இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 32

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 32

 stalin

பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன? ஏன்? எப்படி இழைக்கப்பட்டது? 

 

ஸ்டாலின் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க நடத்திய வர்க்கப் போராட்ட திசையில் பகுத்தாய்வு செய்கின்றது. ஆனால் இடதுசாரி பெயரிலும், புத்தக புத்திஜீவிகள் பெயரிலும்  மார்க்சியமல்லாத நடைமுறையில் இருந்து, மார்க்சியத்தின் பெயரில் வெளிவரும் கருத்துகள், மார்க்சியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் ஒரு இடை நிற்றல் ஊடாக கண்டறியும் நடுவழிப் பாதை வழியாக ஸ்டாலினை கொச்சைப்படுத்துகின்றன. சர்வதேச மனிதஉரிமை அமைப்பின் கோட்பாட்டு நிலையில் ஜனநாயகத்தையும், வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் கோட்பாட்டளவில் வகுத்துக் கொள்ளும் இவர்கள், ஸ்டாலின் இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நடக்கும் என்கின்றனர். பின்தங்கிய நாட்டின் குறிப்பான நிலை, விவசாய குணாம்சம், ஸ்டாலினின் முரட்டுக் குணம், ஜனநாயகத்தை ஏற்காதன் விளைவு, மேற்கு நாட்டு ஜனநாயகத் தன்மையை புரிந்து கொள்ளாத சமூகத்தின் குறைபாடான குணாம்சம், சோசலிசத்தை வன்முறையூடாக கட்டும் கோட்பாடு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொண்டு தனி ஒரு கட்சியாக உருவான ஜனநாயகமற்ற போக்கு, ஆரம்பம் முதலே லெனின் தலைமையில் வன்முறையை அடிப்படையாக கொண்டமையும், சோவியத்தின் புரட்சிக்கு மேற்கு நாடுகளின் புரட்சி உதவாமை என பல காரணத்தைச் சொல்லி, ஸ்டாலினை மறுப்பதில் காலத்தை ஒட்டி, அவதூறுகளை பரப்புகின்றனர். ஸ்டாலின் எதிர்ப்பை முன்னெடுப்பவர்கள் தனிமனிதனை வைத்தும், சம்பவங்களை மட்டும் அடிப்படையாக கொண்டும், கற்பனையாக விரும்பிய புள்ளி விபரங்கள் உடனும் இதைச் செய்கின்றனர். இந்த இடதுசாரி வேடதாரிகள் எங்கிருந்து புள்ளி விபரத்தைப் பெறுகின்றனர். ஏகாதிபத்தியம் மொத்தமாக வைத்ததில், கூட்டிக் கழித்து ஒரு படு மட்டான கணக்கை வைக்கின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. இடதுசாரி வேடம் இடுபவர்களின் புள்ளிவிபரங்கள் எப்போதும் ஏகாதிபத்தியத்தின் தனித் தனியான (அரசியல் காரணத்துக்காக கொல்லப்பட்டதாக ஏகாதிபத்தியம் வைக்கும் இப் புள்ளி விபரங்களை, கட்டுரையின் தொடர்ச்சியில் பார்ப்போம்.) உட்கூறு புள்ளிவிர எண்ணிக்கையை, சில மடங்கால் தாண்டிவிடுவதுடன், அவதூறுக்கு ஆதாரமாக கொல்லப்பட்டு இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை, ஸ்டாலின் அவதூறுகளை விரிவாக்க விரும்புவதன் ஊடாக விரும்புகின்றனர். உள் நாட்டில் நடத்தப்பட்ட வர்க்கப் போராட்டம் எப்படி, ஏன் வளர்ச்சி பெற்றது. ஸ்டாலின் எதிர்பாளர்கள் எப்படி இதை கையாண்டனர் என்பதை எல்லாம், எந்த இடதுசாரி மனிதாபிமானியும் முன்வைப்பதில்லை. ஸ்டாலின் எதிர்தரப்பினர் என்ன அரசியலை முன்வைத்தனர், ஸ்டாலின் என்ன அரசியலை முன்வைத்தார். இதை சாதிக்க எப்படியான போராட்டத்தை முன்வைத்தனர், எப்படி அனுகினர் என்பதை எல்லாம் இவர்கள் மூடிமறைத்தபடிதான், அவதூறுகளை கட்டமைத்தனர், கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதை தெளிவாக புரிந்து கொள்ளாத வரை, வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்ளமுடியாது. இந்த வர்க்கப் போராட்டத்தில் ஸ்டாலின் இழைத்த சில கடுமையான தவறுகள் என்ன?

 

1.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை புரட்சிக்கு பின்பாக உள்நாட்டில் முன்னெடுத்த வரலாற்றில், அதை மக்களை சார்ந்து நின்று அவர்களைக் கொண்டே முன்னெடுக்கும் பாதையை அவர் மேற்கொள்ளவில்லை. அதாவது புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சிகரமான மக்கள்திரள் பாதையை அவர் கண்டறியவில்லை. எப்படி மக்களை அணிதிரட்டி வர்க்கப் போராட்டத்தை சொந்த நாட்டில் விரிவாக்குவது என்ற, மக்கள் திரள் வர்க்கப் பார்வையை, மார்க்சிய வளர்ச்சியாக முன்வைக்கவுமில்லை. இதை அக்காலத்தில் இருந்த யாருமே கண்டறியவும் இல்லை, முன்வைக்கவுமில்லை. புரட்சிக்கு பிந்திய வர்க்க சமுதாயத்தில் மக்களை அணிதிரட்டி அவர்களைக் கொண்டு புரட்சி செய்யும் பாதையை மாவோ கண்டறிந்தார். கலாச்சார புரட்சி வர்க்கப் போராட்டத்தை எப்படி தொடர்வது என்பதையும், மார்க்சியத்தில் உள்ளடகத்தை மேலும் புதிய நிலைமையூடாக வளத்தெடுத்தது.

 

2.மக்கள் திரள் பாதையை கண்டறியாத ஸ்டாலின் நிர்வாக முறையுடாக, அதாவது மேல் இருந்து கீழாக மட்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கவும், முன்னெடுப்பதில் கவனத்தைக் குவித்தார். இதனால் விவசாயத்தை கூட்டுப் பண்ணையாக, அதாவது கம்யூன்களை உருவாக்கிய பாதையில் கடுமையான தவறை இழைத்தார். விவசாயிகளிடையே உள்ள ஏற்றத் தாழ்வான வர்க்க அடிப்படையை கொண்டு, புதிதாக உருவாகியிருந்த நிலப்பிரபுத்துவ வர்க்கமான குலாக்களை தனிமைப்படுத்த, மற்றைய வர்க்கங்களை சார்ந்து நின்று அவர்களை அணிதிரட்டி கம்யூனை உருவாக்கத் தவறி, பொதுவான நிலக் கூட்டுப் பண்ணையாக்கலை முன்வைத்தன் முலம், பாட்டாளி வர்க்க நண்பர்களை எதிரி தனது பக்கம் அணிதிரட்ட முடிந்தது. பல அருமையான சினிமாக்கள் முதல் கலை இலக்கியம் வரை இந்த வர்க்க வேறுபாட்டை அடிப்படையாக கொண்டு, நிலக் கூட்டுப் பண்ணையாக்கலை விளக்கிய போதும், அதே நேரம் ஸ்டாலின் 1930 மார்ச் 2ம் தேதி வெற்றி தலைக்கேறியதின் வினை” என்ற இடதுசாரித் தவறை சுட்டிக் காட்டிய நூல் வெளியான போதும், நடைமுறையில் அவை முழுமையாக வர்க்கப் பகுப்பாய்வை கையாளப்படவில்லை. எதிரியை தனிமைப்படுத்துவதில், தண்டனை வழங்குவதில் வர்க்கப் பகுப்பாய்வு செய்த போதும், நிலத்தை கம்யூனுக்குள் கொண்டு வந்த பாதையில் இவை வர்க்க பகுப்பாய்வை கையாள்வது அலட்சியப் படுத்தப்பட்டது. குறிப்பாக மூன்று முதல் ஆறு வருடத்தில் குறைந்தபட்சம் முழு நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் வந்துவிட்டது. 1934 இல் 75 சதவீதமான குடும்பங்களும், 90 சத வீதமான விளைச்சல் நிலமும் கூட்டுபண்ணைக்குள் வந்தது விட்டது. 1928 இல் 14 லட்சமும், 1929 இல் 42 லட்சமும், 1930 இல் 1.5 கோடி ஹெக்டேர் நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் வந்தது. 1934 இல் 90 சதவீத நிலமும் கூட்டுப் பண்ணைக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது. இது அசாதித்தியமான நிலமையாகும். இது வர்க்க வேறுபாட்டை கவணத்தில் கொண்டிருக்கவில்லை என்பதை தெளிவாக்குகிறது. சோவியத்தில் நிகழ்ந்த புரட்சிக்கு பிந்திய முக்கிய புரட்சி என்ற வகையிலும், 1917 புரட்சியில் பகிர்ந்து அளிக்கப்பட்ட 40 கோடி ஏக்கர் நிலத்தை கூட்டுப்பண்ணைவடிவில் கொண்டு வரும் போது, மக்கள் நலனை அடிப்படையாக கொண்டிருந்த போதும், இதில் மக்களை சார்ந்து, அவர்களை புரட்சியில் நேரடியாக ஈடுபடுத்தும் மக்கள்திரள் மார்க்கத்தை கண்டு அறிய தவறிய போக்கு, புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியின் வடிவங்களை கண்டறிய முடியாத நிலைக்குள் இட்டுச் சென்றது. இந்த வடிவத்தை யாரும் அன்று கண்டறிந்ததில்லை. இது மேலும் மேலும் நிர்வாகம் வடிவம் சார்ந்து, மேல் இருந்து கீழ் என்ற ஒருபோக்கை மட்டும் சார்ந்து நின்று, கையாளும் வடிவமே புரட்சிவடிவமாகியது. இதில் இருந்து மாறுபட்ட வடிவத்தில் சீனப் புரட்சி மக்களை அடிப்படையாக கொண்டு நிலத்தை கூட்டுபண்ணையாக்கத்துக்குள் கொண்டு வந்தது மட்டமின்றி, கலாச்சாரப் புரட்சி போன்ற புரட்சிகரவடிவங்களும் கண்டுயறியப்பட்டன. சோவியத் கூட்டுப் பண்ணையாக்கல் மிகத் தீவிரமாக வேகமாக கட்டமைக்கப்பட்டதனால் இயல்பாக அது விவசாயிகளிடையே வர்க்க வேறுபாட்டை குறைத்து மதிப்பீட்டு, பொதுமைப்படுத்தி அனுகியதனால் ஏற்பட்ட தவறுக்கு, புறநிலையாக குறிப்பான காரணங்களும், அச் சமூகத்தில் இருந்துள்ளது.

 

1923 இல் அழுலுக்கு வந்த இடைக் கால பொருளாதாரம் சார்ந்து உருவான புதிய சுரண்டும் வர்க்கம், கட்சியில் அதன் பிரதிநிதித்துவத்தை உருவாக்கிய அதேநேரம், கட்சியிடமே வர்க்கப் போராட்டத்தை கைவிடக் கோரியதும், மேற்கு நாடுகளில் புரட்சியின்றி சோவியத்தில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பது தவறு என்ற வரட்டு வாதங்கள் ஊடாக கொச்சைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தை தடுத்த போக்கும், விவசாய குட்டிபூர்சவா வர்க்கத்தை சார்ந்து கட்சியில் வர்க்கப் போராட்டத்தை தடுத்த போக்கில், வர்க்கப் போராட்டத்தை தீவிரமாக்க புறநிலையாக நிர்பந்தித்தது. இதை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் தமது வர்க்கப் போராட்ட எதிர்ப்பை வன்முறை மூலமும், வன்முறை சாராத வடிவத்திலும், இரகசிய இரகசியமல்லாத அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர். இந்த வர்க்க நெருக்கடியில் இருந்து மீண்டு வர்க்கப் போராட்டத்தை தொடர, கூட்டுப் பண்ணையாக்கல் ஒரு நிபந்தனையாகவும், அதே நேரம் வேகமாகவும் உருவாக்க புறநிலை கோரியது.

 

3.இந்த புறநிலை நிர்ப்பந்தம் அடுத்த தவறை வழிகாட்டியது. சோசலிச புரட்சியை பின்தங்கிய நாட்டில் அல்ல, ஒரு முன்னேறிய நாட்டில் மட்டுமே சாத்தியம் என்ற வரட்டு மார்க்சியவாதிகளின் வன்முறை கொண்ட எதிர் தாக்குதலில் இருந்து மீள, புரட்சியை வேகப்படுத்தி துரிதமாக்குவது அவசியமாகிறது. முதலாளித்துவ நாடுகளின் கைதொழில் வளர்ச்சியை ஒரே எட்டில் சோவியத் எட்டுவதன் மூலம், முன்னேறிய நாட்டின் பொருளாதார நிலையைக் கடப்பதன் மூலம், சோசலிச புரட்சி நடக்க முடியும் என்ற மேற்கு நிலைக்கு, சோவியத்தை இட்டுச் செல்வதை துரிதப்படுத்தியது. இது கைத் தொழிலை முதன்மைப் படுத்தியதன் மூலம், விவசாயிகளை ஒட்ட உரிஞ்சியது. கைத்தொழில் வளர்ச்சிக்கு விவசாயிகள் தமது முழு உழைப்பையும் நல்க வேண்டியிருந்தது. இதன் மூலம் பெரும்பான்மை உழைப்பாளிகளான விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டனர். இங்கு ஒன்றை முன்தள்ளி மற்றதை பின்தள்ளி நாட்டை முன்னேற்றிய முறைக்கு பதில், இரண்டையும் ஒருசேர முன்தள்ளி செல்லவேண்டிய பாதை கைவிடப்பட்டது. இது விவசாயத்துக்கும், தொழிலாளிக்குமான முரண்பாட்டை களைவதற்கு பதில், முரண்பாட்டை அகலப்படுத்தியது. உண்மையில் இந்த மார்க்கத்தை ஸ்டாலின் எங்கிருந்து பெற்றார் எனின், புறநிலையாக நிர்ப்பந்தம் கொடுத்த தவறான டிராட்ஸ்கிய அரசியல் வழியில் இருந்து பெறுவதே, இங்கு நிகழ்ந்தது. டிராட்ஸ்கி பின்தங்கிய நாட்டில் புரட்சி நடத்த முடியாது என்று போட்ட ஆரவராத்தை கடக்கவும், அவர் வைத்திருந்த விவசாயிகளை அன்னியப்படுத்தி பார்க்கும் பார்வையினுடாக (டிராட்ஸ்கி உழைப்பை இராணுவ மயப்படுத்தவும், விவசாயிகளின் நிலத்தை உடன் கூட்டுப்பண்ணையாக்க வேண்டும் என்று லெனிடமே கோரியவர்), விவசாயிகளை ஒட்ட உரிஞ்சும் தத்துவத்தையே ஸ்டாலின் எடுத்துக் கொண்டே இத் தவறைச் செய்கின்றார். இதை செய்யும் போது நிர்வாக ரீதியான வடிவத்தில் கையாண்ட போக்கு கூட, டிராட்ஸ்கியின் அரசியல் வடிவத்தில் இருந்தே ஸ்டாலின் பெறுகின்றார். லெனின் இதை விமர்சனம் (“நிர்வாகத் தன்மை வாய்ந்த அனுகுமுறை”என)  செய்திருந்த போதும், இதை ஸ்டாலின் அங்கு இருந்தே பெற்றதன் முலம், அடுத்த தவறை செய்கிறார்.

 

4.நிர்வாக ரீதியான அரசியல் அணுகுமுறை டிராட்ஸ்கியின் பண்பாக இருந்தது. இதைத்தான் லெனின் டிராட்ஸ்கி பற்றிய விமர்சனத்தில் சுட்டிக் காட்டுகின்றார். டிராட்ஸ்கி மக்களுக்குள் இயங்கிய ஒரு ஊழியாராக பயிற்சி பெற்றவர் அல்ல. ஆரம்ப காலத்தில் பல்வேறு வகைப்பட்ட கதம்பக் கோட்பாட்டளர்களுடன் தொடர்பு கொண்ட பின்பு, பேச்சு ஆற்றலால் 1905 புரட்சியில் மேடையேறி தலைவரானவர். அதன் பின்பு சமூகத்தில் இருந்து அன்னியமாக, கட்சியின் புரட்சிகரமான நடவடிக்கையில் ஈடுபடாது, முற்றாக வெளிநாடுகளில் அங்குமிங்குமாக, வெளிவந்த மார்க்சியத்தை திரிக்கும் பத்திரிகையில், இடைநடுவழிப் பாதையை கோட்பாட்டுக்கு புறம்பாக எழுதி வாழ்ந்தபடி காலத்தை ஒட்டினார். இதற்கு எதிரான புரட்சிகரமான மக்கள்திரள் கட்சிகளில் அவர் இணைந்து இருக்கவுமில்லை, அதுபோல் போராடியதுமில்லை. மாறாக அலைந்து திரிந்தும், கட்சிகளுக்கு இடையில் உள்ள முரண்பாடுகளுக்குள் தலை நீட்டியும், அதற்குள் சதிப்பணியான (இது லெனின் கூற்று) அனுகுமுறைகளும், அடிப்படையில் நிர்வாக ரீதியாக காய்களை நகர்த்தும் அரசியலில் பிரமுகராக இருந்தார். இவருக்கு இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாக ஆற்றல் இவரின் ஒரே அரசியல் மூலமாக இருந்தது. போல்ஸ்விக்கு எதிராக எப்போதும் மென்ஸ்விக்குகளுடனும் கூடியும், சில நேரங்களில் இதற்கு இடையிலும் ஒரு பாதையை வைப்பதுமாக இருந்ததுடன், இதை பிரதிநிதித்துவப் படுத்திய சர்வதேச போக்குகளிலும், அங்கம் இங்கும் அலைந்து திரிந்த லும்பன் அரசியலையே, அரசியல் நடைமுறையாக கொண்டிருந்தவர். 1917 இல் போல்ஸ்விக் கட்சியில் இணைந்தவுடன், யுத்த நிலைமை காரணமாக இராணுவத்தில் கட்டளையிடும் ஒரு அரசியல் வடிவத்தில் தொடர்ந்து வளர்ச்சி பெற்ற போக்குகள், நிர்வாகத் தன்மை மற்றும் அதிதமான சுய நம்பிக்கை சார்ந்து, இயந்திர கதியில் கட்சி நிர்வகத்தை கையாளும் தன்மையைக் கொண்டிருந்தார். இது அதிகார வர்க்கத்தின் ஊற்று மூலமாக மாறிவிடுகின்றது.

 

இந்த டிராட்ஸ்கிய அரசியலில் இருந்து ஸ்டாலின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டது. கட்சியை ஆரம்பம் முதல் உருவாக்கிய ஸ்டாலின், மக்களுக்குள் தலைமறைவாக அவர்களுக்குள் வாழ்ந்து, அவர்களைச் சார்ந்து மக்கள் திரள் பாதையே ஸ்டாலின் மார்க்கமாக இருந்தது. ஆனால் புரட்சிக்கு பிந்தி சமுகத்தில் இதில் ஊன்றி நிற்க தவறியது ஏன்? ஸ்டாலின் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில், முரண்பாடுகள் கட்சியின் உயர் மட்டங்களில் தொடர்ச்சியாக அலை அலையாக முன்வந்த போது, முரண்பாட்டை முன்வைத்தவர்கள் தமது சொந்த அரசியல் வழியில், நிர்வாக ரீதியான வழிகளில் பகிரங்கமான, இரகசியமான அணைத்து வழியிலும் மேல்மட்ட சதியை கட்டமைத்த போது, ஸ்டாலின் மற்றாக நிர்வாக ரீதியான வடிவத்தை கையாளும் தவறைச் செய்கிறார். கட்சியின் மேல் மட்டத்தில் பாட்டாளி வர்க்க போராட்டத்துக்கு எதிராக கையாண்ட அனைத்து நிர்வாக ரீதியான நடத்தைக்கும், சமூகத்தில் மறைமுகமாக வர்க்க வேர் இருப்பதை ஸ்டாலின் கவனத்தில் கொள்ளவில்லை. அதை மேல்மட்ட சதியாக மட்டும் குறுக்கி பார்த்த நிலையில், அதை நிர்வாக ரீதியாக அணுகுவதை துரிதப்படுத்தியது. இடதுசாரி கம்யூனிசம் என்ற நூலில் லெனின் “(ஓரே ஒரு நாட்டில் கூட) தூக்கியெறியப்படுவதால்  அதன் எதிர்ப்பை பத்து மடங்கு அதிகரித்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த எதிரியாகிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக புதிய வர்க்கம் நடத்தும் மிகவும் தீர்மானகரமான, மிகவும் ஈவுரக்கமற்ற ஒரு யுத்தம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி அதன் சர்வதேசிய மூலதனத்தில் மட்டுமல்ல, முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வதேசிய தொடர்புகளின் பலத்திலும் நம்பகமான தன்மையிலும் மட்டுமல்ல பழக்க வழக்கங்களின் சக்தி வாய்ந்த படிப்பிலும், சிறு உற்பத்தியின் பலத்திலும் கூட இருக்கின்றது. ஏனெனின் துரதிஷ்ட வசமாக உலகில் இன்னும் மிகமிகப் பரந்த அளவிலானதாக சிறு உற்பத்தி இருக்கிறது. இடையராதும், தினந்தோறும், மணிதோறும், தன்னியல்பாவும் ஒரு திரளான அளவிலும் முதலாளித்துவ மற்றும் முதலாளித்துவ வர்க்கத்துக்கான தோற்று வாய்க்குக் காரணமாக சிறு உற்பத்தி இருக்கிறது. இந்தக் காரணங்களினால் எல்லாம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இன்றியமையாததாக இருக்கிறது. சளையாத, கட்டுப்பாடான உறுதியான, வெல்லற்க மற்றும் திடசித்தம் ஆகியவற்றைக் கோரும் ஒரு யுத்தமின்றி, நீண்ட  உடும்புப்பிடியான மற்றும் ஜீவமரண யுத்தமின்றி முதலாளித்துவத்தின் மீது வெற்றி சாத்தியமில்லை” இந்த கூற்றுகளை பிரதிநிதித்துவம் செய்த கட்சியின் தலைமை உறுப்புகளுக்கு, சமூகத்தில் ஒரு வர்க்க வேர் உண்டு என்று பார்த்திருப்பின், ஸ்டாலின் தனது கடந்தகால மக்கள் திரள் பாதையை கொண்டே இந்த போக்கை தனிமைப்படுத்தி ஒழித்திருக்க முடியும்;. இதை சரியாக அணுகாமையால் அடுத்த தவறு ஏற்படுகின்றது.

 

5.பல்வேறு வர்க்க கோரிக்கையை உள்ளடக்கிய சமூக வேர்களை அடிப்படையாக கொண்டு கட்சியின் உயர் மட்டங்கள், தமது அதிகாரத்தை நிலைநிறுத்த கட்சியூடாக தீவிரமாக முனைந்தன. இதன் போது வன்முறை, வன்முறை சாராத அனைத்து வடிவத்தையும், இரகசியம் மற்றும் இரகசியமல்லாத குழு வடிவில் கட்டமைக்கப்பட்டன. 1.12.1934ம் ஆண்டு இந்த இரகசிய சதிக் குழுக்கள், ஸ்டாலின் மிக நெருங்கிய நன்பரும் கட்சியின் முன்னணித் தலைவருமான கிரோவ்வை படுகொலை செய்ததைத் தொடர்ந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்த, நிர்வாக ரீதியான அனுகுமுறையில் சார்ந்திருப்பதை நடைமுறையாக்கியதுடன் அதையே ஒரு கோட்பாடக்கினர்.

