இடிப்பை கொண்டாடுகிறதா இந்தியா

காயம் மிகவும் முற்றி, சீழ் பிடித்து அழுகத் தொடங்கி விட்டதற்கான அறிகுறி இது. காவல் துறை ஒரு போதும் மக்களின் காவலர்களாய், நண்பர்களாய் இருந்ததே இல்லை. அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டாலும் கூட. ஒவ்வொரு ‘என்கவுண்டர்’களின் பின்னாலும் ஒரு பகைவெறி இருக்கிறது. கொள்ளைகள், கலவரக் கொலைகள் எதுவும் காவல்துறைக்கு தெரியாமல் நடந்ததில்லை. ‘அடித்து’ விசாரிப்பது தொடங்கி கழிப்பறைகளில் வழுக்கி விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்வது வரை அத்தனையும் சட்ட விரோத, மனித விரோத செயல்களே. இத்தனையையும் எவ்வித … இடிப்பை கொண்டாடுகிறதா இந்தியா-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்கொள்வது எப்படி?

ஆர்எஸ்எஸ் என்றால் என்ன?அதன் நோக்கம் என்ன?இந்தியாவில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்ஸை எப்படி எதிர்கொள்வது?இதுபோன்ற பல விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் மருதையன். திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்ததா என்பது தலைப்பு.தலைப்பைப் பார்க்கும்போதே, திமுக ஆட்சியில் அல்ல என்று சொல்லத்தான் விழைகிறார்கள் என்பது புரிந்து விடுகிறது. (திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்று சொல்ல முடியாதுதான்.ஆனால் திமுக ஆட்சியிலும் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்பதை மறைக்க முயற்சி செய்கிறது இந்த நேர்காணல்) தமிழ்நாட்டில் … ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்கொள்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாருக்குள்ளே நல்ல நாடு

அவர்களைச் சிறையில் சந்தித்தேன். “என்ன குற்றம் செய்தீர்கள்” என்று கேட்டேன். ஒவ்வொருவராகச் சொன்னார்கள்.. எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான். “திருடன் திருடன்” என்று கத்தினேன். அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள். “என் வருமானத்தைக் கேட்டார்கள்” ‘நான் வேலையில்லாப் பட்டாதாரி’ என்றேன் வருமானத்தை மறைத்தாக வழக்குப் போட்டு விட்டார்கள். “நான் கரி மூட்டை தூக்கும் கூலி” கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில் கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்பு பணம் வைத்திருந்ததாகக் கைது செய்து … பாருக்குள்ளே நல்ல நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இதை முதல்ல பாருங்க!

ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும்? ஒரு குறும்படத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்? கலையின் அழகியலில் யதார்த்தம் என்பது என்ன? அரசு என்றால் என்ன? பாசிசம் என்றால் என்ன? ஒரு பாசிச அரசின் கீழ் நாம் இருக்க நேர்ந்தால் என்ன செய்யலாம்? உண்மைகளை பேசும் வழிமுறை என்ன? இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு மிக எளிமையாகவும், கூர்மையாகவும், ஆறே நிமிடத்தில் புரியவைத்துவிட முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் இந்த குறும்படத்தில். பாருங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் … இதை முதல்ல பாருங்க!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இன்று கருப்பு நாள்

வேளாண் மசோதாக்கள் என்ற பெயரில் மூன்று கருப்புச் சட்டங்களைக் கொண்டு வந்த மோடி அரசாங்கம் இன்று ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து தில்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் இன்று ஆறு மாதங்களை நிறைவு செய்கிறார்கள். இந்த இரண்டையும் இணைத்து போராடும் விவசாயிகளும், விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பவர்களும், பொது மக்களும் இந்த நாளை கருப்பு நாளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று மக்களுக்கு காட்டுவதற்காகவும், தங்கள் ஒற்றுமையை அடையாளப்படுத்தவும் … இன்று கருப்பு நாள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கல்விக்கான கூட்டமா? கட்டளையா?

