அரசு எந்திரமே காவி மயமாகி இருக்கிறது. அதன் வழியே எங்கும் எப்போதும் எதுவும் செய்து முடிக்கும் திறனுடன் அது இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் ஒப்பீட்டளவில் வட மாநிலங்களில் செயல்பட முடிந்த அளவுக்கு தமிழகத்தில் செயல்பட முடியவில்லை. ஆனால் இனி அப்படி இருக்காது என்பதற்கான வெளிப்படையான தொடக்கம் தான் காவி பயங்கரவாதிகளின் அந்த பேரணிமட்டுமல்லாது இந்தப் பேரணிக்கு சில தனியார் பள்ளிகள் எந்தவித மறைவுமில்லாமல் தங்கள் பள்ளி வாகனங்களிலேயே மாணவர்களை அனுப்பி வைத்திருக்கின்றன. தனியார் பள்ளிகள் எதை போதிக்க விரும்புகின்றன என்பதற்கு இது ஒரு சான்று.

 

எத்தனையோ இயக்கங்கள் இங்கு பேரணி நடத்துகின்றன, நடத்தியிருக்கின்றன. அதேபோல் ஆர்.எஸ்.எஸ்ம் நடத்தியிருக்கிறது என்பதாக இதைப் பார்ப்பவர்கள் அதன் கடந்தகால வரலாறு தெரியாத அப்பாவிகளாக மட்டுமே இருக்க முடியும். இந்தியாவின் அனைத்து துறைகளிலும் ஊடுருவி இருக்கும், மூன்று முறை தடை செய்யப்பட்ட, கொலை, குண்டு வைப்பு உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஒரு பயங்கரவாத இயக்கத்தை வெகு எளிதாக எண்ணுவது ஒருவகையில் மடமையும் கூட. இந்த அடிப்படையில் இருந்து தான் அந்தப் பேரணியைப் பார்க்க வேண்டும். தவிரவும், இந்தப் பேரணியை நடத்துவதற்கு அவர்கள் கூறியிருக்கும் காரணம் அதைவிட அபாயகரமானது. அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் விழா, சுபாஸ் சந்திர போஸ் 120, குரு கோவிந்த் சிங்கின் 350 ம் பிறந்த நாள் விழா, ராமனுஜத்தின் 1000 வது ஆண்டு நிறைவு விழா ஆகியவைகளை முன்னிட்டு பேரணி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். குறிப்பாக அம்பேத்கர். தன் வாழ்நாள் முழுவதும் பார்பனிய மதத்தை கடுமையாக எதிர்த்த அம்பேத்கரின் பிறந்த நாளை பார்ப்பன வெறியர்கள் கொண்டாடுவது என்பதைவிட அம்பேத்கருக்கு வேறு அவமரியாதை இருக்க முடியுமா?

 

பௌத்த மதத்தை தழுவும் போது அம்பேத்கர் 22 உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டு பௌத்த மதத்தை தழுவினார். அவைகளில் பார்பனிய மதம் குறித்த அவரின் விமர்சனங்கள் மிகக் கடுமையானவை. அதில் முதல் பத்து உறுதிமொழிகள் பார்ப்பனியத்துக்கு சம்மட்டி அடி கொடுத்தவை.

 

1. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் 

தொழுது தொட்டு வழிபடவும் மாட்டேன்

 

2. ராமன், கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது தொட்டு 

வழிபடவும் மாட்டேன்

 

3. கௌரி, கணபதி மற்றும் இதர இந்து மத தெய்வங்களிடமும் பெண் 

தெய்வங்களிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது தொட்டு 

வழிபடவும் மாட்டேன்

 

4. கடவுள்களின் அவதாரத் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை

 

5. மகான் புத்தர், விஷ்ணுவின் அவதாரம் என்று நான் நம்பவில்லை; நம்பவும் மாட்டேன்

 

6. நான் சிரார்த்தம்செய்ய மாட்டேன். ‘பிண்டதானமும்தரமாட்டேன்

 

7. புத்தரின் சித்தாந்தங்களுக்கும் போதனைகளுக்கும் மாறான முறையில் 

எவ்வகையிலும் செயல்படமாட்டேன்

 

8. பிராமணர்களைக் கொண்டு எந்த சமயச் சடங்குகளையும் செய்ய மாட்டேன்

 

9. மனித குலத்தின் சமத்துவத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்

 

10. சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடுவேன்

 

பார்ப்பனிய மதத்துக்கு சம்மட்டி அடி கொடுத்த அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அதே பார்ப்பனிய பயங்கரவாதிகள் பேரணி நடத்துவது என்பது அவர்களின் அரசியலுடன் தொடர்பு கொண்டது.

 

எல்லா வழிமுறைகளிலும், எல்லா வகைகளிலும் பார்ப்பனிய மேலாதிக்கமும், பிற மக்கள் மீதான ஒடுக்குமுறையும் தான் பார்ப்பனியத்தின் அரசியல். இந்த மேலாதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் சிறுபான்மையினரான பார்ப்பனியர்கள் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களைக் கொண்டே செய்து வருகிறார்கள். அம்பேத்கரை ஆராதிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் அம்பேத்கரை உள்வாங்கி இருக்கிறார்களா எனும் கேள்விக்குறி தான் இன்றைய யதார்த்தம். அதனால் தான் பார்ப்பனியம் அம்பேத்கரின் பெயரை பயன்படுத்திக் கொண்டு முன்னே வருகிறது.

 

ஆயிரமாயிரம் ஆண்டு கால பார்ப்பனிய வரலாறு, ஒடுக்கப்பட்ட மக்களின் இரத்தம் சிந்திய வரலாறு. அந்த இரத்த வரலாற்றின் எச்சத்தில் நிற்பவர்களிடம் சிறுபான்மையினரை எதிரியாய் திணிப்பதற்காக அம்பேத்கரை புனிதப் பொருளாக மாற்றுகிறது பார்ப்பனியம். அம்பேத்கர் பெயரை உச்சரிக்க நீங்கள் யாரடா நாய்களா? என்று நாம் திருப்பியடிக்க வேண்டும். இது பெரியாரின் மண், அம்பேத்கரை உள்வாங்கிய மண் என்பதை அவர்களுக்கு காட்ட வேண்டும்.

 

வரலாற்று சிறப்புமிக்க மெரினா போராட்டம் அதற்கான முதற்படியில் எட்டு வைத்திருக்கிறது. தமிழகத்தின் மீது பார்ப்பனியத்துக்கு இருக்கும் பலவித பதட்டங்களில் இந்த மெரினா போராட்டம் முதன்மையானதாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு எனும் முகாந்திரத்தை முன்வைத்து நடந்ததாக இருந்தாலும், அடிப்படையில் இது அனைவரையும் ஒன்றிணைத்திருக்கிறது. ஜல்லிக்கட்டில், அதை நடத்துவதில் வேறு சில பிரச்சனைகள் இருந்தாலும் அந்த போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள். ஒன்றுபட்டு நின்றார்கள், ஒன்றுகலந்து இருந்தார்கள். இதை விட பார்ப்பனியத்தை வேறு எதுவும் கலவரப்படுத்த முடியுமா?

 

அதனால் தான் அனைத்து ஊடகங்களும் இதை ஜல்லிக்கட்டு போராட்டமாக மட்டுமே காட்ட விரும்புகின்றன.

 

அதனால் தான் பார்பனிய எச்சைகள் தேசியக் கொடி பிடித்திருந்த இந்துவை முஸ்லீம்கள் அடித்தார்கள் என்று சரடு விட்டுப் பார்க்கின்றன.

 

விடமாட்டோம் என்று காட்டுவோம். மெரினாவை தொடர்வோம், பார்ப்பனியத்துக்கு பாடை கட்டுவோம்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

எத்தனை நாள் தான் சகிப்பது நீதித்துறையின் அயோக்கியத்தனத்தை?

peoples-power-trichy-rally-03-300x200

அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பெழுதிய நீதிபதி(!)கள், குற்றம் நீரூபிக்கபடவில்லை என்றாலும் இந்திய கூட்டு மனசாட்சியை திருப்திப்படுத்த மரண தண்டனை விதிக்கிறோம் என்றார்கள்.

சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், 90 நாட்களை நெருங்கியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாதிருந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் பிணை கிடைத்துவிடும் என்ற நிலையில், ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்றது சிறைத்துறை.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் வெளிப்படும் கிடக்கை என்னவென்றால், அப்சல் குரு வழக்கைப் பொருத்தவரை தண்டனை கொடுப்பது என தீர்மானித்து விட்டால் குற்றத்தின் தன்மையோ, சட்டவிதிகளோ எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எந்த எல்லைக்கும் நாங்கள் செல்வோம், எங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது எனும் திமிர்த்தனம். ராம்குமார் படுகொலையைப் பொருத்தவரை எங்களை காத்துக் கொள்ள, மறைத்துக் கொள்ள வேண்டுமென்றால் எவ்வளவு கேவலமான பொய்களையும் அவிழ்த்து விடுவோம். நம்புவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. எங்களின் அதிகாரத்தை எவரும் எதுவும் செய்து விட முடியாது எனும் இறுமாப்பு.

இந்த திமிர்த்தனத்தையும், இறுமாப்பையும் இன்னும் அதிக தீவிரத்துடன் அதிகாரவர்க்கத்தின் அடுக்குகள் அண்மையில் மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியிருக்கிறது. வழக்குறைஞர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் தடை. ஆனால், முந்தியவைகளுக்கு ஏற்பட்ட அதிர்வலைகள் வழக்குறைஞர்கள் மீதான இந்த அடாவடிக்கு எதிராக பரவலாக எழவில்லை.

நீதிபதிகளுக்கு எதிராக முழக்கமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுக்குத் தான் மில்ட்டன், பார்த்தசாரதி ஆகியோருக்கு வாழ்நாள் முழுவதும் வழக்குறைஞர்களாக பணியாற்ற முடியாதவாறு தடையும், மகேந்திரனுக்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, மதுரை வழக்குறைஞர்கள் 5 பேருக்கு வாழ்நாள் தடையும், 8 பேருக்கு 3 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

முழக்கமிட்டதற்கு தான் வாழ்நாள் தடையா? என குழப்பம் ஏற்படலாம். இதன் பின்னிருக்கும் வன்மம் புரிய வேண்டுமென்றால் நிகழ்தவைகளை தொகுத்துப் பார்க்க வேண்டும்.

1. குடித்துவிட்டு வந்து அடாவடி செய்யும், கட்டப்பஞ்சாயத்து செய்யும், அறியாமையைப் பயன்படுத்தி பணம் பறிக்கும், சாதகமான தீர்ப்புக்காக பணம் வசூலித்துக் கொடுக்கும் தரகர்களாக, மிரட்டுபவர்களாக இருக்கும் வழக்குறைஞர்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.

2. ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டும், பாலியல் ரீதியான முறைகேடுகளில் ஈடுபட்டும், மக்களைப் பற்றிய கவலை கொஞ்சமும் இன்றி கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்துக் கொண்டும், அவமதிப்பு என்பதை வைத்துக் கொண்டு மக்களை நாங்கள் மேலானவர்கள் என்பதாக செயல்பட்டுக் கொண்டும் இருக்கும் நீதிமான்கள் நிறைந்திருக்கிறார்கள்.

3. இந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும், மக்களோடு சேர்ந்து போராடும் வழக்குறைஞர்கள் அதிகம். பல போராட்டங்களில் முதல் குரல் வழக்குறைஞர்களிடமிருந்தே வந்திருக்கிறது. இந்த மூன்று யதார்த்தங்களையும் மனதில் கொண்டு நிகழ்ந்தவைகளை தொகுத்துப் பார்க்க வேண்டும்.

2015 ஜூலை 1 முதல் தலைக்கவசம் அவசியம் என நீதிபதி கிருபாகரன் உத்தரவிடுகிறார்.

காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், உரிமையியல்குற்றவியல் சட்ட திருத்தங்கள், காவல் துறை அராஜகங்கள் என மக்களை பாதிக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் எதிராக குரல் கொடுக்கும் வழக்குறைஞர்கள், இந்த கட்டாய தலைக்கவச உத்தரவையும் எதிர்த்து டாஸ்மாக் அரசின் விருப்பம், தலைக்கவசம் கட்டாயமா? எனக் கேட்டு போராடுகிறார்கள்.

இதை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய நீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்ற வழக்குறைஞர்கள் சங்கத் தலைவர், செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கிறது.

இதனிடையே 2015 செப்டம்பர் 10 ம் தேதி மதுரையில் வழக்குறைஞர்கள் ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக பேரணி நடத்தி ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிடுகிறார்கள்.

இதற்காக 43 வழக்குறைஞர்கள் முறைப்படியான எந்த விசாரணையும் நடத்தாமல் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.

தலைவர், செயலாளர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணை சென்னையில் நடைபெற்ற போது எந்தவிதமான சட்டவிதிகளும் மரபுகளும் பின்பற்றப்படவில்லை. தலைக்கவசம் குறித்த அவமதிப்பு வழக்கில், அதைப் பற்றி எதுவும் கேட்காத நீதிபதிகள், ஊழல் பட்டியல் வெளியிட்டது குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். சென்னை வழக்குறைஞர்களையே உள்ளே விடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள். சீருடை அணியாத காவலர்களும் பாதுகாப்பு வழங்கலாம் என முன்கூட்டியே நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்ததால் போலீஸ் என்ற பெயரில் ரவுடிகளும் கலந்திருக்கலாம் எனும் நிலை. நீதிபதிகளுக்கான வாசலில் நீதிபதிகளுடன் சென்று வழக்குக்கு தொடர்பே இல்லாத நிலையில் உள்ளே அமர்ந்திருக்கும் இரண்டு வழக்குறைஞர்கள். எந்த அடிப்படையும் இல்லாமல் அவர்கள் கொடுக்கும் புகாரை வைத்துக் கொண்டு மிரட்டும் தொனியில் விசாரிக்கும் நீதிபதிகள் என ஒரு கலவரமான சூழலில் தான் நீதிமன்ற அராஜகங்களை எதிர்த்து முழக்கமிடுகிறார்கள் வழக்குறைஞர்கள். இது குறித்து விரிவாக தெரிய விரும்புவோர் இங்கு சென்று வருக.

இவ்வாறு முழக்கம் எழுப்பினார்கள் என்பதற்காகத் தான் இப்போது இந்த வாழ்நாள் தடை.

எந்த ஒன்றிலுமே நிகழ்வுகளை மட்டுமே வைத்துக் கொண்டு முடிவுக்கு வருவது என்பது குறைபாடு உடையதாகத்தான் இருக்கும். அதற்கான நோக்கங்களையும் இணைத்து பரிசீலித்துப் பார்ப்பதே சரியானதாகவும், முழுமையானதாகவும் இருக்கும். அந்த அடிப்படையில் மேற்கண்ட நிகழ்வுகளுக்க்கான அடிப்படை நோக்கம் என்ன என்று பார்த்தால், நீதிபதிகளின் ஊழலை மறைப்பது தான் நோக்கம் என்பது போல் தெரியலாம். இது ஒரு துணை நோக்கம் தான். இதனிலும் முதன்மையான நோக்கம் ஒன்றும் உள்ளே இருக்கிறது.

இந்தியாவில் தோராயமாக 500 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருக்கிறது. அரசுக்கும் நீதித்துறைக்கும் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக கொலீஜிய முரண்பாடுகள் ஒருபக்கம் இருந்தாலும், அதில் எப்படிப்பட்டவர்களை நியமிப்பது என்பதில் அரசின் நீதித்துறையின் திட்டங்களில் முரண்பாடு ஒன்றுமில்லை. நிர்வாக இயந்திரம் காவிமயமாகி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான். அவ்வாறு காவிமயமாகி இருக்கிறது என்பதற்கு கார்ப்பரேட் மயமாகி இருக்கிறது என்பது தான் பொருள். கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக எப்போதும் எந்தத் தீர்ப்பும் வராது. ஆனால், எதிர்மனு, இடைக்கால தடை போன்ற அம்சங்கள் கூட கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இருக்கக் கூடாது என்றால் காவி மனோநிலையில் இருப்பவர்கள் மட்டுமே பொருத்தமனவர்கள். மக்கள் மத்தியில் இவை பிரச்சனைகளாகும் போது மத மோதல்களாக மடைமாற்றி திசை திருப்புவதும் அவசியம். எனவே, அந்த 500க்கும் மேற்பட்ட காலியிடங்களில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும்.

அப்படி ஒரு நிலை வந்தால், அதை வழக்குறைஞர்கள் எந்த முணுமுணுப்பும் காட்டாமல் அடிமைகளைப் போல் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே, நியமனங்களுக்கு முன்பு வழக்குறைஞர்களை ஒடுக்கும் கருப்புச் சட்டங்கள் அவசியப்படுகின்றன. நீதிமன்ற வழாகங்களுக்குள் போராட்டம் செய்வதோ, முழக்கம் இடுவதோ, துண்டுப் பிரசுரம் கூட கொடுக்கக் கூடாது எனும் விதிகளை புகுத்த நினைப்பதற்கு வேறெதுவும் காரணமாக இருக்க முடியுமா?