 

6.1934 இல் கிரோவ் படு கொலையைத் தொடர்ந்து இரகசிய சதிக் குழுக்களை கண்டறிவதில் அதிகமான அக்கறை காட்டப்பட்டது. இதன் விசாரணைகளின் வடிவமாகவே 1937-1939 காலகட்ட கட்சி சுத்திகரிப்பு இயக்கம் விரிவாக நடத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் இதை கையாள்வதில் கட்சியின் முதன்மைப் பாத்திரம் பின்தள்ளப்பட்டது. இந்த சதிகளை கண்டறிய முற்றாக இரகசிய உளவு அமைப்பை சார்ந்து அதை விரிவாக்கினார். இதன் போது கட்சியின் முக்கிய முன்னணித் தலைவர்கள் பலர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, அவ் விசாரனையை பகிரங்கமாக சர்வதேச பத்திரிகைதுறையின் முன்பாகவே நிகழ்த்தப்பட்டது. இந்த விசாரனையின் போது, அவர்கள் தமது அரசியல் நிலைக்காக நிதிமன்றத்தில் உறுதியுடனேயே வாதித்திட்டனர். அதன் அடிப்படையில் தமது சதியை நியாப்படுத்தினர். தமது அரசியல் நடத்தைகளை முன்வைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. உண்மையில் உண்மையான சதியாளர்கள் விசாரனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆரம்பத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை எதிர்த்து, சதிசெய்த குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற கொண்டு வந்த கட்டம் தாண்டி, அடுத்த கட்டத்தில் பொது முரண்பாடுகள் மீதானதாகவும், நட்பு முரண்பாடுகள் மீதான பொதுவான கைதாக மாறிவிட்டது. இவைகூட ஏற்பட காரணம், இரகசியமான சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைமை தாங்கிய அரசியல் சார்ந்த இரகசியக் குழுக்கள், கட்சியின் முரண்பாடுகளையும் கையாளத் தொடங்கியிருந்தது. முரண்பட்ட கருத்துகளை தெரிவிப்பவர்களை சந்தித்து வென்று எடுக்கவும், சதியில் பங்காளியாக்குதல் என்ற பொதுவான இரகசிய சதிப்பாணியும், கட்சி மற்றும் கட்சிக்குள் கட்சி கட்டும் இரகசிய அனுகுமுறைகள், இந்த கைதை பொதுமையான முரண்பாட்டின் மீதானதாக மாற்றிவிடுகின்றது. பொது முரண்பாடுகள் மீதான இரகசிய சதிக் குழுக்களின் அரசியல் செயற்பாடு, ஸ்டாலினை கட்சியிடம் நம்பிக்கை இழக்க வைத்ததுடன், முற்றாக நிர்வாக ரீதியான இரகசிய உளவு அமைப்பை சார்ந்திருப்பதை உந்தித்தள்ளியது. அதாவது கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை கொண்டு, ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் கட்சியில் வர்க்கப் போராட்டத்தை தொடர மறுத்து, ஸ்டாலினையும் அவர் சார்ந்த பாட்டாளி வர்க்க நிலையையும் இரகசியமான வழியில் அகற்றிவிட முயன்ற போக்குதான், பொதுவான முரண்பாட்டின் மீதான விசாரனையாக மாறிவிடுகின்றது. அன்று பாதுகாப்பு படையில் எதிரி உடுருவியிருந்ததும், இதன் குறிப்பான விளைவுகளாக இருந்தது. உண்மையான ஸ்டாலின் ஆதாரவளர்கள் கூட தண்டனைக்குட்பட்டனர்.

 

சதியில் நேரடியாக கண்டுபிடிக்கப்பட்டவர்கள் மேலான விசாரனையின் போது, அவர்கள் முரண்பாடுகளை கையாளும் எல்லையில், கட்சியின் முரண்பாட்டின் எல்லைவரை விரிந்த தளத்தில் இரகசியமாக சந்தித்து, தமது சதிக்கு வென்றெடுக்கும் போக்கு காணப்பட்டது தெரியவந்த போது, அதை, ஸ்டாலின் முரண்பாடுகளை எல்லாம் சதியாக காண்பதன் மூலம் தவறு இழைத்தார். இது முரண்பாட்டை மறுக்கும் கோட்பாடாக மாறி, அதை சதியாக மட்டும் கண்பது என்ற அரசியல் தவறை கையாண்டார். கட்சிக்குள் இருந்த எதிரியையும், கட்சிக்குள் இருந்த முரண்பாட்டையும் வேறு பிரித்தறிவதை கைவிட்டார். இதனால் முரண்பாட்டின் இயங்கியல் தன்மையை படிப்படியாக கைவிட்டார். இது இரண்டு பிராதானமான கோட்பாட்டு தவறை உருவாக்கியது

 

1.முரண்பாடு தான் ஒரு சமுதாயத்தின் ஒரு இயங்கியல் விதிமட்டுமின்றி, வளர்ச்சியின் விதியுமாகும். முரண்பாடு இல்லாத இயக்கம் என்பது கற்பனையானது. முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசமும், சோசலிசத்தில் இருந்து கம்யூனிசமும் என்ற அணைத்திலும் முரண்பாட்டின் விதியுண்டு. முரண்பாடு நட்பாகவும், பகையாக என இரண்டும், அக்கம்பக்கமாக சமுதாயத்தில் காணப்படுகின்றது. இதை அவர் கட்சிக்குள் மறுப்பதை ஒரு பொதுவடிவமாக்கினர். முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றது. முரண்பாடுகள் சமுதாய வளர்ச்சிக்கு எதிராக மாறும் போது அதை அழிப்பதற்கு பதில், சமுதாய வளர்ச்சியை ஊக்குவித்த முரண்பாட்டையும் பகைமுரண்பாடக்கிய, கோட்பாட்டு தவறை செய்தார்.

 

2.அடுத்து அவர் இயங்கியல் வளர்ச்சி விதியை நிராகரித்தார். ஒரு பொருள் நிலையானது என்ற அடிப்படையான கொள்கையை, கட்சி உறுப்பினர்கள் மீது கையாளும் வழிமுறையில், இது சார்ந்து வெளிப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் மாறிக் கொண்டிருப்பதை காணத் தவறினர். நட்பு முரண்பாடுகளையும், தவறுகளையும், பகைமுரண்பாடுகளையும் ஒன்றாக்கியதன் மூலம், இயங்கியலில் மாறிக் கொண்டிருக்கும் தன்மையை மனிதர்களுக்குள் புரிந்து கொள்ளவும், அதை நடைமுறையில் கையாளவும் மறுத்தார். இது திருந்தக் கூடிய மற்றும் நட்பு முரண்பாட்டை இயங்கியல் வளர்ச்சி விதியாக்க மறுத்தன் விளைவு, முரண்பாடுகளை பொதுவான எதிரியாக காண்பது நிகழ்ந்தது. பாட்டாளி வர்க்கப் போராட்டத்துக்கு எதிரான எதிரியின் நோக்கத்தை இனம் கண்டு, அதை தனிமைப்படுத்தி அழிப்பதுக்கு பதில், பொதுவான வகையில், முரண்பாட்டின் மீது சதியைக் காண்பது ஒரு வடிவமாகியது.

 

இதனால் கட்சியில் சரியான சக்திகள் கூட, இனம் பிரிக்க முடியாத பொதுவாக வகைப்படுத்தும் அரசியல் தவறால், உண்மையான சதியாளர்களுடன் இணைக்கப்பட்டு கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். இது பற்றி 1940 இல் ஸ்டாலின் எழுதிய லெனினியம்” என்ற நூலில் களையெடுப்புக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டதுடன், களையெடுப்புடன் கடுந் தவறுகள்” ஏற்பட்டது என்பதையும் ஏற்றுக் கொண்டு, சுயவிமர்சனம் செய்துள்ளார்.

 

7.சதிகள் மீதான விசாரணை, விரிந்த தளத்தில் கட்சிக்குள் முரண்பாடுகள் மீது சதிக் குழுக்களின் தொடர்புகள் தெரியவர, கட்சி மீதான நம்பிகையை தொடர்சியாக இழக்கின்றார். இது கட்சி மீதான நம்பிகையை விட, தன் மீதான நம்பிக்கையை ஆதாரமாக கொள்வது ஒரு போக்காக மாறுகின்றது. அதாவது போல்ஸ்விக் வரலாற்றில் தனது சரியான தொடர்ச்சியான நிலையை அடிப்படையாக கொண்டு, சுய நம்பிக்கையில் சார்ந்து நிற்பதில் அதிகமான கவனத்தை குவிக்கின்றார். அன்று டிராட்ஸ்கியின் தன்னம்பிக்கையை (இது லெனின் டிராட்ஸ்கி மீது செய்த விமர்சனம்) தொட்டு, ஸ்டாலின் தன்னம்பிக்கையில் தன்னை ஆதாரப்படுத்தினர். இது கட்சியை சார்ந்திருப்பதை கைவிடுவதாக மாறியது. இது கட்சியை விட தன்னைச் சார்ந்து முடிவு எடுக்கும் பண்பாக மாறுகின்றது. இது லெனின் ஸ்டாலின் மீது செய்த விமர்சனத்தை படிப்படியாக கைவிட்டு, அதை மீள கையாளும் அளவுக்கு புறநிலமை மற்றும் முரண்பாட்டை பொதுமையாக்கிய தவறால், ஸ்டாலினை தொடர்ச்சியான தவறுக்கு இட்டுச் சென்றது. ஸ்டாலின் கட்சியை கூட்டுவது, விவாதிப்பது அனைத்தையும் படிப்படியாக கைவிடுகின்றார். இது இயல்பாக தனிமனித வழிபாட்டுக்கு வித்திடுகின்றது. இதன் மூலம் எதிரியும் இந்த தனிமனித வழிபாட்டில் ஒளித்துக் கொள்வது, புதிய போக்காகின்றது. முன்பு கட்சியில் முரண்பட்ட விவாதங்கள், எதிரியையும் நண்பனையும் தெளிவாக இனம் காண்பது சாத்தியமாக இருந்தது. ஆனால் முரண்பட்ட விவாதங்கள் குறைந்து செல்ல, தனிமனித வழிபாடு முதன்மை பெற, எதிரியையும் நண்பனையும் இனம் காண்பது முடியாததாகி விடுகின்றது. ஸ்டாலினை தனிமனித வழிபாட்டின் ஊடாக, புகழ்வதன் ஊடாக, எதிரிகள் சொந்த கோட்பாடுகளை அதற்கு பின் ஒளித்து வைத்தபடி, அதிகாரத்தின் உயர் வடிவங்களை கைப்பற்றுவது இலகுவானதாகியது. ஸ்டாலின் மறைவுக்கு பின்பு எதிரி வர்க்கம், இந்த தனிமனித புகழ்பாடும் எல்லைக்குள் ஒளித்தபடி, அதிகாரத்துக்கு இலகுவாக வரமுடிந்தது. அதேபோல் ஸ்டாலின் அவதூறுகளையும் அதன் எல்லைக்குள், இரகசிய குழுவில் கட்டமைக்க முடிந்தது. முரண்பாடுகளை கட்சியில் முன்வைக்கும் ஜனநாயக மத்தியத்துவமும், ஒழுங்காக கட்சி காங்கிரஸ் கூடியிருப்பின், இலகுவாக 1950 களில் எதிர்புரட்சி ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க கையாண்ட வழியில் ஏற்பட்ட தவறு ஊடாகவே, எதிரி ஆட்சிக்கு வந்திடுவது நிகழ்கின்றது.

 

8.மேல்மட்ட கட்சியில் ஸ்டாலின் நம்பிக்கை இழக்க, இரகசியக் குழுக்களின் விரிவான நடத்தைகள் காரணமாக இருந்தன. ஸ்டாலின் சுய தன்நம்பிக்கை மீது சார்ந்திருந்தனால், தனிநபர் வழிபாடு ஒரு பொது அரசியல் வடிவமாகியது. சதி மீதான பகிரங்க விசாரணை, முரண்பாடுகள் மீதான பொதுவான விசாரனையாக மாறிய போது, ஸ்டாலின் தனது சொந்த அரசியல் சட்ட அமைப்புக்குள் விசாரனை செய்வதை கைவிட்டு, அதற்கு புறம்பான வழியில் அவ் விசாரனையை நடத்தியதன் மூலம், தனது சொந்த அரசியல் சட்ட அமைப்பைக் கூட புறக்கணித்தன் மூலம், அரசியல் தவறு இழைத்தார்.

 

9. இதன் மூலம் நட்பு மற்றும் தவறு இழைத்த முரண்பாட்டின் மீது உள்ள சரியான போல்ஸ்விக்குகள், மற்றும் திருந்தி வரக் கூடிய உறுப்பினர்கள் கூட சிறையில் அடைக்கப்பட்டனர், அரசியில்  ரீதியாக ஒதுக்கப்பட்டனர். இது கட்சிக்கு மாபெரும் இழப்பைக் கொடுத்தது. 1950 இல் அரங்கேறிய எதிர்புரட்சிக்கு இது சாதகமாக இருந்தது. ஸ்டாலின் விரும்பிய பாட்டாளி வர்க்க விடுதலைக்கு எதிராகவே, இது தனது விளைவைக் கொடுத்தது. ஸ்டாலின் கூறியது போல் “முதலாளியத்தைத் திரும்பக் கொண்டுவரும் சாத்தியப் பாட்டுக்கான நிலைமைகள் நமது சோவியத் நாட்டில் உள்ளனவா? ஆம், இங்கு உள்ளன. இது விந்தையாகத் தோன்றலாம் தோழர்களே, ஆனால் இது உண்மை” இது பற்றி ஸ்டாலின் நிறையவே எப்படி எல்லாம் ஏற்பட முடியும் என எழுதியுள்ளார். ஸ்டாலின் எச்சாரித்படியே அவரின் மரணத்தின் பின்பு இது நிகழ்ந்தது.

 

10.எதிரிகளை கட்சி இனம் கண்டு கொண்டதன் மூலம், அவை உயர்மட்ட சதியாக வெளிப்பட்டதால், களையெடுப்பு உயர்மட்ட வடிவமாக இருந்தது. 1937-1939 களில் கட்சியில் எதிரி வர்க்கத்தை ஒழிக்கும் விசாரனைகள் நடத்தப்பட்டு அது முடிவுக்கு வந்த போது, 1939 இல் ஸ்டாலின் வர்க்கங்கள் ஒழிந்து விட்டது என்று பிரகடனம் செய்தார். அதை அவர் “உள்நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்கும் தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும், உழவர்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் இடையே உள்ள தீர்க்க முடியாத முரண்பாடுகளால் முதலாளியச் சமுதாயம் கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், சுரண்டல் நுகத்தடியிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சோவியத் சமுதாயத்திலோ இத்தகைய முரண்பாடுகள் ஏதும் இல்லை, அது வர்க்க முரண்பாடுகளிலிருந்து விடுபட்டிருக்கிறது, அது தொழிலாளர், உழவர், அறிவாளிகள் ஆகியோரின் நட்பு நிறைந்த ஒத்துழைப்பு என்ற காட்சியை வழங்குகிறது” என்றார் ஸ்டாலின். இது போல் 1936 புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போதும் இதுபோல் கூறிய ஸ்டாலின், 1937 சதிகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு முந்திய கருத்துக்கு எதிராக, எதிரி வர்க்கம் பற்றி எச்சரித்து போராடக் கோருகின்றார். இங்கு ஸ்டாலின் களையெடுப்பின் அரசியல் கண்ணோட்டம், குறிப்பான நிலைமைகளைச் சார்ந்து வெளிப்படுகின்றது. இங்கும் வர்க்க முரண்பாட்டை மேல் மட்டத்தில் மட்டும், அதுவும் சதியாக கண்டு கொண்டதும், அதற்கு சமூக வேர் இருந்தை காணத் தவறிய அரசியல் தவறை இழைக்கின்றார். அத்துடன் தொடர்ச்சியான வர்க்கப் போராட்ட லெனினிய கண்ணோட்டத்தையும், மேல் மட்ட சதியாக மட்டும், குறுக்கி பார்த்து விடும் தவறு நிகழ்ந்தது. வர்க்கப் போராட்டம் கட்சியில், அதிலும் மேல் மட்டங்களில் குவிந்த காணப்படும் என்பது உண்மையாக இருந்த போதும், அதை பிரநிதித்துவப் படுத்தும் சமூகத் தொடர்ச்சி சமூகத்தில் இருப்பதை ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. இது புரட்சிக்கு பிந்திய மக்கள் திரள் அமைப்புகான புரட்சிகரமான பாதையை இனம் கண்டு கொள்ளாத, தொடர்ச்சியுடன் தொடர்புடையதாக இருந்தது. 1939 இல் வர்க்கங்கள் எதுவும் இல்லை என்ற ஸ்டாலின் தவறான விளக்கம், எதிரி வர்க்கம் தன்னை அதற்குள் ஒளித்துக் கொள்ளவும், எதிர் புரட்சிக்கான மறுவார்ப்பு செய்து ஆட்சியைக் கைப்பற்றவும் எதிரிக்கு வாய்ப்பளித்தது. 

 

11.எதிரி இல்லை என்று கூறிய போதும், யதார்த்தத்தில் அவைகளை எதிர் கொள்கின்ற போது ஸ்டாலின் “அதிகார வர்க்கத் துரு” என்று அதிகார வர்க்கம் பற்றி எச்சரித்து, அவர் வெறும் நிர்வாகம் மட்டும் சார்ந்த வர்க்கப் போராட்டத்தை நடத்தியமை, என்பது உள்ளடகத்தில் அதிகார வர்க்கத்தின் உருவாக்கத்தை களைந்துவிடவில்லை. இது பொருளாதாரம் உள்ளிட்ட சலுகைகளை கொடுப்பதன் ஊடாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வழிகாட்டியது. 1952 இல் 19 வது கட்சி பேரவையில் சில உதாரணங்கள் மூலம் அதிகாரத்துவம் பற்றி அம்பலம் செய்யப்பட்டது. ஆனால் இதன் தோற்றவாய் மற்றும் அதன் ஒழிப்பு பற்றி யாரிடமும் ஒரு மக்கள்திரள் வழி இருந்ததில்லை. ஒன்றில் புரட்சியை கைவிட்டுச் செல்வது அல்லது நிர்வாக முறையிலான பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தை மேல் இருந்து கையாள்வது என்ற இரு பாதையே, எதிர் எதிராக காணப்பட்டது.

 

12.வர்க்கப் போராட்டத்தை நிர்வாகம் சார்ந்து மேல் இருந்து கீழாக மட்டும் முன் தள்ளிய போக்கில், மேல் இருந்தவர்களை திருத்தி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஸ்டாலின் தள்ளப்பட்டார். இது சலுகைகளையும், வேறுபட்ட சம்பள விகிதத்தையும் கொண்ட போக்கு அனுமதிக்கப்பட்டது. இது சலுகை பெற்ற பிரிவை உருவாக்கியது. ஸ்டாலின் இங்கும் கடும் சீரழிவுகள் மீது களையெடுப்புகளை நடத்திய போதும், உண்மையில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் மக்கள் திரள் பாதையை கண்டறியாததால், நிர்வாக ரீதியான தண்டனை, சலுகை என்ற இரு போக்கை சார்ந்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாத்தார். இங்கு மக்கள் திரள் பாதை யாராலும் இக்காலத்தில்  முன்வைக்கப்படவில்லை. இந்த பாதையை மாவோதான் முதன் முதலாகக் கண்டறிந்தார்.

 

13.அடுத்து தொழில் மயமாக்கலுக்கு விரிவான அழுத்தம் கொடுத்து, விவசாயத்தை புறக்கணித்துடன், தொழில் மயமாக்கலுக்கு விவசாயத்தை மூலதனமாக்கியதால், தொழிலாளார் விவசாயிகளுக்கிடையில் ஏற்றத் தாழ்வு மறைவதற்கு பதில் ஆழமாகியது. இது வர்க்க வேறுபாட்டை குறைப்பதற்கு பதில், எதிர் மறையில் செயலாற்றியது. இந்த அனுகுமுறை வர்க்கங்களை ஒழிக்கும் போராட்டத்துக்கு எதிரானதாக இருந்தது.

 

14.அடுத்து ஸ்டாலின் அடிக்கட்டுமானம் மற்றும் மேல்க்கட்டுமான உறவின் இயங்கியலை ஒருதலைபட்சமாக பார்த்தார். அடிக்கட்டுமான மாற்றத்தை சாதிப்பதன் மூலம், மேல் கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டு வந்த விட முடியும், இதனுடாக சோசலித்தை கட்டிவிட முடியும் என்று நம்பினார். இதனால் அடிக்கட்டுமானத்தில் நடத்திய புரட்சியை மேல் கட்டுமானத்தில் கையாளவில்லை. இது உள்ளடக்கத்தில் பொருளாதார வாதமாக உள்ளது. புரட்சி பரஸ்பரம் ஒன்றுடன் ஒன்று தொடர்ச்சியாகவும், பரஸ்பரமும், இடைவெளியின்றி அனைத்து வடிவத்திலும் இடைவிடாது நடத்தப்பட்டிருக்க வேண்டும்;. மேல் கட்டுமான புரட்சி நடத்தப்படாமையால் அடிக்கட்டுமான புரட்சி, சோசலிசத்தை பலப்படுத்தும் திசையிலான வளர்ச்சியில் முடமாகியது. சோசலிசத்தை பாதுகாத்து நிறுவும் போராட்டத்தில், ஸ்டாலின் சமூக விளைவுகளைப் பற்றி சிந்தித்தை விட, பொருட்களைப் பற்றியே கவனத்தைக் குவித்தார். அதாவது மேல்கட்டுமானத்தை பற்றி அக்கறைப்படாது, அடிக்கட்டுமானதில் மட்டுமே கவனத்தை குவித்தார். இது உண்மையில் மக்கள்திரள் பாதையுடன் தொடர்புடையதாக இருந்தது.

 

15.ஸ்டாலின் மக்களைப்பற்றி பேசாது நிபுணர்கள், கட்சி ஊழியர்கள், என்று ஒரு பக்கத்தை மட்டுமே அழுத்தம் கொடுத்து, பாட்டாளி வர்க்க நிர்மானிப்பை முன்னெடுக்கும் அரசியல் மார்க்கத்தை வைக்கின்றார். அதாவது மக்கள் என்ற முக்கியத்துவம் உடைய பகுதியை கவனிப்பதில் தவறு இழைத்தார். கட்சி ஊழியர்களும், நிபுணர்களும் மக்கள் இன்றி இல்லை என்பதை புரிந்த கொண்டு, இரண்டையும் கொண்டு முன்னேறும் மார்க்கத்தை காணத் தவறினார். இந்தத் தவறும் நேரடியாக மக்கள் திரள் பாதையுடன் தொடர்புடையதாக இருக்கின்றது.

 

16.ஸ்டாலின் நிர்வாகம் சார்ந்த விதிகளையே புரிந்து கொள்வது பற்றி அக்கறை கொண்டார். ஆனால் இதில் உள்ள நிகழ்வுமுறைகளைபற்றி அக்கறைப்படுவதில் தவறு இழைத்தார். ஸ்டாலின் கூட்டு உடைமையில் இருந்து பொதுவுடமைக்கு மாறும் வழியை கண்டறியவில்லை. கம்யூனிசத்தை நோக்கி இடைவிடாத மக்கள் திரள் புரட்சியின்றி, கம்யூனிசத்தை அடைய முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அதாவது ஒரு மக்கள் திரள் புரட்சி, எப்படி தொடர்வது என்ற விதியை கண்டறியத் தவறினார். இதை யாரும் அன்று முன்வைக்கவில்லை.

 

17.மக்கள் திரள் பாதையை கண்டறியாததால் மையப்படுத்தப்பட்ட வடிவில் அனைத்தையும் நிர்வகிக்கும் முறை பரந்த தளத்தில் காணப்பட்டது. மேல் இருந்து கீழாக, கீழ் இருந்து மேலாக என்ற, பரஸ்பர விதி கண்டறியப்படவில்லை. இதனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க போராடிய வரலாற்றில், அவை முழுமையாக மக்களின் நலனை தொடர்சியாக பிரதிபலிக்கத் தவறியது.

 

18.கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை கையாள்வதை 1937 களில் கைவிட்டார். 1937 களின் முன்பு ஸ்டாலின் கையாண்ட சரியான அரசியல் வழிகள், லெனினியத்தின் தொடர்சியாக (கூட்டுப் பண்ணையாக்கலிலும், மூலதனத்தை திரட்டிய வடிவத்திலும்;, வர்க்கங்களை வகைப்படுத்துவதில் தவறுகள் இழைத்த போதும்) விரிவாக்கிய பண்பை, புறநிலையின் வளர்ச்சி பெற்ற எதிரி வர்க்கத்தின் சதிகளின் நிர்ப்பந்தில் கைவிட்ட வரலாற்றின் ஊடாகவே, ஸ்டாலின் அவதூறுகள் எதிரி வர்க்கத்தை மறைத்தபடி, கட்டமைக்கப்படுவதை நாம் இன்று தெளிவுபடவே எல்லா ஸ்டாலின் அவதூறுகள் மீதும் இனம் காண்கின்றோம். இதன் ஊடாக சரியான முந்திய மார்க்கங்கள் கூட, அரசியல் ரீதியாக துடைத்தெறிய எதிரி வர்க்கங்கள் முனைகின்றது. இதைத் தான் குருசேவ் முதல் கொர்ப்பச்சேவ் வரை கையாண்டு, ஏகாதிபத்தியத்திடம் புரட்சியை தரை வார்த்தனர். ஸ்டாலின் சில வெளி நாடுகளின் கட்சி உறவுகளை கையாள்வதிலும் கூட, தவறு இழைத்தார். சில தவறான மோசமான ஆலோசனைகளைக் கூட வழங்கினார். ஏகாதிபத்தியங்கள் சோவியத் மீதான யுத்தமாக இரண்டாம் உலகயுத்தத்தை நகர்த்த நடத்திய ஏகாதிபத்திய சதிகளை, ராஜதந்திரமாக  ஏகாதிபத்தியத்துக்கிடையில் ஸ்டாலின் நகர்த்திய நிலையில், அதை மட்டும் சார்ந்து நின்றதன் மூலம், யுத்தத்துக்கு முன்பு இரண்டாம் உலக யுத்த தயாரிப்பில் முழுமையான கவனத்தை செலுத்தி, தற்காப்புக்கு தயார் செய்யத் தவறினர்.