இன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பான கூட்டம் நடக்கவிருக்கிறது. இதற்கு, மாநிலங்களின் கல்வித்துறைச் செயலர்கள் அனைவரும் காணொளி வாயிலாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் மாநிலங்களின் கல்வித்துறை செயலர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்? மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் அல்லவா அழைக்கப்பட்டிருக்க வேண்டும்? என்றொரு வாதத்தை தமிழ்நாடு முன்வைத்திருக்கிறது. இது சரியான வாதம் தான். செயலர்கள் போதுமென்றால் இந்தக் கூட்டத்தை ஒன்றிய கல்வித்துறை செயலர் தலைமையில் நடத்தி இருக்க … கல்விக்கான கூட்டமா? கட்டளையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாசிசத்தின் இந்திய முகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய முன்னணி நிலை விரும்பியவாறு இல்லை என்றாலும், திமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து கொண்டிருக்கிறது. இந்திய அளவில் ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், அஸ்ஸாமை பாஜக தக்கவைக்கிறது என்று புதுச்சேரியில் கூட்டணியுடன் முன்னணிக்கு வருகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விதயங்கள். குறிப்பாக, புதுச்சேரியில் பாஜக ஆட்சியில் கை நனைப்பது என்பது தமிழ்நாட்டிலும் விரிவதற்கு வழிவகுக்கக் கூடும். போகட்டும். தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவது என்பது, அனைத்து இந்திய கட்டமைப்புகளின் … பாசிசத்தின் இந்திய முகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

காறித் துப்பும் உண்மைகள்

தெருவில் திரியும் அல்லது வலியுடன் உயிர்பிடித்து மூச்சுவிடமுடியாமல் இருக்கும் அத்தனை நோயாளிகள் சார்பாகவும், நோயாளிகள் சாவதை அருகில் நின்று கையறு நிலையில் வேடிக்கைப்பார்க்கும் அவர்களது நண்பர்கள் & உறவினர்கள் சார்பாகவே கேட்கிறேன். என் கேள்விகள் மத்திய அரசை பார்த்து மட்டும் அல்ல. அவர்களை ஆதரிக்கும் மூடர்களைப் பார்த்தும் தான். 1. நுரையீரல் தொற்றை ஓரளவிற்குச் சரி செய்யும் ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை 4500 ரூபாய்க்கு விற்கும் தருவாயில் , ஒரு மருந்து கம்பெனி தானாய் முன்வந்து 1500 … காறித் துப்பும் உண்மைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்

ஜனநாயகம் என்ற சொல்லின் முழுமை, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது தான். ஆயினும் அதையும் அரித்துக் கொண்டிருகிறது வலதுசாரி பயங்கரவாதம். இது உலகெங்கும் நடந்து வரும் பாசிசப் போக்கு. ஆனால் இடதுசாரிகளைத் தவிர ஏனைய அனைத்து ‘முதலாளித்துவ அரசியல் கட்சி’களும் (வழக்கம் போல இதை ‘அரசியல் கட்சிகள்’ என்று மட்டுமே மக்கள் புரிந்து கொள்வதற்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்) இவைகளை கட்சிகளுக்கு இடையிலான போட்டி என்பதாக மடைமாற்றிக் கொண்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் கையிலிருக்கும் ஊடகங்களும் இதற்கு எண்ணெய் ஊற்றுகின்றன. அமெரிக்காவில் நடந்திருப்பதையும் இவ்வாறு … அமெரிக்க ஜனநாயகத்தை வீழ்த்திய வலதுசாரி பயங்கரவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தூத்துக்குடி மக்களால் தலைநிமிர்ந்த தமிழ்நாடு

மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பதே அரிதான இந்த இருண்ட நாட்களில், ஒரு சிறிய ஒளிக்கீற்று போல வந்திருக்கிறது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. உலகெங்கும் தனது குற்ற நடவடிக்கைகளால் இழிபுகழ் பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவுக்கு எதிராகப் பெற்றிருக்கும் இந்த வெற்றிக்காக, தமிழகம் திமிருடன் தலை நிமிர்ந்து நிற்கலாம். போராட்டம் நடைபெற்ற அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அன்று மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திளைத்திருந்தபோது,  தூத்துக்குடியில் மெரினாவைப் போன்ற ஒரு மக்கள் திரள் கூடி … தூத்துக்குடி மக்களால் தலைநிமிர்ந்த தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.