பல விசயங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாய் இருப்பதைப் போல, இவ்வாறான நியமனங்களை எதிர்ப்பதிலும் தமிழக வழக்குறைஞர்கள் முன்மாதிரியாய் விளங்குவார்கள். இதனால் தான் வழக்குறைஞர்களை ஒடுக்குவதை தமிழகத்திலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். எந்த மாநிலத்திலும் அமல்படுத்தாத வரைவு விதிமுறைகளை தமிழகத்தில் அமல்படுத்தத் துடிப்பதில் வேறேதும் நோக்கம் இருந்துவிட முடியுமா?

எனவே, கோஷம் போட்டதற்கு வாழ்நாள் தடையா? என்பதல்ல இங்கு பிரச்சனை. இது வழக்குறைஞர்களுக்கு மட்டுமேயான பிரச்சனையும் அல்ல. கார்ப்பரேட் பயங்கரவாதிகளுக்கு எதிராக, காவி பாசிஸ்டுகளுக்கு எதிராக நாம் என்ன செய்யப் போகிறோம்? வழக்குறைஞர்களுடன் இணைந்து எவ்வாறு இதை முன்னெடுக்கப் போகிறோம்? என்பது தான் நமக்கு முன்னிருக்கும் கேள்வி.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

கருத்து பயங்கரவாதம் செய்யும் டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 2

M_Id_230158_FP

உணர்வு இதழ் வெளியிட்டு வரும் கற்பனை உரையாடல் தொடரின் இரண்டாவது பகுதியில் அவர்கள் செய்திருப்பது கருத்து பயங்கரவாதம். அந்த கற்பனை உரையாடலை எப்படி அமைத்திருக்கிறார்கள் என்றால் கம்யூனிஸ்ட் தன்னிடம் விவாதம் செய்ய வந்திருக்கும் முஸ்லீமைப் பார்த்துக் கேட்கிறார் நீங்கள் எங்கே தீவிரவாத முகாம் வைத்திருக்கிறீர்கள் என்று. அதாவது இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான் என்று பார்ப்பனிய மயமான அரசும், ஊடகங்களும் பரப்பி வைத்திருக்கிறதே ஒரு கருத்து; அதே கருத்தில் நின்று அந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கேட்கிறாராம். அதற்கு அந்த முஸ்லீம் அமைதியாக அவர்களின் ஆன்மீக இயக்கம் பற்றி விளக்குகிறாராம். இதில் போகிறபோக்கில் நாங்களும் சில முகாம் நடத்துகிறோம் என்று கம்யூனிஸ்ட் கூறுவது போலவும், படித்து முடித்து விட்டு எரித்துவிடும் நோக்கில் தாக்குதல் திட்டங்கள் அடங்கிய ரகசிய புத்தகங்களை படிப்பது போலவும் கூறிச் சென்றிருக்கிறார்கள். தெளிவாகச் சொன்னால், இஸ்லாமியர்களாகிய நாங்கள் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ அல்லர். கம்யூனிஸ்டுகள் தான் அவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதனால் தான் என்ன வேலை செய்கிறார்கள் என்று சொல்வதற்கு கூட தயங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்வது தான் உணர்வு கும்பலின் அந்த கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியின் நோக்கம். இது தான் கருத்து பயங்கரவாதம் என்பது. அதாவது, தனக்கு நன்கு தெரிந்த ஒரு செய்தியை, அதற்கு எதிர்மறையாக திரித்து – அப்போது தான் தன்னை நம்பியிருக்கும் அணியினரை கம்யூனிசத்தின் பக்கம் சாய்ந்து விடாமல் தக்கவைக்க முடியும் என்பதற்காக – பரப்பியிருக்கிறார்கள்.

 

அன்றிலிருந்து இன்றுவரை, அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அரசு எந்திரம் பார்ப்பனியமய மாக்கப்படுவதற்கு எதிராகவும் அனைத்து தளங்களிலும் புரட்சிககர கம்யூனிஸ்டுகள் போராடி வந்திருக்கிறார்கள். அரசு பயங்கரவாதத்தின் ஒரு பகுதி செயல் திட்டம் தான் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக, வெடிகுண்டு வைப்பவர்களாக சித்தரித்து வெகு மக்கள் மத்தியில் பரப்பி வைத்திருப்பது. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்தியச் சூழலில் இஸ்லாம் எனும் மதம் குறித்த, முஸ்லீம்கள் குறித்த பார்ப்பன பாசிசங்களின் பார்வையை விளங்க வேண்டும்.

 

இந்தியாவில் பார்ப்பன பாசிசங்கள் தாம் குண்டு வெடிப்பை நிகழ்த்துகின்றன என்பதற்கு அசீமானந்தா தொடங்கி ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும் எந்த இடத்தில் ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் அரசும், ஊடகங்களும் உடனே மொழிவது இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களத்தான். இது ஏன்? ஏன் இந்த அரசும் ஊடகங்களும் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்கின்றன? இதனால் அவைகளுக்கு கிடைக்கும் லாபம் என்ன? பல இஸ்லாமிய இளைஞர்கள் இது போன்ற செயல்களெல்லாம் பாபரி பள்ளிவாசல் இடித்து தகர்க்கப்பட்டதற்கு பிறகான நிகழ்வுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காந்தியைக் கொன்ற கோட்சே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டும், விருத்த சேதனம் செய்தும் இருந்தான். அன்றைய பிரதமர் நேரு வானொலியில் காந்தியைக் கொன்றது முஸ்லீம் அல்ல, இந்து தான் என அறிவித்திருக்காவிட்டால், 2002ல் குஜராத்தில் நடந்ததைப் போல் திட்டமிட்ட படுகொலைகள் நாடுமுழுதும் நடந்து முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். பாபரி பள்ளிவாசல் பிரச்சனைகூட அண்மையில் ஏற்பட்ட பிரச்சனையில்லை. நாற்பதுகளின் தொடக்கத்தில் தொழுகை நடந்து கொண்டிருந்த பள்ளியில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக ராமர் பொம்மை வைக்கப்பட்டு, அந்தப் பிரச்சனை ஊதிப் பெருக்கப்பட்டது. இவைகளையெல்லாம் வெறும் மதமோதல்கள் என்றா நினைக்கிறீர்கள் முஸ்லீம்களே,

 

இந்தியாவில் பௌத்தம், சமணம், சாங்கியம் என பல மதங்களும் கொள்கைகளும் மேலோங்கி இருந்தன. இவைகளையெல்லாம் நேர்மையற்ற வழிகளில் தனது அரசியல் மேலாதிக்கத்திற்காக சிதைத்திருக்கிறது பார்ப்பனிய மதம். ஈராயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை தீண்டாமை அடிமைகளாக அடக்கியாண்டு கொண்டிருந்தது. ஆங்கிலேயர் வரவு, பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு தம் மீது திரும்பி விடக்கூடாது என்பதற்காக இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்களை கொண்டு வர வைத்தது. இதனால் தம்முடைய அரசியல் மேலாதிக்கம் குலைந்து விடக் கூடாது என்பதற்காக பார்ப்பனியம் அதுவரை தீண்டத்தகாதவர்களாக சேரிகளில் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் இந்துவாக அடையாளம் காட்டி பெரும்பான்மை காட்டிக் கொள்ளும் உத்தியை கையாண்டது. ஆனால் யார் தம்மை இதுகாறும் இழிவுபடுத்தி வைத்திருந்தார்களோ அந்த பார்பனர்களின் பின்னே இந்துவாக அணிதிரள முடியுமா அம்மக்களால்? இதற்கு பயன்பட்டது தான் பொது எதிரியை கட்டியமைக்கும் உத்தி.

 

இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பான்மையினர் இன்று இந்துக்களாக கருதப்படுகின்ற உழைக்கும் மக்கள். அரசியல் பலத்துடன் அவர்களை ஒடுக்கிக் கொண்டிருந்தவர்கள் பார்ப்பனிய சிறுபான்மையினர். இவர்களுக்கு வெளியே முஸ்லீம்களும் கிருஸ்தவர்களும். கிருஸ்தவர்கள் இந்துக்களின் பொது எதிரியாக காட்ட முடியாத அளவுக்கு சிறுபான்மையினராக இருந்தனர். முஸ்லீம்களோ ஒதுக்கித்தள்ள முடியாத அளவுக்கு கணிசமாக தொகையினராக இருந்தனர். இவர்களை பொது எதிரியாக கட்டமைத்தால் பார்ப்பனியத்துக்கு கடினமான போட்டியை ஏற்படுத்துவர். அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தாக் கூடும். இந்த நிலையில் தான் ஆர்.எஸ்.எஸ் முன்னோடியான சாவர்கர் இஸ்லாமியர்களை தனிநாடு கொடுத்து ஒதுக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். கவனிக்கவும் முஸ்லீம்களே, பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை முகம்மது அலி ஜின்னாவால் கொண்டு வரப்பட்டதல்ல. ஜின்னா கோரிய சமஸ்டி கோரிக்கையை காங்கிரஸ் பிடிவாதமாக ஏற்க மறுத்ததால் வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை ஜின்னா முன்னெடுத்தார். இந்த அடிப்படையில் தான் இந்தியாவில் மேற்கிலும், கிழக்கிலும் இருந்த முஸ்லீம்களில் பெரும்பான்மையினரை பாகிஸ்தான் என்ற பெயரில் தனிநாடாக ஆக்கி விட்டு மீதமுள்ள முஸ்லீம்களை பொது எதிரியாக காட்டி சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை கொண்டிருந்த அனைவரையும் இந்துக்களாக ஒருங்கிணைக்கும் வேலையை செய்தார்கள்.

 

இந்திய முஸ்லீம்களை பிளவுபடுத்த வேண்டுமென்றால் அரசு எந்திரத்தை பார்ப்பனமயமாக்கி வைத்திருக்கும் சூழலில் வெகு எளிதாக செய்துவிட முடியும். ஆனால், இந்திய ஆளும் வர்க்கம் ஒருபோதும் அதை செய்யவில்லை. மாறாக, கவனத்துடன் அதை தவிர்த்தும் வந்திருக்கிறது. ஏற்கனவே, பல குழுக்களாக பிளவுபட்டு இருந்த முஸ்லீம்களை (தமிழ்நாட்டில் இருக்கும் ஜாக் கிலிருந்து பிரிந்த குழுக்களை குறிப்பிடவில்லை. இந்தியா முழுவதும் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட கலாச்சாரங்களுடன் தனித்தனி தீவுகளாக வாழ்ந்து கொண்டிருந்த உழைக்கும் மக்களாகிய முஸ்லீம்களைக் குறிப்பிடுகிறேன்) ஒன்றிணைக்க முடிந்தால், அவர்களை இஸ்லாமிய மத உணர்வுடனேயே எப்போதும் இருத்தி வைக்க முடிந்தால்; அதைக் காட்டி ஆண்டாண்டு காலமாய் தம்மால் தீண்டத்தகாதோராய் ஒதுக்கி வைத்திருந்தவர்களையே ஒருங்கிணைத்து தம் ஆயுதமாய் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்துடன் தான் அன்றிலிருந்து இன்றுவரை அரசு எந்திரம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்குத்தான் வெடிகுண்டு கலாச்சாரத்தை இஸ்லாமியர்கள் மீது திணித்து இந்துக்களின் பொது எதிரியாகவும், இந்திய அளவில் பயங்கரவாதிகளாகவும் கட்டமைத்து கட்டிக் காத்து வருகிறது.

 

1992ல் பாபரி பள்ளிவாசல் இடிக்கப்பட்டது என்பது மேற்கண்ட நிகழ்ச்சி நிரலுக்கு மட்டும் உட்பட்டதல்ல. கிட்டத்தட்ட பெரிய எதிர்க்கட்சிகளே இல்லை எனும் நிலையில் இருந்த காங்கிரசுக்கு எதிராக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் கட்சியாக இருந்தது பா.ஜ.க. பாபரி பள்ளிவாசல் இடிப்பை பயன்படுத்தி காங்கிரஸ் செயல்பட்டிருந்தால் பா.ஜ.க எனும் கட்சியையே இல்லாமல் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறன்றி பாபரி பள்ளிவாசல் இடிப்பு விசயத்தில் அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் பா.ஜ.க வுக்கு செய்தது. ஏன்? மக்களை மறுகாலனியாக நுகத்தடிக்குள் சிக்க வைக்கும் டங்கல், காட் ஒப்பந்தங்கள் பாரளுமன்றத்துக்கூட தெரியாமல் கொல்லைப்புறமாக இந்தியாவுக்குள் நுழைந்த நேரம் அது. இதிலிருந்து வெற்றிகரமாக மக்களை திசை திருப்ப கிடைத்த வாய்ப்பு தான் பாபரி பள்ளிவாசல் இடிப்பு. மக்களை மதவாத சாக்கடையில் தள்ளிவிட்டுத்தான் ஏகாதிபத்தியங்கள் இந்தியாவின் மீது ஆக்டபஸ் போல கவிந்து கிடக்கின்றன.

 

பார்ப்பன பயங்கரவாதிகளின் இந்த திட்டத்தை முறியடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி முஸ்லீம்கள் வர்க்க அடிப்படையில் மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, பாட்டாளிகளாக ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம். இதற்கான கதவை அடைத்து அந்த பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு உதவும் வேலையை செய்வது தான் தவ்ஹீத் என்ற பெயரில் இருக்கும் பல வண்ண அமைப்புகளின் நோக்கமாக இருக்கிறது. இது இந்திய நிலமை என்றால் சர்வதேச நிலமையும் இதில் செயல்படுகிறது.

 

ஜிஹாத் என்ற தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தாலிபான், ஐ.எஸ் உள்ளிட்ட பல அமைப்புகள் இன்று பயங்கரவாத குழுக்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாளொரு காணொளி வெளிவந்து உலக மக்களிடம் வெறுப்பையும், அதேநேரம் அமெரிக்க ஏகாதிபத்தியம் அவைகளை தாக்கி அழிக்கும் சர்வதேச கடமையையும் இந்த அமைப்புகள் சம்பாதிருக்கின்றன. ஆனால், இந்த அமைப்புகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக உருவாக்கப்பட்டவை என்பதும், அந்த நலனுக்காகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன, அல்லது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் சிந்திக்கும் திறனுள்ள அனைவருக்கும் தெரிந்தது தான். அமெரிக்காவுக்கும் சோவியத் ரஷ்யாவுக்குமான பனிப்போர் காலகட்டத்தில் பரவிவரும் சோசலிச மக்கள் நல அரசுகளை கலைக்கவும், ரஷ்யாவைத் தோற்கடிக்கவும் பல்வேறு உத்திகளைக் கையாண்டது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதிர்ப்புரட்சி சதிகள் மூலம் ஆட்சிகளைக் கவிழ்ப்பதும், தலைவர்களைக் கொல்வதுமான உத்தி என்றால், அரபு நாடுகளுக்கு இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் உத்தியைக் கையாண்டது. இதன் தொடர்ச்சியாக தூய இஸ்லாமியவாதம் பேசும் பல குழுக்களை கட்டியமைத்து சோசலிச மக்கள் நல அரசுகளுக்கு எதிரான சதிகளில் இறக்கியது அமெரிக்கா. ஈரானில் மன்னர் ஷா வை தன் கைப்பாவையாக அதிகாரத்தில் அமர வைத்ததும், ஆப்கானில் மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவரும், அதிபருமான‌ நூர் முகம்மது தரக்கி சுட்டுக் கொல்லப்பட்டதும் இவ்வாறு தான். பனிப்போர் முடிந்து தேவை தீர்ந்ததும் இக்குழுக்களில் பல சிதைந்தும், இணைந்துமாய் மதவாதம் பேசிக் கொண்டிருக்கின்றன. அன்று தன் வணிக நலன்களுக்கு தடையாய் இருந்த ஒட்டாமன் பேரரசை (உஸ்மானிய பேரரசு) வீழ்த்த மதப் போர்வையில் சிலுவைப் போர்களை நடத்தியது முதலாளித்துவம். இன்றும் அதே கதை தான், தன்னுடைய ஒற்றைத் துருவ மேலாதிக்கத்துக்கும், எண்ணெய் மேலாதிக்கத்துக்கும் எதிராக இருக்கும் நாடுகளை வீழ்த்த இன்று அக்குழுக்கள் அந்தந்த நாடுகளில் தூய இஸ்லாமியவாதம் பேசி உள்நாட்டுப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். அந்த முகாந்திரத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு அந்தந்த நாடுகளின் அரசுக்கு எதிராக குண்டு வீசுகிறது. எங்கெங்கெல்லாம் அமெரிக்காவுக்கு எதிராக குரல் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் புதிது புதிதாய் தூய இஸ்லாமியவாதம் பேசும் குழுக்கள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. சிரியாவுக்கு எதிராக ஐ.எஸ் அமைப்பு புதிதாக முளைத்தது இப்படித்தான். இது தான் சர்வதேச அளவில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் கதை.

