இந்தியாவில் கம்யூனிசம் குறித்தோ, புரட்சி குறித்தோ பேச முற்பட்டால் தவிர்க்கவே முடியாமல் முன் வந்து நிற்கும் சிக்கல் தேசிய இனச் சிக்கல் தான். இந்தியாவில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிசக் குழுக்களில் பாதிக்கும் மேற்பட்ட குழுக்களின் பிளவுக்கு தேசிய இனச் சிக்கல் ஒரு காரணியாக இருந்திருக்கிறது. தவிரவும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை, பார்ப்பனியம் ஒன்றிய அதிகாரத்தில் அழுத்தமாக காலூன்றி நிற்கும் - இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அரசு உறுப்புகளிலும், அரசாங்க உறுப்புகளிலும் மிக அழுத்தமாக காலூன்றி நிற்கும் … தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பாட்டாளி
உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி
இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1870ல் இதே நாளில் (ஏப்ரல் 22) ரஷ்யாவில் ஓடும் வால்கா ஆற்றின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யானவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விளாடிமிர் இலீச் உல்யானவ் என்று பெயரிட்டனர் பெற்றோர். பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து தனக்குத் தானே ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. உலகத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற தலைவனும், மார்க்சிய கோட்பாடுகளை செழுமைப்படுத்தியதோடு மட்டுமன்றி, சோவியத் புரட்சி … உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்
இன்று ஜனவரி 8. பத்து மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. பொதுவாக, 1991 க்குப் பிறகு இந்திய அளவிலான பொது வேலை நிறுத்தங்கள் நடந்ததே இல்லை. ஆனால், பொது வேலை நிறுத்தங்களை நடத்த வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட 1991க்குப் பிறகு அதிகம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மை. இந்த முரண்பாடான சமூக நிலைக்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, எண்பதுகளின் பிற்பகுதியில் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட உலகமயக் கொள்கையால், வேலை செய்தால் … பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாமேதை ஏங்கல்ஸ்
28 நவம்பர் 2019. இந்த நாளிலிருந்து மாமேதை ஏங்கல்சின் 200வது பிறந்த ஆண்டு தொடங்குகிறது. கம்யூனிசம் குறித்தும், மார்க்சிய ஆசான்கள் குறித்தும் அறிந்து கொள்ள, உலகம் புதிய உத்வேகத்துடன் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை முதலாளித்துவ அறிஞர்களாலும் கூட மறைக்க முடியவில்லை. ஆங்காங்கே மார்க்சிய படிப்பு வட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக ஏங்கல்சின் படைப்புகளில் ஒன்றான ‘குடும்பம் தனிச் சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. … மாமேதை ஏங்கல்ஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?
சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகங்களும் ஆஸ்திரேலியாவை நோக்கி திரும்பியிருந்தன. சில மாணவர்கள் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் திறமையாக மொழிபெயர்த்து இந்தியாவின் பொது வேதனையாக மக்களை உணரச் செய்திருந்தன. அமெரிக்க இந்தியர்களின் வரதட்சனைக் கொடுமைகளும், கண்ணீரும் கூட இந்தியாவில் உழலும் மக்களின் இதயத்தில் ஊடுறுவி நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் இதுபோன்றே எதிர்வினைகளையும் ஆதரவையும் கோரும் வேறுசில செய்திகளோ எவ்வித கேள்விகளையும் நம்முள் எழுப்பாது கடந்துவிடுகின்றன. ஊடகங்கள் இவற்றை முதன்மைப்படுத்துவதில்லை, ஒரு மூலைச் செய்தியாக கடந்துவிடுகின்றன. தம் … அமெரிக்கா ஆஸ்திரேலியா செல்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.