மரணத்திலிருந்தா மதிப்பிடுவது?

  கடந்த 75 நாட்களாக அப்பலோவை மையம் கொண்டிருந்த மர்மம் ஒன்று கரை கடந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து முடிவுக்கு வந்திருக்கிறது.   ஜெயலலிதா.   இவரை எப்படி மதிப்பிடுவது? மரணம் அவர் உடலைக் குடித்து விட்டது என்பதற்காக, அந்தக் கோப்பையில் நிரம்பியிருந்த வஞ்சக நஞ்சு அமுதமாக மாறிவிடுமா?   மரணத்தின் பொருட்டு தான் ஒருவரை மதிப்பிட வேண்டுமென்றால் யாரும் இங்கே அயோக்கியர்கள் அல்லர். அல்லது, மரணத்தை முன்வைத்து ஒருவரை புனிதராக்கிக் கொள்ள முடியுமென்றால் அற்பனென்றோ, அற்புதனென்றோ … மரணத்திலிருந்தா மதிப்பிடுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அதிமுக வெற்றி மக்கள் முடிவா?

பாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?  திரு. மணி கேள்வி பதில் பகுதியில் நண்பர் மணி, பாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் … அதிமுக வெற்றி மக்கள் முடிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்டமும் நீதிமன்றங்களும் புனிதமானவைகளா?

ஏழு மாவட்ட விவசாயிகளும் தங்கள் எதிர்ப்புக் குரலை தொடர்ச்சியாக பதிவு செய்திருந்தும் கெயில் நிறுவனம் விவசாய நிலத்தில் குழாய் பதிப்பது தொடர்பான வழக்கில் நேற்று நீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து குழாய் பதிக்கும் வேலைகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தின் வழக்குறைஞர் ஏன் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை? நீதிபதிகள் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கினார்கள்? போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அரசின் திட்டம் மக்களை பாதிக்கிறது எனவே, அதை தடுக்க வேண்டும் என நீதிமன்றங்களின் கதவைத் தட்டினால், … சட்டமும் நீதிமன்றங்களும் புனிதமானவைகளா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது கொண்டாட்டம்?

நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் களைத்துப் போய் இருப்பீர்கள், இவ்வாண்டு செய்ய வேண்டிய வேலைகள், அது குறித்த திட்டங்கள், விட வேண்டிய பழக்க வழக்கங்கள், அது குறித்த வரம்புகள் உள்ளிட்ட விபரங்களை எழுதித் தொகுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் படித்துப் பார்த்து ஒருவித பரவச நிலையில் இருப்பீர்கள். நான் நினைப்பது சரியானால் கடந்த ஆண்டும் இதையே செய்திருந்திருப்பீர்கள். ஆனால் கடந்த ஆண்டு திட்டமிட்டதை செய்திருக்கிறோமா? எவ்வளவு விகிதம் நிறைவேற்றியிருக்கிறோம்? ஏன் முழுமையாக நிறைவேறவில்லை? என்ன காரணம்? எது தடையாக … எது கொண்டாட்டம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே,   மே தினம் - முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலை நாட்டிக் கொண்ட நாள். எட்டு மணிநேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாக பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் … தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.

பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!

ஜெயலலிதா பதவியேற்றதும்தான் எத்தனை எத்தனை நலத் திட்டங்கள்…! சமச்சீர் கல்வியை ஒழிக்க சில நூறு கோடி செலவு செய்து வீம்பாட்டம் ஆடிய கொடுமை; பல நூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் இழுத்து மூடப்பட்டு, முகமது பின் துக்ளக்கே வெட்கப்படும் அளவுக்கு சிறப்பு மருத்துவமனை என்ற அறிவிப்பு; அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக்கப்படுமென்ற ஹிட்லர் பாணி உத்திரவு; ஆயிரக்கணக்கான மக்கள் நலப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வக்கிர முடிவு; பரமக்குடியில் … பேருந்து, பால், மின்சாரம் – விலை உயர்வு! பாசிச ஜெயாவின் பேயாட்டம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.