 

இதன் பின்னாலிருக்கும் அரசியலை உருவி விட்டு மதப்பிரச்சனையாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது தான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விருப்பம். அந்த விருப்பத்தை சற்றும் பிசகாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன இங்கிருக்கும் இஸ்லாமிய மதவாத அமைப்புகள். சிந்தித்துப் பாருங்கள் இஸ்லாமிய சகோதரர்களே! அமெரிக்காவின் கோரப்பிடிக்குள் சிக்காத நாடுகள் சொற்பம் எனும் நிலையில், ஊடகங்கள் முதல் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை மீறி செயல்பட முடியாத நிலையில், இந்திய அரசு எந்திரமே பார்ப்பனமயமாகியிருக்கும் நிலையில், வெறும் மதவாதம் பேசி இதை உங்களால் எதிர் கொள்ள முடியுமா?

 

முக்கியமான கேள்விக்கு திரும்புவோம். இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் என்று பார்ப்பது யார்? புரட்டுத்தனமான ஓட்டரசியல் கட்சிகளா? புரட்சிகர கம்யூனிச அமைப்புகளா? இந்தப் பிரச்சனையில் எங்களின் சரியான நிலைபாட்டை எல்லாவித ஊடகங்களிலும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறோமே; இது அந்த உணர்வு கும்பலுக்கோ, அந்த கற்பனை உரையாடலை எழுதிய ஃபாசிலுக்கோ, வெளியிட அனுமதித்த பி.ஜேவுக்கோ தெரியாதா? தெரியாது என்றால்; தெரிந்து கொள்ளாமல் எழுதியது எந்த விதத்தில் சரி? இஸ்லாம் குறித்து கேள்வி எழுப்பினால் பதில் கூறி சமாளிக்க முடியாமல் இஸ்லாத்தைப் பற்றி தெரியாமல் எப்படி எழுதலாம் என்று எகிறி குதிக்கும் இந்த கும்பல், எதையும் அறிந்து கொள்ளாமல் எப்படி எல்லாம் தெரிந்தது போல் எழுதினார்கள்? தெரியும் என்றால் தெரிந்து கொண்டே ஏன் மறைத்து திரித்து எழுதினார்கள்? விடை எளிமையானது தான்.

 

உணர்வு கும்பலின் நோக்கம், தன்னை நம்பியிருக்கும் அணிகளுக்கு சமூக அரசியல் பயிற்சியளிப்பதோ, மக்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி தேடுவதோ அல்ல. வெறுமனே மதவாதம் பேசி மக்களை ஏமாற்றி, நடப்பு பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்புவதன் மூலம் இந்திய அளவில் பார்ப்பன பாசிசங்களுக்கும், சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் தொண்டூழியம் செய்வதைத் தவிர வேறொன்றுமில்லை. இஸ்லாமியர்கள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சனை என்ன? அதிலிருந்து எப்படி விடுபடுவது? எனும் எண்ணம் உணர்வு கும்பலுக்கு இருந்திருந்தால் இந்தப் பின்னணியை அலசியிருப்பார்கள், இதில் எந்த அமைப்பு தமக்கு உதவி செய்யும்? எந்த அமைப்பு தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்? என்று பரிசீலித்துப் பார்த்திருப்பார்கள். நேரடியாக பார்ப்பன பாசிசத்தை ஆதரிக்கும் ஜெயாவுடனும், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து குலாவிய தி.மு.க வுடனும் மாறி மாறி கூட்டு வைத்துக் கொண்டு அதையே முஸ்லீம்களுக்கான நன்மையாக பசப்பித் திரிகிறார்களே, அந்த அ.தி.மு.கவும், தி.மு.கவும் இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் என்ற எண்ணம் கொண்டவர்களா இல்லையா? அவர்களுடன் கூட்டு வைக்கத் தயங்காத உணர்வு கும்பல்; பார்பன பாசிசங்களையும், ஏகாதிபத்தியங்களையும் விரட்டியடித்து உழைக்கும் மக்கள் சம வாய்ப்புகளோடும் வசதிகளோடும் வாழவைக்கத் துடிக்கும் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களின் மீது ‘தீவிரவாத முகாம் எங்கு நடத்துகிறீர்கள்?’ என்று கேட்பது போல் கற்பனை உரையாடலை அமைத்துப் பரப்புகிறார்கள் என்றால், இதன் மர்மம் என்ன? கம்யூனிச ஒளி முஸ்லீம்கள் மீது படர்ந்து விடக் கூடாது என்பதில், பார்ப்பன பாசிசங்களைப் போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் போல் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க முடியுமா? மக்களை வாட்டி வதைக்கும் நடப்பு பிரச்சனைகளை தீர்க்க வழி காணாமல் ‘இஸ்லாம் இனிய மார்க்கம் கேள்வி பதில்’ நிகழ்சிகளிலேயே காலத்திற்கும் மதி மயங்கிக் கிடப்பார்கள் முஸ்லீம்கள் என்று உணர்வு கும்பல் கனவு கண்டால், இனி அது பலிக்கப் போவதில்லை.

 ara paya

கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியில் மேற்கண்டது தான் முக்கிய அம்சம் என்றாலும், வேறு சில ‘பில்ட் அப்’ களையும் செய்திருக்கிறார்கள். அவைகளையும் பார்க்கலாம். “எங்க மார்க்கம் பொய் சொல்ல அனுமதிப்பதில்லை” என்று போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார்கள். இதுவே ஒரு பொய் தான். ஒரு ஹதீஸைப் பார்க்கலாம்,

 

நபி அவர்கள், கஅப் இப்னு அஷ்ரபைக் கொல்வது யார்? எனக் கேட்டார்கள். முகம்மத் இப்னு மஸ்லமா, நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? என்று நபி அவர்களிடம் கேட்க, அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள் என்று கேட்க, நபி அவர்கள் அனுமதித்து விட்டேன் என்று பதிலளித்தார்கள். புஹாரி 3032

 

அதாவது, தனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று தன் சீடரிடம் சொல்கிறார் முகம்மது. அதற்கு அந்தச் சீடர், அப்படியானால் பொய்யாக உங்கள் மீது குறை சொல்லி நடிக்க எனக்கு அனுமதியளியுங்கள் என்று கேட்கிறார். முகம்மது அவருக்கு அனுமதியளிக்கிறார். சுருக்கமாகச் சொன்னால் பொய் சொல்ல அனுமதி அளிக்கிறார். ஹதீஸில் தெளிவாக இப்படி பொய் சொல்வதற்கு அனுமதியளித்திருக்க இந்த மதத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்கள் பொய் சொல்வதற்கு எங்கள் மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 

அடுத்ததாக அந்த கற்பனை உரையாடலில் அப்பாவியாக, “.. .. மூட நம்பிக்கையை வளர்க்கிறார்கள் என்று எடுத்துச் சொன்னால் அது பாசிசமா?” என்று கேட்கிறார்கள். எது மூட நம்பிக்கை, பகிரங்கமாக விபச்சாரம் செய்யும் ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. திருடிக் கொண்டு ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. வட்டி வாங்கிக் கொண்டு ஒருவன் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கொலை செய்தவன், கொடும்பாதகன் என எவனும் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அவ்வளவு ஏன்? ஐவேளை தொழுகை செய்யாத, நோன்பு வைக்காத, ஜக்காத் கொடுக்காத இன்னும் இஸ்லாம் கூறும் நடைமுறைகள் எதையும் செய்யாத எவனும் இஸ்லாத்தில் இருக்கலாம், இருக்கிறார்கள். அவர்கள் இஸ்லாத்தில் இருப்பதில் இவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் தர்ஹாவுக்கு சென்றால் மட்டும் அவன் இஸ்லாத்தில் இருக்கக் கூடாது என்பதில் ஏதாவது நேர்மை இருக்கிறதா? தர்ஹாவுக்கு செல்வதற்கு இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தாருங்கள் என்று இவர்கள் ஜெயலலிதாவிடம் கேட்கலாம், அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் என்னைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள் என்று முஹைதீன் அப்துல் காதிர் ஜெய்லானியை கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் இஸ்லாத்தை விட்டே வெளியில் சென்று விட வேண்டும் என்றால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? ஆனால், இதன் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அந்த அரசியலைப் புரிந்து கொள்ள, இஸ்லாம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கையை முஸ்லீம்களுக்கும் சேர்த்துத்தான் கூறுகிறேன்.

 

இஸ்லாம் என்பது அல்லா வழங்கி முகம்மது ஏற்படுத்தியது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லா என்பது முகம்மதுவின் கற்பனை என்பது வேறு விசயம். முகம்மது இஸ்லாம் எனும் மதத்தை ஏற்படுத்தவே இல்லை என்பதும் வேறு விசயம். ஆனால் முகம்மது கூறியது தான் இந்த உணர்வு கும்பல் கூறிக் கொண்டிருக்கும் இஸ்லாமா? நிச்சயம் இல்லை. முகம்மதின் கடைசிக் காலத்தில் இருந்து முகம்மது ஏற்படுத்திய அதிகாரத்தில் அமர்வது யார்? எனும் போட்டி தொடங்குகிறது. இதில் முகம்மதின் மருமகன் அலி தான் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்று ஒரு குழு போராடுகிறது. ஆனால் அந்தக் குழு ஓரம் கட்டப்பட்டு அபூபக்கர் ஆட்சியில் அமர்கிறார். பின்னர் உமர், உஸ்மான் வந்து சென்ற பின் நான்காவதாகத்தான் அலி ஆட்சியில் அமர முடிந்தது. பின் அலி கொல்லப்பட்ட பிறகு அலிக்கு ஆதரவான குழு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. இது தான் ஷியா, சன்னி பிரிவின் தொடக்கம் இதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஹதீஸ்கள் தொகுக்கப்படுகின்றன. தொகுக்கப்படும் ஹதீஸ்களில் கூட அலி பற்றிய எதிர்மறையான செய்திகளுக்கு முக்கியத்துவமும், அலி குழுவினர் கூறும் ஹதீஸ்கள் புறக்கணிக்கப்படுவதும் நடக்கிறது. இதனால் தான் ஷியா பிரிவினர் தங்களுக்கென்று தனியான ஹதீஸ் தொகுப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் ஆட்சியதிகாரத்தில் சன்னிகளே ஆதிக்கம் செலுத்தியதால் இஸ்லாம் என்றாலே சன்னிகள் தான் என்ற தோற்றம் ஏற்பட்டது. ஷியாக்கள் ஈரான், ஈராக் பகுதிகளில் சுருங்கிப் போயினர். இந்த ஷியாக்காளின் கலாச்சாரம் தான் தர்ஹா கலாச்சாரம். இது இந்தியாவில் பரவிய போது எளிமையான இந்த வடிவம் சன்னி பிரிவினர்களாக இருந்தாலும் இஸ்லாமிய உழைக்கும் மக்களை தொற்றிக் கொண்டது. ஆனால் இதை அல்லாவுக்கு இணை வைக்கிறார்கள் என்று கூறி அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று விலக்குகிறார்கள். ஆட்சியதிகாரத்தில் யார் இருப்பது? என்பதற்கும் தர்ஹாவாதிகள் முஸ்லீம்களல்ல என்பதற்கும் பொருள் வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்த நுண்ணரசியல் விசயத்தை தான் இஸ்லாத்தில் மாற்றுமத கலாச்சாரம் நுழைந்து விட்ட்து என்றும் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்தால் நாங்கள் பாசிசம் செய்கிறோமா? என்று கேள்வியெழுப்பியும் மடைமாற்றுகிறார்கள். மட்டுமல்லாமல், இதன் மூலம் அவர்களின் பாசிச நடவடிக்கைகளையும் மறைத்துக் கொள்கிறார்கள்.

 

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் தோழர் துராப்ஷாவுக்கு நிகழ்ந்தது இவர்களின் பாசிச முகத்துக்கு ஒரு எடுத்துக் காட்டு. தஜ்ஜால் என்பவர் எழுதிய “லூத் ஒரு லூஸு” எனும் கட்டுரையை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார் என்பதற்காக அவர் முஸ்லீம் அல்ல என்று திருட்டுத்தனமாக ஃபத்வா கொடுத்து அவரை தொழில் நடத்த விடாமல் அடித்து விரட்டி, மனைவியை விவாகரத்து கோரும் அளவுக்கு மிரட்டிய இவர்கள் நடவடிக்கை பாசிசமில்லாமல் வேறென்ன? தஞ்சை மிமிசல் அருகே தோழர் ஃபாத்திமா தன் குடும்ப நண்பருடன் பேருந்தில் பயணம் செய்ததற்காக ரவுடிகளைத் திரட்டி வந்து பேருந்தை நடுவழியில் நிருத்தி தகாத வார்த்தைகளால் அர்சித்து மிரட்டியது பாசிசமில்லாமல் வேறென்ன? இதுமட்டுமா? முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஊர்கள் அனைத்திலும் அன்னிய ஆடவருடன் பேசினார், சிரித்தார், செல்போனில் பேசினார் என்று பொருந்தாக் காரணங்களைக் கூறி பெண்களைத் தாக்கியுள்ளனர். இதில் கொலைகளும் அடக்கம். இதற்கெல்லாம் இந்தக் கும்பல்களுக்கு அதிகாரம் வழங்கியது யார்? புர்கா போடாமல் வெளியில் வந்தாள் என்ற ஒரே காரணத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் பாசிச நடவடிக்கைகள் இல்லையா? கலாச்சார போலீசாக வேடம் போட்டு பெண்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது தொடங்கி, கல்லூரிகளில் படிக்கக்கூடாது என்பது வரை பல கூடாதுகளை பட்டியலிட்டு பிரசுரமாக அடித்து வினியோகித்திருக்கிறார்கள். இவைகளெல்லாம் பாசிசமாக தெரியவில்லையா? இவைகளுக்கு என்ன பதில் கூறும் உணர்வு கும்பல்? இவைகளில் சில நாங்கள் நடத்தியவையல்ல என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால் அனைவரும் நேற்றுவரை ஒன்றாக இருந்தவர்கள் என்பதும் அந்தந்த நிலைபாடுகளில் இவர்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கவை.

 

அடுத்து கற்பனை உரையாடலின் இரண்டாவது பகுதியில் முத்தாய்ப்பாக அவர்கள் கூறியிருப்பது நக்சலைட், மாவோயிஸ்ட் போல இவர்களும் தீவிரவாதக் குழு தான் என்றும், இரகசியமாக புத்தகங்கள் வெளியிட்டுப் படித்து எரித்து விடுகிறார்கள் என்றும் மேலெழுந்தவாரியாக எழுதியிருக்கிறார்கள். இப்படி எழுதியிருப்பதன் மூலம் இரண்டு விசயங்களை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஒன்று கம்யூனிசம் குறித்து ஒரு சுக்கும் இந்தக் கும்பலுக்கு தெரியாது. இரண்டு, அரசு எந்திரம் முஸ்லீம்கள் மீது திணித்திருக்கும் தீவிரவாத முத்திரையை அகற்ற அரசே முதல் பயங்கரவாதி என்று அம்பலமாக்கிவரும் புரட்சிகர கம்யூனிஸ்ட்களை ஏனைய ஓட்டுக் கட்சிகளைப் போல இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக கருத்து பயங்கரவாதம் செய்யும் இந்த உணர்வு கும்பல்; அதே அரசு எந்திரம் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் மீது திணிக்க நினைக்கும் தீவிரவாத முத்திரையை ஏற்று அதை தன் அணிகளிடம் பரப்புரை செய்கிறார்கள். தெளிவாக சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு தெள்ளெனப் புரியும் உணர்வு கும்பல் போன்ற மதவாத அமைப்புகளின் அரசியல் பாத்திரம் என்ன என்பது. சந்தேகத்துக்கு இடமின்றி அது அரசு எந்திரத்திற்கு அதாவது பார்ப்பன பயங்கரவாதத்துக்கு துணை போவதையும், உதவி செய்வதையும் தவிர வேறொன்றுமில்லை.

 

புரட்சிகர கம்யூனிஸ்டுகள் ஏன் இரகசியமாக செயல்பட வேண்டும்?

இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் எந்த அளவுக்கு வெளிப்படையாக செயல்பட வேண்டிய தேவை இருக்கிறதோ, அதே அளவுக்கு இரகசியமாக செயல்பட வேண்டிய அவசியமும் இருக்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்டுகளின் நோக்கம் ஓட்டுச் சாக்கடையில் ஐக்கியமாகி, ஓட்டுப் பொறுக்கி அரசியல் எத்துவானிகளிடம் பலத்தைக் காட்டி சில்லரை லாபங்களை, சீர்திருத்தங்களைப் பெற்றுக் கொள்வதல்ல. அரசு என்பதன் முழுமையான பொருளை உணர்ந்து, சமூக மாற்றங்களை வரலாற்று ரீதியிலும், இயங்கியல் ரீதியிலும் ஆராய்ந்து, அரசு என்பது ஒரு வர்க்கத்தில் சார்பில் பிற வர்க்கங்களை அடக்கியாளும் அமைப்பு என்பதால் அதை மக்கள் பலத்தால் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அமர வைப்பது. இந்த நோக்கத்தை வெளிப்படையாக மட்டும்இருந்து செயல்படுத்திவிட முடியுமா? அரசு தன்னை எதிர்ப்போரை என்ன செய்யும் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஹதீஸ்களில் தேடிப் பார்க்கட்டும். முகம்மது, தன்னுடைய ஆட்சிக்கு எதிராக சதி செய்தார்கள் என்று கூறி 600 க்கும் மேற்பட்டவர்கள் தலையை வெட்டி வீசிய கதை கிடைக்கும். என்றால் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அரசைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்களா? இல்லை. சுவரொட்டி ஒட்டியதற்கு கூட குண்டர் சட்டம் பாய்ந்த கொடுமையையும் கூட எதிர் கொண்டு நிற்கிறார்கள். ஆளும் வர்கங்களின் தடைகள் அனைத்தையும் தாண்டி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்வதெல்லாம் தங்களுடைய நடவடிக்கைகள் அரசுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வது மட்டும் தான். இதைத் தான் இரகசிய நடவடிக்கை, தீவிரவாத நடவடிக்கை என்று அவதூறு செய்கின்றன ஆளும் வர்க்கங்கள். அதனால் தான் தீவிரவாத முத்திரை குத்திடத் துடிக்கிறது. ஆளும் வர்க்கங்களின் அந்த துடிப்பைத்தான் உணர்வு கும்பல் செயல்படுத்தியிருக்கிறது.

 

அரசின், ஆளும் வர்க்கங்களின், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின், பார்ப்பன பாசிசத்தின் நோக்கங்கள் வேறு வேறு அல்ல. ஒன்றுதான். அது உழைக்கும் மக்களை அவர்களின் மேய்யான பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பி மறக்கடித்து அவர்களை ஒட்டச் சுரண்டி வாழ விடாமல் செய்வது. உணர்வு கும்பல் உள்ளிட்ட மதவாதம் பேசும் அமைப்புகளின் நோக்கமும் அதுவே தான். எல்லா விசயங்களையும் கடவுளிடம் முறையிட முடியுமா? முறையிட்டு தீர்த்துக் கொள்ள முடியுமா? சாக்கடை அடைப்பை சரி செய் என்று கடவுளிடம் வேண்டி விட்டு சும்மா இருந்து விடுவீர்களா? அடைப்பை சரி செய்யாதவரை நாற்றம் இருக்கத்தானே செய்யும். நீங்கள் இறங்கி சரி செய்யாத வரை பிரச்சனை தீராது. இந்த உலகில் மதம் தவிர்த்த வேறு பிரச்ச்னைகளே இல்லையா? உலகம் இரண்டாக பிரிந்திருக்கிறது. ஒன்று சுரண்டும் வர்க்கம், மற்றது சுரண்டப்படும் வர்க்கம். ஒன்றுக்கொன்று தீராப் பகைமை கொண்ட இந்த இரண்டு வர்க்கங்களில் நீங்கள் எந்தப் பக்கம்? நீங்கள் சுரண்டும் வர்க்கம் என்றால் தோற்கடிக்கப்பட்டே தீருவீர்கள், நீங்கள் சுரண்டப்படும் வர்க்கம் என்றால் உங்களை சுரண்டுபவர்களை எதிர்த்துப் போராடாமல் உங்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. இதில் உங்கள் பங்களிப்பு என்ன? என்பது மட்டுமே கேள்வி. நீங்கள் அல்லாவை நம்பிக்கொள்ளுங்கள், தொழுது கொள்ளுங்கள், நோன்பு வைத்துக் கொள்ளுங்கள் அதில் பிரச்சனை ஒன்றுமில்லை. உங்கள் சமூக வாழ்க்கைக்காக என்ன செய்யப் போகிறீர்கள்? அது மட்டுமே கேள்வி. உங்கள் பதில் என்ன?

இத்தொடரின் முந்திய பகுதிகள்:

1. கற்பனை உரையாடலல்ல, காத்திரமான சொல்லாடல்

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு

modi-pm-gujarat-riot

நண்பர் சாருவாகன் அண்மையில் ஒரு கட்டுரை “மோடியை எதிர்ப்பது எப்படி?” எனும் தலைப்பில் எழுதியிருந்தார். படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சரியின் பக்கம் இருப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எப்படி பிசிறடித்து பாசிசத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள் என்பதற்கான விளக்கமாக அந்தக் கட்டுரை இருந்தது. மட்டுமால்லாது அது புரட்சிகர இடதுசாரி அரசியலையும் மறுக்கும் விதத்தில் பயணித்திருந்தது. நண்பர் சாருவாகனின் எழுத்தின் மீது ஒரு மதிப்பு இருந்து வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அவரின் பிறழலை சுட்டிக்காட்டுவது கடமை என்றாவதால் இந்த மறுப்பு பயணப்படுகிறது.

 

நண்பர் சார்வாகன் எந்த அடிப்படையிலிருந்து மோடியின் எதிர்ப்பை ஆய்வு செய்கிறார்? ஆதரவாளரோ எதிர்க்குழுவினரோ அல்ல என்று அவரே கூறியிருக்கிறார். என்றால் எந்த நிலையில் நின்று அவர் ஆய்வு செய்கிறார்? ஆதரவோ எதிர்ப்போ இல்லாமல் நடுநிலை என்று ஒன்று இருக்க முடியுமா? நல்லவற்றிற்கு ஆதரவாகவும், அல்லவற்றிற்கு எதிராகவும் இருப்பது தான் சரியானது. இதை மறுத்து நடுநிலை என்பது என்ன? முதலில் ஒரு விசயத்தில் கருத்துச் சொல்கிறோம் என்றால், இரண்டு தரப்பும் ஏற்றுக் கொள்ளும்படியான கருத்து என்று ஒன்றும் இருக்க முடியாது. கருத்தோ தீர்ப்போ ஒருவருக்கு சாதகமாகவும் மற்றொருவருக்கு பாதகமானதாகவும் தான் இருக்கும். பாதகமானவர் அதிகாரத்தின் பிடியில் ஏற்கற் செய்யப்படுகிறார் என்பது தான் சரியானதே தவிர, இருவரும் ஏற்கும் தீர்ப்பு என்று ஒன்று இருக்க முடியாது. ஏனென்றால் உலகம் வர்க்கமாய் பிரிந்து கிடக்கிறது. எடுத்துக்காட்டாக இடஒதுக்கீடு சரி என்று ஏற்பவர்களும் தவறு என மறுப்பவர்களும் அவரவர் வர்க்க நிலையிலிருந்தே அந்த முடிவை எடுக்கின்றனர். இந்த அடிப்படையிலிருந்து தான் நடுநிலை என்று ஒன்று இருக்க முடியாது என்று கூறுகிறோம்.

 

இதை நண்பர் சாருவாகன் இன்னொரு விதமாகவும் எதிர் கொள்கிறார், ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பது நோக்கர்களைப் பொருத்தது என்கிறார். அதாவது மோடி சிலருக்கு கெட்டவராக தெரியலாம் சிலருக்கு நல்லவராக தெரியலாம் என்கிறார். இது ஒரு மோசமான பார்வை. பறி கொடுத்தவன் திருடன் கெட்டவன் என்பான், திருடனின் உற்றவர்கள் அவனை நல்லவன் என்பார்கள் என்றால் திருடனைக் குறித்து என்ன முடிவு செய்வது? இது தவறான அணுகுமுறை. ஒருவனின் செயல்கள் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைக் கொண்டு தான் அவனைப்பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியும், அப்படி வருவது தான் சரியான முடிவாக இருக்கும். எனவே மோடியின் வருகை ஏன் இவ்வளவு எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது எனும் அடிப்படையை விலக்கி வைத்து விட்டு மோடியின் வருகை குறித்து முடிவெடுக்க முடியாது.

 

மோடி தமிழகம் வருகிறார், அவ்வாறு வருவதற்கு எதிர்ப்பு இருக்கிறது. இதை எந்த அடிப்படையில் அணுகுவது? மோடி சரியானவர் எனும் அடிப்படையிலிருந்து மோடியின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். அல்லது, மோடி தவறானவர் எனும் அடிப்படையிலிருந்து மோடியின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். ஆனால் நண்பர் சாருவாகன் இரண்டையும் ஒதுக்கிவிட்டு எதிர்ப்பவர்கள் எந்த அடிப்படையில் எதிர்க்கிறார்கள், அவர்கள் எப்படி எதிர்க்கலாம் என்று அணுகுகிறார். இது ஆணி வேரை விட்டுவிட்டு சல்லிவேர்களை அலசுவது போன்றதாகும். சல்லி வேர்களை தனித்து அலசக் கூடாதா? என்று கேட்கலாம். அலசலாம், ஒரு மரத்தின் வளர்ச்சி எனும் அடிப்படையில் ஆணி வேர் குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார் எனும் நிலைப்பாட்டிலிருந்து தான் அவரின் சல்லிவேர் குறித்த அலசலை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் நண்பர் சாருவாகன் மோடி குறித்த தன்னுடைய கருத்தை மறைத்துக் கொள்கிறார். அவர் நல்லவரா கெட்டவரா என்பது மையக் கேள்விக்கு அப்பாற்பட்ட விசயமாக கருதுகிறார். இந்தக் கருத்திலிருந்து நண்பர் முன்வைக்கும் தீர்வு குறித்து பரிசீலித்தால், – அதாவது தேர்தலுக்கு முன்னும் பின்னும் பாஜக வுக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று உறுமொழி வாங்க வேண்டும், அதன்பிறகு மாறிவிட்டால் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம். இதை அடிப்படையாகக் கொண்டு கருத்தியல் போராட்டத்தை நடத்தலாம். – ஆதரவுக்குழுவோ எதிர்க்குழுவோ அல்ல எனும் அவரது மொழிதலுக்கு எதிராக ஆதரவுக் குழுவில் அடியெடுத்து வைக்கிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

 

மோடி எதிர்ப்பு குறித்த நண்பர் சாருவாகனின் அலசல் தெரிவிப்பது என்ன? ஓட்டுக்கட்சிகளான இடதுசாரிகள் அதாவது போலிகள் மோடியை எதிர்க்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் மோடியுடன் அதாவது பாஜக வுடன் கூட்டணி வைத்திருந்த திமுக, அதிமுக குறித்து இவர்கள் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். இப்போது அவர்கள் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக நாளை ஜெயா பிரதமராவதற்கு வாய்ப்பு இல்லை என்றால் செய்யக்கூடிய முதல் வேலை பாஜக வுடன் கூட்டணி வைப்பது தான். இது குறித்து பேசாமல் மோடியை எதிர்ப்பது தேர்தல் கூட்டணி கட்டி பாரளுமன்ற சீட்டுகளை பெறுவதற்கு மட்டுமே உதவும். அதற்காகத் தான் அவர்கள் மோடியை எதிர்க்கிறார்கள் என்கிறார். சரியானது தான்.

 

தேர்தலில் பங்கேற்காத திராவிட இயக்கங்கள் பெரியாரின் கொள்கைகளை விரிந்த அளவில் கொண்டு செல்லாமல் பார்ப்பன எதிர்ப்பாக மட்டும் குறுக்கிக் கொண்டார்கள். எனவே அவர்களின் மோடி எதிர்ப்பும் வீரியமானதாகவும், சரியானதாகவும் இல்லை என்கிறார். பிழை ஒன்றுமில்லை.

 

இஸ்லாமிய இயக்கங்களின் எதிர்ப்பும் சந்தர்ப்பவசமானதே என்கிறார். அதாவது பாஜகவின் மையமான ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ இய்அக்கங்களின் கொள்கையும் இஸ்லஅமிய இயக்கங்களின் கொள்கையும் ஒன்றே தான். அது இஸ்லாம் எனும் அடிப்படையில் அதைச் செய்தால் இது இந்து எனும் அடிப்படையில் செய்கிறது. முஸாபர் நகர் கொடுமைகளில் முதல்வர் அகிலேஷ் யாதவ் குல்லா போட்டார். மோடி அவ்வாறு போடவில்லை. இது தான் இஸ்லாமியர்களுடைய எதிர்ப்பின் வடிவம் என்கிறார். ஆட்சேபிக்கத்தக்க கருத்து. என்றாலும் இந்த இடத்தில் இதை விவரிக்க வேண்டாம் என எண்ணுகிறேன் காரணம் கட்டுரையின் பேசுபொருளில் அதுவும் உள்ளடங்கி இருக்கிறது என்பதால்.

 

ஆக, மோடியின் எதிர்ப்பை மூன்றாக வகைப்படுத்தி அந்த எதிர்ப்புகளில் சாரமில்லை என்கிறார். ஒரு கருத்தை மதிப்பிடும் போது எதைக் கூறியிருக்கிறார் என்பதை மட்டுமல்ல, எதைக் கூறாமல் விட்டிருக்கிறார் என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது மோடி நல்லவரா கெட்டவரா என்பது தேவையில்லை என ஒதுக்கி வைத்த நண்பர் சாருவாகன் மோடி எதிர்ப்புக்கு போலிகளும் பிறரும் கூறும் காரணங்களை எடுத்துக் காட்டுகிறார். இந்த அடிப்படையில் தேர்தலில் பங்கேற்காத புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் மோடி எதிர்ப்புக்கு கூறும் காரணங்களை சீர்தூக்கியிருக்க வேண்டாமா? அதை நண்பர் செய்யவில்லை. மாறாக, அவர்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் எனவே அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று முடித்துக் கொள்கிறார். மறுதலிக்க முடிந்த இடங்களில் விவரிப்பதும், முடியாத இடங்களில் ஒடுங்கிக் கொள்வதும் மதவாதிகளின் உத்தி. அதாவது மோடி எதிர்ப்புக்கு பிற கட்சிகளின் கொள்கை நடைமுறைகளை எடுத்துக் கொள்ளாமல் அவை கூறும் காரணங்களை எடுத்துக் கொண்ட நண்பர் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களிடம் மட்டும் காரணத்தை விட்டுவிட்டு கொள்கைநடைமுறைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். தேர்தலில் பங்கேற்காத இயக்கங்களின் கருத்துகளை பரிசீலிப்பதில்லை. என்பது நண்பரின் கருத்தாக இருக்கலாம். ஆனால் மோடி எதிர்ப்பில் தூலமான பாத்திரம் வகிக்கும் புரட்சிகர இடதுசாரி இயக்கங்களின் அதாவது இஸ்லாமிய பெரியாரிய இயக்கங்களுக்கு முன்னதாக நாடெங்கிலும் எதிர்ப்புக் காட்டியதில் தொடங்கி விரிவாகவும் வீச்சாகவும் அதை கொண்டு சென்று பிற இயக்கங்களை எதிர்த்தே தீரவேண்டும் எனும் நிர்ப்பந்தத்தை உருவாக்கியது வரை புரட்சிகர இடதுசாரி இயக்கங்களின் பங்கு மகத்தானது. அதை சுலபமாக கடந்து செல்வதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

 

இதை நண்பர் கூறும் தீர்வின் வழியாக பார்க்கலாம். சார்வாகன் கூறும் தீர்வு இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

  1. ஓட்டுக்கட்சிகள் தேர்தலுக்கு முன்னும் பின்னும் பாஜக வை ஆதரிக்கக் கூடாது எனும் உறுதி கோருவது (மீறினால் அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம்)
  1. இதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்வது. (கருத்தியல் போராட்டம்)

கூட்டணி சேர விரும்பும், சேர்க்க விரும்பும் எந்த ஓட்டுக் கட்சியும் இப்படி ஒரு உறுதியை கோரப்போவதும் இல்லை. கோரினால் தரப்படப் போவதும் இல்லை. தந்தாலும் கடைப்பிடிக்கப் போவதும் இல்லை. ஏனென்றால் ஓட்டுக்கட்சி அரசியலின் அடிப்படை தெரியாத குழந்தை கூட இப்படி ஒரு அம்சத்தை நம்பாது. ஓட்டுக் கட்சிகள் இருப்பதும் இயங்குவதும் ஓட்டு வங்கியும் அதன்மூலம் கிடைக்கப் போகும் பொருளாதார, ஆட்சியதிகார பலனும் தானேயன்றி மக்களோ அவர்கள் மீதான நலனோ அல்ல. இதுபோன்ற உறுதி மொழியை ஒரு கட்சி யோசிக்கிறது என்றாலே அதற்கு கொஞ்சமேனும் மக்கள் நலனில் அக்கரையோ, அல்லது சந்தர்ப்பவாத அரசியல் கூடாது என்றோ சிந்தித்திருக்க வேண்டும். அப்படி ஏதேனும் ஒரு ஓட்டுக்கட்சி இருக்கிறது என்று நண்பர் சார்வாகன் நம்புகிறாரா? அப்படி இருந்தால் அது மத நம்பிக்கையைவிட மோசமானது. என்றால் கொஞ்சமும் சாத்தியமில்லாத இந்த யோசனையை தன் முடிவாக நண்பர் கூறியது ஏன்?

