அப்சல் குரு கடந்த 12ம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவினார் என்பதற்காக காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருக்கும் தாவீந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரண செய்தி போல கடந்து போகத் தோன்றும். ஏனென்றால், காஷ்மீரில் இராணுவமும் போலீசும் நடத்தி வரும் வெறியாட்டங்களை அறிந்திருப்பவர்களுக்கு, இது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாக இருக்காது. அதேநேரம், இந்திய அரசையும், காவி பயங்கரவாதிகளையும் புரிந்திருப்பவர்களுக்கு இதில் முக்கியமான செய்தி இருகிறது. தாவீந்தர் சிங்கை விசாரித்த அதிகாரிகள் கூட, … தாவீந்தர்: நாடாளுமன்ற தாக்குதல் நாடகத்தின் முடிச்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பாராளுமன்றம்
பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா
2018 -2019 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ஜெட்லியால் அறிவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அரசியல் கட்சியினரும், அறிவுத் துறையினரும் இன்னும் பிறரும் நிதிநிலை அறிக்கை குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய பொதுவான கருத்து என்னவாக இருக்கிறது என்றால், குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த இழுபறியான வெற்றியினாலும், சில மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்தடுத்து வரவிருப்பதாலும் தங்கள் மீது வெறுப்புற்று இருக்கும் விவசாயிகள், நடுத்தர மக்கள் மீது கரிசனம் கொண்டு நிதி நிலை அறிக்கையை … பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா-ஐ படிப்பதைத் தொடரவும்.
கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?
தமிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது; யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’ குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை … கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?
அடுத்தடுத்து கரையில் மோதும் அலைகளைப்போல், ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. மக்கள் மனதில் தைத்து உறைந்து கிடக்கும் கோபத்தை உசுப்பிவிடும் தகுதியை ஊழல்கள் என்றோ இழந்துவிட்டன. காரணம், கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளுமே தமக்குள் ஊழல் வரலாறுகளைக் கொண்டிருக்கின்றன. ஊழலுக்காக கட்சியோ, கட்சிக்காரர்களோ தண்டிக்கப்படுவதில்லை. மட்டுமல்லாது உள்ளுறையாக மக்களே ஊழல்மயப்படுத்தப்பட்டுவிட்டனர். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்று சந்தர்ப்பவாதமாக ஓட்டுக்குப் பணம் தொடங்கி, சுயநலமாக, காரியவாதமாக தமக்கு என்ன லாபம்? எனும் கேள்வியில் தொங்கிக் கொண்டு வாழும்படி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். … ஊழல்கள் உரத்துக் கூவுகின்றன, உள்வாங்கிக்கொள்வோர் உண்டா?-ஐ படிப்பதைத் தொடரவும்.