 

19.பாட்டாளி வர்க்க தத்துவத்தில் வர்க்க சமுதாயத்தில் அதை எதிர் கொள்ள காலத்தால் அழியாத பல தத்துவார்த்த விடையத்தை தந்ததுடன், எதிரியை கோட்பாட்டு ரீதியாக அம்பலம் செய்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவியவர், பிற்பட்ட காலத்தில் சில கடந்த கால ஆவணங்களை  தவறாக திருத்த அனுமதித்தார். புரட்சியின் வேறுபட்ட காலத்தில் இணைந்து கொள்ளும் நபர்களின் வேறுபட்ட வாக்க நோக்கத்தையும் மற்றும் அரசியலின் தொடர்ச்சியின்மையை, அவர்களின் வர்க்க அரசியலுடாக அம்பலம் செய்த சரியான பாதையை முழுமையாக சார்ந்திருக்கத் தவறி, பிற்பட்ட காலத்தில் தனிமனித வழிபாட்டு வழிகளுடாக ஆவணங்களைத் திருத்த அனுமதித்தது, அரசியல் ரீதியாக பாட்டாளி வர்க்கமல்லாத கட்சியில் ஒட்டிக் கொண்ட சகபயணிகளை, அரசியல் ரீதியாக அம்பலம்செய்யும் பழைய பாதை முழுமையாக சார்ந்திருப்பதை கைவிட்டது என்பது, சக பயணிகள் இதற்கு ஊடாக தம்மை அரசியரீதியாக பாதுகாக்கும் வழிக்கு இட்டுச் செல்ல மறைமுகமாக அனுமதித்த தவறுகளையும் இழைத்தார்.

 

இதுபோன்று பல கடுமையான தவறுகளை, மக்கள் திரள் பாதையை கண்டறியத் தவறியதால் இழைத்தார். மக்கள் திரள் பாதையை தொடர்சியான வர்க்கப் போராட்டத்தில் கண்டறியத் தவறியதன் விளைவால், ஜனநாயக மத்தியத்துவத்தைக் கூட கட்சியில் இருந்து விலக்கியதுடன், அகமுடிவுகளை சார்ந்திருக்கும் நிலைக்கு சரிந்து சென்றார். இது உண்மையான எதிரிகளை ஒடுக்கிய அதே நேரம், நண்பர்களையும் ஒடுக்கும் அளவுக்கு விரிவாகியது. இதன் போது தனிமனிதர் வழிபாடு புதிய வடிவமாக வளர்ச்சி பெற்றது. இதற்குள் எதிரி ஒளிந்து கொண்டதுடன், அதன் வழியிலேயே ஆட்சியை கைப்பற்றி அதை தனிமனித வழிபாட்டு கண்ணோட்டத்திலேயே தனிமனிதனாக குற்றம் சாட்டி, ஸ்டாலினை எட்டி உதைக்கவும் பின்நிற்கவில்லை. எப்படி தனிமனித வழிபாடு தவறானதோ, அதே அளவுக்கு ஸ்டாலினை தனிமனிதனாக குற்றம் சட்டும் அரசியலும், தனிமனித வழிபாட்டு தூற்றுதல் எல்லைக்கு உட்பட்டதேயாகும்.

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25

26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 26

27. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 27

28. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 28

29. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 29

30. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 30

31. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 31

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 31

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 31

 stalin 31

ஸ்டாலினிசம் என்றால், அதுதான் லெனினிசம், அதுதான் மார்க்சிசம்

 

ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசமா என்றால், இல்லை. அதுதான் லெனினிசம். இங்கு இதுதான் மார்க்சியம். 1915 இல் முதலாம் உலக யுத்தம் தொடங்கிய பின்பு மென்ஸ்விக்குகள் ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்ற போது, டிராட்ஸ்கியும் இது சாத்தியமில்லை என்றார். ஆனால் லெனின் ‘ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் என்ற முழக்கம் பற்றி’ என்ற கட்டுரையில் ஒரு தனிப்பட்ட முழக்கம் என்கிற வகையில் உலக ஐக்கிய நாடுகள் என்பது சரியானதாக இருக்க முடியாது. எனெனில் இதற்கு, ஒரு தனி நாட்டில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமானதல்ல என்று தவறான பொருள் வழங்கப்படக்கூடும்” என்றார். லெனின் புரட்சிக்கு பின்பு ரஷ்யாவில் பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிரான ஒரே உத்திரவாதம், மேற்கு நாட்டில் ஏற்படுகிற ஒரு சோசலிசப் புரட்சிதான். ஆனால் இதை நினைத்த மாத்திரத்தில் வரவழைக்கக் கூடிய ஒரு நிலையில் நாம் இல்லை. ஆனால் ஒரு சார்பு நிலையான, நிபந்தனைக்கு உட்பட்ட “உத்திரவாதம்” ஒன்று உண்டு. ரசியாவில் கூடுமான வரை மிகமிக விரிவான விளைவுகள் ஏற்படுத்துகின்ற, முரணற்ற, உறுதியான முறையில் புரட்சியை நிறைவேற்றுவதில்தான், பழைய நிலை திரும்பி வருவதற்கு எதிராகக் கூடுமான வரையில் மிகவும் சாத்தியமான தடைகளை எழுப்புவதில் பொதிந்துள்ளது” என்றார். இதுதான் 1925 களில் மீளத் தொடங்கிய அரசியல் விவாதத்தின் அடிப்படையும், உள்ளடக்கமுமாகும். அதாவது ஸ்டாலினிசமாகவும் அதன் மீதான எதிர்ப்பாகவும் இருப்பதன் அரசியல் உள்ளடக்கமும் இதுதான். ஆனால் ஸ்டாலின், கட்சியின் நீண்ட காலத் தலைவர் என்ற வகையில், லெனினியத்தை முன்னெடுப்பதில் வேறு யாரையும் விட முன்னணியில் இருந்தார். லெனின் ஏழாவது காங்கிரசில் “ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க அரசின் கரங்களில் உள்ள பொருளாதாரச் சக்தியானது, கம்யூனிசத்தை நோக்கிய மாறுதலை உறுதி செய்ய போதுமானது” என்றார். கூட்டுறவு பற்றிய கட்டுரையில் “நம்மை இப்போது எதிர்கொண்டிருப்பது இக் கலாச்சார புரட்சிதான். இக்கலாச்சாரப் புரட்சியானது, நம் நாட்டை ஒர் முற்றிலும் சோசலிச நாடாக உருவாக்குவதற்கு போதுமானது” என்றார். இது போல் லெனின் பலமுறை இதை விரிவாக்கியுள்ளார். இதை டிராட்ஸ்கி தொடர்ச்சியாக எதிர்த்ததுடன், இதையே ஸ்டாலினிசமாக, லெனினை முடி மறைத்தபடி மார்க்சியத்துக்கு எதிரானதாக காட்டினார், காட்டுகின்றனர்.

 

ஒரு நாட்டில் புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து சோசலிசத்தை கட்டுவதா இல்லையா என்ற கேள்விக்கு டிராட்ஸ்கி “தோல்வியடையும்அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலிய சர்வாதிகாரமாக முடியும்” என்றதன் மூலம், ஸ்டாலினை எதிர்த்தன் மூலம், மீளவும் பழைய மென்ஸ்விக்குகள் நிலையில், லெனினை மறுத்து நின்றார். இதை இன்னும் இழிவாக்கி ஸ்டாலினிசமாக்கினார். ஸ்டாலினுக்கு பதில் டிராட்ஸ்கி ஆட்சிக்கு வந்தால் என்ன நடந்திருக்கும். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியாது. அது தேங்கிவிடும் அல்லது சர்வாதிகார நெப்போலியன் ஆட்சியாகி விடும் என்று கூறிய படி, பழையதுக்கு திரும்பிச் செல்வதையே முன்வைத்திருக்க முடியும். இதைத் தாண்டி அவரால் தனது கோட்பாட்டுக்கு விளக்கம் சொல்ல முடியாது. இதைத்தான் இன்று தூக்கி பிடித்து காவடி எடுப்பதன் மூலம், முன்வைக்கும் ஸ்டாலின் எதிர்ப்பின் வர்க்க நோக்கம் தெட்ட தெளிவானவை. இந்த அரசியல் உள்ளடகத்தில் தான் ஸ்டாலின் முரண்பாடு உருவாகின்றது. கட்சி எதற்காக உருவாக்கி, எதற்காக போராடி புரட்சியை நடத்தியதோ (இந்த போராட்டத்தில் டிராட்ஸ்கி  எதிர்த்தே நின்றவர்), அந்த கட்சியின் நோக்கத்தை எதிர்த்த போது, கட்சியில் தொடர்ச்சியாக தோற்றுப் போனர்கள்;. கட்சி இவைகளை விவாதிகவும், கருத்தை வைக்க வழங்கிய ஜனநாயக மத்தியத்துவத்தையும், அரசியல் அதிகாரத்தையும் முறை கேடாக பயன்படுத்தினர். கட்சியின் ஜனநாயகத்தை குழதோண்டி புதைத்தன் மூலம், சதிகளைத் திட்டமிட்டனர்.

 

லெனின் தொடரும் வர்க்கப் போராட்டத்தைப் பற்றி ‘பஞ்சத்தை முறியடிப்பது’ என்ற அறிக்கையில் “ஆ! தொழிலாளர் வர்க்கம் பழைய முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து ஒரு இனப்பெருஞ் சுவற்றால் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் ஒரு தனி நபர் இறந்து போகும் விவகாரத்தில், இறந்தவர் சாதாரணமாகத் தூக்கிச் சென்று விடப்படுவதைப் போல் புரட்சியின் போது நடப்பதில்லை. பழைய சமுதாயம் சிதைவுறும் போது அதன் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து ஆணியடித்து சவக்குழியில் புதைத்து விட முடியாது. நமது மத்தியிலேயே அது உருக்குலைகிறது. பிணம் அழுகுகின்றது. நமக்கு நச்சிடுகிறது” என்றார். எதிரி வர்க்கத்தைச் சார்ந்து கட்சியின் சிறுபான்மை, எதிர் புரட்சிக்கு முயற்சி எடுத்தது நஞ்சிட்டது.

 

இது புரட்சி நடந்த நாடுகளில் இருக்கக் கூடிய பொது விதியும் கூட. சோவியத்தில் நடந்தவை வர்க்கப் போராட்டத்தின் புற நிலைமையின் விளைவே ஒழிய, ஸ்டாலின் தனிபட்ட அகநிலையோ, நாட்டின் பொதுவான நிலைமையோ அல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் வேறுபட்ட வர்க்கத்தினை பிரதி செய்தவர்களின், ஜனநாயக விரோத வன்முறை அரசியல் மீதானது தான் மாஸ்கோ விசாரனையாகும்.

 

வர்க்கப் போராட்டத்தை சிதைக்க முயல்பவர்களை எதிர்த்து எப்படி போராட வேண்டும் என்பதை லெனின் ‘சோவியத் அரசாங்கத்தின் உடனடிக் கடமைகள்’ என்ற பிரசுரத்தில் “முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கான ஒவ்வொரு மாறுதலின் போதும் இரண்டு முக்கிய காரணங்களுக்காக அல்லது இரண்டு முக்கிய வழிகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியம். முதலாவதாக சுரண்டலாளர்களின் எதிர்ப்புகளை இரக்கமற்ற முறையில் நசுக்குவது இன்றி முதலாளித்துவம் வீழ்த்தப்படவும் ஒழித்துக்கட்டப்படவும் முடியாது. சுரண்டலாளர்களிடமிருந்து அவர்களது செல்வத்தை அறிவிலும் அமைப்புத் துறையிலும் அவர்களுக்கு உள்ள சாதகத்தை உடனடியாகப் பறித்துவிட முடியாது. அதன் பயனாய் அவர்கள் வறியவர்களின் வெறுக்கத்தக்க ஆட்சியை (ஒரு நீண்ட காலத்திற்கு) தூக்கியெறிவதற்குத் தவிர்க்க முடியாமல் முயன்று கொண்டிருப்பார்கள். இரண்டாவதாக ஒவ்வொரு மாபெரும் புரட்சியும் குறிப்பாக ஒரு சோசலிசப் புரட்சியும் உள் நாட்டு யுத்தம் இல்லாமல் நினைத்துப் பார்க்கமுடியாது…. ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ஊசலாட்டங்களையும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடுகின்ற உதாரணங்களையும் உள்ளடக்கியதாகும்…. முந்தைய புரட்சிகளின் துரதிஷ்டம் என்னவென்றால் உருக்குலைக்கும் கூறுகளை ஈவு இரக்கமின்றி நசுக்க மக்களுக்கு பலத்தைத் தொடுக்கவும், அவர்களை ஒரு இறுக்கமான நிலையில் வைத்திருக்கவுமான புரட்சிகர உற்சாகம் நீண்ட காலத்திற்கு நீடிக்காததுதான் பரந்துபட்ட மக்களின் இந்த புரட்சிகர உற்சாகத்தின் நிலையின்மைக்கான சமுதாய வர்க்கக் காரணம் பாட்டாளி வாக்கத்தின் பலவீனம்தான்…. என்று தெளிவுபடவே விளக்குகின்றார். இதைத் தான் ஸ்டாலின் ஒருநாட்டில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கு எதிரான, சதிக் குழுக்களை ஈவிரக்கமின்றி ஒடுக்க போராடினர். இதில் தோற்றுப் போய்யிருந்தால் 1956 இல் குருசேவ் உருவாகியிருக்க வேண்டிய வரலாறு தோன்றிருக்காது. அது 1930 களிலேயே ஏற்பட்டு இருப்பதுடன், பாசிசம் உலகை ஆண்டிருக்கும்.

 

வர்க்கப் போராட்டம் என்பது புரட்சிக்கு பின்பு மிக தீவிரமாக மாறுவதுடன், எல்லாவிதமான முறையிலும் எதிரி வர்க்கம் போரட்டத்தை முன்னெக்கின்றது. இது ஸ்டாலின் கற்பனையல்ல. இது மார்க்சியத்தின் அரசியல் உள்ளடக்கம். இதையே ஸ்டாலின் முன்னெடுத்தார். இவை பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின்  அதிக அனுபவத்தை நடைமுறையில் சந்திக்க விட்டாலும், முதலாளித்துவ வர்க்கத்தின் தோற்றுவாய்கள் பற்றி பலமுறை குறிப்பிட்டே எழுதியுள்ளனர். அவைகளை நாம் பார்ப்போம்.

 

மார்க்ஸ் ‘பிரான்சில் வர்க்கப் போராட்டம்’ என்ற தலைப்பில் “பொதுவாக வர்க்க வேறுபாடுகளை ஒழித்துக் கட்டுவதற்கு, அவை தங்கியிருக்கும் எல்லா உற்பத்தி உறவுகளையும் ஒழித்துக் கட்டுவதற்கு, இந்த உற்பத்தி உறவுகளுக்குப் பொருத்தமான எல்லா சமூக உறவுகளையும் ஒளித்துக் கட்டுவதற்கு, இந்த சமூக உறவுகளில் இருந்து விளையும் எல்லாக் கருத்துகளையும் புரட்சிமயமாக்குவதற்கு அவசியமான மாறுதலுக்கான முறை என்கிற வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, புரட்சியின் நித்தியத்துவத்தைப் பிரகடனப்படுத்துவது சோசலிசம்” என்றார்.

 

இதையே லெனின் “வர்க்கங்களை ஒழிப்பது ஒரு நீண்ட, இடர்பாடுகள் மிக்க மற்றும் உறுதியான வர்க்கப் போராட்டத்தைக் கோருகிறது. மூலதனத்தின் அதிகாரம் தூக்கியெறியப்பட்ட பிறகு முதலாளித்துவ அரசு நொருக்கப்பட்ட பிறகு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்ட பிறகு (பழைய சோசலிசம், மற்றும் பழைய சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் ஆபாசமான பிரதிநிதிகள் கற்பனை செய்வது போல்) வர்க்கப் போராட்டம் மறைந்து விடுவதில்லை. மாறாக வெறுமனே அதன் வடிவங்களில் மாறுதலடைகிறது. மேலும் பல விவகாரங்களில் மிகவும் கடுமையானதாக மாறுகின்றது” என்றார் லெனின்.

 

இதை மேலும் அவர் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் அரசியலும் பொருளாதாரமும்’ என்ற பிரசுரத்தில் “பாட்டாளி வர்க்கத்தின் கீழ் சுரண்டும் வர்க்கத்தினர், அதாவது முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் மறைந்து விடவில்லை. எல்லோரும் ஒரே சமயத்தில் மறைந்து விடவும் முடியாது, சுரண்டலாளர்கள் வீழ்த்தப் பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒழிக்கப்பட்டுவிடவில்லை… இன்னமும் விசாலமான சமூகத் தொடர்புகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களது எதிர்ப்பின் சக்தி ஒரு நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகாரிக்கின்றது. மக்கள் தொகையில் இருக்க வேண்டியதில் அவர்களது எண்ணிக்கையை விட ஒப்பிட முடியாத அளவு மிகப் பெரும் முக்கியத்துவமுடையதான வகையில் அரசு, இராணுவம் மற்றும் பொருளாதார நிர்வாகத்தின் “கலை” அவர்களுக்கு  மேலாண்மையை, ஒரு மிகப்பெரிய  அளவிலான மேலாண்மையைக் கொடுக்கின்றது. வென்ற சுரண்டப்படுபவர்களின் முன்னணிக்கு அதாவது பாட்டாளி வர்க்கத்தக்கு எதிராக தூக்கியெறியப்பட்ட சுரண்டலாளர்கள் தொடுக்கும் வர்க்கப் போராட்டம் ஒப்பிட முடியாதவாறு கசப்பானது. மேலும் புரட்சியைப் பற்றி பேசுகையில், இந்தக் கருத்தோட்டம் சீர்திருத்த மாயைகளால் இடமாற்றம் செய்யவில்லையானால், இது வேறானதாக இருக்கமுடியாது” என்றார் லெனின். இதைத் தான் ஸ்டாலின் பின்பற்றினர். லெனின் வர்க்க போதனைகளை உறுதிபட முன்னெடுப்பதில் அவர் இரும்பாக அதாவது ஸ்டாலினாக இருந்தார். இந்த வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுத்த போது, அதில் சில கடுமையான தவறுகளைச் செய்தார். அவை என்ன? எப்படி இத்தவறுகள் நேர்ந்தன. இதற்கு பதிலாக எதை முன்னிறுத்தியிருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25

26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 26

27. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 27

28. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 28

29. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 29

30. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 30

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 30

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 30

 30

லெனினுக்கு பின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஸ்டாலின் மறுத்தாரா? வர்க்கப் போராட்டத்தை மறுத்தாரா?

 

 

1924 இல் லெனின் சக தலைவர்கள் பற்றி எழுதியதை, நாம் பார்ப்பது அவசியமாகும். ஸ்டாலினுக்கும், டிராட்ஸ்கிக்கும் இடையில் இருந்து வரும் முரண்பாட்டை பற்றி லெனின் சரியாக மதிப்பிடுகின்றார். இங்கு முரண்பாட்டில் இருவரின் பங்கையும் காண்பதுடன், இரண்டு தலைவர்களின் சிறப்பு மற்றும் குறைகளையும் காண்கின்றார். கட்சியின் ஒற்றுமையை முதன்மையாக கருதிய லெனின், ஸ்டாலின் பற்றிய குறிப்பில், அவர் கையில் அதிகாரம் குவிந்திருப்பதால் அதை அவர் போதுமான முன் எச்சரிக்கையுடன் கையாள்வதில் தவறு இழைப்பார் என்ற சந்தேகத்தை முன்வைக்கின்றார். இதனால் மட்டும் பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை பிரேகரிக்க கோருகின்றார். இதை அவர் குறிப்பிடும்போது, தோழர்களை அணுகும் முறைகளில் இவரை விடச் சிறந்தவர் மட்டும், அதாவது மற்றையவற்றில் அல்ல என்பதை தெளிவாக லெனின் குறிப்பிட்டார். ஆனால் இன்று இதை மறுத்து வர்க்க அரசியல் மார்க்கத்தில் பொதுமைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தையே உயிருடன் அவித்து தின்கின்றனர். இதைத் தான் அன்று குருசேவ் என்ற ஜனநாயகவாதியும் செய்தான். இந்த குருசேவ் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக இருந்த முதல் பெர்லின் மதிலை அமெரிக்க ஜனாதிபதிக்கும் ஜனநாயகவாதி குருசேவுக்கும் இடையில் செய்து கொண்ட ஒரு இரகசிய ஒப்பந்தத்துக்கு இணங்க, மேற்கு ஜெர்மனி கட்டிடப் பொருளை இலவசமாக வழங்க, கம்யூனிசத்தின் பெயரில் கைக்கூலி குருசேவால் கட்டப்பட்ட மதிலைக் கொண்டு கம்யூனிசத்தை இரும்புத் திரை ஜனநாயகமாக காட்டினர், காட்டுகின்றனர்.

 

லெனின் டிராட்ஸ்கி பற்றி, யாவரிலும் வல்லமை வாய்ந்தவர் என்றதுடன், நிர்வாகத் தன்மை வாய்ந்த அணுகுமுறை மற்றும் அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையை குறைகளாக லெனின் சுட்டிக் காட்டினார். டிராட்ஸ்கி பற்றிய லெனின் கருத்து நிர்வாகத் தன்மையில் கட்சியை வழி நடத்தும் போது, நிர்வாக வடிவம் அதிகார வர்க்க அணுகு முறையும், தன்னம்பிக்கை வரட்டுத்தனம் சார்ந்து காது கொடுத்து கேட்பதற்கு தயாரின்மையை சுட்டிக் காட்டுகின்றார்

 

இங்கு ஸ்டாலின் ஒரு கட்சி செயலாளராக இருக்கும் போது, மற்றைய தோழர்களுடன் அணுகிக் கொள்ளும் போக்கில் ஏற்படும் தவறுகள், கட்சியின் உயிரோட்டமுள்ள இயங்கியலை சிதைக்கும் என்பதை லெனின் தெளிவுபடுத்துகின்றார். இங்கு இந்த விமர்சனங்களை லெனின் கட்சி வரலாற்றில் இருந்தே புரிந்து கொள்கின்றாரே ஒழிய, குறிப்பான நிலைமைகள் மற்றும் சம்பவங்களில் அல்ல. குறிப்பான நிலைமை மற்றும் சம்பவத்தில் புரிந்ததாக காட்டுவது, லெனினின் மார்க்சியத்தையும், அவரின் சர்வதேசிய வீச்சையும் சிறுமைப்படுத்தி தமக்கு சாதகமாக்க கொச்சைப்படுத்துவதாகும். இது போலி இடதுசாரி வேசத்தின் பின் வர்க்க போராட்டத்தின் உயிராற்றலை கொன்றுவிடுவதாகும். சர்வதேசியம் மற்றும் சோவியத் புரட்சிக்கான தத்துவார்த்த தலைமையை தொடர்ச்சியாக லெனின் வழங்கி வந்தார். கட்சியின் மற்றைய தோழர்கள் இதில் அதிகம் தேர்ச்சி பெற்ற முன்னணி தலைவர்களாக வளர்ச்சி பெறவில்லை. லெனின் கட்சிக்குள்ளான முரண்பாடுகள் மேல், வெற்றிகரமாக பாட்டாளி வர்க்க தலைமையை கோட்பாடு சார்ந்து நிறுவியதுடன், மார்க்சியத்தை வளர்த்து விரிவாக்கினர். தனது மரணத்தின் பின்பு என்ன வகையில் இவை கையாளப்படும் என்பதே அவரின் அச்சம். ஸ்டாலின் நடைமுறை சார்ந்து (இங்கு கோட்பாட்டு பங்களிப்பை மார்க்சியத்துக்கு தொடர்சியாக செய்துள்ளர்) அதிகமாக கட்சி வரலாற்றை கொண்டிருந்தமை காண்கின்றார். டிராட்ஸ்கி போல்சிவிக் புரட்சிக்கு முன் பின் என்ற இரு காலத்திலும், இடை நடுப் பாதை, எதிர்நிலை, சதி போன்றவற்றை தனது முரண்பாட்டின் மீது அடிப்படையாக கொண்டே தனது அரசியலை நடத்தியதையம், பாட்டாளி வர்க்க கோட்பாடு அடிப்படை சாராது இதைக் கையாண்டமை இனம் காண்கின்றார். இதனால் கட்சியின் முரண்பாட்டையும், எதிர்நோக்கும் அபாயத்தை புரிந்து கொண்டார். நடைமுறையில் எதிரியை உடனடியாக அடையாளம் காண்பதும், இடைநிலை போக்கு சார்ந்து நழுவலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியை வெறுப்பது, நடைமுறை சார்ந்து போராடுபவர்கள் உடனடிக் குணாம்சமாக இருக்கின்றது. இதில் தனிப்பட்ட நபர்களின் குணம்சம் கூட இதை மேலும் உக்கிரமாக்கும் என்பதை காண்கின்றார். லெனின் மரணத்தின் பின்பு ஸ்டாலின் சோசலிசத்தை கட்ட முடியுமா?, இல்லையா? என்ற அடிப்படையான விவாதம் மீது (இது டிராட்ஸ்கி தனது தலைமையை நிறுவ உருவாக்கிய பிரதான முரண்பாடும், கோட்பாடும் ஆகும்), லெனின் தத்துவார்த்த பங்களிப்பை போன்று ஸ்டாலின் தனது பங்களிப்பை சோசலிசத்தை கட்ட முடியும் என்று தத்துவார்த்தத் துறை சார்ந்து அதை நிறுவினார். சோசலிசத்தை கட்ட முடியாது என்ற டிராட்ஸ்கியும், கட்ட முடியும் ஆனால் வர்க்கப் போராட்டமின்றி என்ற புக்காரினது நிலையாக இருந்தது. இந்த விவாதத் தளத்தில் தத்துவார்த்த துறை சார்ந்து நிறுவ முடியாது இவர்கள் சிறுபான்மையான போது, அவர்கள் கோட்பாட்டு விவாதமல்லாத வழிமுறைகளை கையாளத் தொடங்கினர்.