 

சாத்தியமே இல்லாத இதை எப்படி பிரச்சாரம் செய்வது? நாங்கள் இன்னின்ன கட்சிகளோடு உறுதிமொழி கேட்டோம் அவர்களும் தந்திருக்கிறார்கள் எனவே எங்களுக்கு ஒட்டுப் போடுங்கள் என்றா? இப்போதைய நிலையில் போலிகள் காங்கிரசுடனோ, பாஜக வுடனோ கூட்டணி வைக்கப் போவதில்லை. அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பிருக்கிறதா? என்றால் இருக்கிறது. ஆனால் அதை அந்த நிகழ்வின் போது பார்த்துக் கொள்வோம் இப்போதைக்கு கூட்டணி தேவை என்பது அவர்களின் சந்தர்ப்பவாதம். தேய்ந்துவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இதுபோன்ற மாநிலக் கட்சிகளின் தயவில்லாமல் அதிகப்படுத்திக் கொள்ள முடியாது என்பது அவர்களுடைய திட்டம். நிலமை இப்படி இருக்கையில் இதுபோன்ற கவைக்குதவாத சொல்லாடல்களை தீர்வாக முன்வைக்க முடியுமா? இதைக் கொட்டு தேர்தல் பிரச்சாரம் தான் செய்யலாமே தவிர மோடி எதிர்ப்பை எப்படிச் செய்வது?

 

இங்குதான் நண்பர் சார்வாகனாரின் அரசியல் பார்வையே இருக்கிறது. அதாவது மோடி எதிர்ப்பு என்பது தேர்தல் பிரச்சாரத்தைத் தாண்டி வேறொன்றுமில்லை. இந்த அரசியல் பார்வையிலிருந்து தான் மோடி எதிர்ப்பிலிருந்து அதன் பாசிசத் தன்மையை நீக்குகிறார். மோடி எதிர்ப்பு குறித்து பேசுவதென்றால் தேர்தல் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளுங்கள். ஆனால்  2002ல் சிறுபான்மையினருக்கு நடந்த கொடுமைகள் குறித்து பேசக் கூடாது என்பது தான் நண்பரின் முடிவாக இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் பொய் பித்தலாட்டங்கள் குறித்து பேசக் கூடாது என்பது தான் நண்பரின் முடிவாக இருக்கிறது. இந்த முடிவிலிருந்து தான், மோடி நல்லவரா கெட்டவரா என்பது தேவையில்லாத செய்தி என்கிறார். மோடிக்கு எதிராக புரட்சிகர இயக்கங்களின் பிரச்சாரங்களை மதிக்க வேண்டியதில்லை என்கிறார். ஆனால் 2002ல் நடந்த படுகொலைகள் மோடியோடு மட்டும் தொடர்புடையதில்லை. காந்தியை கொன்ற கோட்சே விருத்த சேதனம் செய்து கொண்டு இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்தியிருந்தான். நேரு மட்டும் அன்று வானொலியில் காந்தியைக் கொன்றது இந்து தான் முஸ்லீமல்ல என்று அறிவிக்காமல் இருந்திருந்தால் பல்லாயிரக் கணக்கான முஸ்லீம்கள் அன்று கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள். பகல்பூர், ஷாம்ஷெட்பூர் தொடங்கி நேற்றைய முஸாஃபர் நகர் வரை இந்துத்துவ அரசியல் என்பது மக்களை கொன்று குவிப்பதிலிருந்து தான் ஆதாரப்பட்டிருக்கிறது. குஜராத்தைப் பொருத்தவரை அது தவிர்க்க முடியாமல் அம்பலப்பட்டிருக்கிறது. அதனால் தான் மோடியவாதிகள் 2002ஐ பேச மறுத்து வளர்ச்சி என்கிறார்கள். குஜராதில் வளர்ச்சி எனக் கூறப்படுவதெல்லாம் புனைவுகளும் பொய் பித்தலாட்டங்கள் தான். எப்படி பொய் சொல்வது என்பதற்காகவே பல்லாயிரம் டாலர் சம்பளத்தில் ஒரு நிறுவனத்தை பிடித்திருக்கிறார்கள். இவைகளையெல்லாம் விட்டுவிட்டு தேர்தலைச் சுற்றி மட்டுமே பேச வேண்டும் என்றால் அது யாருக்கு சாதகமானது?

 

மோடியை ஏன் எதிர்க்கிறோம்? மோடி பிரதமராக வந்து தொலைப்பதற்கு இருக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை. ஆனால் மோடி ஒரு கிரிமினல். ஆயிரக்கணக்கானோரை கொலை செய்துவிட்டு அதை தன் அதிகார பலத்தைக் கொண்டு மறைத்தவன். தன் பிம்பத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக போலிமோதல்(என்கவுண்டர்) மூலம் அப்பாவிகளை கொன்று குவித்தவன். மோடி குறித்து பேசும் யாரும் இவைகளை தவிர்த்துவிட முடியாது. அவ்வாறு தவிர்த்துவிட்டுப் பேசினால் அது நடுநிலை என்று கூறிக் கொண்டாலும் மோடி ஆதரவு நிலை தான். முள்ளிவாய்க்காலை விட்டுவிட்டு வளர்ச்சி பற்றி பேசுங்கள் என்று இராஜபக்சே கூறினால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

 

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மன்மோகன் சிங்குக்கும் இது போன்ற ஒளிவட்டம் கட்டப்பட்டது. நாட்டின் வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதுத்தான் வளர்ச்சி என்பது இன்று நிரூபணமாகியிருக்கிறது. அவர் அம்மணமாகி விட்டதால் இன்று மோடி,. நாளை வேறு ஏதோ ஒரு கேடி. இதை அம்பலப்படுத்தித்தான் மக்களிடம் பேசுகிறோம். மோடி தேர்தல் வேட்பாளர் என்பதாலல்ல, மோடி என்பது முதலாளித்துவ சுரண்டலின் உச்சத்திற்கும், பார்ப்பனிய பாசிச பயங்கரவாதத்திற்கும் கச்சிதமான குறியீடாக இருக்கிறார் என்பதால் தான் மோடியை எதிர்க்கிறோம். ஒப்பீட்டளவில் வட மாநிலங்களை விட தமிழகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை மேம்பட்டிருக்கிறது. நடுவீதியில் ராமனை செருப்பால் அடிக்க முடிந்திருக்கிறது என்றால் அது பெரியார் எனும் பகலவன் தான் காரணம். அந்தப் பெரியாரின் மண்ணில் ஒரு பார்ப்பன பயங்கரவாதி எதிர்ப்பில்லாமல் திரும்பிப் போய்விட முடியுமா? மேலதிக விபரங்களுக்கு திருச்சி மோடி எதிர்ப்பு கூட்டத்தில் தோழர் மருதையன் பேசியதை கேட்டுப் பாருங்கள்.

 

அடுத்து புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் குறித்து சில அறியாமைகளை முன்வைத்திருக்கிறார் நண்பர் சாருவாகன். அவைகளுக்கான மேடை இதுவல்ல என்றாலும் அவருக்கு சில கேள்விகள் மட்டும்.

 

\\\மாற்றம் என்பது இயல்பாக ,சிறிது சிறிதாக சூழல் சார்ந்து நிகழ வேண்டும். அப்படி நிகந்தால் மட்டுமே நிலைக்கும்/// எந்த அடிப்படையில் அல்லது எந்த முன் உதாரணத்தைக் கொண்டு அல்லது எந்த சான்றாதரங்களின்படி இப்படிக் கூறுகிறீர்கள்? மனித குல வரலாறு இப்படித்தான் இருக்கிறதா?

 

\\\ஒருவேளை இவர்களின் கையில் ஆட்சி என்றால் மட்டும் நியாயமாக நல்லாட்சி தருவார்கள் என எப்படி உறுதியாக நம்ப முடியும்?/// ஆட்சி என்பது குறித்தும் அரசு என்பது குறித்தும் வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையில் மார்க்சியர்களுக்கு ஒரு பார்வை உண்டு என்பது தெரியுமா? இப்போது இருக்கும் அரசு என்பதற்கும் சோசலிச அரசு என்பதற்கும் இடையிலுள்ள வித்தியாசம் புரியுமா?

 

\\\அதுவும் ஜன்நாயகம் தேர்தல் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?/// தேர்தல் பாதை திருடர் பாதை எனும் முழக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு இப்படி முடிவெடுத்தீர்கள் என்றால், தேர்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் மக்களுக்கு உரிமை வேண்டும் என்றும் முழங்குகிறோமே அதைக் கொண்டு என்ன முடிவெடுப்பீர்கள்?

 

இடிப்பார் இல்லாத ஏமரா மன்னன் என்று வள்ளுவர் முதலாளித்துவ ஜனநாயக தேர்தலைத்தான் கூறினாரா?

 

ஆழமான தேடல் கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் அகவிருப்பத்திலிருந்து இப்படி முடிவெடுப்பது சரியானது தானா?

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மாபெரும் பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி. அடுத்த பிரதமருக்கான தகுதியில் மோடியே முதலிடத்தில் இருப்பதாக காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மன்மோகன் சிங் – சோனியா தலைமையிலான காங்கிரஸ் கும்பல் வரலாறு காணாத ஊழலில் சிக்கித் தவிப்பதோடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை என கடும் பொருளாதார சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் பெருகி வரும் அதிருப்தியை மடைமாற்றி, மோடியை முன்னிறுத்துகின்றன ஆளும் வர்க்கங்கள்.

நரேந்திர மோடி மிகச்சிறந்த நிர்வாகி, குஜராத்தை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றவர், தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றவர்; உறுதியான முடிவுகள் எடுத்து துணிச்சலாக நடைமுறைப்படுத்தி வெற்றிகளைக் குவிக்கும் திறமைசாலி; ஊழலை ஒழித்த உத்தமர்; மொத்தத்தில் ‘வளர்ச்சியின் நாயகன்’ (விகாஸ் புருஷ்) என்று பொய்களை மாலையாக சூட்டி, புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இதயம் உள்ள மனிதர்கள் அனைவரின் இரத்தத்தை உறைய வைக்கும் கொடூர பச்சைப் படுகொலைகளை 2002-ம் ஆண்டு திட்டமிட்டு நடத்தி 3000-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை படுகொலை செய்தவர். அதற்கு சாட்சியாக இருந்த ஹரேன் பாண்டியா என்ற தனது சக அமைச்சரையே படுகொலை செய்தவர். இந்த மோடி தனி நபர் அல்ல. சாதி மத வெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை மோத விட்டு, பார்ப்பன-இந்து மதவெறி பாசிசத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் தலைவன். இந்துத்துவத்தை குஜராத்தில் சோதித்து ருசிகண்ட காட்டுப் பூனை. ஆகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களை திட்டமிட்டு புறக்கணித்து, டாடா, அம்பானி, அதானி, எஸ்.ஆர், ஃபோர்டு, மாருதி என கார்ப்பரேட் முதலைகளுக்கு குஜராத் வளங்களை தாரை வார்த்தது தான் மோடி உருவாக்கிய வளர்ச்சி. அதனால் மேட்டுக்குடி வர்க்கமும், கார்ப்பரேட் முதலாளிகளும் மோடியை உச்சி முகர்ந்து கொண்டாடுகின்றனர். தேசபக்தியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் மோடி இங்கே மாருதி சுசுகி தொழிலாளர்கள் தம் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, ஜப்பானுக்கு நேரில் சென்று எல்லா வசதிகளையும் செய்து தருவதாக வாக்களித்தார். 4.5 கோடி சில்லறை வணிகர்களை அழிக்க வரும் வால்மார்ட் பற்றி இன்று வரை மோடி வாயைத் திறக்கவில்லை. தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு தன் முகமூடிகளை பல்லாயிரக்கணக்கில் தயாரித்து வாங்கி பயன்படுத்திய இந்த யோக்ய சிகாமணி தான், சீன ஊடுருவலை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என சவடால் அடிக்கிறார்.

நாடு முழுவதும் அண்மை ஆண்டுகளில் காங்கிரஸ், பாஜக நடத்திய ஊழல்களில் காங்கிரசின் நிலக்கரி, அலைக்கற்றை ஊழல்கள் முதல் பாஜக-வின் கர்நாடக ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது கொள்ளை வரை அனைத்துமே தனியார்மயத்தின் பெயரால் முதலாளிகள் கொள்ளையடித்த ஊழல்கள் தான். இந்த தனியார்மய கொள்கையில் காங்கிரசுக்கும பாஜக-வுக்கும் வேறுபாடு இல்லை என்பதோடு அரசு சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க தனியாக ஒரு துறையையே ஏற்படுத்தியது வாஜ்பாயின் பாஜக அரசுதான். சுமார் 42 லட்சம் ஏக்கர் அரசு நிலம் பல்வேறு காரணங்களுக்காக டாடா, அம்பானி, எஸ்.ஆர், மிட்டல், அதானி, அமெரிக்க மெக்டோனால் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. பருத்தி, உருளைக் கிழங்கு, வெங்காயம் ஆகிய குஜராத்தின் முக்கிய விவசாய உற்பத்தி கார்ப்பரேட் முதலாளிகள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 152 கிராமங்களைப் பிடுங்கி பல்லாயிரம் ஏக்கர் வளமான விலை நிளங்களைப் பறித்து (64 ஆயிரம் கோடியில் தொடங்கப்படும் தனியார் அணு மின்நிலையத்திற்கு) தாரை வார்க்கப்பட்டுள்ளன.

ஊழல் கறை படியாத உத்தமரான மோடி, ரிலையன்ஸ் குழுமத்திற்கு எரிவாயு திட்டத்தில் காட்டியுள்ள சலுகைகள் அலைக்கற்றை ஊழலை விட முகப்பெரிய ஊழலாகும். சிங்கூரிலிருந்து விரட்டப்பட்ட டாடா நானோ தொழிற்சாலைக்கு ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்ற குத்தகையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வழங்கியதோடு மட்டுமல்லாமல் மானியமாக மட்டும் 35 ஆயிரம் கோடி வழங்கினார். குஜராத் அரசிடமிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அபகரித்த முதலாளிகள் பலர் தொழில் தொடங்காமல் வீட்டு மனைகளாக்கி விற்று கொள்ளைடித்துள்ளனர். 56 மீனவ கிராமங்களை அப்புறப்படுத்தி 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பறித்து முந்திரா என்ற தனியார் முதலாளிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேருக்கு வாழ்வளித்த வெங்காய சாகுபடி நிலத்தைப் பறித்து நிர்மா சிமெண்ட் கம்பெனிக்கு கொடுத்ததும் மோடி தான். ஆனால் வேலை கிடைத்ததோ வெறும் 416 பேருக்கு மட்டும் தான். குஜராத்தின் 52 ஆண்டு கால வரலாற்றில், மோடி ஆட்சியில் தான் அரசு சொத்துக்கள் அதிகம் சூறையாடப்பட்டது என்பதோடு மிகப்பெரிய ஊழல் ஆட்சியும் இது தான் என்பதை பல்வேறு ஆய்வுகளும் தணிக்கை அறிக்கைகளும் அம்பலப்படுத்தியுள்ளன. 2011-ம் ஆண்டு மட்டும் 17 ஊழல்களை தலைமை தணிக்கைத் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். வாழ்வாதார அழிப்பு, கார்ப்பரேட் சூறையாடல், ஊழல் இவற்றை தான் மாபெரும் வளர்ச்சி, நாட்டிற்கே முன்மாதிரி என்று கூசாமல் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

இருள் கவ்விக் கிடக்கும் குஜராத்

எங்கள் மாநிலத்தில் விவசாயிகள் காரில் செல்லும் அளவிற்கு வசதியாக வாழ்கிறார்கள் என்று மிகப்பெரிய பொய்யை அவிழ்த்து விட்டார் மோடி. ஆனால், 2003 முதல் 2012 முடிய 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையை பதிவு செய்ய வேண்டாம் என மோடி அரசு உத்தரவிட்டிருப்பதாக போலீசு அதிகாரியே அம்பலப்படுத்துகிறார். சுமார் 85 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி நாசமான போது சல்லிக்காசு கூட நிவாரணம் வழங்காமல் விவசாயிகளின் முதுகெலும்பை ஒடித்தவர் தான் மோடி. மின் உற்பத்தியில் உபரி எனப் பீற்றிக் கொள்ளும் மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு 10 மணி நேரம் கூட மின்சாரம் வழங்கப்படுவதில்லை.

• மாநில மொத்த உற்பத்தி (SGDP) அளவில் குஜராத் 8-வது இடத்தில் இருக்கிறது.
• வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் எண்ணிக்கையில் 18-வது இடத்தில் (அதாவது வறுமை ஒழிப்பில்) உள்ளது குஜராத். பின்தங்கிய ஒடிசா, குஜராத்தை விட பல படி மேலே உள்ளது.
• பெண் சிசுக்கொலை இன்னும் தொடர்கிறது. ஆண்-பெண் விகிதம் 1000-க்கு 918 என்ற அளவில் 18-வது இடத்தில் உள்ளது.
• 44% பேர் மட்டுமே காங்கிரீட் கூரையில் வாழ்கின்றனர். பிறர் மோசமான நிலையில் வாழ்கின்றனர்.
• கல்வியில் மிகப் பின்தங்கிய நிலையில் 15-வது இடத்தில் உள்ளது குஜராத்.
• தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்குவதில் 7-வது இடத்தில் உள்ளது. அதாவது 100 நாட்களுக்கு பதில் 34 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.
• குழந்தை மரணத்தைத் தடுப்பதில் 18-வது இடத்திலும், மகப்பேறு கால மரணத்தைத் தடுப்பதில் 5-வது இடத்திலும் இருக்கிறது குஜராத்.
• 50% குழந்தைகள் சத்தான உணவு இன்றியும், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 65% பேர் சத்துணவு இன்றியும் வாழ்கின்றனர்.
• பெண்களில் பாதி பேர் ரத்த சோகை கொண்டவர்கள். இது பற்றி கேட்டபோது, குஜராத் பெண்கள் அழகுபடுத்திக் கொள்வதில் அதிக அக்கறை காட்டி உணவைக் குறைத்து சாப்பிடுவதால் தான் பிரச்சினை என்று மோசடி வாதத்தை முன்வைத்தார் மோடி.
• மோடியின் ஆட்சிக் காலத்தில் வேலை வாய்ப்பு உருவாக்குவது முற்றிலும் நின்று போய் விட்டது.
• தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 4-ல் 3 பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இதற்கு சான்று.
• சிறுபான்மையினர் குறிப்பாக இசுலாமியர்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே கருதப்படுகின்றனர். வாழ்க்கை நிலையில் பீகார் முசுலீமை விட கீழ் நிலையிலேயே உள்ளனர்.
• கிராமங்களில் 16% பேருக்கு தான் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. இந்தியாவின் 3-வது மிகப்பெரிய கடனாளி மாநிலமும் குஜராத்-தான்.
• சுற்றுச்சூழல் மாசு அதிகம் உள்ள 88 இந்திய நகரங்களில் 8 குஜராத்தில் உள்ளன.

இதுதான் மோடி நிர்வாகத்தின் யோக்யதை. ‘மோடி நடத்துவது ஆட்சி அல்ல, மளிகைக் கடை; இங்கு லாபம் மட்டுமே வளர்ச்சியின் அளவுகோல்’ என்றார் ஒருவர். இது தான் உண்மை நிலை. ஆர்.எஸ்.எஸ் கும்பல் 2002-ல் அரங்கேற்றிய படுகொலைகளுக்கு மூலகர்த்தா மோடி தான் என சஞ்சீவ் பட் போன்ற போலீசு அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். படுகொலை உத்திரவுகளை நிறைவேற்றிய போலீசு அதிகாரி வன்சாரா நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருக்க வேண்டியவர் அல்ல, சபர்மதி சிறைச்சாலையில் இருக்க வேண்டியவர் என்று தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரும் மோடியை உத்தமர் என்றும், அவர் தான் நாட்டை காக்கக் கூடிய வல்லமை பெற்றவர் என்றும் ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் ஒரே குரலில் பேசக் காரணம் குஜராத் மக்களை ஒடுக்கியது போல, இந்திய மக்களை அனைவரையும் ஒடுக்கி கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான தடைகளை நீக்குவார் என்பதே. மோடியும், ஆர்.எஸ்.எஸ்-ம் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்கள், தொழிலாளிகள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைவருக்கும் எதிரானவர்கள் தான். குஜராத்தில் முதலாளிகளின் லாபம் உயரும் அதே வேகத்தில் தொழிலாளிகளின் ஊதியம் வீழ்ச்சி அடைகிறது என்பதே உண்மையான நிலவரம்.

தமிழகத்தில் மோடியின் முகமூடியை அணிந்து வளர்ச்சி, வல்லரசு வாய்ச் சவடாலுடன் செல்வாக்கு பெற முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலை வீழ்த்த வேண்டியது இன்றை அவசர கடமையாகும். திராவிட இயக்கத்தை விமர்சிப்பது என்னும் பெயரில் தந்தை பெரியார் உருவாக்கிய மதச்சார்பற்ற பண்பாட்டை சீர்குலைக்கவும், கம்யூனிச எதிர்ப்பை நயவஞ்சகமாய் முன்னெடுக்க இனவாதிகளும், முதலாளிகளும் பாஜக பின்னால் அணிவகுக்கும் அபாயகரமான சூழலில் உழைக்கும் மக்களாகிய நாம் ஓரணியில் திரள்வோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கும்பலை வீழ்த்துவதன் மூலம் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க அணி திரள்வோம். வாரீர்.

காவி பயங்கரவாதி, கொலைகார மோடியே தமிழகத்திற்குள் நுழையாதே !
கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி நரேந்திர மோடியை விரட்டியடிப்போம் !

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்

சிறப்புரை : தோழர். மருதையன்,
மாநில பொதுச்செயலர், 
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
சித்ரா காம்ப்ளக்ஸ் எதிரில், சத்திரம் – திருச்சி.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!

சீனிவாச ராமானுசனுக்கு என்ன வேண்டும்? சிறையில் இருக்கும் 4 பயங்கரவாதிகளை ரூட் போட்டு வெளியில் கொண்டு வந்து குண்டு வைத்து கொலை செய்கிறார் காமன்மேன். “வழக்கு, வாய்தா, பிணை, நீதிமன்றம், மேல்முறையீடு போன்ற உரிமைகள் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படக் கூடாது, பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்றால் உடனே சுட்டுக் கொன்று விடவேண்டும்” என்பதுதான் காமன்மேனின் கருத்து.

பயங்கரவாதிகள் எனப்படுபவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லன்களாக இருந்தபோதிலும் காமன்மேனுடைய மேற்படி கருத்தை அமல்படுத்த நிச்சயமாக அவர்கள் தடையாய் இல்லை. என்கவுன்டர்தான் தீர்ப்பு எனும்போது சாகமுடியாது என்று அவர்கள் தோட்டாவை செரித்துவிட முடியாது. ஆகவே “விசாரிக்காமல் சுடமுடியாது” என்று கூறுவது யாரோ அவர்தான் உண்மையில் காமன்மேனுடைய கோபத்தின் இலக்கு. அதாவது அதுதான் சொல்லிக் கொள்ளப்படும் இந்திய ஜனநாயகம்.

தான் சொல்ல விரும்பிய இக் கருத்தை கமலஹாசன் நேரடியாக, நேர்மையாகச் சொல்லவில்லை. டாக்டர் ராஜசேகர் நடித்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படம் இந்தக் கருத்தை வெளிப்படையாகவும் கம்பீரமாகவும் வெளியிட்டது. “கைதிகளை சித்திரவதை செய்துதான் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியுமேயன்றி சட்டபூர்வமான வழிகளில் விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது” என்று அந்தப்படம் ‘நேர்மையாக’ பிரகடனம் செய்தது. அப்படிப்பட்ட ‘நேர்மையான’ படங்கள் பல வந்துவிட்டன.

அப்பேர்ப்பட்ட ஒரு நேர்மை கமலஹாசனிடம் இல்லை என்று சொல்லலாம். அல்லது சொல்ல விழையும் செய்தியை உரத்துக் கூறாமல் ஒளித்துச் சொல்வதுதான் கலைக்கு அழகு என்ற காரணத்தினாலும், இந்த கலை ஞானித்தனத்தை (அல்லது களவாணித்தனத்தை) கமல் கைக்கொண்டிருக்கலாம்.

காரணம் எதுவாக இருப்பினும் படத்தின் வில்லன் ‘ஜனநாயகம்’. ஜனநாயகம் என்ற இந்தக் கருதுகோள் திரைப்படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறது?

பப்பட் ஷோவில் முசாரப்பின் பயங்கரவாதத்தை கையாளத் தெரியாத கோழிமாக்கான் புஷ், குண்டு வெடிப்பு பயங்கரவாதம் ஆகியவற்றால் மக்களுக்கு நேரும் துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தன் ஆட்சியைப் பற்றி மட்டுமே கவலைப்படும் முதலமைச்சர் (கருணாநிதி), ஜனநாயகத்தின் அதிகாரத்திற்க்கு கீழ்ப்படியுமாறு மோகன்லாலிடம் கூறும் முதுகெலும்பில்லாத தலைமைச் செயலாளர், எதிர்கால முதல்வராக விரும்பும் விஜயகாந்தைப் போன்ற மட்டமான ஒரு நடிகன்… இவர்கள்தான் ஜனநாயகத்தின் பௌதிக வடிவங்களாக படத்தில் சித்தரிக்கப்படுபவர்கள்.

இவர்கள் மட்டுமல்ல. லஞ்சம் வாங்கும் டிராபிக் கான்ஸ்டபிள், தூங்கி வழியும் எஸ்.ஐ முதலான கீழ் வர்க்கத்தினரும் (சாதியும்தான்) எள்ளி நகையாடப்படும் ஜனநாயகத்தின் அங்கங்களாகவே சித்தரிக்கப்படுகின்றனர்.

இவர்கள் எள்ளி நகையாடத் தக்கவர்களா இல்லையா என்பதல்ல கேள்வி. இவர்களை எள்ளி நகையாடும் கதாநாயகன் யார் என்பதுதான் விசயம்.

அதிகாரத்தின் இந்தக் கீழ்த்தரமான ஜனநாயகத்தின் கீழ் பணியாற்றுமாறு சபிக்கப்பட்டிருக்கும் மோகன்லால், மனைவியை மறந்து மரணத்தை தழுவத் தயாராக இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரி, நடமாடும் உருட்டுக் கட்டையான முஸ்லீம் அதிகாரி….அப்புறம் நம்முடைய காமன்மேன் ஆன கிருஷ்ண பரமாத்மா. இவர்கள்தான் கதாநாயகர்கள்.

இவர்களுடைய கோரிக்கை? அதை மோகன்லால் சொல்கிறார், “எந்தவித குறுக்கீடுகளும் இல்லாத அதிகாரம்”. அந்த அதிகாரத்தை தங்களுக்கு வழங்கும் பட்சத்தில் பயங்கரவாதத்திலிருந்து மக்களை அவர்கள் பாதுகாப்பார்களாம்.

அரசியல் குறுக்கீடுகள் அற்ற அதிகாரம்! இந்த சொற்றொடரை அநேகமாக எல்லா  துக்ளக் இதழ்களிலும் நீங்கள் படித்திருக்க்கலாம். இத்தகைய அதிகாரத்தை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வழங்காததனால்தான் இந்தியாவின் பொருளாதாரம் முதல் போக்குவரத்து வரை அனைத்துமே புழுத்து நாறுகிறது என்பதுதான் ‘சோ’ வர்க்கத்தின் கருத்து. இவர்களை இன்னும் கொஞ்சம் சுரண்டினால் ‘தகுதியான’ ஐ.ஏ.எஸ் ஆக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கோடிட்டுக் காண்பிப்பார்கள்.

அர்சத் மேத்தா முதல் அமெரிக்காவின் சப்-பிரைம் மோசடிக்கான சூத்திரத்தை உருவாக்கிய எம்.ஐ.டி கோல்டு மெடலிஸ்டுகள் வரையிலான எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இவர்கள் தங்கள் பொய்ப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டார்கள். ஆகவே இவர்களைப் பொருத்தவரை சில்லறை அரசியல்வாதிகளின் குறுக்கீடுகள்தான் பயங்கரவாதம் தலையெடுக்கவும், தலைவிரித்தாடவும் காரணம். ஆகவே அதிகார வர்க்கத்திற்க்கு முழு அதிகாரம் வழங்கினால் அடுத்த கணமே பயங்கரவாதத்தை அவர்கள் ஒழித்து விடுவார்கள்.

அத்வானி முதல் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வரையிலான பலராலும் பல்லாயிரம் முறை கூறப்பட்டு மக்களுடைய பொதுப்புத்தியில் இந்தப் பொய் உறைய வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அசாதாரமான ரவுத்திரம் கொண்டு நான்கு பேரை குண்டு வைத்து கொலை செய்யும் இந்தப் படத்தில் குற்றவாளிகளின் ‘கொடுரமான’ குற்றங்களையோ, அல்லது அதனால் பாதிக்கப்பட்ட காமன்மேனின் துயரத்தையோ கோடம்பாக்கத்திற்கே உரிய சென்டிமெண்ட் காட்சிகளின் மூலம் நியாயப்படுத்த இந்தத் திரைப்படம் முயற்சிக்கவில்லை. ‘நியாயம்’ மக்களுடைய மூளைகளில் ஏற்கனவே உறைந்திருப்பதால் தீர்ப்பு மட்டுமே தேவையாய் இருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகள் இல்லாத போதிலும் இப்படம் ரசிகர்களை ஈர்ப்பதற்குக் காரணம் மோகன்லாலுக்கும் கமலஹாசனுக்கும் இடையில் நடக்கும் இந்தச் சதுரங்க ஆட்டம் ஒரு திரில்லரைப் போல விறுவிறுப்பாக கொண்டு செல்லப்படுகிறது. ப்ரூஸ் வில்லீஸ் நடித்த “டை ஹார்டு” வரிசைப்படங்களில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் ஆட்டம் இங்கே ஹீரோக்களுக்கிடையே நடக்கிறது. ஆட்டத்தின் காய் நகர்த்தல்களில் மனதைப் பறிகொடுக்கும் இரசிகர்கள் வெட்டப்படும் காய்கள் மனிதர்கள் என்பதையும் கூட மறந்து விடுகிறார்கள். ஒரு குத்தாட்டப் பாடலின் அருவெறுப்பான பாடல் வரிகளை கவனிக்காமல் தாளக்கட்டு வழியாக தன்னைப் பறிகொடுக்கும் இரசிகன் போல படத்தின் வடிவம், இரசிகனை கொக்கி போட்டு இழுத்துச் செல்கிறது. விறுவிறுப்பான கதை, நேர்த்தியான எடிட்டிங், என்று இந்தப் படத்தை விதந்து எழுதுபவர்கள் வழுக்கி விழுந்த இடம் இதுதான்.

யங்கரவாதிகளை கொடிய மிருகங்களுக்கு ஒப்பிட்டு கமலஹாசன் சாடவில்லை. அவர்களை கரப்பான் பூச்சிகளுக்கு ஒப்பிடுகிறார். இந்தக் கொலை கரப்பான் பூச்சிகளை நசுக்குவதைப் போல முக்கியத்துவம் அற்றது. அந்த உயிர்கள் வெறும் பூச்சிகள். இந்தப் பூச்சிகளைக் கொலை செய்த கையோடு தக்காளி பையுடன் வீட்டிற்குப் போய் மணக்க மணக்க சாப்பிட முடியும் – லாக்கப்பில் ரத்தம் சொட்டச் சொட்ட கைதியை அடித்துக் கூழாக்கிவிட்டு இரவில் மனைவியைத் தழுவும் அதிகாரியைப் போல. கரப்பான் பூச்சிகள்! சாதரண மனிதர்களையும் சிறு குற்றவாளிகளையும் ஏன் மொத்தக் குடிமக்களைப் பற்றியும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி கொண்டிருக்கும் கருத்து இதுதான்.

அதை கமலஹாசன் சொல்கிறார். ” இந்த பயங்கரவாதிகள் என் அளவுக்கு புத்திசாலிகள் அல்ல” என்கிறார். புத்திசாலித்தனம் என்ற சொல் இங்கே பயன்படுத்தப்படுவது எவ்வளவு விகாரமாக இருக்கிறது? பிக்பாக்கட் – ஒரு கரப்பான் பூச்சி, முட்டாள். ஹர்ஷத் மேத்தா – புத்திசாலி. பயங்கரவாதிகளை படுபயங்கரமாக சித்தரிப்பதற்காக அல்கைதா சர்வதேசத் தொடர்பு என்றெல்லாம் அடுக்கி பீதியூட்டும் அதே வர்க்கம் அவர்களை நசுக்கப்பட வேண்டிய அற்ப ஜந்துக்களாகவே கருதுகிறது. இந்தக் கருத்தில் மோகன் லாலுக்கும் மற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் காமன்மேனுக்கும் இடையில் எந்த வேறுபாடுமில்லை. காமன்மேன் என்பவன் போலீஸ் மேன் மோகன்லாலின் ஆல்டர் ஈகோ. அதனால்தான் இறுதிக் காட்சியில் கிட்டத்தட்ட கமலின் காலில் விழுகிறார் மோகன்லால்.

கதையின் முதன்மையான கரு பாசிசம். வெளிப்படையாகவும் அருவெறுக்கத்தக்க முறையில் துருத்திக் கொண்டும் இந்துத்வக் கருத்தும் முசுலீம் வெறுப்பும் படத்தில் திணிக்கப்பட்டிருந்த போதும், அவை இல்லாமலேயே கூட இத்திரைப்படம் இந்துத்வ பாசிசத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறது.

ஹேராம் படத்தில் முசுலீம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதனால்தான் இந்து தீவிரவாதியாக தான் மாற நேர்ந்ததாக மிகவும் விலாவாரியாக சித்தரிக்கும் கமல் அந்த நியாயத்தை முசுலீம் தீவிரவாதத்திற்கு வழங்கவில்லை. கோவை குண்டு வெடிப்பிற்காக கைது செய்யப்பட்ட தீவிரவாதி அதற்கு காரணம் பெஸ்ட் பேக்கரி சம்பவம் என்று காலத்தால் பிந்தைய ஒன்றை கூறுகிறார். கமல் சினிமாவிற்காகவே வாழ்பவர். பெர்ஃபெக்ஷனிஸ்ட். நாற்பதுகளின் கொல்கத்தாவை கண் முன்னால் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்து செட் போட்டவர். அப்பேற்பட்ட கமலின் படத்தில் இவ்வளவு அலட்சியமான பிழை எப்படி நேர்ந்தது, ஏன் நேர்ந்தது?

போலீசு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகைகளில் ஏன் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றன? ஏனென்றால் குற்றவாளிகளை லாக்கப்பில் அவர்கள் ஏற்கனவே தண்டித்து விடுகிறார்கள். அப்புறம் இரண்டு மாதம் ரிமாண்டு. போலீசைப் பொறுத்தவரை தீர்ப்பு தண்டனை எல்லாம் முடிந்து விட்டது. நீதிமன்றம் என்பது அவர்களைப் பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத அசவுகரியம். அதனால்தான் அலட்சியம்.

ஒரு முசுலீமை தீவிரவாதி என்று காட்டுவதற்கு “அவன் தாடி வைத்திருந்தால் போதாதா, அதற்கு மேல் என்ன சாட்சியங்கள், பின்புலங்கள், நியாயங்கள் வேண்டும்” என்பதுதான் இந்தத் திரைப்படத்தின் பார்வை.

1947க்கு முந்தைய இந்து முசுலீம் கலவரங்களில் இருதரப்பிலும் பல அட்டூழியங்கள் நடந்தன. அதன்பின் இந்தியாவில் சிறுபான்மையாகிவிட்டதால் திருப்பியடிக்கும் சமூக வலிமையை இசுலாமிய சமூகம் இழந்திருந்தது. 90 களுக்குப்பிறகு இந்து மதவெறியர்களுக்கு பதிலடி என்ற பெயரில் குண்டு வெடிப்புக்கள் நடக்க ஆரம்பித்தன். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற போதிலும் இந்து மதவெறியர்களைப் போல கற்பழிப்பு, உயிரோடு எரிப்பு முதலான சமூகமே நடத்தும் கலவரங்களில் இசுலாமிய தீவிரவாதிகள் ஈடுபடவில்லை. அதற்கு வாய்ப்பும் இல்லை.

கடைசிக் காட்சியில் காமன்மேன் கமல் மிக உருக்கமாக வருணிக்கும் கருவறுத்த கதையே ஒரு முசுலீம் பெண்ணுக்கு இந்து வெறியர்கள் இழைத்த கொடுமைதான். 2002 குஜராத் முசுலீம் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் கவுசர்பானு என்ற பெண்ணின் மேற்சொன்ன கதையைப் போல பலநூறு கதைகள் உள்ளன. கவுசர்பானுவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருக்குழந்தையை எடுத்து அந்தப் பெண்ணை கொல்லுமளவு இந்து மதவெறி தலைவிரித்தாடியது. இதை செய்தவர்கள் இந்து மதவெறியர்கள் என்ற உண்மையை மறைப்பதோடு “இந்த சம்பவம் ஒரு இந்துவுக்கு நடந்திருந்தால் என்ன, ஒரு முசுலீமுக்கு நடந்திருந்தால் என்ன” என்று மத நல்லிணக்கம் பேசி இரண்டு சொட்டு கண்ணீர் விடுகிறார் கமல். இதுதான் பார்ப்பன நரித்தந்திரம். இசுலாமியர்களுக்கு நடந்த அநீதியையே இசுலாமிய தீவிரவாதிகளைக் கொல்வதற்கு பயன்படுத்தும் இந்த மோசடிக்கு பார்வையாளர்களை சுலபமாக வென்றெடுக்கலாம் என்பது கமலின் துணிபு. அதை இந்தப் படத்தை பார்ப்பவர்கள், பாராட்டியவர்கள் நன்றியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மேலவளவு சம்பவத்தில் தேவர் சாதி பஞ்சாயத்து தலைவரை தலித் மக்கள் கொலை செய்து விட்டதாக காட்டினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் உன்னைப் போல ஒருவனும் இசுலாமிய பயங்கரவாதம் பற்றி கூச்சமில்லாமல் பொய் பேசுகிறது. ஆனால் பார்வையாளர்கள், பதிவுலகில் விமரிசனம் எழுதிய பலரும் இது குறித்தெல்லாம் அக்கறைப்படவில்லை என்பது இந்த படம் தோற்றுவித்திருக்கும் அபாயகரமான பிரச்சினையாகும். இவர்களின் அக்கறையின்மை என்பது இசுலாமிய பயங்கரவாதம் குறித்த ஊடகங்களின் பொய்யான புனைவுகளில் நிலைகொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கவுசர்பானுபோல கீதாபென் என்ற இந்துப்பெண் தனது முசுலீம் கணவனை காப்பாற்றப்போய் இந்து மதவெறியர்களால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதுவும் குஜராத் இனப்படுகொலையில் நடந்த உண்மைதான். ஒரு முசலீமின் விந்து கரு ஒரு இந்துப்பெண்ணின் கருப்பையில் நுழைவதா என்ற அளவுக்கு இந்து மதவெறி குஜராத்தில் தலைவிரித்தாடியது. இன்றைக்கும் முசுலீம் ஆண்களை திருமணம் செய்யும் இந்துப்பெண்களுக்கு எதிராக இந்துப்பெண்களின் ‘கவுரவத்தை’ காப்பாற்றுவதற்காக ஒரு இயக்கத்தையே இந்துமதவெறியர்கள் வட இந்தியாவில் நடத்துகிறார்கள். இந்த சமீபத்திய வரலாற்றின் துயரங்களை தெரிந்து கொண்டால்தான் கமலின் ‘இந்துவுக்கு நடந்தால் என்ன, முசுலீமுக்கு நடந்தால் என்ன’ என்று பேசும் ‘தத்துவ அயோக்கியத்தனத்தை’ புரிந்து கொள்ளமுடியும்.

கவுசர்பானுவின் கதையை கேட்டு உருகி பழிவாங்க நினைத்தால் குஜராத்தின் மோடியையோ, அதற்கு உதவியாக இருந்த போலீசு, அதிகார வர்கக்த்தையோ பழிவாங்கியிருக்க வேண்டும். மாறாக இந்த அநீதிகளை இந்த நாட்டின் சட்ட அரசியல் அமைப்பு தண்டிக்கவில்லை என்று பொறுமி இசுலாமிய தீவிரவாதம் குண்டுவெடிப்பின் மூலம் எதிர்வினையாற்றுகிறது. கமலோ, கவுசர்பானுவின் துயரத்தையே திருடி இசுலாமிய தீவிரவாதிகளுக்கு குண்டு வைக்கிறார். அதற்காக மொட்டை மாடியிலிருந்து ஆவேசப்படுகிறார். தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

னால் உண்மையான குஜராத்தின் யதார்த்தம் வேறுமாதிரி. 2000த்திற்கும் குறைவில்லாத முசுலீம்களை படுகொலை செய்த கும்பலுக்கு தலைமை வகித்த மோடி மீண்டும் முதலமைச்சராக தெரிவு செய்யப்படுகிறார். இந்நிலைமையில் ஒரு சராசரி முசுலீமின் மனநிலை எப்படியிருக்கும்?

ராகேஷ் ஷர்மாவால் எடுக்கப்பட்ட குஜராத் இனப்படுகொலையை விவரிக்கும் பைனல் சொலியூஷன் (FINAL SOLUTION) என்ற ஆவணப்படத்தின் இறுதியில் ஒரு ஐந்து வயது முசுலீம் சிறுவன் பேசுகிறான். தனது உறவினர்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்தவனிடம் எதிர்காலத்தில் நீ என்னவாக வர விரும்புகிறாய் என்று சர்மா கேட்கிறார். அதற்கு அவன் தான் ஒரு போலீசாக வர விரும்புவதாக கூறுகிறான். ஏன் என்று கேட்கிறார் சர்மா. இந்துக்களை கொல்ல வேண்டும் என்று மழலை மொழியில் கூறுகிறது அந்தக் குழந்தை.

கலவரங்களை கண்ணால் கண்டு மனதில் தேக்கி வைத்திருக்கும் ஒரு குழந்தையே இப்படி பேசுகிறது என்றால் இசுலாமிய பயங்கரவாதம் ஏன் குண்டு வைக்காது? இந்த யதார்த்தத்தை கமல் கேலிசெய்கிறார் அல்லது நிராகரிக்கிறார்.

முசுலீம் தீவிரவாதிகளை கொல்வதற்கு ஆவேசத்துடன் செயல்படும் கமல் தன்னை ஒரு இந்து என்று நேர்மையாக சொல்லியிருக்க வேண்டும். ஆனால் “நீ ஒரு இந்துவா முசுலீமா என்ற மோகன்லாலின் கேள்விக்கு, ” ஏன் நான் ஒரு ஒரு பௌத்தனாகவோ, நாத்திகனாவோ, கம்யூனிஸ்ட்டாகவோ இருக்கக் கூடாதா” என்கிறார் கமல். இதுதான் கமல் பிராண்ட் களவாணித்தனம். ஆர்.எஸ்.எஸ் கூட முசுலீம்களுக்கெதிராக இந்துக்களுக்குத்தான் கோபம் வரவேண்டும் என்று சொல்கிறது. கமலோ இந்தக் கோபம் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவருக்கும் வரவேண்டும் என்கிறார். காமன்மேன் ஆர்.எஸ்.எஸ்-ஐ விஞ்சுகிறார்.

இரா.முருகனின் அசட்டுத்தனம் காரணமாகவும் கமலின் திமிர்த்தனம் காரணமாகவும் தங்களை அடையாளம் காட்டிக்கொள்கிற இத்தகைய சில வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. ஒருவேளை இவை இல்லை என்றாலும் இது ஒரு இந்துத்வ பாசிஸ்ட் திரைப்படம்தான். இந்திய அரசும் அதிகார வர்க்கமும் தன்னியல்பாக இந்துத்வத்தை வரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அதிகார வர்க்கத்திற்கு அதிகாரம் கொடு என்ற கோரிக்கையே நடைமுறையில் ஒரு இந்துத்வ கோரிக்கைதான். தங்களுடைய சொத்து சுகங்களை பாதுகாக்க வேண்டும் என்று பச்சையாக முதலாளிகள் எந்தக் காலத்தில் கோரியிருக்கிறார்கள்? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றுதான் அவர்கள் கோருவார்கள், கூறுவார்கள். அதுதான் இது, இதுதான் அது. காஷ்மீர் முதல் கோவை வரை முசுலீமாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் கதை வெறும் கதையல்ல. நீதிமன்றங்களில் நீருபிக்கப்பட்ட உண்மை.

காஷ்மீர், குஜராத், கோவை, புலிகள் அனைத்திலும் அதன் அரசியல் காரணங்கள் கழுவி நீக்கப்பட்டு வெறும் பயங்கரவாதம் என்று பேசப்படும் வக்கிரத்தை கமலும் செய்கிறார். இந்த பயங்கரவாத விளக்கத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும், தேசிய இனவிடுதலைக்காகவும் போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற இயக்கங்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இசுலாம் பெயர் கொண்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றன. இந்த வகையில் இந்தப்படம் ஒடுக்கப்படும் மக்களுக்கெதிராகவும் தன்னை காட்டிக் கொள்கிறது.

மீனம்பாக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜிவ் காந்தியின் கொலை எல்லாம் மறக்கப்பட்டதாக கமல் கவலைப்படுகிறார். மாறாக இதைச் சொல்வதன்மூலம் ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தையும் மறக்கச் சொல்கிறார். அதன்மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒரே வரியில் பயங்கரவாதமாக மாற்றப்படுகிறது. குண்டு வெடிப்புகள் குறித்து மக்கள் மறக்கிறார்கள் என்று கவலைப்படும் கமல் கோவை காவலர் செல்வராசு கொலைக்குப்பின் நடந்த முசுலீம் எதிர்ப்பு கலவரத்தையோ, குஜராத் இனப்படுகொலையையோ மக்கள் மறந்து விட்டதாக கவலைப்படவில்லை. ஏனெனில் இந்துமதவெறியர்கள் எதைக் கவலைப்படவேண்டுமென நினைக்கிறார்களோ அவைதான் கமலின் கவலையும் கூட.

எல்லாவற்றிலும் அரசியல் காரணங்களை கழுவிவிட்டு பயங்கரவாதமாக சித்தரிப்புது ஒன்று. இரண்டாவதாக இந்த பயங்கரவாதங்களை ஜனநாயக முறையில் எதிர்கொள்ளமுடியாது, எதிர்பயங்கரவாதத்தினால்தான் முறியடிக்க முடியும் என்பது. மூன்றாவது இந்த பாசிச முறையை பெருமைப்படுத்துவது. இது ஏதோ முசுலீம், ஈழம் பற்றி மட்டுமல்ல, நேபாளில் மாவோயிஸ்ட்டுகள் பயங்கரவாதம், இந்தியாவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதம், இப்படி எல்லாவற்றையும் பயங்கரவாதமுத்திரை குத்துவது யாருக்கு சேவையளிக்கிறது?

லகமெங்கும் பிரச்சினையாக கருதப்படும் இசுலாமிய பயங்கரவாதம் படத்தின் தீவிரவாதி சொல்வது போல காஃபீர்களை அழிக்க வேண்டும் என்ற இசுலாமிய மதவெறியிலிருந்து உருவாகவில்லை. ஒவ்வொரு நாட்டிற்கும், பகுதிக்கும் தனித்தனியான வரலாற்றுக்காரணங்கள் உள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை அகற்றுவதற்காக தாலிபான்களையும், பின்லாடனையும் வளர்த்து விட்டது அமெரிக்கா. காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, ஆரம்பத்தில் மதச்சார்பற்றதாக இருந்த இயக்கங்களை மதவாதத்தில் மூழ்கவைத்து சிதைக்கும் வேலையை இந்திய அரசு செய்தது. பின்னர் பாக்கிஸ்தான் அதை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் நடக்கும் குண்டு வெடிப்புகளுக்கு இந்துமதவெறியர்களின் கலவரங்கள் காரணமாக இருக்கின்றன. கோவை  குண்டுவெடிப்பெல்லாம் பாக்கின் மேற்பார்வையில் நடக்கவில்லை. நியாயம் கிடைக்காத முசுலீம் இளைஞனின் கோபமே அதை சாத்தியமாக்குவதற்கு போதுமானதெனும்போது ஐ.எஸ்.ஐக்கு என்ன தேவை இருக்கிறது?

பாலஸ்தீனின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா, ஈராக்கின் போராளிகள் எல்லாரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக போராடுகிறார்கள். இவர்கள் எல்லோரையும் முசுலீம் பயங்கரவாதம் என சித்தரிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமாகும்.

அமெரிக்காவையும், இந்துமதவெறியர்களையும் எதிர்ப்பதற்கு இசுலாமியத் தீவிரவாதத்தின் செயல்கள், வழிமுறைகள் தவறு என்பது வேறு. அதன் வரலாற்றுக்காரணத்தை புரிந்து கொள்ளாமல் மொத்தமாக பயங்கரவாதிகள் என்று காட்டுவது நாட்டில் எந்த அமைதியையும் கொண்டுவந்து விடாது. கமல் முன்வைக்கும் பாசிச அரசு வந்தாலும் இந்த எதிர்வினைகளை அடக்கிவிடமுடியாது. மாறாக இந்தப் பிரச்சினைகள் மட்டுமல்ல எல்லாப் பிரச்சினைகளுக்கும் போராடும் ஜனநாயக, புரட்சிகர சக்திகளை ஒடுக்குவதற்கே அந்த பாசிசம் பயன்படும்.

