கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த மே 1 உழைப்பாளர் தினத்திலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்றிலிருந்து ஐநூறு பெண்களையும் உள்ளடக்கி நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. மக்கள் எந்த சஞ்சலமும் அற்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். போராடும் மக்கள் மீது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, ராஜதுரோகம் செய்தது போன்ற கருப்புச் சட்டங்களை வீசி மிரட்டிப் பார்த்தது அரசு; ஐநூறு கோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று எலும்புத் … இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பாதுகாப்பு
உணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா? பறிப்பதற்கா?
கடந்த வாரத்தில் அமைச்சரவை கூடி உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதிலுள்ள சிக்கல்களை களைவது குறித்து விவாதித்தது. வறிய மக்கள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தான் கிடங்குகளில் சேமிக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்கள் வீணாய் கெட்டுப் போனாலும் போகலாமேயன்றி ஏழைகளுக்கு அதை வழங்க முடியாது என்று மண்மோகன் சிங் முழங்கியிருந்தார். அப்படியிருக்க திடீரென்று என்ன மாற்றம் எப்படி நேர்ந்தது? மாற்றமோ மாறுதலோ … உணவுப் பாதுகாப்பு சட்டம்: உணவை வழங்குவதற்கா? பறிப்பதற்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?
கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜெயாவின் வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசுசாரா அமைப்புகள் அணு உலைகள் ஆபத்தானவை என்று கூடங்குளம் பகுதிகளில் மக்களிடையே செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அதனைத் தொடந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதும் அந்த மக்களிடையே மிகுந்த பய உணர்வை தோற்றுவித்தது. அதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் இங்கும் நடந்தால் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குக் கூட … கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬
இஸ்லாம் கற்பனை மறுப்புக்கு மறுப்பு பகுதி 6 மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா? குரான் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள் எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு குரானின் பாதுகாப்பு குறித்து எழுதப்பட்டிருந்த இரண்டு கட்டுரைகளுக்கும் நண்பர் ஒன்றாக பதிலளிக்க முயன்றிருக்கிறார். நண்பரின் மறுப்புக்குள் புகுமுன் அவர் முரண்பாடு என குறிப்பிட்ட ஒன்றை சரி செய்துவிடலாம். இறுதி செய்யப்பட்ட குரானின் காலத்தை தவறுதலாக முகம்மது இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கால் நூற்றாண்டுக்குப் பிறகு என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறானது … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் ௬-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுதந்திரம் என்றொரு கற்பிதம்
இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. சுதந்திரம் என்றால் என்ன? … சுதந்திரம் என்றொரு கற்பிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.