 

ஸ்டாலின் பற்றிய லெனினின் கருத்தை எடுத்துக் கொண்ட கட்சி, ஸ்டாலினை தொடர்ந்து கட்சிச் செயலாளராக தேர்ந்து எடுக்கின்றது. ஸ்டாலின் இல்லாத புதிய தலைவரை கட்சி கண்டறியவில்லை. கட்சி தனது போல்ஸ்விக் வரலாற்று போராட்டத்தினூடாக, தனது சொந்த தலைவரை தெரிந்து எடுப்பதில் உறுதியாகவே இருந்தது.

 

ஸ்டாலின் லெனினுக்கு பின்பாக பாட்டாளி வர்க்க தலைமையை முன்னெடுத்த போது, அவர் அதை பாதுகாப்பதில் என்றும் பின்வாங்கியதில்லை. பாட்டாளி வர்க்க வர்க்கப் போராட்டத்தை நடத்துவதில் அவரின் மரணம் வரை, அனைத்து சர்வதேச உறவுகளில் இருந்து உள்நாட்டு உறவுகள் ஈறாக உறுதியாக விட்டுக் கொடுக்காத பாட்டாளி வர்க்க தலைவராக இருந்தார். கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்தில் மார்க்ஸ் கூறியது போல் இங்கு நாம் கையாள வேண்டியது அதன் சொந்த அடித்தளத்தின் மீது வளர்ச்சியுற்ற என்கிற முறையிலான கம்யூனிச சமுதாயத்தைப் பற்றி அல்ல, மாறாக, முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்பொழுது தான் உதிக்கும்  சமுதாயத்தைப்பற்றி, அது பொருளாதார ரீதியில், அறிவுத்துறை ரீதியில் இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இன்னமும் அது உதிக்கும் கருப்பையான பழைய சமுதாயத்தின் பிறப்புச் சின்னங்களால் முத்திரைக் குத்தப்பட்டிருக்கிறது” என்று மார்க்ஸ் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதற்காக, ஏன் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று வரையறுத்தாரோ, அதை கையாள்வதில், விளக்குவதில், முன்னெடுப்பதில் உறுதியான வர்க்க நிலையை ஸ்டாலின் கையாண்டார். இதை டிராட்ஸ்கி, புக்காரின் போன்றவர்கள் எதிர்த்தனர். ஏன் இன்று ஸ்டாலினை தூற்றும் அனைவரும் இதை தான் எதிர்க்கின்றனர்.

 

1.12.1934ம் ஆண்டு ஸ்டாலின் எதிர்ப்பு முன்னணி தலைவர்களின் இரகசிய சதி மூலம், ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரும், முன்னணித் தலைவருமான கிரோவ் படுகொலை செய்யப்ட்டதைத் தொடர்ந்து, ஸ்டாலின் சதி மற்றும் நாச வேலையை கட்டுப்படுத்தி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. இந்தப் படுகொலைக்கு முன்பாக நடந்த 17 வது கங்கிரசில் புகாரின், ரைகோவ், டோம்ஸ்கி போன்றோர் சுயவிமர்சனம் செய்தனர். டிராட்ஸ்கிய வாதிகளான ஜினோவிவ், காமனோவ் ஆகியோர் கட்சியை புகழ்ந்ததுடன், தமது தவறுகளை கடுமையாக சுயவிமர்சனம் செய்தனர். இவர்கள் இனியும் கருத்து தளத்தில் போராடி ஸ்டாலினை முறியடிக்க முடியாது என்பதால் சுயவிமர்சனத்தை செய்தபடி, இரகசியமான படுகொலைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற சதி செய்தனர். இதை டிராட்ஸ்கிய நான்காம் அகிலம் சர்வதேச ரீதியாக முன்வைக்க, அதைப் பெருமைபட ’தொழிலாளர் பாதை’ தமது வீரதீரச் சதிச் செயலை முன்வைக்கின்றது. டிராட்ஸ்கி தனது சுய வரலாற்றில், தனது மகன் 1923 இல் இருந்தே சட்ட விரோதமாக, லெனின் உயிருடன் இருந்த போதே கட்சிக்கு எதிராக இயங்கியதாக பெருமையுடன் குறிப்பிடுகின்றார். இந்த சதிகளில் பங்குபற்றி இன்று உயிருடன் தப்பி வாழும் நபர்கள், இந்த சதியை பெருமைபட முன்வைக்கின்றனர். இந்த படுகொலை இரகசியக் குழுக்களில் இயங்கியோர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர்.

 

இச் சதிகளில் ஈடுபட்ட முன்னணி தலைவர்கள் ஜனநாயக மத்தியத்துவத்தை கட்சியில் கடைப்பிடித்தார்களா? 1925 இல் 14வது காங்கிரஸ்சில் டிராட்ஸ்கி ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும், புகாரின் அமைதியான முதலாளித்துவ வளர்ச்சியூடாக சோசலிசத்தை அடையாளம் என்றும், காமனோவ், ஜினோவிவ் பொருளாதாரத்தில் சோவியத் பிற்போக்காக இருப்தால் சோசலிசத்தை கட்ட முடியாது என்றும் முன்வைத்தனர். டிராட்ஸ்கி சோசலிசம் கட்ட முடியாது என்று கூறி அப்படி கட்டப்படின் “தோல்வியடையும் – அது வளராமல் தேங்கி நிற்கும் அல்லது நெப்போலியன் சர்வாதிகாரமாக முடியும்” என்ற கூறி எதிர்த்து நின்றார். ஆனால் ஸ்டாலின், லெனின் தொடரக் கோரிய வர்க்கப் போராட்ட அரசியலை முன்வைத்தார். அரசும் புரட்சியும் என்ற நூலில் லெனின் முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுதலடைவது நிச்சயம் ஒரு பிரம்மாண்டமான மிதமிஞ்சிய மற்றும் பல்வேறு வகையான அரசியல் வடிவங்களை பெற்றுத் தராமலிருக்க முடியாது. ஆனால் சாராம்சத்தில் தவிர்க்க முடியாமல் ஒன்றாகவே இருக்கும், பாட்டாளி வர்க்கச்  சர்வாதிகாரம்” என்றார். இந்த மாற்றம் தொடர்பாக லெனின் ’மீண்டும் தொழிற் சங்கங்கங்கள் மீது, தற்போதைய நிலைமையும் டிராட்ஸ்கி மற்றும் புகாரினது தவறுகளும்’ என்ற கட்டுரையில் அரசியல் என்பது பொருளாதாரத்தின் மீது அரசியல் முன்னிலை பெறாமல் இருக்க முடியாது. வேறுவிதமாக வாதிடுவதன் பொருள் மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறப்பதாகும்…..எடுத்துக் கொண்ட விசயத்திற்கு  (குடிமக்கள் மீது) ஒரு சரியான அரசியல் அணுகு முறையின்றி வர்க்க ஆட்சியை நிலைநாட்ட முடியாது, அதன் விளைவாக அதன் சொந்த உற்பத்தி பிரச்சினையே தீர்க்க முடியாது” என்று தொடர வேண்டிய சோசலிச புரட்சியின் வர்க்கக் கடமை பற்றி தெளிவுபடுத்துகின்றார். இதை புகாரின், டிராட்ஸ்கி மறுத்து தனிநாட்டில் சோசலிசம் கட்ட முடியாது அல்லது மெதுவாக மாறும் என்ற போது, இதை ஸ்டாலின் கோட்பாட்டு ரீதியில் அம்பலம் செய்து முறியடித்தார். அங்கு இவைகளை விவாதிக்கும் உரிமை ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில், கட்சியில் சுதந்திரம் தெளிவாக இருந்தது. கட்சியில் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான கருத்துச் சுதந்திரம் இருந்த போதும், 1926 இல் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவிவ், கட்சிக்குள் பகிரங்கமாகவே எதிர்க் குழுவைக் கட்டினர். கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்ட மார்க்சியத்தை மறுக்கும் வடிவமாக இது உருவானது. இது பொது விவாதம், பெரும்பன்மைக்கு சிறுபான்மை கட்டுப்படும் கட்சி நடைமுறை, கட்சியில் பகிரங்கமாக கருத்தை வைக்கும் சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான நேர்மை, என அனைத்தையும் மறுத்தே, எப்போதும் குழுவடிவம் தோற்றம் பெறுகின்றது. இதன் தொடர்ச்சியாக 1927 இல் கட்சியில் விவாதம் ஒன்றை உருவாக்கி, தொழில் மயமாக்கல் தீவிரமாக்கவில்லை என்றும், விவசாயிகளை தொழிலாளருடன் இனைக்கும் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விவசாயி முரண்பாடு இயல்பானது என்றும், அதை தீவிரமாக்கும் படி கோரி நடந்த கட்சி விவாதத்தில் அரசியல் ரீதியாக 1920 இல் நடந்தது போல் தோற்கடிக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக தமது சிறுபான்மை கருத்தை வைத்து கட்சிக்குள் போராடுவதற்கு பதில், மாஸ்கோ மற்றும் லெனின் கிராட்டில் பகிரங்கமான அரசுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தை செய்தனர். கட்சியின் எதிரிகளை துணைக்கு அழைத்தனர். இதன் தொடர்ச்சியில் தான் டிராட்ஸ்கி மற்றும் ஜினோவியும் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இங்கு யார் கட்சி ஜனநாயகத்தை கேடாக பயன்படுத்தினர். யார் கட்சியின் உயிர்ரோட்டமான ஜனநாயகத்தை இழிவாக்கினர்? ஜனநாயக மத்தியத்துவத்தை மறுத்து, அதை அர்த்தமற்றதாக்கிய படி கட்சிக்குள் கட்சி கட்டி, கட்சிக்கு எதிராகவே போரட்டத்தை பகிரங்கமாக வெளியில் நடத்துகின்றவர்கள் பற்றி லெனின் என்ன கூறுகின்றார்.

 

’இடதுசாரி கம்யூனிசம்…’ என்ற நூலில் லெனின் ருசியாவில் நாங்கள் முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு  அல்லது கம்யூனிசத்தின் முதல் கட்டத்திற்கு மாறுவதில் முதல் படிகளின் வழியாகப் போகிறோம். (முதலாளித்துவ வர்க்கம் தூக்கியெறியப்பட்டதிலிருந்து மூன்றாவது ஆண்டில்) வர்க்கங்கள் நீடிக்கின்றன: பாட்டாளி வர்க்கத்தால் அதிகாரம் வெல்லப்பட்ட பிறகு பல ஆண்டுகளாக எங்கெங்கும் அவை நீடிக்கும். ஒரு வேளை இங்கிலாந்தில் அங்குதான் விவசாயிகள் இல்லை. (ஆனால் அங்கும் சிறு உடமையாளர்கள் இருக்கிறார்கள்)  இந்த காலகட்டம் குறுகியதாக இருக்கலாம். வர்க்கங்களை ஒழிப்பதன் பொருள் நிலப்பிரபுகள், முதலாளிகளை விரட்டியடிப்பது மட்டுமல்ல – அதை ஒப்பீட்டு வகையில் எளிதில் சாதித்து விட்டோம். அதன் பொருள் சிறு பண்ட உற்பத்தியாளர்களை ஒழித்து கட்டுவதும் கூட ஆகும். அவர்களை விரட்டியடிக்க முடியாது அல்லது நசுக்க முடியாது, அவர்களோடும் இணக்கமாக நாம் வாழவேண்டும். மிகவும் நீண்ட, நெடிய, மெதுவான, எச்சரிக்கையான ஸ்தாபன வேலையால் மட்டுமே மறுவார்ப்பும், மறுபோதனையும் செய்யமுடியும் (செய்ய வேண்டும்) அவர்கள் குட்டி முதலாளித்துவ தன்னியல்போடு ஒவ்வொரு பக்கமும் முற்றுகையிடுகிறார்கள், அதனால் பட்டாளி வர்க்கத்தக்குள் ஊடுருவி மாசுபடுத்துகிறார்கள். அவர்களின் குட்டி முதலாளித்துவ முதுகெலும்பற்ற நிலை, ஒற்றுமையின்மை, தனிமனிதப் போக்கு, எக்களிப்பு அல்லது சோர்வு என்ற மாறும் மனோநிலை ஆகியவற்றுக்கு பாட்டாளி வர்க்கத்தின் மத்தியில் பின்னிழுத்துத்தள்ள இடையராது காரணமாக இருக்கின்றார்கள். இதற்கு எதிர்விணையாற்றும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் ஸ்தாபனப்படுத்தும் பாத்திரத்தை  (மேலும் அது பிரதான பாத்திரம்) சரியாகவும், வெற்றிகரமாகவும், வெல்லத்தக்கவாறும் செலுத்தும் பொருட்டும், பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சிக்குள் கறாரான மையப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு  தேவையாயிருக்கிறது. பழைய சமுதாயத்தின் சக்திகள் மற்றும் மரபுகளுக்கெதிரான இரத்தம் சிந்தியும், இரத்தம் சிந்தாமலும், வன்முறையாகவும் அமைதியாகவும், இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், கல்வி துறையிலும், நிர்வாகத் துறையிலும் ஒரு இடையராத போராட்டமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம். பத்து லட்சம் பல பத்து லட்சங்களின் பழக்க வழக்கங்களின் சக்தி ஒரு மிகப்பெரும் பயங்கரமான சக்தி. போராட்டத்தில்  எஃகுறுதியாக்கப்பட்ட கட்சியின்றி, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தில் நேர்மையான அனைத்திடமும் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்ற ஒரு கட்சியின்றி, பரந்துபட்ட மக்களின் மனோநிலையை கூர்ந்து நோக்கி செல்வாக்கு செலுத்தும் வல்லமையுடைய ஒரு கட்சியின்றி, இம்மாதிரியான ஒரு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது சாத்தியமில்லை. லட்சோப இலட்சம் சிறு உற்பத்தியாளர்களை வெல்வதை விட மத்தியத்துவப்படுத்தப்பட்ட பெரு முதலாளிகளை வென்றடக்குவது ஓராயிரம் மடங்கு எளிதானது. இருப்பினும் அவர்கள் தங்களது சாதாரமான, தினசரி புலனறிவுக்கு உட்படாத, நழுவக்கூடிய மனோதைரியத்தை இழக்கச் செய்யும் நடவடிக்கையின் மூலம் முதலாளிகளுக்குத் தேவையான முதலாளித்துவ வர்க்கத்தை திரும்ப நிலை நாட்டுவதற்கு விழையும் அதே விளைவைச் சாதிக்கிறார்கள். பாட்டாளி வர்க்கக் கட்சியின் எஃகுறுதி வாய்ந்த கட்டுப்பாட்டை எவரொருவர் சிறுமைப்படுத்துகிறாரோ (குறிப்பாக அதன் சர்வாதிகார காலங்களின் போது) அவர் உண்மையில் பாட்டாளி வர்க்கத்திற்கெதிராக முதலாளித்துவ வர்க்கத்திற்கு உதவுகின்றார்” என்று மார்க்சியத்தை தெளிவுபடவே வரையறுக்கின்றார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஆணையில் வைத்து, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சிக்கு, எதிராக ஜனநாயக மத்தியத்துவத்துக்கு புறம்பாக நடத்தப்படும் எல்லாவிதமான செயற்படும், முதலாளித்துவ மீட்சிக்கான முயற்சியேயாகும். ஒருநாட்டில் சோசலிசத்தை கட்டமுடியுமா என்ற அடிப்படையான விடையம் தொடர்பாகவும், மாற்றுக் கருத்துக்கு 1920, 1930 களில் கருத்துச் சுதந்திரத்தை கட்சி வழங்கிவிடவில்லை என்று யாரும் கூறிவிடமுடியாது. அத்துடன் அங்கு ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் பிரதான ஜனநாயக வடிவமாகவும் இருந்தது. இதை யாரும் மறுக்க முடியாது. டிராட்ஸ்கி முதல் பலரும் தமது கருத்தை கட்சியில் வைத்து விவாதிக்கவில்லையா? அங்கு தோற்கடிக்கப்பட வில்லையா?

 

1927 இல் கட்சிக்கு எதிராக டிராட்ஸ்கி, ஜினோவிய தலைமையில் லெனின்கிராட், மாஸ்கோவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எதிரிகள் உஷார் அடைந்தனர். குலாக்குகள் அரசுக்கு தானியத்தை விற்க மறுத்தனர். அதே நேரம் புகாரின் – ரைகோவ் குலாக்குகள் மீது கடுமையான தாக்குதல் அவசியமில்லை என்றனர். புகாரின் விவசாயிகளைப் பார்த்து ”நீங்கள் (விவசாயிகள்) உங்களை வளப்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார். மேலும் அவர் சோசலிசத்தை கட்டுவதைப் பற்றி “நாங்கள் மெல்லமெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறுவோம். பெருந்தொகையான குடியான்கள் என்ற வண்டியை நாம் எம்மோடு இழுத்துச் செல்ல வேண்டும்” என்றார். கைத்தொழில் மயமாக்கல் மக்களுக்கு பெரும் சுமை என்ற கூறி, அதை கைவிடக் கோரினர். ஆனால் ஸ்டாலின் இதை மறுத்து வர்க்கப் போராட்டத்தை தொடுக்க கட்சிக்கு வழிகாட்டினார். மற்றவர்கள் தமக்கிடையில் உள்ள முரண்பாட்டை விட, ஸ்டாலினை எதிர்ப்பது முக்கியமானது என்ற முடிவுக்கு வந்தனர். வர்க்கங்களை சமரசம் செய்து கொண்டு செல்ல தெரியாத சதிகாரனாகவும், அதில் கொள்கையற்றவனாகவும் ஸ்டாலினை வருணித்து, இரகசியமாக சதி செய்யவும் தயங்கவில்லை. “அவன் கொள்கைகள் அற்ற சதிகாரன்: பழிவாங்கவும் முதுகில் குத்தவும் மட்டுமே அவனுக்குத் தெரியும்” என்றான் புகாரின். கூட்டுப் பண்ணையாக்கலில் சலுகை வழங்கிய போராட்டத்தை கோரிய போது (அதாவது “நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக் கொண்டு சிறுசிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம்” என்று புகாரின் கட்சியிடம் சலுகையாக கேரிய போது), இங்கு வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி போராடிய போது, சலுகையின் அடிப்படையில் கொடுத்த வலது இடது ஆதரவை, அடுத்தகட்ட வர்க்க ஒழிப்பில் கட்சி மறுத்த போதே, இப்படி புகாரின் வருணித்தார். வலதுக்கும் இடதுக்கும் இடையில் கட்சி தனது வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்த போது, இடதை எதிர்க்கும் போது வலதும், வலதை எதிர்க்கும் போது இடதும் பெற்ற சலுகைகளை எதிர் கொண்டே, ஸ்டாலினின் வலதுக்கும் இடதுக்கும் எதிரான இரண்டு பக்க போராட்டத்தையே கொள்கையற்றதாக வருணித்து, சதியாக வருணிக்க முடிகின்றது. இங்கு இடது வலது அல்ல பிரச்சனை, இதை அடிப்படையாக கொண்ட வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதா? இல்லையா? என்பதே பிரச்சனை. இதற்கு எதிரான போக்கே சதியாகும். வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் போக்குக்கு எதிரான போராட்டத்தையே, சதியாக வருணிப்பது ஸ்டாலின் எதிர்ப்பின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கமாகும். புகாரின் இதற்காக இரகசிய சதிகளில் ஈடுபட்டதை தொடர்ந்தே, புகாரினை கட்சியின் மத்திய குழுவில் இருந்தும், கட்சியில் இருந்தும் வெளியேற்றியது.

 

கட்சியின் உயிரோட்டமான கருத்துச் சுதந்திரத்தை, சதிப்பாணியிலான வடிவத்துக்கு நகர்த்திச் சென்றதில், ஸ்டாலின் எதிர்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. உள்ளடக்கத்தில் சதிகளின் மூலம் கட்சியின் பெருபான்மையை எதிர்க்க கிளம்பிய போது, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை முறைகேடாக கையாண்டனர். ஸ்டாலினை ஏன் எதிர்த்தார்கள். அதாவது ஸ்டாலினிசம் என்று எதை இன்றும், அன்றும் அடையளப்படுத்துகின்றனர். ’ஒரு நாட்டில்’ சோசலிசத்தை கட்ட (வர்க்கப் போராட்டத்தை தொடர) முடியுமா? இல்லையா? என்ற அடிப்டையான கேள்வி மீதே, இது மையப்படுகின்றது. ஸ்டாலினிசமாக இருப்பது ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்ற தொடரும் வர்க்கப் போராட்டப் பாதையே. இதை எதிர்ப்போர் கட்டமுடியாது என்பதன் மூலம், வர்க்க சராணாகதியை கோரினர். ஒரு நாட்டில் சோசலிசத்தை கட்டமுடியும் என்பது ஸ்டாலினிசியம் என்றால், அது லெனிசமாக இருக்கின்றது. அதைப் பார்ப்போம்…

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25

26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 26

27. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 27

28. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 28

29. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 29

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 29

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 29

ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்கவும் போராடிய ஒரு தலைவர்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரிகளையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளை அது தரைமட்டமாக்குகிறது. ஸ்டாலின், வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் பாத்திரம் என்பதன் மூலம், அவர் நேர்மையாக பாட்டாளி வர்க்கத்துக்காக போராடினார் என்பதும், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறும் அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? .. என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், அங்கு தொடரும் வர்க்கப் போராட்டத்தையும், வர்க்க சமுதாயத்தில் மறுப்பதில் இருந்து இவர்கள் அரசியல் வெளிப்படுகின்றது. இதற்கு முதலாளித்துவ ஜனநாயகம் பற்றிய பிரமைகளை விதைப்பதில் இருந்தே, இடதுசாரி முகமூடிகளின் பின்பு அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றது. இதன் பின்பான தமது வர்க்க நலனை மூடிமறைப்பதில் மிகுந்த சந்தர்ப்பவாத அக்கறை எடுத்துக் கொண்டு, மார்க்சியம் மீது பொறுக்கியெடுத்த தாக்குதலை நடத்துகின்றனர். ஒட்டுமொத்த சமுதாயத்தில் இருந்து பிரச்சனைகளை பகுத்தாய்வதற்கு பதில், குறிப்பானதை முழுமையானதாக காட்டி, தமது வர்க்க நலன்களை தக்க வைப்பதில், இவர்கள் ஏகாதிபத்தியத்தின் வளர்ப்பு நாய்களாக இருக்கின்றனர்.

இந்த சந்தர்ப்பவாத இடதுசாரிகளின் நோக்கங்கள் பற்றி லெனின் ”உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும், அப்பட்டமான சந்தர்ப்பவாதம் மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறு விளைவிக்கக் கூடியதும் அல்ல. மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் நிரூபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறது” என்றார். ஸ்டாலின் பற்றிய அவதூறுகள் பற்பல விதமானவை. எல்லாவிதமான வடிவங்கள் ஊடாகவும், ஸ்டாலினை தாக்குவதன் மூலம், மார்க்சியத்தை குழி தோண்டிப் புதைக்க கனவு காண்கின்றனர். ஸ்டாலின் புதைகுழி அரசியலைக் கொண்டு இருந்ததாக முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தி பிதற்றுகின்றனர். இப்படி வர்க்க அரசியலை முன்னெக்க முடியாது அரசியல் ரீதியாக ஆண்மை இழந்து மலடாகிப் போனவர்கள், ஸ்டாலினையும், மார்க்சியத்தையும் புதைகுழியில் புதைத்து விட தலைகீழாக சபதம் எடுத்து குதித்தெழும்புகின்றனர்.

யார் இந்த ஸ்டாலின்?

ஸ்டாலின் தனது பாடசாலை வாழ்க்கையிலேயே ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் கண்டு அதைத் துடைக்க, தனது 16 வது வயதில் அதாவது 1895 இல் கம்யூனிஸ் கட்சியுடனான உறவைத் தொடங்குகின்றார். 1890 களின் இறுதியில் பல போராட்டத்தை நடத்தியதுடன், கட்சி வாழ்வை தொடங்கிவிடுகின்றார். கட்சி வரலாற்றில் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சென்ற மென்ஸ்விக்குகள், போராட்ட நெருக்கடியில் கட்சிக் கலைப்பு வாதத்தை முன்வைத்த ஓடுகாலிகள், நடுநிலை சந்தர்ப்பவாதிகள், பலர் பலவிதத்தில் நீண்ட விடாமுயற்சியான நெருக்கடியான வர்க்க போராட்டத்தை கைவிட்டுச் சென்ற எல்லா நிலையிலும், ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை முன்நிலைப்படுத்தினார், அதற்காக போராடினார், அதைப் பாதுகாத்து நின்றார். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அவர் இரும்பு மனிதனாக இருந்ததால், அவரை லெனின் ‘இரும்பு’ என்ற பெயரால் ‘ஸ்டாலின்’ என்று அழைத்தார். பாட்டாளி வர்க்க, வர்க்கப் போராட்டத்தை உறுதியாக நடத்திய வரலாற்றில், அவர் ஆறு முறை தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து பலமுறை புரட்சியின் கடமையை முன்னெடுக்க தப்பிச் சென்றார்.

1912 ம் ஆண்டு போல்ஸ்விக் கட்சி பிராக்கில் கூடிய போது, மென்ஸ்விக்குகளை கட்சியில் இருந்து முற்றாக வெளியேற்றியதுடன், லெனின் தலைமையிலான கட்சி தனது சுயேட்சையான பாட்டாளி வர்க்க புரட்சிகரத் தன்மையை ஸ்தாபன வடிவில் பகிரங்கமாக அறிவித்தனர். இந்த காங்கிரஸ் நடந்த காலத்தில் ஸ்டாலின் சிறையில் இருந்த போதும், ஸ்டாலினை மத்திய கமிட்டிக்கு தெரிவு செய்யபட்டார். அத்துடன் லெனின் ஆலோசனைப் படி நாட்டில் நடைமுறையை வழிகாட்டும் தலைமை உறுப்பு ஒன்றை உருவாக்கியதுடன், அதன் தலைவராக அதற்கு தகுதியான ஸ்டாலினையே நியமித்தார். நாட்டின் புரட்சிகர அமைப்பாக்கல் மற்றும் அனைத்து வர்க்கப் போராட்டத்தையும், கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் 1912 இல் இருந்தே ஸ்டாலின் கட்சிக்கு நேரடியாக வழிகாட்ட தொடங்கிவிட்டார். 1917 போல்ஸ்விக் புரட்சியில் லெனின் பங்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேயளவுக்கு லெனினை முக்கியத்துவப்படுத்திய புரட்சியை நடைமுறையில் முன்னெடுத்தவர் ஸ்டாலின். இதை அவர் 1912 முதல் வழிநடத்தியவர். லெனின் கோட்பாட்டு தலைமை புரட்சியில் எவ்வளவுக்கு முக்கியமாக நடைமுறை சார்ந்து வழிகாட்டலுக்கு உள்ளாகியதோ, அதேபோல் ஸ்டாலின் நடைமுறைத் தலைமை புரட்சியை முன்னெடுத்த அமைப்பை உருவாக்குவதில் தொடங்கி கோட்பாட்டு வழிகாட்டலை ஒருங்கிணைத்தது. இந்த இரு தலைமையும் ஒரு சேர ஒருங்கினைந்த வரலாற்றில் தான், சோசலிச புரட்சி வெற்றி பெற்றது. இவ் இரண்டும் இன்றி சோவியத் புரட்சி என்பது கற்பனையானது. இரண்டு துறை சார்ந்த முன்னணி பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், தத்தம் பணியில் வெற்றிகரமாக இணைந்து வழிகாட்டிய வரலாறு தான், சோவியத் புரட்சியை நடத்தியது. இந்தளவுக்கு வேறு எந்த தலைவரும் புரட்சியை முன்னெடுக்கும் தலைமைப் பொறுப்பை, பல்வேறு நெருக்கடிகளில் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்கு வெளியில் இருந்த லெனின் வழங்கிய கோட்பாட்டு தலைமையும், நாட்டுக்குள் ஸ்டாலின் வழங்கிய நடைமுறை அமைப்பாக்கல் தலைமையும், ஒன்றிணைந்த புரட்சி தான் சோவியத் புரட்சியாகும்.

ஸ்டாலின் திடீரென அதிகாரத்தை கைப்பற்றினான் என்பது எல்லாம் இடது வேடம் போட்டவர்களின் வெற்று அவதூறுகளாகும். ஸ்டாலின் நீண்ட அனுபவம் கொண்ட, போராட்ட தலைவனாக, நெருக்கடிகளில் முன் மாதிரி போல்ஸ்விக்காக போராடிய முன்னணி தலைவராக திகழ்ந்தமையால், 1912 லேயே மத்திய குழுவுக்கு தெரிவு செய்ததுடன், நாட்டின் நடைமுறை போராட்டத்துக்கான தலைமைப் பொறுப்பை லெனினின் முன்மொழிவுடன், 1912 லேயே ஏற்றுக் கொண்டு போல்ஸ்விக் தலைவரானார். இந்த தலைமைப் பொறுப்பை சதிகள் மூலமல்ல, பாட்டாளி வர்க்க போராட்டத் தலைவனாக நடைமுறையில் இருந்தமையால், அவர் சிறையில் இருந்த போதும் கட்சி அவரிடம் தனாகவே ஒப்படைத்தது.

1917 இல் நடந்த முதல் (பிப்ரவரி) புரட்சியைத் தொடர்ந்து, ஜூன் மாதம் மென்சுவிக்குகள் ஆதிக்கம் வகித்த சோவியத்தின் முதல் காங்கிரசின் மத்திய நிர்வாக குழுவுக்கு, ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், ஒரு தலைவராகவே இருந்தார். 1917 இல் பிப்ரவரி புரட்சியை நடத்தியவர்கள் போல்ஸ்விக்குகளை கைது செய்து, லெனினை கொன்று விட அவதூறுகளை பொழிந்த போது, டிராட்ஸ்கியும், காமனேவும் சிறைப்பட்டு நியாயம் கோரி வழக்காட வேண்டும் என்றே முன்மொழிந்தனர். ஸ்டாலின் அதை நிராகரித்ததுடன், லெனினின் பாதுகாப்பை தானே பொறுப்பெடுத்தார். ஐரோப்பாவில் புரட்சி நடைபெறாமால் பாட்டாளி வர்க்க புரட்சியா? என்ற கேள்வியுடன் டிராட்ஸ்கி, ருசியாவில் சோசலிஸத்தை சாதிக்க முடியாது என்று புரட்சியை எதிர்த்த போது, ஸ்டாலின் “சோசலிஸத்துக்குப் பாதை வகுக்கும் தேசமாக ரஷ்யா இருக்கக் கூடுமென்பதை புறக்கணிக்க முடியாது…. ஐரோப்பா மட்டுமே வழிகாட்ட வேண்டுமென்ற பத்தாம் பசலிக் கருத்தைக் கைவிடவேண்டும். குருட்டுத்தனமான வறட்டு மார்க்சியமும் இருக்கின்றது. படைப்புத் தன்மை கொண்டு வளரும் மார்க்சியமும் இருக்கின்றது. இரண்டாவது வகையை ஆதரிக்கின்றேன்” என்றார்.

ஐரோப்பா புரட்சியின்றி தொடரும் வர்க்கப் போராட்டம் வெற்றி பெறாது என்று கூறி, டிராட்ஸ்கி சோசலிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை எதிர்த்து முன்வைத்த வாதம் மற்றும் நடைமுறைகள், உண்மையில் முதலாளித்துவத்தில் இருந்து கம்யூனிசத்தை ஒரே தாவில் தாண்டிவிடக் கோரும் இடது தீவிரத்தின் உள்ளடக்கமாகும். அராஜகவாதம் எதை கோட்பாட்டில் முன்வைக்கின்றதோ, அதையே இது பின் பக்கத்தால் வைக்கின்றது. சோசலிச சமூகம் என்பது கம்யூனிசத்தை நோக்கிய, அடுத்த கட்ட வர்க்கப் போராட்ட தயாரிப்பு மற்றும் முன்னெடுப்பு காலம் என்பதை மறுப்பதில் இருந்தே, ‘தனிநாட்டு சோசலிசம்’ என்ற எதிர்ப்பின் பின்னான அரசியல் உள்ளடக்கமாகும். பாட்டாளிகள் வர்க்கப் போராட்டம் மூலம் கைப்பற்றும் ஆட்சி மாற்றம், வர்க்கப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் ஒரு வடிவ மாற்றம் மட்டுமே தான். இங்கு கம்யூனிசத்தை நோக்கிய போராட்டத்தை சோசலிச சமூகத்தில் கைவிடக் கோருவது, வர்க்கப் போராட்டத்தை பின்பக்க கதவால் இழுத்து தடுப்பதாகும்.

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி லெனினின் தெளிவான நிலைப்பாட்டைப் பார்ப்போம், சுதந்திரம், சமத்துவம் என்ற முழக்கங்களால் மக்களை ஏமாற்றுவது பற்றிய உரைக்கான தனது முன்னுரையில் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வர்க்கப் போராட்டத்தின் முடிவல்ல, ஆனால் புதிய வடிவங்களில் இதன் தொடர்ச்சியாகும். தோற்கடிக்கப்பட்ட ஆனால் துடைத்தொழிக்கப்படாத ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக, மறைத்து போகாத, எதிர்ப்பைத் தருவதை நிறுத்தாத, ஆனால் எதிர்ப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிராக வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை கரங்களில் எடுத்துக் கொண்ட பாட்டாளி வர்க்கத்தால் தொடுக்கப்படும் வர்க்கப் போராட்டமே பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமாகும்” என்றார் லெனின். ஆனால் இதை எதிர்ப்பதில் தான் இன்றைய எல்லா இடது முகமூடிகளும் சரி, அன்றைய டிராட்ஸ்கி மற்றும் புக்காரின் போன்றவர்களும் தங்கள் அரசியலை கட்டமைத்தனர், கட்டமைக்கின்றனர். இவர்கள் லெனின் காலத்தில் சந்தர்ப்பவாதமாக மூடிமறைத்தபடி இதைப்பற்றி வாய்திறந்து எதிர்க்கவில்லை. ஆனால் முடிமறைத்த வகையில் தமது ஆட்சியை நிறுவுவதன் மூலம், இதை மறுக்க முனைந்தனர். இதில் தோற்ற போது இதை எதிர்ப்பது ஒரு அரசியல் கொள்கை விளக்கமாகி அதுவே சதியாகியது. ஆனால் ஸ்டாலின் இதை எதிர்த்து வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்ததில் தான், அவர் மீதான அவதூறுகள் கட்டமைக்கப்பட்டன, கட்டமைக்கப்படுகின்றன.

1917 அக்டோபர் 23ம் தேதி கட்சியின் மத்தியக் கமிட்டி கூடி எடுத்த வரலாற்று புகழ்மிக்க புரட்சியை நடத்துவது பற்றிய முடிவில், ஆயுதம் ஏந்திய எழுச்சிக்கு தலைமை தாங்க அமைக்கப்பட்ட குழுவுக்கு தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். புரட்சியை தலைமை தாங்கி நடத்தியது ஸ்டாலின் தான். வேறு யாருமல்ல. இங்கு ஸ்டாலின் சதி செய்து புரட்சிக்கு தலைமை தாங்க வந்தவர் அல்ல. கட்சி தனது தலைவரை தெரிவு செய்வது இயல்பானது. இந்த பொறுப்புமிக்க நடைமுறை ஸ்தாபனப் பணியை செய்யும் தகுதி, ஸ்டாலினைத் தவிர வேறு எந்த மத்திய குழு உறுப்பினருக்கும் அன்று இருக்கவில்லை. ஆனால் இடதுசாரி பெயரில் எழுதுபவர்கள் இதைப் பற்றி வகை வகையாக, வண்ணம் வண்ணமாக எழுதுவது மட்டுமே, அவர்களின் மலட்டுப் பிழைப்பாக உள்ளது.

ஸ்டாலின் என்ற தலைவருக்கு 1919 நவம்பர் 27ம் திகதி லெனின் முன்மொழிந்த தீர்மானத்தின் படி, ஸ்டாலினுக்கு செங்கொடி பதக்கம் வழங்கப்பட்டது. இதே விருதை டிராட்ஸ்கியும் பெற்றார். டிராட்ஸ்கி செஞ்சேனை சார்ந்து பாதுகாப்பு மந்திரியாக இருந்த போதும், சோவியத் புரட்சியை பாதுகாக்க செஞ்சேனையை தலைமை தாங்கி, எதிரிகளை ஒழித்துக் கட்டிய பங்களிப்பு சார்ந்து வழங்கிய விருது, அதே கராணத்துக்காக ஏன் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டது.

சோவியத்துக்கு ஆபத்து ஏற்பட்ட இடங்களில் எல்லாம், கட்சியின் விசேட வேண்டுகோள்களை நிறைவேற்றுவதில், ஸ்டாலின் முன்முயற்சியுடன் செஞ்சேனையை வழி நடத்திய திறமைமிக்க தளபதியாக திகழ்ந்த தனித்துவமான பணிக்காக வழங்கப்பட்டது. கட்சியின் வேண்டுகோளுக்கு ஏற்ப ஸ்டாலின் பல போர்முனைகளில் பல வெற்றிகளை சாதித்ததன் மூலம், சோவியத்தை பாதுகாத்தார். ஸ்டாலின் கிராட்டில் (ஜாரீட்ஸின்) இருந்து தேவையான உணவை பெறவும், இராணுவ ரீதியாக அதை வெற்றி பெறவும் கட்சியின் வேண்டுகோளின் படி, அதை மீட்டு எடுத்தார். இந்த யுத்த பிரதேசத்தில் டிராட்ஸ்கி செஞ்சேனைக்கு தளபதியாக நியமித்த பழைய ஜார் மன்னனின் இராணுவ தளபதிகளை நீக்கி, புரட்சிகரமான செஞ்சேனை, புரட்சிகரமான தளபதிகளின் தலைமையில் அப்பகுதியை மீட்டு எடுத்தார்.

அடுத்த மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க உக்ரேனுக்கு சென்று அப்பகுதியை மீட்டதுடன், கார்க்கோ, பேலோ ரஷ்யாவையும் மீட்டார். 1918 இல் கிழக்கு முனையில் ஏற்பட்ட ஆபத்தை எதிர்கொள்ள மத்திய கமிட்டி வேண்டுகோளுக்கு இணங்க அங்கு சென்று கிழக்கு போர்முனையை வென்றார். அங்கு இருந்து மீண்ட ஸ்டாலின் புதிய பொறுப்பாக அரசாங்கச் செயலாட்சி அமைச்சராக கட்சியால் நியமிக்கப்பட்டார். இது தொழிலாளர், விவசாயிகள் கண்காணிப்பு வாரியம், ஊழல், நாசவேலை, கையாலாகாத்தனம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவதில், ஸ்டாலினின் பங்கு கோரப்பட்டது.

1919 இல் மார்ச்சில் எதிரி பெட்ரோகிராடை கைப்பற்ற முன்னேறிய போது, ஸ்டாலினை கட்சி அங்கு அனுப்பியது. அங்கு அவர் மாபெரும் சாதனையை சாதித்து எதிரியை நொருக்கித் தள்ளினார். பின்பு எதிரி ஓரெல் நகரை பிடித்த பின்பு, மாஸ்கோவை நான்கு மணிநேரத்தில் அடையும் வகையில் எதிரி அருகில் நெருங்கி வந்த நிலையில், மாஸ்கோவில் முதலில் கால் வைப்பவனுக்கு 10 லட்சம் ரூபிள் பரிசு அளிக்கப்படும் என்ற நிலையில், லெனின் “தெனீக்கின் – எதிர்ப்புப் போரில் சகல சக்திகளும் திரளட்டும்” என்றார். 1919 இல் மத்திய கமிட்டி இந்த எதிர்ப்பு போருக்கு தலைமை தாங்க ஸ்டாலினை நியமித்தனர். ஸ்டாலின் இந்த பிரதேசத்தை பாதுகாக்க வைத்த திட்டத்தை, கட்சி அங்கிகரித்த நிலையில், இப்போரில் ஸ்டாலின் தலைமையில் வெற்றி பெற்றனர். 1920 இல் முற்றாக இப்பகுதி விடுவிக்கப்பட்டது.

போலிஸ் படை தாக்குதலை தொடுத்த போது, அங்கும் ஸ்டாலின் அனுப்பப்பட்டார். ஏகாதிபத்திய தலைமையில் விரங்கல் புதிய தாக்குதலை யூக்ரேனில் தொடங்கிய போது, மத்திய குழு பின் வரும் தீர்மானத்தை எடுத்தது. “விரங்கல் வெற்றியடைந்து வருகின்றான். கூபான் பிரதேசத்தில் கவலைக்கிடமான நிலைமை. எனவே விரங்கல் எதிர்ப்புப் போரை மிகவும் முக்கியமானதாகவும் முற்றிலும் சுயேட்சையானதாகவும் கருத வேண்டும். ஒரு புரட்சி இராணுவக் குழுவை அமைத்துக் கொண்டு, விரங்கல் முனையில் முழு முயற்சியையும் ஈடுபடுத்துமாறு மத்தியக் கமிட்டி தோழர் ஸ்டாலினுக்கு கட்டளையிடுகின்றது” இதை ஸ்டாலின் நிறைவேற்றியதன் மூலம், ஒரு இராணுவ தளபதியாக நிமிர்ந்து நின்றார்.

இந்த புரட்சிகர யுத்தத்தில் ஒரு செஞ்சேனை தளபதியாக, தலைவனாக ஸ்டாலின் தனித்துவமான பணியை, லெனினால் முன்மொழியப்பட்டு மத்திய குழு அங்கீகரித்து வழங்கிய பதக்க அறிக்கையில் “பேராபத்தான நேரத்தில் நானா பக்கங்களிலும் விரோதிகளின் வளையத்தால் சூழப்பட்டிருந்த பொழுது…. போராட்டப் பொறுப்புக்குத் தலைமைக் குழுவால் நியமிக்கப்பட்ட ஜே.வி.ஸ்டாலின், தன் சக்தியாலும் களைப்பறியாத உழைப்பாலும், தடுமாறிய செம்படைகளை திரட்டுவதில் வெற்றி கண்டார். அவரே போர் முனைக்குச் சென்று, எதிரியின் நெருப்புக்கு முன் நின்றார். தன் சொந்த உதாரணத்தால், சோசலிஸ்ட் புரட்சிக்காகப் போராடியவர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்” இந்த தீர்மானத்தையே இன்று இடது வேடதாரிகள் திரித்து மறுக்கின்றனர். ஸ்டாலின் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒரு தளபதியாக இருந்தே இருக்க முடியாது என்கின்றனர். சோவியத் புரட்சியில் ஸ்டாலின் பயந்து ஒளித்துக் கிடந்ததாகவும், வீம்புக்கும், வம்புக்கும் யுத்த முனைக்கு சென்றதாகவும், பல விதமாக அவதூறுகளை கட்டியே பிழைப்பைச் செய்கின்றனர். ஆனால் லெனின் வழங்கிய கருத்தும், பரிசும் மார்க்சிய வரலாற்று ஆவணமாக சர்வதேசிய வழியாக உள்ளது என்பதை மறந்துவிடுகின்றனர்.

1922 மார்ச், ஏப்ரலில் நடந்த பதினோராவது கட்சி காங்கிரசில், கட்சி பொதுக் காரியதரிசி பதவி ஒன்று உருவாக்கப்பட்டு, லெனின் பிரேரணைக்கு இணங்க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியை ஸ்டாலின் உருவாக்கி, அதில் அதிகாரத்தை குவித்து, கட்சி உறுப்பினர்களை தனது சார்பாக நியமித்ததாக, போலி இடதுசாரி பிழைப்புவாதிகள் பசப்புகின்றனர். போல்ஸ்விக் கட்சி வரலாற்றில் லெனினுக்கு பின்பு யாரும் ஸ்டாலினை தாண்டி கட்சித் தலைவராக உயர்ந்ததில்லை. நீண்ட கட்சி வரலாற்றில் லெனினுடன் அக்க பக்கமாக போராடியதுடன், நாட்டின் தலைமைப் பொறுப்பை ஸ்டாலினே மேற் கொண்டார். ஸ்டாலின், லெனின் மரணத்துக்கு முன்பே, அதாவது 1912 லேயே லெனின் முன்மொழிவுடன், கட்சியே ஸ்டாலினிடம் தலைமைப் பொறுப்பை கொடுத்திருந்தது. இதை எல்லாம் வரலாற்றில் புதைத்துவிட முயலும், இடதுசாரி புரட்டுத்தனம் வரலாற்றை இருட்டடிப்பு செய்கின்றது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்
1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1
2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2
3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3
4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 4
5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5
6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6
7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7
8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8
9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9
10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10
11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11
12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12
13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13
14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14
15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15
16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16
17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17
18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18
19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19
20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20
21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21
22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22
23. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23
24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24
25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25
26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 26
27. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 27

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 28

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 28

 00733518.jpg

கம்யூனிசத்தை நோக்கி வர்க்கப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பதே, ஸ்டாலின் பற்றி, மார்க்சியம் முன்னிறுத்தும் ஆய்வுரையாகும்.

 

ஸ்டாலின் காலம் பற்றிய ஆய்வை கொண்டு வரவேண்டிய அளவுக்கு, வரலாற்றுச் சூழல் கோருகின்றது. மக்களின் நலன்களை கைவிட்டு ஒட்டம் பிடிக்கும் அரசியல் போக்கில் தொற்றிக் கொள்வோர், ஸ்டாலின் மீதான தாக்குதலை குவிக்கின்றனர். மார்க்சியத்தை பாதுகாத்து, அதன் புரட்சிகரமான பாத்திரத்தை முன்னிறுத்தும் போராட்டத்தில், கோட்பாட்டு ரீதியாக முகம் கொடுக்க முடியாதவர்கள், ஸ்டாலின் ஊடாக தாக்குதலை நடத்துகின்றனர். ஸ்டாலின் 1930 களில் இழைத்த தவறுகளை, மார்க்சியவாதிகளாகிய நாங்கள் எப்போதும் விமர்சித்து வந்துள்ளோம். அதேநேரம் ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், அதில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக இருந்த வராலற்று பாத்திரத்தை எப்போதும் பாதுகாப்பதில், நாம் உறுதியானவர்கள். அன்று குருசேவ், ஸ்டாலினை கொலைகாரன், குற்றவாளி, சூதாடி, கொடுங்கோலன், சர்வாதிகாரி, மடையன், முட்டாள்.. எனப் பலவாக தூற்றி இழிவாக்கி அவதூறு செய்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை குழிதோண்டி புதைத்தான். ஆனால் லெனின் தனது தலைமையில் உருவாக்கிய ஸ்டாலின் போன்ற தலைவர்களை பற்றி வரலாற்றில் எந்த ஒரு வர்க்கமும் தனது அரசியல் தலைவர்களை – ஒரு இயக்கத்தைக் கட்டி அதற்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லக் கூடிய புகழ்பெற்றச் சிறந்த தனது பிரதிநிதிகளை- உருவாக்காமல் அரசியல் அதிகாரத்தை வென்றதில்லை” என்றார். பாட்டாளி வர்க்க தலைவரான ஸ்டாலின் மீதான அவதூறுகள் முதல் அவரின் தவறுகளை அரசியல் ரீதியாக, உள்ளடக அடிப்படைகளை புரிய வைக்க துல்லியமான ஆய்வு தேவைப்படுகிறது.

 

ஸ்டாலின் பற்றிய ஆய்வுகளில் வர்க்கப் போராட்டத்தைத் தொடர்வது தொடர்பானதாகவும். அதை மக்கள் திரள் பாதை ஊடாக சாதிப்பதும் என்ற அரசியல் எல்லையில்தான், ஸ்டாலின் சரியான பக்கங்கள் மற்றும் தவறுகள் இனம் காணப்பட்டு, அவதூறுகள் வேறுபிரித்து அம்பலம் செய்ய  வேண்டியுள்ளது. வர்க்கப் போராட்டம் பற்றி மார்க்ஸ் கூறினார் எழுச்சியும் போரும் மற்றக் கலைகளைப் போலவே ஒரு கலையாகும். அது சிற்சில செயல்முறை விதிகளுக்கு உட்பட்டதாகும். அவ்விதிகளைப் புறக்கணித்தால், அப்படிப் புறக்கணிக்கும் கட்சிக்குச் சீரழிவுதான் ஏற்படும்” என்றார். இது தீர்க்கமான அரசியல் ரீதியான ஆய்வுரையாகும். எழுச்சியும், போரும் மட்டுமல்ல அதை வென்று முன்னெடுக்கும் கட்டுமானத்தில் தொடர்வதும் கூட, இந்த நியதிக்கு பொருத்தமானது. சோசலிச சமூகத்தை கட்டுவது, அதை பாதுகாப்பது, முன்னேற்றுவது, புரட்சியை தொடர்வது என்ற இடைவிடாத புரட்சிகளை, புறக்கணிக்கும் எல்லா நிலையிலும், சீரழிவுதான் அதன் விளைவாகும். புரட்சியை இடைவிடாது தொடர்வதை நிராகரிக்கும், எல்லா நிரந்தரமான இயங்கியல் மறுப்பு வாய்வீச்சும், இறுதியில் சீரழிவில் முடியும். இடைவிடாத புரட்சிக் கலையை கற்றுக் கொள்ளாத, கற்றுக் கொடுக்காத அரசியல், இயங்கியல்; மறுப்பில் முடங்கி சீரழிவை விளைவாக்கும். லெனின் புரட்சியை பற்றி என்ன கூறுகின்றார் எனப் பார்ப்போம். “… முதல் வெற்றியை நீங்கள் போராடி அடையவேண்டும் பிறகு வெற்றியிலிருந்து வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், எதிரியின் குழப்பத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டு, எதிரியை எதிர்த்தத் தாக்குதலை என்றுமே நிறுத்திவிடக்கூடாது” என்று மார்க்ஸ்சின் அடிப்படையை, அடிப்படையாக கொண்டு விளக்கினர்.

 

லெனின் புரட்சியை நடத்தும் முன்பு கூறினார் வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்பவர்கள் மார்க்சியவாதிகள் ஆகிவிடமாட்டார்கள்… வர்க்கப் போராட்டத்தை ஏற்பதை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்பதுவரை விரித்துச் செல்பவனே மார்க்சியவாதியாவன்” என்றார். புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியை தொடர்ந்து நடத்த, யார் விரித்து சொல்லுகின்றார்களோ, அவர்கள் தான் மார்க்சியவாதிகள். இல்லாத அனைவரும் மார்க்சியத்தின் எதிரிகள் ஆவர். சோவியத் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், மார்க்சியவாதி யார் என்பதே, எல்லாவற்றையும் விட அடிப்படையான கேள்வியாகிறது. வர்க்க புரட்சியை நடத்தியவர்களும், பாட்டாளி வாக்க சர்வாதிகாரத்தை ஏற்பவர்களும் அல்ல, மாறாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், புரட்சியை தொடர்ந்து நடத்துபவனே மார்க்சியவாதியாகிறான். இதை மறுப்பவன் மார்க்சியவாதியாக இருப்பதில்லை. இது என்? என்பதை கம்யூனிஸ் கட்சி அறிகையில் இருந்து பார்ப்போம். பாட்டாளி வர்க்கத்தை ஆளும்வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவது, ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பதுதான் உழைக்கும் மக்களின் போராட்டத்தின் முதல் நடவடிக்கையாகும்” என்று தெளிவுபடவே விளக்குகிறது. சோசலிச புரட்சியின் கடமைகளை நிறைவு செய்ய, வர்க்கப் போராட்டத்தை ஏற்று பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்பதும், அதை நடைமுறை படுத்துவதும் போதுமானது. ஆனால் கம்யூனிச சமூகத்தை நோக்கி முன்னேறுவதற்கு இவை இரண்டும் போதுமானது அல்ல. மாறாக இதன் கீழ் புரட்சியை தொடர்வதை ஏற்று, அதை நடைமுறை படுத்துபவனே மார்க்சியவாதியாகின்றான். சோசாலிச சமூகத்தில் இவைதான் மார்க்சியவாதிக்கும், திரிபு வாதத்துக்கும் இடையில் உள்ள அடிப்படையான வேறுபட்ட அரசியல் உள்ளடக்கமாகும். இதற்குள் தான் முதலாளித்துவ மீட்சி தன்னை மீள் அமைக்கின்றது. லெனின் ‘ஒடுகாலி காவுஸ்கி’ என்ற தலைப்பில் எழுதும் போது எல்லா நாடுகளிலும் புரட்சியை வளர்க்கவும் ஆதரிக்கவும் எழச்செய்யவும் வேண்டி, ஒரு நாட்டில் உயர்ந்தபட்சம் இயன்றது அனைத்தையும் செய்தல் வேண்டும்” என்றார். இதைச் செய்ய மறுக்கின்ற யாரும் மார்க்சிய வாதியாக இருக்க முடியாது. ஒரு நாட்டின் புரட்சியை தொடர்வது, பாதுகாப்பது தலையாய வர்க்கக் கடமையாகும்.

 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பொதுவுடைமையாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் உடனடியான குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காகப் போராடுகிறார்கள், அவ்வப்போதைய நலன்களை நடைமுறைப்படுத்துவதற்காகப் போராடுகிறார்கள், ஆனால் நிகழ்கால இயக்கத்தில் அவர்கள் அவ்வியக்கத்தின் எதிர்காலத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அதன்மீது கவனம் செலுத்துகிறார்கள்” இதை மறுப்பது பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்வதாகும். புரட்சியை எதற்காக ஒரு கட்சி தனது வர்க்கம் சார்ந்து நடத்துகின்றதோ, அதை தொடர மறுப்பது அக் கட்சியின் அல்லது நபரின் சீரழிவை பிரகடனம் செய்வதாகும்.

 

லெனின் புரட்சி என்றால் என்ன? என்பது பற்றி உண்மையில், மார்க்சியப் பார்வை நிலையில் புரட்சி என்பது என்ன? காலாவதியாகிவிட்ட அரசியல் மேற்கட்டுமானத்தை வலிமையைக் கொண்டு இடித்துத் தள்ளுவது…” என்றார். ஒரு புரட்சியின் சரியான விளைவை, அதன் தகர்வில் தெளிவுபட லெனின் விளக்கிவிடுகின்றார். இங்கு புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியை தொடர்வதனை எப்படி நாம் புரிந்து கொள்வது. புரட்சிக்கு முந்திய சமுதாயத்தில் அடிக்கட்டுமானத்துக்கும், மேல்கட்டுமானத்துக்கும் இடையில் எற்படும் பகை முரண்பாடு, மேற்கட்டுமானத்தை செல்லரிக்க வைக்கின்றது. இங்கு மேல் கட்டுமானத்தை இடித்து தள்ளுவதன் மூலம், அடிகட்டுமானத்தில் புரட்சி நடக்கின்றது. இங்கு மேல் கட்டுமான தகர்வுக்கு பின்பே, அடிக்கட்டுமானம் தகர்கின்றது. புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் மேல், கீழ் கட்டுமானத்தில் தொடர்ச்சியான இடைவிடாத புரட்சி, இயல்பாக தொடர்ச்சியாக பழையவற்றை காலவாதியாக்கும் வகையில் காணப்படும். இதில் எதாவது ஒன்று பின்தள்ளப்படும் போது, முதலாளித்துவ மீட்சி, அதன் ஊடாக புகுந்துவிடுகின்றது.

 

லெனின் புரட்சியின் வர்க்க கடமை பற்றி ரசியப் புரட்சியின் துவக்கம் எளிதானதாகவும், தொடர்ந்து முன்னேறிச் செல்வது கடினமானதாகவும் இருந்தது என்பதை மறப்பது மிகப் பெரும் அறியாமையாகும், மிகப் பெரும் தவறாகும்” என்று மிக தெளிவபடவே பல உதாரணங்கள் மூலம் முன்வைக்கின்றார். இவற்றில் இருந்தே நாம் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு புரட்சி, புரட்சியின் நோக்கம், புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் எப்படி புரட்சியைத் தொடர்வது என்ற அரசியலில் இருந்தே, ஸ்டாலினை நாம் ஆராய வேண்டும், ஆராய முடியும். இல்லாதவரை அவை அவதூறாகி, தூற்றுவதே அரசியல் உள்ளடக்கமாகிவிடுகின்றது.

 

ஸ்டாலின் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கவும், தொடரவும் முனைந்த போக்கில், இழைத்த சில கடுமையான தவறுகள் அனைத்தும், ஒரேயோரு அரசியல் தவறால் ஏற்பட்டவை. அதாவது புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியைத் தொடரும் மக்கள்திரள் பாதையை அவர் கண்டறியத் தவறியதுதான், அவரின் அரசியல், தவறுகளின் மூலமாகவும், மையமாகவும் உள்ளது. ஸ்டாலின் கட்சியின் நீண்ட கால உறுப்பினராகவும், கட்சி தலைவராகவும் இருந்த காலத்தில், புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில் அவர் மக்கள் திரள் பாதையை நடைமுறையில் தொடர்வதில், அவரைவிட சிறந்த வேறு எவரையும் அவருக்கு நிகராக முன்னிறுத்த முடியாது. இதே ஸ்டாலின் புரட்சிக்கு பிந்திய கால கட்டத்தில் இதைத் தொடர, ஒரு மக்கள் திரள் பாதையை கண்டறியத் தவறியதன் விளைவு, 1930 களின் கடுமையான தவறுகளை இழைக்க நேர்ந்தது. அதுவும் குறிப்பாக 1935க்கு பின் முரண்பாடுகள் சதியாக கூர்மையான போது, தவறு, இயல்பில் கடுமையாக தவறு இழைக்க வைக்கின்றது. இந்த தன்மை ஸ்டாலின் தனிப்பட்ட இயல்போ, சமுதாயத்தின் நிலையோ அல்ல. மாறாக புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் புரட்சியை தொடர்வது எப்படி? என்ற மக்கள்திரள் பாதை கண்டறியப்பட்டு இருப்பின், ஸ்டாலின் மீதான தவறு என்பது விவாத்துக்குரிய விடயமாக இருந்திருக்காது. அத்துடன் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை எதிர்த்து, டிராட்ஸ்கி மற்றும் புக்காரின் போன்றோர் தொடர்சியாக எதோ ஒரு வகையில் தமது எதிர்ப்பை சதிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கா விட்டாலும், ஸ்டாலின் பற்றிய விவாதம் அவசியமற்றவைதான். ஸ்டாலின் வர்க்கப் போராட்டத்தை தொடரும் அரசியல் மார்க்கத்தை எதிர்த்து, அதை எதிர்த்தவர்கள் மௌனமாக கைகட்டி உறங்கியிருக்கவில்லை. மாறாக எல்லாவிதமான முயற்சியிலும், வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை எதிர்த்து, சகலவிதமான எதிர் புரட்சி நடவடிக்கையிலும் ஈடுபட்டார்கள். ஆனால் இன்று விமர்சனத்தை ஸ்டாலின் மீது மட்டும் குற்றம் கூறுபவர்கள், எதிர்தரப்பு பற்றி மௌனம் சாதிப்பது ஏன்? எதிர்தரப்பின் அரசியல் இதனுடாக வாங்குரோத்தாகி விடக் கூடாது என்ற, ஒரே ஒரு நம்பாசைதான் இதில் புதைந்து கிடக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் ஸ்டாலினை குற்றம் சாட்டுபவர்கள், எதிர்தரப்பையும் அதன் அரசியல் நடத்தையும் கூட குற்றம் சாட்டவேண்டும். எதிர்தரப்பின் அரசியல் நடத்தையை எதிர்கொண்டே ஸ்டாலின் செயல்பட்டார். வெறும் வெற்றிடத்தில் அல்ல, அல்லவா!

 

ஸ்டாலின் காலத்தில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பதே அடிப்படையான கேள்வியாகவும், முதலாளித்துவ மீட்சிகான மையப்புள்ளியாகவும் இருந்தது. இங்குதான் திரிபு வாதமும், சந்தர்ப்பவாதமும் புரையோடிக்கிடந்தது. பாட்டாளி வர்க்கப் புரட்சியை தொடர்வதை, எதோ ஒரு காரணத்தைக் கூறி மறுத்தவர்கள் அனைவரையும் முன்நிறுத்தியே, ஸ்டாலினை பாதுகாக்க வேண்டிய வரலாற்று கட்டத்தில் நாம் உள்ளளோம்;. இக்காலத்திலும் சரி அதற்கு பின்னாலென்றாலும் சரி, யாரும் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தை தொடர்வதற்கான, மக்கள் திரள் பாதையை முன்வைத்ததில்லை. ஸ்டாலின் வழிமுறை எற்படுத்தும் தவறை இனம் கண்ட மாவோ, இதற்கு மாறாக முதன் முதலாக மக்கள் திரள்வழிமுறையை  முன்வைக்கின்றார்.

 

ஸ்டாலின் பற்றிய விமர்சனத்தையும், சோசலிச சமூகம் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தவர்கள் அனைவரும், புரட்சிக்கு பின்பு வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை மறுத்தே, கருத்தை முன்வைத்தனர். இவர்கள் யாரும் மார்க்சியவாதியாக இருப்பதில்லை. மார்க்சியத்தை குறுக்கி அதை முடக்கும் வகையில் தம்மை வெளிப்படுத்தினர். கம்யூனிசத்தை நோக்கி முன்னேறுவதா அல்லது சோசலிசத்துடன் முடங்கி முதலாளித்துவ மீட்பை கொண்டு வருவதா, என்ற அடிப்படையான கேள்வியில், வர்க்கப் போராட்டத்தை தொடர்வதை மறுப்பதன் ஊடாக, புரட்சியின் கடமையை மறுப்பதில் இவ் விமர்சனங்கள் அமைந்திருந்தன. இதனால் இந்த மார்க்சிய எதிர்ப்பு சார்ந்த, கம்யூனிசத்தை நோக்கி முன்னேறும் வர்க்கப் போராட்டம் தொடர மறுப்பதை அரசியலாக கொண்ட, அனைவரையும் ஈவிரக்கமற்ற வகையில், எதிர்த்து போராடும் வகையில், ஸ்டாலின் பற்றிய அனைத்து பக்கத்தையும் சுருக்கமாக இங்கு ஆய்வு செய்கின்றது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25

26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 26

27. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 27

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 27

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 27

 

ஸ்டாலினை நிராகரிக்கும் கோட்பாடு, மார்க்சிய உள்ளடக்கம் எதுவுமற்ற வெற்றுப் பிதற்றலே.

  

ஸ்டாலினையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்த்து பல வண்ணக் கோட்பாடுகளை இடதுசாரி பெயரில், மார்க்சியம் என்ற பெயரில், மார்க்ஸ்சுக்கு விளக்கம் கொடுத்து வந்த பலவற்றையும், கோட்பாட்டு ரீதியாகவும், நாம் கேள்விகளை உள்ளடக்கி விடுவதன் மூலம் இது சுயமான தேடுதலை இதன் மேல் ஏற்படுத்தும். இதை அடிப்படையாக கொண்டு அனைவரின் சிந்தனைக்கும் உள்ளாக வேண்டிய, யாரும் கருத்தின்றி தப்பிச் செல்ல முடியாத சில முக்கியமான பிரச்சனைகளை எழுப்புவது அவசியமாகின்றது.

 

அனைத்து ஸ்டாலின் எதிர்ப்பாளர்களையும் மார்க்சியத்தை அடிப்படையாக கொண்டு கீழ் உள்ளவைகளை ஆராயுமாறு சவால் விடுகின்றோம். மார்க்சியத்துடன் சம்பந்தமில்லாத ஸ்டாலின் எதிர்ப்புக்குள் காலத்தை ஓட்டுவதை விடுத்து, நேர்மையாக விவாதிக்கக் கோருகின்றோம். முத்திரை குத்தும் பாணியில் அரசியல், சம்பவங்கள், நிகழ்ச்சிகளை கொண்டு மட்டும் அரசியலை விளக்குவது, குருட்டு வெளவால்த்தனமாகும். முத்திரை குத்தி தூற்றும் வழியில் ஸ்டாலினை மறுக்கும் அதேநேரம் மார்க்சியத்தையே, திரித்து திருத்துவது நிகழ்கின்றது. ஆனால் சரியான மார்க்சிய கோட்பாடுகள் மீது, மாற்றுக் கோட்பாட்டை முன் வைத்து தனியாக விவாதிக்க இவர்களால் முடிவவதில்லை. ஸ்டாலினை சேறடித்து முத்திரை குத்துவதே “மார்க்சியம்” என்றளவுக்கு மார்க்சியத்தை எளிமைப்படுத்தி, சம்பவங்களின் பின் காது மூக்கு வைத்து முத்திரை குத்தி, உயிர்வாழ நினைக்கும் அரசியல், இழிவான நயவஞ்சகத் தன்மை கொண்டவை. அரசியல் ரீதியாக பிரச்சனையை ஆராய்வது அடிப்படையானது. பிரச்சனையை கைவிட்டு விவாதிக்காது ஒடுவது பற்றி லெனின் மென்ஸ்விக்குகளுக்கு எதிராக போராடிய போது கொள்கை ரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒரு வாதத்திற்கு பதில் சொல்லாமல் அவன் மீது “இரக்கம்” காட்டுவதாகச் சொல்வது, விவாதிப்பதாகப் பொருளாகாது மாறாக அவதூறு செய்ய முயல்வது ஆகும்.” என்று தெளிவுபடவே விளக்குகின்றார். அடிப்படையாக உள்ளவைகளை கொள்கை ரீதியாக விவாதிக்க, எந்த ஸ்டாலின் எதிர்பாளாரும் தயார் இல்லை என்பதே வரலாற்று உண்மையாகும். இதை யாரும் இனியும் மீறமுடியாது. மார்க்சியம் தனது ஆய்வை தெளிவுபடவே முன்வைத்துள்ளது என்பதால், இதை விவாதிப்பதை கைவிடுவதே ஸ்டாலின் எதிர்ப்பு இடதுசாரிகளின் ஒரேயொரு தற்காப்பு ஆயுதமாகும். இந்த வகையில் நாம் ஸ்டாலின் எதிர்ப்பு அரசியல் பினாமிகளிடமும், மார்க்சியத்தை திரித்து புரட்டுபவர்களிடமும், மார்க்சியத்தை எதிர்க்கும் வக்கிரம் பிடித்தவர்களிடம், சமுதாய மாற்றம் மீதான முழுமையான முரணற்ற விளக்கத்தைக் கோரி சவால் விடுகின்றோம். அந்த வகையில்

 

► மார்க்சியம் என்றால் என்ன?

 

► வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

 

► வர்க்கப் போராட்டத்தை எப்படி நடத்துவது? எந்த வர்க்க எப்படி இணைந்து யாரை எதிர்த்து இந்த வர்க்கப் போராட்டம் நடத்தப்படுகின்றது?

 

► இன்று மார்க்சியவாதி என்பவன் யார்? அவன் எதை எல்லாம் அடிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?

 

► “ஸ்டாலினியம்” என்று பல பத்துத் தரம் சொற்களில் முத்திரை குத்தும் அந்த “ஸ்டாலினிசத்தை” நீங்கள் கருதும் “மார்க்சியம்” மூலம் கோட்பாட்டு ரீதியாக மறுத்து எப்போதாவது, எங்காவது எதையாவது வைக்க முடிந்ததா? முடியுமா?

 

► ஸ்டாலினை எதிர்ப்பது மட்டுமா மார்க்சியம்?

 

► ஸ்டாலினை விவசாய சமூகத்தின் மூர்க்கத்தனத்தின் விளைவாக வகைப்படுத்தும் உங்கள் அரசியலுக்கு, அரசியல் தத்துவார்த்த கோட்பாட்டு விளக்கம் என்ன?

 

► அப்படியாயின் விவசாய சமூகங்களைக் கொண்ட நாடுகளில் நீங்கள் கருதும் “மார்க்சியம்” புரட்சிக்கு வரமுடியாதல்லவா? வந்தால் ஸ்டாலின் மார்க்சியம் தான் நிலவும் அப்படித் தானே? அப்படித் தானே உங்கள் கோட்பாட்டு முடிவு? இல்லை என்கிறீர்களா?

 

► உங்கள் “மார்க்சியம்” வரமுடியும் எனின், ஸ்டாலினில் இருந்து எப்படி வேறுபட்ட வகையில் கட்சி, அரசு, வர்க்கங்கள் இருக்கும்? அவைக்கு இடையிலான உறவு என்ன? உங்கள் “மார்க்சியம்” எப்படி அதை நடைமுறையில் கொண்டு வரும்?

 

► முதலாளித்துவ சமூகம் தனது சொந்த வர்க்கப் புரட்சியை வன்முறையூடாக நடத்துமா? அல்லது இல்லையா? நடத்தும் எனின் எப்படி? இல்லை எனின் ஏன்?

 

► இதில் இருந்து விவசாய சமூகங்கள் உள்ள முதலாளித்துவ புரட்சி நடைபெறாத நாடுகளில், புரட்சி எந்த வகையில் வேறுபடுகின்றது? வேறுபாடு இல்லை எனின் எப்படி? இருக்கின்றது எனின் எப்படி?

 

► விவசாய சமூகத்துக்கும், முதலாளித்துவ சமூகத்துக்கும் இடையில் புரட்சியை நடத்துவதில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையா? ஏன்? எப்படி? இதை உங்கள் மார்க்சியம் எப்படி விளக்குகின்றது?

 

► பாட்டாளி வர்க்கம் என்பதன் விளக்கம் என்ன? அதன் வர்க்கத் தலைமை எப்படி கட்டமைக்கப்படும்?

 

► தொழிலாளர்களை நேரடியாக கட்சியில் சேர்க்க முடியுமா? முடியாதா? ஏன்?

 

► தொழிலாளருக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையில் வேறுபாடு உண்டா? இல்லையா?

 

► புரட்சியில் விவசாயிகளின் நிலை என்ன? விவசாயப் புரட்சி எழுச்சி பெறின், அதை பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்? விவாசயிகள் ஆயுதம் ஏந்திய தளப் பிரதேசத்தை நிறுவின், பாட்டாளி வர்க்கம் என்ன செய்யவேண்டும்? விளக்குவீர்களா? இங்கு தலைமை பாட்டாளி வர்க்கம் அல்லது குட்டிபூர்சுவா வர்க்கம் கொண்டிருப்பின், இதை தனித் தனியாக எப்படிக் கையாள்வது? இந்த நிலைமைகளில் பாசிசம் அரசின் பொது வடிவமாக இருக்கும் போது, தொழிலாளர் போராட்டம் எப்படி இருக்கும்?

 

► உலகளவில் ஆயுதப் போராட்ட வடிவங்களின் அனுபவங்களை, ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லையா? கொரில்லாப் போராட்டம் முதல் அரசின் பலவீனமான பிரதேசத்தில் இருந்து பலமான பிரதேசத்தை சுற்றி வளைக்கும் வடிவங்களை, ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியில் பயன்படுத்த முடியுமா? முடியாதா? ஏன்?

 

► பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன? இது யாரை ஒடுக்கும்? எப்படி ஒடுக்கும்? இங்கு அழிக்கப்பட்ட வர்க்கம் புதிதாக உருவாகுமா?, உருவாகாதா? எப்படி? என்?

 

► புரட்சியில் ஒடுக்கப்படும் வர்க்கம் புரட்சிக்கு பின்பு என்ன செய்யும்? அவ்வர்க்கம் புரட்சி செய்த கட்சியில் ஊடுருவுமா? இல்லையா? இல்லை எனின் ஏன்? இந்த வர்க்கங்கள் தனது நலனை அடைய கட்சியை எப்படி எல்லாம், எந்த வடிவங்களை எல்லாம் கையாளும்? விளக்குவீர்களா?

 

► எப்படி, எதன் வழியில் அரசு மற்றும் வர்க்கங்கள் ஒழிக்கப்படும்? இதற்கு தலைமை தாங்குவது யார்? தலைமை பல கட்சி சார்ந்து இருக்குமா? எப்படி?, ஏன்? இதன் வர்க்கம் என்ன?

 

► புரட்சிக்கு பிந்திய கம்யூனிச சமூகம் வரையிலான சமுதாயத்தில் எதிர்புரட்சி நடக்கும் வாய்ப்பு உண்டா, இல்லையா? இல்லை எனின் ஏன்? எப்படி?

 

► எதிர்ப் புரட்சி நடக்கும் வாய்ப்பு இருப்பின் எதன் வழியில் நடக்கும்.? எப்படி? ஏன்? இதை பாட்டாளி வர்க்கம் எப்படி எதிர் கொள்ளும்?

 

► சோவியத்திலும், சீனாவிலும் முறையே 1950 மற்றும் 1970 தொடங்கிய பத்தாண்டுகனின்  இறுதியில் எதிர்ப்புரட்சி நடைபெற்றதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? இல்லையா? இல்லை எனின் எதிர்ப்புரட்சி இந்த நாடுகளில் எப்போது ஏற்பட்டது. அக்கால கட்டம் எது? அதற்கு பிந்திய அவ்வரசுகள் முதலாளித்துவமா? அல்லது எது? இதை விளக்குவீர்களா?

 

► கட்சிக்குள் எதிர்ப்புரட்சி அணிகள் இருப்பார்களா, இல்லையா? இல்லை எனின் முரண்பாடுகள் எதன் அடிப்படையிலானவை? முரண்பாடுகள் புரட்சிகரமானவை எனின் கட்சி உருவான காலம் முதல் அது ஒரு நியதியா? பகை முரண்பாடாக இவை மாறியதில்லையா? சர்வதேச திரிபுகள் கட்சிக்கு வெளியில் உருவானதா அல்லது உள்ளும் உருவாகுமா? இது புரட்சிக்குப் பின் விதிவிலக்கா?

 

► புரட்சிக்கு முந்திய பிந்திய கட்சியில் வேறுபாடு உண்டா? புரட்சிக்கு முந்தி கட்சிகளில் புரட்சிக்கு எதிரான கோட்பாடு உருவாகும் எல்லாக் கட்சியிலும், வரலாற்றிலும் காணப்படும் போது, புரட்சிக்கு பிந்திய கட்சியில் அது அதிகமாகவே இருக்குமல்லவா? இதை மறுக்கின்றீர்களா? எப்படி? ஏன்?

 

► புரட்சியில் பங்குபற்றும் ஒருவர், வாழ் நாள் முழுக்க சரியான புரட்சிக்காரனாக இருக்க முடியுமா? இருக்க முடியும் எனின் இயங்கியலா? எப்படி? புதிய சமூக முரண்பாடுகள் ஏற்படாதா?

 

► புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் பல கட்சி ஆட்சி இருக்க முடியுமா? புரட்சிக்கு வரும் போது ஏற்படும் பல கட்சிகளின் ஐக்கிய முன்னணி தொடர்ச்சியாக நீடிக்க முடியுமா? எது வரை நீடிக்க முடியும்? இந்த நீட்சி தகர்கின்ற போது முரண்பாடு வன்முறையாக வளர்ச்சி பெறுமா? பெறாதா? ஏன்? எப்படி? இதை பாட்டாளி வர்க்கம் எப்படி கையாளும்?

 

► பாட்டாளி வர்க்கம் பல கட்சியை கொண்டிருக்க முடியுமா? முடியாதா? முடியும் எனின் வர்க்கத்தின் கட்சி என்பது என்ன? வர்க்கம் வேறுபட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியுமா? கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் கட்சியாக இருக்கும் போது, வர்க்கம் பல கட்சியை பிரதிநிதித்துவம் செய்ய முடியுமா? எப்படி? ஏன்? இங்கு கட்சி வர்க்கத்தை பிரதிபலிப்பதில்லையா?

 

► புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் பல கட்சி முறை இருப்பின் தேர்தலும், அதன் ஜனநாயகமும் எப்படி இருக்கும்? அதாவது பல கட்சிகள் மக்களிடம் சென்று வாக்கு கேட்கும் முறை (முதலாளித்துவ பராளுமன்ற முறை வடிவில்) இருக்குமா? இல்லை எனின் ஜனநாயகம் எப்படி பாதுகாக்கப்படும்? அப்படியெனின் பாட்டாளி வர்க்க சாவாதிகாரம் என்றால் என்ன?

 

► பல கட்சியை யார் ஏற்றுக் கொள்வது? அதன் வரையறையை யார் தீர்மானிப்பது? இது புரட்சிகர கட்சி அல்லது பிற்போக்கு கட்சி என்பதை எது, எவை வரையறுத்து, யார் கட்டுப்படுத்துவது?

 

► பல கட்சி முறையில், பல கட்சிகள் காலத்துக்கு காலம் தமது பொருளாதார அடிப்படையை வைத்து போராடுமா? அது எப்படி என்ன பொருளாதாரமாக (வர்க்க அடிப்படையில்) பொதுவாக வகைப்படுத்துவீர்களா? இதன் அடிப்படையிலா தேர்தலில் நிற்குமா? வாக்குறுதியைக் கொடுக்குமா? விளக்குவீர்களா?

 

► ஜனநாயகம் என்றால் என்ன? சோசலிச சமூகத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கும்? யார் கட்டுப்படுத்துவார்கள்? பல கட்சியின் ஜனநாயக எல்லை என்ன? அதை யார் தீர்மானிப்பது?

 

► இலக்கியம், கலை… போன்ற துறைகள் எப்படி இருக்கும்? இங்கு பாட்டாளி வர்க்க தலையீடு இருக்குமா? இருக்காதா? அல்லது இவை வர்க்க வகைப்படுத்தலுக்கு அப்பாற்பட்டதா? விளக்குவீர்களா?

 

► கோட்பாட்டு விவாதம் என்று எதை கருதுகிறீர்கள்? சம்பவங்கள், நிகழ்ச்சிகளை தொகுப்பது கோட்பாட்டு விவாதமா? சம்பவங்களும், நிகழ்ச்சிகளும் ஒரு கோட்பாட்டு வடிவத்தில் அல்லவா இருக்கின்றது. இல்லையா? எப்படி? அதை உங்களால் விவாதிக்க முடியுமா?

 

► ஏகாதிபத்தியம் தேசங்களின் தேசியத்தை அழிக்கின்றதா? இல்லையா? இதற்கு எதிராக பாட்டாளி வர்க்கம் போராடுவது சரியானதா? இல்லையா? இல்லை எனின் எப்படி? சரியெனின் எப்படி போராடுவது?

 

► தேசிய முதலாளித்துவத்தை, ஏகாதிபத்திய தரகு முதலாளித்துவமும், தேசம் கடந்த பன்நாட்டு நிறுவனங்களும் அழிக்கின்றதா இல்லையா? அப்படியெனின் பாட்டாளி வர்க்க நிலை தேசிய முதலாளித்துவத்தின் பால் என்ன? இதை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? எதிர்ப்பது எனின் ஏன்? ஆதரிப்பது எனின் எப்படி?

 

► ஸ்டாலின் கால ஆட்சி, அதிகார வர்க்க ஆட்சி என்றால், எப்படி நீங்கள் வேறுபடுகின்றீர்கள்? அதாவது அதன் கோட்பாட்டு உள்ளடக்கம் என்ன? அரசு வடிவத்தில் எப்படி, எதனூடாக அரசை மாற்றியிருக்க வேண்டும்? நீங்கள் ஆட்சியில் இருந்தால் எப்படி எதை ஸ்டாலினில் இருந்து வேறுபட்டுச் செய்திருப்பீர்கள்? ஸ்டாலின் ஒரு போராட்டத்தை செய்திருப்பின் எப்படி இதை கையாளுவீர்கள்? அதிகாரத்தை கைப்பற்றும் வடிவமாக மாறின் என்ன செய்திருப்பீர்கள்?

 

► சோவியத்யூனியனில் 1936 களில் விசாரணைக்கு உள்ளான தலைவர்கள், எப்படியான போராட்டத்தை கட்சியில் நடத்தினர்? கட்சிக்கு வெளியில் எப்படியான போராட்டத்தை நடத்தினர்? கட்சிக்குள்ளும், வெளியிலும் நடத்திய போராட்டம் ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததா? எப்படி? அவர்கள் வன்முறை சார்ந்த வடிவங்களை கையாண்டார்களா? இல்லையா? வன்முறையை தயார் செய்ததாகவும், அதில் பங்கு பற்றியதாகவும், அதில் ஈடுபட்டதாகவும் கொடுக்கும் இன்றைய வாக்கு மூலம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? ஏன்?  அவர்கள் கட்சியில் வைத்து போராடியவை என்ன? கட்சியில் தோற்ற போது, அதை எப்படி தொடர்ந்து கையாண்டனர்?

 

► புரட்சி எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் ஏற்படுமா? எப்படி? இல்லாத பட்சத்தில் ஒரு நாட்டில் உருவாகும்

புரட்சியை முன்னெடுப்பதா இல்லையா? எப்படி? ஏன்?

 

► அடுத்து “பின்நவீனத்துவம்” மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார வடிவத்துக்கு பொருத்தமில்லை என்பது, ஒரு தத்துவ விளக்கமா? எப்படி? பின்நவீனத்துவம் ஒரு வர்க்கத்தினை பிரதிபலிக்கின்றது எனின், அதன் வர்க்க மூலம் என்ன? அதன் மீதான கோட்பாட்டு விவாதங்கள் என்ன?

 

► பின்நவீனத்துவம் ஐரோப்பாவில் “ஒரு பகுதியின் வர்க்கப் பிரிவின் “முரண்பாடுகளை” இயல்புகளை சொல்ல எழுந்த சிந்தனை.. என்று முன்வைக்கும் விளக்கம், ஒரு பகுதி மக்களின் வர்க்க முரண்பாட்டை விளக்கி விடுகின்றதா? எப்படி? ஒரு பகுதி வர்க்க முரண்பாட்டை எப்படி விளக்கியது? அது எந்த வர்க்கத்தை எப்படி பிரதிநிதித்துவம் செய்தது? அது எந்த வர்க்கத்தை எதிர்த்து எப்படி விளக்கியது? பின்நவீனத்துவம் மார்க்சியத்துக்கு எதிராக உருவானதா? இல்லையா? பின்நவீனத்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் என்ன உறவு? எப்படி? என்ன வேறுபாடு? ஒரு பகுதி வர்க்கப் பிரிவினை பின்நவீனத்துவம் விளக்கியது எனின், விளக்கிய வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் என்ன உறவு இருந்தது? இது மூன்றாம் உலக நாட்டுக்கு ஏன் பொருந்தாது? அல்லது ஏன் பொருந்தும்?

 

► பின்நவீனத்துவம் ஒரு கோட்பாடாக, கலவையாக வைக்கப்படும் போது, அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றது என்பதன் தத்துவார்த்த ஆய்வுகளை வைக்க முடியுமா?

 

► இலக்கியம் வர்க்கம் கடந்ததா? இல்லையா? ஏன்? எப்படி? வர்க்க அடிப்படை கொண்டது எனின் வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்க சர்வாதிகாரத்துக்கும் உட்ப்பட்டதல்லவா? இல்லை எனின் நாசிய, ஆணாதிக்க….. இலக்கியங்களை எப்படி, எந்த சர்வாதிகாரம் கட்டுப்படுத்தும்? இதை நீங்கள் கருதும் மார்க்சிய வழியில் முன் வைக்கவும்?

 

► மறுவாசிப்பு என்பது மார்க்சியமா? பின்நவீனத்துவமா? மார்க்சியம் முன்வைக்கும் விமர்சனம், சுயவிமர்சனத்துக்கு பதில் பின்நவீனத்துவ வாசிப்பு, மறுவாசிப்பை உங்கள் மார்க்சியம் எப்படி ஏற்றுக் கொள்கின்றது.? விமர்சனம், சுயவிமர்சனம் எப்படி உங்கள் மார்க்சியத்தில் தவறாகி மறுவாசிப்பு மார்க்சியமானது? விளக்க முடியுமா?

 

► போல்ஸ்விக்குகள், இலக்கியவாதிகள், புத்திஜீவிகளை ஸ்டாலின் கொன்றார் என்று அடித்து சத்தியம் செய்கின்றீர்கள். நல்லது. கோடிக்கணக்கில் கொன்ற தரவுக்கு உங்கள் அடி மூல ஆதாரம் என்ன? கட்சியில் நீங்கள் குறிப்பிடும் கொலை நடந்த காலத்தில், எத்தனை லட்சம் பேர் கட்சி உறுப்பினராக இருந்தனர்? எத்தனை லட்சம் புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் இருந்தனர்? தனித்தனியாக எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பதை அந்த மூல ஆய்வு கொண்டிருக்குமல்லவா? அதை அலட்டாமல் கொள்ளாமல், யார் எங்கே? எப்போது? சோவியத் ஆவணக் காப்பகத்தில் ஆய்வு செய்து, எப்போது? முன்வைத்தனர் என்பதை முன்வைக்கவும்? கடந்த கால நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆவணமாக இருப்பதால், அதை அடிப்படையாக கொண்டே நீங்கள் தரவுகளை தொகுக்கின்றீர்கள் எனின், அதை நேர்மையாக வைக்கவும்? இல்லை உத்தேசம் எனின் அது ஏகாதிபத்திய எச்சில் தெறிப்பில் இருந்து தொகுப்பது அல்லவா? கொல்லப்பட்டோர் ஆவணம் அழிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கூறுவீர்கள் எனின், அதன் ஆதாரம் என்ன?

 

► ஸ்டாலின் கால கட்டத்தை எப்படி வரையறுக்கின்றீர்கள்? அது சோசலிசம் இல்லை என்றால் அது சுரண்டல் அரசல்லவா? சுரண்டல் அல்லாத, சோசலிசமல்லாத ஒரு வர்க்க சமுதாயம் நிலவ, நீடிக்க முடியுமா?  நிலவ முடியும் எனின் அதன் வர்க்க ஆய்வு என்ன? சீனா பற்றிய நிலைப்பாடு என்ன? ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நின்றதா? இல்லையா? எப்படி? சம்பவங்கள் அல்ல இங்கு கோட்பாடுகளைக் கோருகின்றேன்? முன்வைக்க முடியுமா?

 

► ஸ்டாலின் கால கட்டத்தில் நன்மைகள் இருக்கவில்லை. இராண்டாம் உலகப் போரில் நாசிகளை தோற்கடித்த நிகழ்ச்சிகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது  சோவியத் தீமைகள் எல்லாம் ஸ்டாலின் மீதும், நன்மைகள் எல்லாம் ஸ்டாலினுக்கு தொடர்பு இல்லை என்கின்றீர்களா? இதன் தத்துவார்த்த விளக்கம் மற்றும் அடிப்படை என்ன?

 

► 1950 களின் குருசேவ்வின் திரிபு வாதம் தொடர்பாக சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையில் நடந்த கோட்பாட்டு விவாதம் மீதான, உங்கள் மார்க்சிய விவாதம் என்ன? இதன் மீதான உங்கள் கோட்பாட்டு விரிவாக்கம் என்ன?

 

► புரட்சிக்கு பின்பு புரட்சியின் வடிவம் என்ன? அது எப்படி, எதன் வழியில் நிகழும்? புரட்சிக்கு பின்பு புரட்சியை பாதுகாப்பது, புரட்சியை நடத்துவதை விட கடினமானது என்ற மார்க்சிய விதியை எப்படி? நீங்கள் விளக்குகின்றீர்கள்? இங்கு பண்பாட்டு, கலாச்சார புரட்சி அவசியமா, இல்லையா. இல்லை எனின் ஏன்? எப்படி புரட்சியை தொடர்வது?

 

► புத்தக புத்திஜீவி மார்க்சிய வாதிக்கும், நடைமுறை மார்க்சியவாதிக்கும் உள்ள வேறுபாடு என்ன? எப்படி இதை வகைப்படுத்துகின்றீர்கள்?

 

► மார்க்சியம் என்றால் என்ன? அதன் வரையறை என்ன? யார் மார்க்சியவாதி? அதன் வரையறை என்ன? ஒரு மார்க்சியவாதி எதை அடிப்படையாக ஏற்றுக் கொண்டு எதைச் செய்ய வேண்டும்?

 

► விளிம்பு மனிதன் பற்றி, கோட்பாட்டில் அல்ல, நடைமுறை விளக்கத்தில் எதிர்க்க கிளம்பி, பின்பு விளிம்புக்கு உதாரணம் கொடுக்க பின்நிற்கவில்லை. கிட்லர், ஸ்டாலின் கூட விளிம்பு மனிதர்கள் என்று சிலர் கூறத் தயங்கவில்லை? விளிம்பை புதிய மார்க்சிய அகராதியில் இணைத்த பெருமை சிலரைச் சாருக! விளிம்பு என்பது என்ன? விளிம்பு ஒரு பொருளாக சுயமாக இருக்க முடியுமா? ஒரு பொருளில் விளிம்பு இருக்க முடியுமே ஒழிய, விளிம்பு சுயமாக இருப்பதில்லை அல்லவா! நீங்கள் ஸ்டாலின் அல்லாத மார்க்சிய அகராதியில் இணைத்த விளிம்பு மனிதன், எதன் விளிம்பு மனிதன்? வர்க்கத்தின் விளிம்பு மனிதனா? இனத்தின் விளிம்பு மனிதனா? சாதியின் விளிம்பு மனிதனா? … எதன் விளிம்பு மனிதன்? எப்படி? இங்கு வர்க்க பகுப்பாய்வை பின்நவீனத்துவத்துக்கு தாரைவார்த்துக் கொடுப்பது அல்லவா மார்க்சியமாகி விடுகின்றது!

 

நீங்கள் குறிப்பிடும் படுகொலை முதல் ஏகாதிபத்தியம் சொல்லும் கம்யூனிச பத்து கோடி படுகொலை வரை “யாரும் பேசவில்லை” என்பது தவறானது. நாங்கள் அதைப் பற்றி பேசுகின்றோம். ஆனால், அதை நாங்கள் உங்கள் மார்க்சியத்தை விட்டோடும் ஓடுகாலி அரசியலில் இருந்தல்ல, நாங்கள் மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் நடைமுறைகளை ஆய்வு செய்து சுயவிமர்சனம், விமர்சனம் என்ற அடிப்படையில் எல்லாவற்றையும் ஆய்வு செய்கின்றோம். இந்த வகையில் எமது ஆய்வு சர்வதேசிய மயமானவை. இதற்கு யாரும் இது வரை கோட்பாட்டு ரீதியாக பதிலளித்ததில்லை. மாறாக அவதூறுகள் மூலம் தூற்றுவதே அதன் வக்கிரமாகவும், அதன் உள்ளடக்கமாகவும், அதன் அரசியலாகவும் வெளிப்படுகின்றது.

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25

26. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 26

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 26

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 26

 

சமூகத்தின் உரிமையை மறுத்த தனிமனித உரிமை  மீதான பாட்டாளி வாக்க சர்வாதிகாரம்

 

லெனினை தொடர்ச்சியாக எதிர்த்து வந்த டிராட்ஸ்கி, லெனினின் மரணத்தின் பின் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்ததுடன் சதியிலும் ஈடுபட்டான். லெனினியத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகவே தொடச்சியாக செயல்பட்டான். லெனின் ஒரு நாட்டில் நடக்கும் புரட்சியையும், அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்கத்தின் பணியையும் தெளிவுபடுத்தியதுடன், டிராட்ஸ்கியம் போன்ற கோட்பாடுகளை முன் கூட்டியே அம்பலப்படுத்தினார். ஒரு நாட்டில் வெற்றியடைகிற புரட்சி, மற்ற எல்லா நாடுகளிலும் புரட்சி வளரவும், ஆதரவு பெருகவும், விழிப்பு எற்படவும் முடிந்த அளவுக்கு தன் நாட்டில் அது சாத்தியமானவற்றையெல்லாம் செய்ய வேண்டும்” என்றார். புரட்சி வெற்றி பெற்ற (சொந்த) நாட்டில் புரட்சி எப்படி முன்னேறுகின்றது என்பதைப் பொறுத்தே, மற்றயை நாடுகளின் புரட்சி மேலும் ஆழமாக வளர்ச்சியுறுகின்றது. அத்துடன் தர்மீக ரீதியிலும் பலம் பெறுகின்றது. ஒருநாட்டில் நடந்த புரட்சிக்கு எதிரான ஏகாதிபத்திய சதிகளை எதிர்த்து, ஏகாதிபத்திய நாடுகளின் பாட்டாளி வர்க்கம் போராடும் அதே தளத்தில் தான், புரட்சி நடை பெற்ற நாடு அந்த பாட்டாளிக்காக குரல் கொடுக்கின்றது. இந்த மையமான விடையம் மூன்றாம் உலக நாடுகளில் கூட பொதுவான சர்வதேசிய வரையறையாக உள்ளது. சர்வதேசியம் என்பது வெற்றி பெற்ற நாட்டின் புரட்சியை மேலும் தொடர்வதும், அதற்கு ஆதாரவாக சர்வதேச பாட்டாளி வர்க்கம் போராடுவதும் அடிப்படையானது. அதே போல் வெற்றி பெற்ற நாடு உலகளாவிய சர்வதேச புரட்சி என்ற ஒரு அடிப்படையான உரிமையில் நின்று, உலக பாட்டாளி வர்க்கம் தத்தம் சொந்த நாடுகளில் புரட்சியை நடத்த தர்மிக உதவிகளை வழங்குவதே சர்வதேசியம். இதில் ஒன்றை மட்டும் செய்யக் கோருவது மார்க்சியமல்ல. சொந்த நாட்டில் புரட்சியை தொடர்வதை மறுப்பதும், மற்றயை நாட்டு பாட்டாளி வர்க்க புரட்சிக்கு உதவக் கோருவது மார்க்சியமல்ல. இது முதலாளித்துவ மீட்சியாகும்.

 

புரட்சி என்பது ஆட்சியைக் கைப்பற்றிய பாட்டாளி வர்க்கத்துக்கும், கைப்பாற்றாத பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையிலான இயங்கியல் ரீதியான பரஸ்பர விதிகளால் ஆனது. இதை டிராட்ஸ்கியம் எற்றுக் கொண்டதில்லை. ஏன் மார்க்ஸ்சின் போதனைகளை நிராகரிப்பதே டிராட்ஸ்கியமாகியது. இதற்கு மாறக ஸ்டாலின் மார்க்சிய போதனைகளை உயர்ந்த பட்சத்திற்கு வளர்த்தெடுத்தார். ஸ்டாலின் இது பற்றிய தனது சொந்த நடைமுறையில் நம் கட்சிக்கு உலகத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக நின்று போராட வேண்டிய பொறுப்பு எற்பட்டிருக்கின்றது அத்துடன் மிகவும் சிக்கலான தேசிய மற்றும் உலக நிலைமைகளின் இடையில் நம் கட்சி வேலை செய்ய வேண்டியிருக்கின்றது” என்றார்.  அத்துடன் சொந்த நாட்டில் முதலாவது, வீழ்த்தப்பட்ட சுரண்டும் வர்க்கத்தினுடைய எதிர்ப்பை நசுக்குவதற்கும் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் சாதனைகளை உறுதிப்படுத்துவதற்கும் ஆகும். இரண்டாவது, தொழிலாளி வர்க்கப் புரட்சியை பூர்த்திக் கட்டம் வரையில் கொண்டு போவதற்கும் சோசலிசத்தின் பூரண வெற்றியை சாதிக்கும் வரை புரட்சியை கொண்டு செல்வதுமாகும்” என்றார். சர்வதேசியம் என்பது பாட்டாளி வர்க்கம் எந்த நிலையில் தனித் தனியான நாட்டில் இருக்கின்றதோ, அந்த நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதை குறிக்கிறது. இதை பரஸ்பரம் ஆதரித்து முன்னேற்றுவ நடத்துவதை குறிக்கிறது.  

 

புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தை பற்றி மார்க்ஸ் உள்நாட்டு யுத்தங்களும் சர்வதேச சச்சரவுகளும் உண்டாகும். அவை பதினைந்து இருபது, ஐம்பது வருடங்கள் என்று அநேக வருடங்களுக்கு நீடிக்கும். அவற்றில் நீங்கள் ஈடுபட்டு அனுபவிக்க வேண்டியிருக்கும்,  யதார்த்த நிலைமைகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல,  உங்களையே நீங்கள் மாற்றிக் கொள்வதற்கும் கூட,  அரசியல் அதிகாரத்தை எந்தி அரசாள்வதற்கு உங்களை நீங்கள் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வதற்கும் கூட, அவ்விதம் நீங்கள் போராட வேண்டியிருக்கும்”  என்றார். மிகவும் தீர்க்க தரிசனமாகவே மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்தை எச்சரித்திருக்கிறார். உள்நாட்டில் யுத்தங்கள், சதிகள், சச்சரவுகள், முதலாளித்துவ மீட்சி நீடிக்கும் என்பதையும், அவை பல பத்து வருடங்கள் நீடிக்கும் என்பதையும் இவ்வளவு தீர்க்க தரிசனமாக மார்க்ஸ் முன் கூட்டியே எச்சரித்துவிடுகிறார். இந்த தீர்க்கதரிசனமிக்க எதார்த்த அரசியல் உள்ளடகத்தை புறந்தள்ளிய யாரும், மாhக்சியவாதியாக சொல்லிக் கொள்ளவே தகுதியற்றவர்கள்;. சச்சரவுகளையும், சதிகாரர்களையும், யுத்தங்களையும் தொடக்க முனைந்த டிராட்ஸ்கியம் பேசிய முதல் முதலாளித்துவ மீட்சியாளர்களே; மார்க்ஸ்க்கு எதிராக தங்களை மார்க்சியவாதிகளாக கூறுக் கொள்வது நிகழ்ந்தது. இவர்கள் அனைவரும் புரட்சிக்கு பிந்திய வர்க்கப் போராட்டத்தை எற்றுக் கொள்வதில்லை. முதலாளித்துவ மீட்சி என்பதையும் எற்றுக் கொள்வதில்லை.

 

டிராட்ஸ்கியம் நிரந்தரப்புரட்சி என்று கூறி வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளையே நிராகரிக்கின்றது. சமூகத்தின் எற்றத் தாழ்வான சமூக நிலையை மறுக்கின்றது. ஆட்சியை தொழிலாளி வர்க்கம் மட்டுமே கைப்பற்றும் என்று கூறி, தூய வரட்டுவாதத்தை பேசுகின்றது.  ஒரு நாட்டில் பிரதான எதிரிக்கு எதிரான தொழிலாளி வர்க்கம் அல்லாத வர்க்கப் பிரிவுகளை நிரந்தரப்புரட்சி எற்றுக் கொள்வதில்லை. குறிப்பாக விவாசய வர்க்கத்தை புரட்சியின் எதிரியாக நிரந்தரப்புரட்சியை காட்டி நிராகரிப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தை மென்ஸ்சுவிக்குகள் பாதையில் முன்தள்ளப் பயன்பட்டதே ட்ராட்ஸ்கியம். லெனினின் வர்க்கப் போராட்டத்தின் ஏற்றத் தாழ்வான இயங்கியலையும், எற்றத் தாழ்வான சமுதாய இருப்பையும் கேலி செய்த டிராட்ஸ்கி, சமுதாயத்துக்கு புறம்பாக வரட்டுத்தனமாக நிராந்தப் புரட்சி பற்றி புலம்பிய போது, லெனின் இதை “ஒரிஜினல்” என்றும் “அபூர்வமான” என்றும் கிண்டல் செய்து நிராகரித்தார். அந்தளவுக்கு ட்ராட்ஸ்கியம் வர்க்கப் போராட்டத்துக்கு எதிராக இருந்தது. போல்ஸ்விக்குகளின் சரியான மார்க்சிய நிலைக்கு எதிராக இருந்தது. மார்க்சியத்துக்கு எதிராக டிராட்ஸ்கி மார்க்ஸ்சையே திரித்து காட்டிய நிரந்தரப் புரட்சி கோட்பாடு பற்றி லெனின் கூறும் போது இந்த அபூர்வமான தத்துவம் பத்து வருடங்களில் ஒரு பலனையும் உண்டு பண்ணவில்லையே! இதற்கு காரணம் என்ன என்று அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்” என்று அன்று கூறினார். இதையே இன்றும் சிந்திக்க மறுக்கும் டிராட்ஸ்கியவாதிகள், பழைய நிரந்தரப் புரட்சி என்ற வரட்டுக் கோட்பாட்டைக் காட்டியே ஸ்டாலினுக்கு எதிராக தூற்றி முன்தள்ளுகின்றனர். 1917ம் ஆண்டு போலஷ்விக்குகளுடன் இணைந்த டிராட்ஸ்கி பழையவற்றையும், நடுநிலைவாத கதம்பங்களையும் கைவிட்டதாக பறைசாற்றி தன்னை மூடிமறைத்துக் கொண்டான். பின்னால் நிரந்தரப் புரட்சி பற்றி இன்று வரை புலம்புவது தொடருகின்றது. லெனின் நிரந்தரப்புரட்சி பற்றி மேலும் குறிப்பிடும் போது புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றும் தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தைக் கைப்பற வேண்டும் என்றும் போல்ஸ்விக்குகள் வெளியிட்ட முழகத்தை அவர்களிடமிருந்து அந்த தத்துவம் கடன் வாங்கி இருக்கிறது. மறுபக்கத்தில், விவசாயிகள், புரட்சியில் வகிக்கும் பாத்திரத்தை “நிராகரிக்கும்” மென்ஸ்விக்குகளின் கருத்தை அந்த தத்துவம் மென்ஸ்விக்களிடமிருந்து கடன் வாங்கியிருகிறது” என்றார். நிரந்தரப் புரட்சியின் அடிப்படைக் கோட்பாட்டையும், அதன் மார்க்சிய விரோத நிலையையும் அம்பலப்படுத்தினார் லெனின். ஆனால் டிராட்ஸ்கியம் தாமே லெனினியவாதிகள் என்று கூறிக் கொண்டு நிராந்தரப் புரட்சியை முன்தள்ளுகின்றனர். டிராட்ஸ்கியின் நிராந்தர புரட்சியை நிராகரித்த ஸ்டாலினை, லெனினியத்துக்கு எதிரானவராக முத்திரை குத்தி தூற்றுகின்றனர். டிராட்ஸ்கியம் போல்ஸ்விக்கும், மென்ஸ்விக்கும்  இடையில் ஒரு பாதை தேடி, மென்ஸ்சுவிக்காக புரட்சிக்கு எதிராக முன்வைத்த நிரந்தப்புரட்சித் தத்துவத்தையே இன்று வரை டிராட்ஸ்கியம் தலையில் வைத்து கொண்டாடுகின்றது. மார்க்சியத்துக்கு திருத்தத்தை வைக்கின்றது. போல்ஸ்விசத்தை கைவிடக் கோருகின்றது. அதை ஸ்டாலினிசம் என்று கூறி லெனினிச அடிப்படைகளையே கழுவேற்றுவதில் முனைப்பாக செயல்படுகின்றது. மார்க்ஸ் நிரந்தரப் புரட்சி பற்றி கூறியதை திரித்து புரட்டி முற்றாகவே எதிர்நிலையில் திரிபுவாதமாகிய நிலையில், டிராட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவம் காணப்படுகிறது.

 

1850 இல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் லீக்கில் பேசிய போது புரட்சியின் நிரந்தர தன்மை பற்றி மேலே குறிப்பிட்ட கேள்விகளில் கூடுமானவரை எல்லாவற்றையும் பெற்றவுடன் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் புரட்சியை முடித்துவிட ஜனநாயக மனப்பான்மையுள்ள மத்தியதர வர்க்கம் விரும்பும். ஆனால் நம் நலன்களும், கடமையும் அந்தப் புரட்சியை நிரந்தரமானதாக ஆக்குவதில் தான் அடங்கியுள்ளது. உடமை வர்க்கங்கள் யாவும் ஆதிக்கப்பீடத்தில் இருந்து வீழ்த்தப்படும் வரையில், தொழிலாளர் வர்க்கம் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றும் வரையில் ஒரு நாட்டுக்கு மட்டுமல்லாமல் உலகில் முக்கியமான நாடுகள் அனைத்திலும் தொழிலாளர்களுக்கிடையில் போட்டி இல்லாதவாறு செய்து, பிரதான பொருளுற்பத்தி சக்திகள் யாவும் தொழிலாளிகளின் கையில் திரண்டு சேரும் நிலை உண்டாகும் அளவுக்கு தொழிலாளர்களின் கூட்டுறவு முன்னேறும் வரையில் புரட்சி நீடித்து நடத்தப்பட வேண்டும்” என்றார் மார்க்ஸ். புரட்சிக்கு பிந்திய அமைப்பில் தொடரும் வர்க்கப் போராட்டத்தை சுட்டிக் காட்டவே, புரட்சியின் நிரந்தர தன்மை பற்றி மார்க்சிய அடிப்படையை முன்வைக்கிறார். கம்யூனிசமே அதாவது நிரந்தரமான வெற்றி வர்க்கங்கள் அற்ற சமுதாய உருவாக்கும் நீடித்த வர்க்கப் போராட்டத்தின் முடிவில் தான் அடங்கியுள்ளது என்று கூறியிருக்கிறார் மார்க்ஸ். ஆனால் டிராட்ஸ்கியம் நீடித்த வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து நிரந்தரப் புரட்சியை வரட்டுத்தனமாக திரித்து வைக்கிறது. புரட்சியின் நீடித்த வர்க்கப் போராட்டம், ஆரம்பம் முதலே சமூகத்தில் முரண்பட்ட வர்க்கங்களுடன் இனைந்துள்ள புரட்சியின் அடிப்படை நலன்களுடன் தொடர்புடையது. தொழிலாளி வர்க்கம் மட்டும் தனித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுவிடுவதில்லை. அப்படி பெற்றாலும் இடைநிலை வர்க்கங்களின் ஆதாரவுடன் தான் புரட்சி வெற்றி பெறுகின்றது. இதை கூர்மையாகவும் நுட்பமாகவும் சொன்னால் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தால் முழுமையாக ஆயுத பாணியாக்கப்பட்ட, ஒட்டு மொத்த மக்கள் சார்ந்து புரட்சி நடப்பது இல்லை. மாறாக சித்தாந்த துறையில், பொருளாதார துறையில் பாட்டாளி வர்க்கமல்லாத சிந்தாந்த ஆதிக்கம் கொண்ட சமுதாயத்தில் தான், தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை பெறுகின்றது. எனவே இது நீடித்த வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை உள்ளடக்கியதே ஒழிய, நிரந்தரமான புரட்சியை உருவாக்கிவிடுவதில்லை. நீடித்த புரட்சியை மறுத்து நிரந்தரபுரட்சி பற்றி கூறும் அந்த உள்ளடகத்தில் தான் முதலாளித்துவமீட்சி வித்திடப்படுகிறது. நிரந்தரம் என்பது நீடித்த புரட்சியின் ஒரு தொடர் விளைவாகவே இருக்கும். இல்லாத கற்பனையில் வரட்டுத்தனமான கோட்பாடுகளிலும், அராஜாகத்தின் கடை கோடியிலும் பிறந்ததே நிரந்தரப்புரட்சி பற்றிய டிராட்ஸ்கிய கோட்பாடு. இது மார்க்சின் அடிப்படையான மார்க்சிய உள்ளடங்களையும், சமுதாய மற்றத்தின் ஏற்றத் தாழ்வான அலை அலையான இயங்கியல் கூறுகளையும் கூட மறுக்கின்றது. இது பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கு, பாட்டாளி வர்க்க புரட்சிக்கு எதிரான கோட்பாடு. ஸ்டாலினுக்கு எதிராக டிராட்ஸ்கியம் முன் தள்ளுவது இதைத்தான். இதற்காகவே ஸ்டாலின் பலவிதத்தில் தூற்றுப்படுகின்றார்.

 

புரட்சியின் நிரந்தர தன்மையை பெறுவதற்கு முன் தொழிலாளர்கள், மற்றும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினை உள்ளடக்கிய தொழிலாளர் வர்க்க தலைமையில் கூட்டு அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே புரட்சியை தொடர்ந்து நடத்த முடியும். ஆட்சி அதிகாரத்தை தொழிலாளி வர்க்கம் கைப்பற்றிய பின் நீடித்த புரட்சியின் ஊடாகவே, படிப்படியாக தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை நிரந்தரமாக்க வேண்டும். இது தனித்த தொழிலாளர்கள் அல்லாத மற்றைய ஒடுக்கப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கிய ஆட்சியில் நடக்கும், உள்ளுறையான புரட்சியின் ஊடாக தொழிலாளர் வர்க்க ஆட்சியை நிறுவுவதாகும். இதனால் தான் இது கம்யூனிசம் அல்ல சோசலிச சமூகமாக இருக்கின்றது. டிராட்ஸ்கி இதைத் திரித்து தொழிலாளர் வர்க்க ஆட்சியை கைப்பற்றும் அந்தக் கணமே நிரந்தரப் புரட்சியை முன்தள்ளியதன் மூலம், புரட்சிகர கூறுகளையே சிதைத்து முதலாளித்துவ மீட்சிக்கான உள்ளடக்கத்தை முன் தள்ளகின்றார். அதாவது தொழிலாளி வர்க்கத்துடன் புரட்சியில் பங்குபற்றும் பிரிவுகளை எதிர்நிலைக்கு தள்ளி புரட்சியை பின் தள்ளுவது அல்லது புரட்சியை கைப்பற்றிய பின் நிரந்தப் புரட்சி என்பதன் மூலம் நீடித்த வர்க்கப் போராட்டத்தை மறுத்து முதலாளித்துவ மீட்சியை கோட்பாட்டு ரீதியாகவே உறுதி செய்வதே நிரந்தர புரட்சியாகும். சோவியத்தில் தொழிலாளி வாக்கத்தின் தலைமையில், தொழிலாளர் விவசாயிகளின் கூட்டான புரட்;சிகரமான பங்களிப்பை நிராகரித்து, விவசாயிகளை எதிரி வர்க்க நிலைக்கு தள்ளி முன்வைத்த கோட்பாடே நிரந்தரப் புரட்சியாகும். நிரந்தரப் புரட்சி சோசலிச கட்டமின்றி (மூன்றாம் உலக நாடுகளில் புதிய ஜனநாயக புரட்சி இன்றி) கம்யூனிச சமூகத்தை நேரடியாக அமைக்க கோரும் அராஜாகவாத கோட்பாட்டின் கடைக் கோடியில் நின்று முன்வைப்பதே. இன்றும் இதே டிராட்ஸ்கிய நான்காம் அகிலக் கும்பல் நிரந்தரப் புரட்சி என்ற மார்க்ஸின் சரியான நிலையைத் திரித்து, தொழிலாளர் வர்க்கத்துடன் கூட்டுச் சேரும் விவசாய வர்க்கத்தில் போர்குணாம்சத்துடன் கூடிய புரட்சிகரப் பாத்திரத்தை மறுதலிக்கின்றனர்.

 

டிராட்ஸ்கி திரித்துக் கூறிய நிரந்தர புரட்சியையும் இது போன்ற அனைத்தையும் நிராகரித்த லெனின் “சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர் தந்திரங்கள்” என்ற நூலில் நிகழ்ச்சிகள் எல்லாம் நாம் கூறியபடியே நிகழ்ந்திருக்கின்றன. புரட்சி நடந்தேறியிருக்கும் போக்கு நாம் பகுத்தாராய்ந்து முற்றிலும் சரி என்று ஊர்ஜிதம் செய்திருக்கின்றது. முதலாவதாக மன்னர் ஆட்சியையும், நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தையும், மத்திய கால ஆட்சி முறையையும் எதிர்ப்பதற்கு விவசாய மக்கள் “அனைவரையும்” ணைத்துக் கொண்டு புரட்சி முன்செல்லும். (அந்த அளவுக்கு, புரட்சி முதலாளியத் தன்மை வாய்ந்ததாக, முதலாளிய வர்க்க ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது) அதன் பிறகு சீமைப் பணக்கார விவசாயிகள், குலாக்குகள், லாப கொள்ளைக் காரர்கள், முதலியர்களை உள்ளிட்டு முதலாளியத்தை எதிர்ப்பதற்காக ஏழை விவசாயிகள், அரைத் தொழிலாளியாக மாறியிருக்கும் ஏழை விவசாயிகள், எல்லா சுரண்டப்பட்ட மக்கள் அனைவரையும் அனைத்துக் கொண்டு புரட்சி முன் செல்லும். இந்தளவுக்கு புரட்சியானது சோசலிசத் தன்மை வாய்ந்ததாகிறது. முந்தியதற்கும் பிந்தியதற்கும் இடையே ஒரு பெரிய மதில் சுவரை எழுப்பி பிரிக்க முயற்சிப்பது இரண்டு புரட்சிகளுக்குமிடையே ஒரு இடைக்காலம் தேவைப்படுவதும், தேவைப்படாததும் தொழிலாளர் வர்க்கம் இரண்டாவது கட்டத்துக்குப் பாய்வதற்கு எந்தளவுக்கு ஆயத்தமாகிறது என்பதையும், ஏழை விவசாயிகளுடன் எந்தளவுக்கு ஒற்றுழையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் மட்டுமே பொறுத்திருக்கும் என்பதைப் பாராமல், வேறெந்தக் காரணத்துக்காகவும் முதலாவது, இரண்டாவது கட்டங்களுக்கிடையிலே ஒரு இடைக்காலத்தைக் காண முயற்சிப்பது மார்க்ஸியத்தை கோணற்படுத்தித் திரித்துக் கூறுவதாகும், கேவலப்படுத்துவதாகும், மார்க்ஸியத்துக்குப் பதிலாக முதலாளிய மதவாதத்தை நிலைநாட்டுவதாகும்” என லெனின் நிரந்தரப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையையே அம்பலப்படுத்தினார். ஆனால் இன்று வரை டிராட்ஸ்கிய வாதிகள் ஸ்டாலினைத் தூற்றியே மார்க்சியத்துக்கு எதிராக தம்மை நிலை நாட்டுகின்றனர்.

 

தமது சொந்த கோட்பாடுகளை பின்பக்க வழியாக திணிக்க ஸ்டாலின் தூற்றப்படுவது, சோசலிச சமுதாயத்தில் நடந்த, நடத்தப்பட வேண்டிய வர்க்கப் போராட்டத்தை மறுத்தே. மார்க்ஸ்; சோசலிச சமுதாயத்தில் துன்பமான கடுமையான துயர் நிறைந்த வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் அனுபவிக்க வேண்டிவரும் என்கிறர். ஆனால் இதைத் தூற்றுவது முதலாளித்துவ அரசியலாக மாறிவிடுகின்றது. பாட்டாளி வர்க்கமும் வர்க்கப் போராட்டத்தின் உள்ளடகத்துடன் மாறிச் செல்லவும், எம்மை நாம் மாற்றிக் கொள்ளவும், எதார்த்தையும் எதார்த்த வர்க்கப் போராட்டத்தை புரிந்து கொள்வதும், பாட்டாளி வர்க்க அடிப்படையை பாதுகாத்து தொடர்ந்து வர்க்கங்களை ஒழிக்க போராடடுவதன் அவசியத்தை மார்க்சியம் எமக்கு போதிக்கின்றது. இதை மார்க்ஸ் தீர்க்க தரிசனமிக்க வகையில் கூறிச் சென்றார்.

 

புதியஜனநாயகம், சோசலிசம் என்பது கம்யூனிசம் அல்ல. கம்யூனிசத்துக்கு முந்திய சமூக கட்டமைப்புகளாகும். புதியஜனநாயகம் என்பது சோசலிச சமூக கட்டமைப்புக்கு முந்திய ஒரு சமூக கட்டமைப்பாகும்;. அதாவது ஜனநாயக புரட்சி நடை பெறாத நாடுகளின் கட்டமைப்பாகும்;. ஒரு புரட்சிகர கம்யூனிச சமூகத்தை படைக்கும் ஒரு பாய்ச்சலை, அதாவது இடைக்கட்டமின்றி அடைந்து விட முடியாது. இடைக் கட்டம் என்பது அடிப்படையில் பழைய சமூகத்தின் பல்வேறு உள்ளடக்க கூறுகளை உள்ளடக்கிய வகையில் புரட்சி மூலம் பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்துக்கு வருகின்றது. இந்த அரச அதிகாரமே பழைய முதலாளித்துவ வகைப்பட்ட வடிவில் வர்க்க ஆட்சியாகவே உள்ளது. புதிய ஜனநாயகம், சோசலிசம் என்பன உண்மையில் தொடரும் வர்க்கப் போராட்டத்தின் உள்ளடகத்தை மட்டும் குறித்து மார்க்சியம் வரையறை செய்கின்றது. இதை மறுப்பது திரிபு வாதமாகவும், முதலாளித்துவ மீட்பாகவும் உள்ளது. ஒரு புரட்சி இந்த இடைகால கட்டமின்றி கம்யூனிசம் நோக்கி செல்ல முடியம் என்ற டிராட்ஸ்கியத்தின் நிரந்த புரட்சி சரி, அனாஸ்சிட்டுகளின் அராஜாகவாதம் சரி, எதார்த்த நிலைமைக்கு புறம்பான முதலாளித்துவ மீட்சியாக உருவாகின்றது. ஒரு புரட்சியின் வெற்றி புரட்சிக்கு தயாரான மக்களின் தயார் நிலையுடன் நேரடியாக தொடர்புடையது. இந்த நிலைமை எதிரி வர்க்கத்தை தனிமைப்படுத்தி அழிக்கும் ஒரு நீடித்த இடைவிடாத புரட்சியின் முடிவில் தான் வெற்றியளிக்கின்றது. புரட்சி என்பது ஒரு தொடரான நிகழ்ச்சி நிரலைக் கொண்டது. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துக்கு வந்தவுடன் இது மடிந்துவிடுவதில்லை. மாறக கடுமையானதும் சிக்கல் வாய்ந்ததுமான ஒரு வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்கின்றது. எதிரி கட்சியின் உள் தனக்கான பிரதிநித்துவத்தை கண்டறிகின்றது. சமூக அமைப்பில் இருந்து உருவாகும் கட்சி, உயர்ந்த பட்ச வேலைத் திட்டத்தை நோக்கி நகரும் போது குறைந்த பட்ச வேலை திட்டத்துடன் நிற்பவர்களுக்கிடையில் முரண்பாடு உருவாகின்றது. இது ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் இருந்து உருவான கட்சியாக இருப்பதால், கட்சியில் முரண்பட்ட பிரிவு உருவாகின்றது. முரண்பாடு என்பது புரட்சியை மேலும் ஆழமாக்கி முன்னேறுவதா அல்லது குறைந்த பட்சத் திட்டத்துடன் நிறுத்திக் கொள்வதா என்பதே முரண்பாட்டின் அடிப்படை உள்ளடக்கமாக நீடிக்கும். இது முதலாளித்துவ மீட்சிக்கான புதிய பாதையாக உருவாகின்றது. பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகள் இந்த முரண்பாட்டில் புரட்சியை முன்னேற்றுவதற்கு எதிரான பிரிவுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றது.

 

இந்த பிணைப்பு பல்வேறு வழிகளில் கோட்பாட்டு ரீதியாக வெடிக்கின்றது. டிராட்ஸ்கி தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதே, சர்வதேச புரட்சிக்கு எதிரானது என்றான். இதை அவன் “தனிநாட்டு சோசலிசம்” என முத்திரை குத்தினான்;. தனது அதிகாரம், பலம் அனைத்தையும் கட்சியின் உள் இருந்தே பிரயோகித்தான். புரட்சியின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் சதிகளை தனது அரசியல் பாதையாக்கினான். இது சீனா, சோவியத் மற்றும் யூகோஸ்லாவியா எங்கும் இதுவே சோசாலிச அமைப்பின் அடிப்படையான முரண்பாடாக இருந்தன. புரட்சியை மேலும் தொடர்வதா அல்லது இத்துடன் நிறுத்துவதா என்பதே தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தின் திசையையும், மார்க்சியத்தின் இயங்கியலின் சரியான போக்கை முன்னெடுப்பதில் எற்பட்ட அடிப்படையான முரண்பாடாக இருந்தாது. அதாவது கம்யூனிச சமூகத்தைத் நோக்கி முன்னேற தொடர்ந்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதா அல்லது முதலாளித்துவ மீட்சியை நடத்த வர்க்கப் போராட்டத்தை நிறுத்துவதா என்பதே கடந்த காலத்தில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தூக்கி எறியப்பட்ட நாடுகள் அனைத்திலும் மையமான விடையமாகி, வர்க்கப் போராட்டம் கைவிடப்பட்டு முதலாளித்துவ மீட்சி நடத்தப்பட்டது. இதை அரசியல் ரீதியாக மிகவும் துல்லியமாக முதலாளித்துவ மீட்சிக்கான எல்லா நடத்தைகளிலும் இனம் காணமுடியும். இது போன்று பாட்டாளி வர்க்கம் தொடர்ச்சியான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த நீடித்த போது, இதற்கு எதிராக இருந்தவர்களின் அரசியலிலும் நீக்கல் இன்றி காணமுடியும்.

 

ஆனால் கம்யூனிசத்தையும், மார்க்சியத்தையும், பாட்டாளி வர்க்க தலைவர்களையும் தூற்றும் எவரும் இந்த உள்ளடகத்தினுள் விவாதிப்பதில்லை என்பதை, உழைக்கும் மக்களின் நலனுக்காக போராடும் யாரும் சரியாகவும் துல்லியமாகவும் இனம்காணமுடியும். தனிமனித உரிமையை முதன்மைப்படுத்தி சமூக உரிமையை சிறுமைப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையில் நின்று, பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக பட்டியல் இட்டு தூற்றுவது நிகழ்கின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பை உறுஞ்சும், உறுஞ்ச விரும்பும் இலக்கியம் முதல் அந்த உரிமையை ஒடுக்குவதை மனித உரிமை மீறல் என்பது முதலாளித்துவ அகாராதி. பாட்டாளி வர்க்கம் இதை அங்கீகரிப்பதில்லை. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், பாலின் பெயரால், நிறத்தின் பெயரால், சுரண்டலின் பெயரால் ஒடுக்க நினைக்கும் எந்த இலக்கியமாக இருந்தாலும், நடைமுறை செயலாக இருந்தாலும் அவைகளை பாட்டாளி வர்க்கம் ஈவிரக்கமின்றி ஒடுக்கும். இது வன்முறை ரீதியாக கையாளும் போது கடுமையான தண்டனைக்குள்ளாகும். இங்கு மனிதபிமானம், மனித உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. மூலதனத்தின் எந்த சர்வதேச நீதிமன்றமும் இதை விசாரித்தாலும், பாட்டாளி வர்க்கம் இதற்கு தலைவணங்கப் போவதுதில்லை. தனிமனித உரிமை என்பது சமூகத்தின் உரிமையை பறிக்குமாயின், அது மனித விரோதக் கிரிமினல் குற்றமாகும். இந்த மனித சமுதாயத்தில் சமூக உரிமையை மறுக்கும், இந்த சமூக விரோதிகளுக்கு இந்த சமுதாயத்தில் வாழும் உரிமை மறுக்கப்பட வேண்டும். இதை யாரும் எதிர்த்து நிற்கின்றார்கள் எனின், சமூக உரிமைகளை கொச்சைப்படுத்தி, அந்த சமூகத்தின் வாழ்வை நாசமாக்கி இரத்தை உறுஞ்சி வாழும் ஒட்டுண்ணி ரகத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் தான்.

 

மனித இனம் நாள் தோறும் பட்டடினியிலும், நோயிலும், அடிப்படை வசதி இன்றியும், இயற்கை சார்ந்த சூழலை இழந்தும், குடிக்க நல்ல நீர் இன்றியும் கொல்லப்படுகின்றனர். இப்படி வருடம் சில பத்து கோடி மக்களை வருடாவருடம் இந்த மூலதனம் ஜனநாயகத்தின் பெயரில் படுகொலை செய்கின்றது. இது இந்த அமைப்பில் அங்கிகாரிக்கப்பட்ட ஜனநாயகமாக, சட்டத்துக்கு உட்பட்ட கொலையாக தொடருகின்றது. சமுகத்துக்கு எதிரான தனிமனித ஜனநாயகம் உருவாக்கிய மூலதனத்தின் செழிப்பினால், இந்த மனித விரோத கொடூரங்கள் நடக்கின்றது. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் படுகொலை செய்யும் இன்றயை சமூக நீதி சார்ந்த ஜனநாயக போதனைகளை, நாம் ஒரு நாளும் மண்டியிட்டு தலைவணங்கப் போவதில்லை. இந்த கபடம் நிறைந்த ஒநாய்களை ஒழித்துக் கட்ட, நாம் பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தின் துணையுடன் உலகத்தையே மாற்றியமைப்போம். இங்கு ஊளையிடும் நாய்களாக வேடம் போடும் எவரையும் அனுமதிக்க போவதில்லை. சர்வதேச மூலதனமும், தனிச் சொத்துரிமையையும் நீடிக்கும் வரை, அவர்களின் தயவில் தூற்றுவது ஒரு பிழைப்புவாதத்தின் ஊற்று மூலமாக இருக்கும்;. இது சமூகத்தின் இரத்தத்தை ஊறுஞ்சும் அட்டையாக, தனிமனித உரிமையாக நீடிப்பதே இன்றைய அவதூறுகளின் மூலமாக உள்ளது. 

 

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

8. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 8

9. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 9

10. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 10

11. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 11

12. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 12

13. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 13

14. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 14

15. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 15

16. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 16

17. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 17

18. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 18

19. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 19

20. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 20

21. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 21

22. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 22

23ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 23

24. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 24

25. ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? பகுதி: 25

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: