பாபர் பள்ளியில் ராமர் கோவில்

மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் தமிழக தொலைக்காட்சிகள்! அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது நல்ல காலம் புதிய தலைமுறை,நியூஸ் 18, நியூஸ் 7 தொலைக்காட்சிகள் இல்லை. மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியாவே கலவரங்களால் சூழப்பட்ட போதும் தமிழகம் அமைதியாக இருக்க அப்போதைய ஊடகச் சூழலும் ஒரு காரணம்.ஆனால், மசூதி இருந்த இடத்தில் இன்று ராமர் கோவில் கட்டுகிறார்கள்.அதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்,தலித் மக்களின் ரத்தம் தோய்ந்துள்ளது.ஒரு பக்தி நிகழ்ச்சியை கவர் செய்வது என்பது … பாபர் பள்ளியில் ராமர் கோவில்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல

தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் 70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் … இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.

மசூதியை கட்டியே தீருவோம்

டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு மசூதியை இடிக்க ஏன் அந்த நாளை தேர்ந்தெடுத்தார்கள்? ‘இந்துவாகப் பிறந்தேன். இந்துவாகச் சாகமாட்டேன்’ என்று உறுதி எடுத்து, அதை நிறைவேற்றிய அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையும் அவரின் இந்து எதிர்ப்பையும் இருட்டடிப்புச் செய்து, தலித் மக்களிடம் இஸ்லாமிய எதிர்ப்பின் மூலமாக இந்து உணர்வை கட்டமைக்க. ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ முஸ்லிம் - தலித் எதிர்ப்பு என்று கணக்கு வைத்து கல்லடித்தார்கள் மசூதி மீது. முதலாளித்துவம் தன்னையறியாமலேயே தனக்கு … மசூதியை கட்டியே தீருவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

டிசம்பர்6

புத்தரின் தாமரையை பிடுங்கியதைப்போல் டிசம்பர்6ஐ தெரிவுசெய்து அம்பேத்கர் நினைவை மறைத்தன காவிகள். தாமரை என்றால் பிஜேபி டிசம்பர்6 என்றால் பாபரி. பல சமயத்தவர் நாடிது உன் சமயத்தை மெச்சேல் ஹுமாயுனுக்கு பாபரின் உயிலிது பள்ளி கட்ட பாபர் கோவிலை இடித்தார் வானரங்களின் அண்டப்புழுகிது. மசூதியின் இடிபாடுகளில் சிக்கி மரித்துப்போனது மனிதம். ஆண்டுக்கு ஆண்டு புதிது புதிதாய் போராட்டங்கள் பள்ளியை மீண்டெழுப்ப‌ வேண்டியதோ உணர்வுகளின் மீட்டெழுப்பல். எதற்காக போராட்டம்? யாருக்கு எதிராய்? இங்கே இடிபட்டவை பாபரி மஸ்ஜித் மட்டுமல்ல. … டிசம்பர்6-ஐ படிப்பதைத் தொடரவும்.