90களின் ஆரம்பத்தில் நடந்த பம்பாய் கலவரத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்களை கொலை செய்த சிவசேனாவின் பங்கை மறுக்கும் விதமாக இந்து, முஸ்லீம் இருதரப்பினரும் கலவரம் செய்ததாக மணிரத்தினத்தின் பம்பாய் படம் சித்தரித்திருந்தது. இதைக்கண்டித்து ம.க.இ.கவும் சில இசுலாமிய அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின. அதன் பிறகு இந்தப் பணியை தொடர முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் முசுலீம் தீவிரவாதத்தை வைத்து வெளிவந்துவிட்டன. இந்தப் படங்களின் நாயகர்கள் காஷ்மீருக்கும், பாக்கிற்கும் சென்று முசுலீம் பயங்கரவாதிகளை அழித்து வந்தார்கள். அப்படித்தான் பொதுப்புத்தியிலும் “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் எல்லா தீவிரவாதிகளும் முசுலீம்கள்தான்” என்று அழுத்தமாக பதிய வைக்கப்பட்டது.

து இசுலாமிய பயங்கரவாதம் குறித்த பிரச்சினை மட்டுமல்ல இன்று தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் காலத்தில் வாழ்க்கைப்பிரச்சினைகள் , தற்கொலைகள், வேலையிழப்பு அதிகரித்து வரும் நிலையில் எல்லா அரசுகளும் அதற்கு மாற்றாக பயங்கரவாதங்களை எதிரிகளாக வைத்து மக்களைக் காப்பாற்றுவதாக சித்தரிக்கின்றன. அமெரிக்காவில் வீடுகளை ஜப்தியில் இழப்பதை விட ஆப்கானில் பின்லேடனைத் தேடுவது முக்கியமானது; விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை செய்வதை விட காஷ்மீரில் இராணுவத்தை குவித்து மக்களை ஒடுக்குவது முக்கியமானது; இலங்கையில் பொருளாதாரம் போரினால் ஆட்டம் கண்டாலும் புலி ஆதரவாளர்களை முற்றிலும் ஒழிப்பது என்பதற்காக இராணுவத்தை இரண்டுமடங்காக பெரிதுபடுத்துவது முக்கியமானது, தொழிலாளிகள் இழந்து வரும் தொழிற்சங்க உரிமைகளைவிட தடா, பொடா போன்ற சட்டங்களைக் கொண்டு வருவது முக்கியமானது…

இப்படித்தான் உலகெங்கும் அரசுகள் மெல்ல மெல்ல பாசிசமயமாகி வருவதை நியாயப்படுத்திக் கொள்கின்றன. முதலாளித்துவத்தால் ஊழல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போன தங்களது வளர்ப்பு பிள்ளைகளான அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவது என்ற பெயரில் பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஆளும் வர்க்கங்கள் அப்புறப்படுத்திவருகின்றன. கரப்பான் பூச்சிகளான மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் காட்டிலும், புத்திசாலிகளான தொழில்முறை அதிகாரவர்க்கத்தின் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதும் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிற்கு ஓட்டுப்போடும் உரிமை வந்த காலத்தில் ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கரை பரம்பரை சொத்தாக வைத்திருக்கும் மூப்பனார்கள், வாண்டையார்கள்தான் மக்கள் பிரதிநிதிகளாக முடியும் என்றும், அவர்களுக்கு ஏழுதலைமுறைக்கு சொத்து இருப்பதால் பொதுப்பணத்தில் கைவைக்க மாட்டார்கள் என்றும் ஒரு பிரச்சாரம் அடிமை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தது. சலூன் கடைக்காரனும், டீக்கடைக்காரனும் அரசியலுக்கு வந்தால் லஞ்சம் வாங்காமல் என்ன செய்வான் என்று காங்கிரசுகாரர்களும் சோ முதலானோரும் அன்றும் இன்றும் பேசிவருகிறார்கள்.

இன்று அதே பாட்டுக்கு புது மெட்டு போடப்படுகிறது. மன்மோகன் சிங்கும், மான்டெக் சிங் அலுவாலியாவும், நந்தன் நீலகேணியும் அரசியல்வாதிகள் இல்லை என்பதே அவர்களுக்குரிய விசேட தகுதியாகிவிட்டது. கமலும் கூட மோகன்லால்களிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரியானது என இந்தப்படத்தில் வலியுறுத்துகிறார்.

அதனால்தான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தப்படம் முசுலீம் எதிர்ப்பு என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது. அடிப்படையில் இது பாசிச மனோபாவத்தை ஆதரிக்கிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இனி முசுலீம் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கும், ஜனநாயகத்தை வேட்டையாடுவதற்கும் நாயகர்கள் தேவையில்லை, காமன்மேனே போதும் என்கிறது உன்னைப் போல் ஒருவன். முசுலீம் தீவிரவாதத்தை ஒழிக்க நினைக்கும் (இந்து) நடுத்தரவர்க்கம் கூடவே பாசிசத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கும் கொண்டுவரப்பட்டிருப்பதால் திரையரங்கில் அத்தகைய வசனங்களுக்கு இரசிகர்கள் கைதட்டுகிறார்கள். வெளியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே நுழையும் இந்தக் காமன்மேன்கள் இருட்டில் கைதட்டுவது குறித்து கூச்சப்படுவதில்லை. பிளாக் டிக்கெட் விற்பதை ஒழிக்கவேண்டும் என்ற சத்திய ஆவேசம் காமன்மேனுக்கு வரும்போது அவர் டிக்கெட் விற்கும் கரப்பான் பூச்சிகளை சுட்டுத்தள்ளுவார். ஜெய் ஹிந்த்!

__________________________________________________

பின்குறிப்பு:

குஜராத் கலவரத்திற்கு நீங்கள் ஏன் கவிதை எழுதவில்லை” என்று ஒரு ம.க.இ.க தோழர் கேட்டதற்கு அப்படியெல்லாம் கட்டளை போட்டு கவிதை வராது என்று கூறிய மனுஷ்ய புத்திரன் அது பற்றி தனி கட்டுரையே எழுதியிருக்கிறார். படத்தில் இரக்கமற்ற போலீசு அதிகாரியாய் வரும் ஆரிப் எனும் இளைஞன் தனது உருட்டுக்கட்டையால் குற்றவாளிகளை விசாரிப்பதற்கு உதவி செய்வான். இறுதிக் காட்சியில் விடுபட்ட தீவிரவாதியையும் சுட்டுக்கொல்வான். ஆரிஃப்பின் உருட்டுக்கட்டை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு எவ்வளவு பயன்பட்டதோ அதே அளவு மனுஷ்யபுத்திரனது பாடலும் பயன்பட்டிருக்கிறது. அந்தப்பாடல் கவிஞர் மனுஷ்ய புத்திரனின் உள்ளத்திலிருந்து பீறிட்டெழுந்த்து என்று அவரே குறிப்பிட்டுள்ளதால் அது கூலிக்கு மாரடிக்கும் குண்டாந்தடி அல்ல உணர்வுப்பூர்வமான குண்டாந்தடி என்று பாகுபடுத்திப் பார்ப்பதே நியாயமானது.

மல் என்ற படைப்பாளியையும், அவரது படைப்பையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டுமென்ற வழக்கமான குரல் போலி முற்போக்கு முகாமிலிருந்து ஒலிக்கிறது. ஹேராமில் மதநல்லிணக்கம், அன்பே சிவத்தில் சோசலிசம், இந்தப் படத்தில் பாசிசம். இப்படி பல பரிமாணங்கள் கொண்ட ஒரு படைப்பாளியை ஒரே ஒரு படைப்போடு அடையாளப்படுத்தி முத்திரை குத்துவது நியாயமல்ல என்பதுதான் ‘மார்க்சிஸ்டுகளின்’ வருத்தம்.

அதுவும் நியாயம்தான். ரதயாத்திரை அத்வானியின் ஒரு படைப்பு. ஜின்னாவை மதசார்பற்றவர் என்று அழைத்த்து அவரது இன்னொரு படைப்பு. ஒரு படைப்பை மட்டும் வைத்துக் கொண்டு அத்வானியை இந்துமதவெறியன் என்று முத்திரை குத்துவது நியாயமில்லைதானே?

********************************

உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்க்கான இந்த விமர்சனம் வினவு தளத்திலிருந்து எடுத்து மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. வினவு தளத்தில் இதற்கு இடப்பட்டுள்ள பின்னூட்டங்களோடு சேர்த்து படித்துப்பார்ப்பது இன்னும் விரிந்த அனுபவத்தை தரும்.
நன்றி:  vinavu.com

குஜராத் அமைச்சரின் தலைமறைவு: நீதிக்கு இன்னும் தூரமிருக்கிறது.

     2002ல் குஜராத்தில் அரசே முன்னின்று நடத்திய இனப்படுகொலையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது. அதை கலவரமாக காட்ட முயன்று வைக்கப்பட்ட கண்துடைப்பு விசாரணை கமிசன்களை கடந்து மீண்டும் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு குஜராத் மாநில குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானிக்கும், விஹெச்பி தலைவர் ஜெயதீப் பட்டேலுக்கும் (மட்டுமா?) தொடர்பு உள்ளதாகவும் விசாரணைக்கு வர மறுப்பதற்காக தலைமறைவுக்குற்றவாளிகள் எனவும் அறிவித்துள்ளது.

     நாட்டில் நடந்த பல்வேறு திட்டமிட்ட கலவரங்களுக்கு மத்தியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்டது வேறுபடுத்திக்காட்டப்பட்டது. வேறெந்தக்கலவரங்களிலும்(!) இல்லாத வகையில் குஜராத்தில் குற்றவாளிகள் தாங்களாகவே எப்படி அந்தப்படுகொலைகளை நிகழ்த்தினோம்? எங்கிருந்தெல்லாம் எங்களுக்கு உதவிகள் ஆயுதங்கள் வந்தன? வெளிப்படையாக இயங்குவதற்கான ஊக்கம் எங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? விளைவுகளை எண்ணி பயப்படவேண்டாம் என தைரியமூட்டியது யார்? என்றெல்லாம் தெளிவாக பேட்டியளித்து அந்த ஒளிக்காட்சிகள் தெகல்கா இணையதளம் மூலம் அம்பலப்படுத்தப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, மேன்மக்களாக வலம் வந்தனர்.

    

 

 

 

 

 

 

 

அன்று கரண் தப்பாரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றிலிருந்து தண்ணீர் குடித்து வெளியேறினார் மோடி. இன்று சிறப்பு விசாரணைக்குழுவின் விசாரணையை எதிர்கொள்ளமுடியாமல் ஓடி ஒழிந்து கொண்டிருக்கிறார் அவரது அமைச்சர் ஒருவர். இதற்கு குஜராத் அரசின் பதில் என்ன? அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதுதான். ஓடிப்போன அமைச்சரின் உதவியாளர் ஒருவர் அமைச்சர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் ஆனால் அவர் எங்கிருக்கிறார் எனக்கூறும் அதிகாரம் எனக்கில்லை என்கிறார். வழக்கம்போலவே ஊடகங்கள் இந்தச்செய்தியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன. பார்ப்பனீயச்சார்பு என்பது ஊடகங்களுக்கு மட்டுமல்ல இந்திய அதிகாரவர்க்கத்தின் இயல்பாகவும் அமைந்திருக்கிறது. அதோடு மட்டுமன்றி பெரும்பான்மை மக்களின் பொதுப்புத்தியிலும் ஏற்றப்பட்டு வருகிறது.

     குஜ்ஜார்களின் போராட்டத்தைக்கண்டு நாட்டிற்கு இது அவமானம் என்று கொதித்தெழுந்த நீதிபதியோ, நீதித்துறையோ குஜராத் இனப்படுகொலைக் குற்றவாளிகள் எப்படிச்செய்தோம் என நடித்துக்காட்டியதைக்கண்டு கொதித்தெழவில்லையே ஏன்?

     அகமதாபாத் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தாய் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனைத்தூக்கில் போடுங்கள் என்றார். இஸ்லாமியர்கள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் அதை அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் சாமியாடும் சாமியார்கள், பெண்சாமியார் பிரக்யா சிங் கின் தந்தை நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியதன் பொருள் என்னவென்று கூறுவார்களா? அதுமட்டுமா? சிவசேனா போன்ற அமைப்புகள் வெளிப்படையாக நிதி திரட்டுகின்றன வழக்கை நடத்துவதற்கு. அத்வானி அந்தப்பயங்கரவாதிக்கு ஆதரவாக அறிக்கை விடுகிறார். பாஜக தலைவர்கள் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டுள்ளனர். யார் கைது செய்யப்பட்டார்கள்? எந்த அமைப்பு தடைசெய்யப்பட்டது? தடை செய்யபடுவது சிமி க்கு மட்டும் பிறப்புரிமையா?

     ஒரு மாநில அமைச்சர் விசாரணைக்குப் பயந்து தலைமறைவாகியதைக் கண்டு எல்லா வாயையும் பொத்திக்கொண்டு கள்ள மௌனம் சாதிக்கும் வானரங்கள், காவல் துறை அதிகாரி கார்கரேயின் மரணத்தில் ஐயம் உள்ளது அதை தனியே விசாரிக்கவேண்டும் என்ற அந்துலேவின் நியாயமான கோரிக்கைக்கு வானத்துக்கும் பூமிக்குமாக எகிரிக்குதித்தனவே ஏன்? காங்கிரசும் அந்துலேவுக்கு தண்ணீர் தெளித்ததே ஏன்?

     எல்லவற்றிற்கும் மேலாக இந்த பாசிசத்தை மதம் சார்ந்த விசயமாகவே மக்கள் புறிந்து கொள்கிறார்களே எப்படி? சிறுபான்மை மக்களும் கூட தங்கள் மதத்தை அழிக்க பெரும்பான்மை மதவாதிகள் செய்யும் சதிச்செயல் என்பதாகவே புறிந்துகொள்கிறார்களே எப்படி? நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளுக்கு கைக்கூலியாக சேவகம் செய்ததற்கு பரிகாரமாக அவர்கள் ஏற்படுத்திக்கொடுத்த ஒருங்கமைப்புதான் இந்து மதம் என்பதை புறிந்துகொள்ள மறுப்பதே அதன் முதற்காரணம். சமண பௌத்த மதங்களோடு போட்டிபோட்டு செரித்த மதம் இந்து மதம் என நம்புவது அதன் புராணங்களைப்போன்றே புழுகு மூட்டை. இஸ்லாமிய கிருஸ்தவ மதங்களைப்போன்று சமூகவியல் தத்துவமாக தோன்றி வந்ததல்ல. மண்ணின் மைந்தர்களை அடக்கியாண்டு, கொன்றொழித்து அரசியல் மேலாண்மை பெறுவதற்கான செயல்திட்டமே பார்ப்பனீயம். அந்த பயங்கரவாத பார்ப்பனீயமே மதமாக இந்துமதமாக வேடம் பூண்டு தன் மனிதகுல விரோதத்தன்மையை மறைத்து நிற்கிறது. இதை சிறுபான்மை மதத்துக்கெதிரான பெரும்பான்மை மதம் எனக்கொள்வதும், தம் மதம் சார்ந்து அதை முறியடிக்க நினைப்பதும் முடிவெட்டிக்கொள்வதாகத்தான் ஆகுமேயன்றி தலைவெட்டுவதாய் ஆகாது. இதை புறிந்து கொள்ளாதவரை தெகல்காவின் அம்பலப்படுத்தலுக்கு மக்கள் ஏன் எதிர்வினையாற்றவில்லை என்பதற்கு விடையளிக்கமுடியாது. இதை புறிந்து கொள்ளாவிட்டால் குண்டுவெடிப்பு என்றதும் பயங்கரவாதம் பொடா வேண்டும் தடா வேண்டும் என ‘சோ’தாக்கள் குதிப்பதையும், பெண்சாமியார் கைது என்றதும் பயங்கரவாதத்திற்கு எதிராய் இப்படி ஒரு திட்டமிருந்தால் அதை ரகசியமாக வைக்கவேண்டும் என்று தொனி மாறுவதையும் சரியான திசையில் விளங்கிக்கொள்ளமுடியாது. மாயா கோத்தானி தலைமறைவானாலும், நாளையே சுற்றுப்பயணம் என்று திரும்பி வந்தாலும் அவர்களை சரியான திசைவழியில் அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தி முறியடிப்பதையே இலக்காக கொள்ளமுடியும். அதுதான் மக்களுக்கு தேவையான வெற்றியாய் அமையும்.

%d bloggers like this: