கொலைகளின் நீர்த்த வடிவமே கைது

கொலைகளின் நீர்த்த வடிவமே கைது. சமூக ஊடக சலம்பல்களால் கடவுள் மறுப்பு பரப்புரையை தடுத்து விட முடியுமா? சாதிக்சமது கைதை முன்வைத்து கைது ஆத்திகர்களின் வெற்றியா? நாத்திகர்களின் தோல்வியா?அரசின் தன்மை என்ன? அரசு ஏன் கைது செய்கிறது? எது விமர்சனம்? எது அவதூறு? மனம் புண்படுவது ஏன்? உள்ளிட்ட பல சேதிகளை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=Ry88We4CoUU

தீபாவளியை என்ன செய்வது?

இன்று தீபாவளித் திருநாளாம், வழக்கமான உற்சாகம் இல்லாமலும், வெடிச்சத்தம் குறைவாகவும் இருக்கிறது. இதற்கு சமூகம், பொருளாதரம் உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம். போகட்டும். தீபாவளி கொண்டடலாமா? கூடாதா? தமிழ்நாட்டில் பெரியாரியவாதிகள் தொடங்கி இடதுசாரிகள் வரை தீபாவளி கொண்டாடுவதில்லை. காரணம் அது பொங்கலைப்  போலன்றி இந்து மதத்தின் திருநாளாக இருப்பதால் தான். இந்து மதத்தின் திருநாட்கள் கொண்டாட்டத்துக்கு உரியவைகள் அல்ல. ஏனென்றால் இந்து மதம் என்பதே பார்ப்பன மேலாதிக்கத்தின் திணிப்பு. ஆகவே, அவை  கொண்டாட்டத்திற்கு உரியவையல்ல. இதையும் மீறி தீபாவளியின் … தீபாவளியை என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது பயங்கரவாத இயக்கம்?

நேற்று, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) அலுவலகங்கள், நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நாடெங்கிலும் 13 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது மிகுந்த பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. ஊடகங்கள் இதனை பரபரப்புச் செய்தியாக்க, அது முஸ்லீம்களின் மீது மீண்டும் ஒருமுறை தீவிரவாத, பயங்கரவாத முத்திரை குத்த ஏதுவாகியது. ஏன் இந்த தேடுதல் வேட்டை? இதற்கு கூறப்படும் காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்ன? பன்னாட்டு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், … எது பயங்கரவாத இயக்கம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

புண்பட்ட / புண்படாத இந்துக்கள்

கடந்த 15.9.2022 வியாழனன்று சங்கரன் கோவில் அருகே சிறுவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த தீண்டாமைக் குற்றம் நிகழ்ந்தது. தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தியவர்கள் உடனடியாக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். மட்டுமல்லாது ஆறு மாதத்துக்கு அவர்கள் ஊருக்குள் வரக் கூடாது எனும் சிறப்புச் சட்டத்தையும் பயன்படுத்தி இருப்பது வரவேற்கத் தக்கது. இந்தப் பிரிவைப் பயன்படுத்துவது இந்தியாவிலேயே இது தான் முதன்முறையாக இருக்கக் கூடும் என எண்ணுகிறேன். சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் ஆ.ராசா வேதங்களில் சூத்திரர்கள் குறித்து … புண்பட்ட / புண்படாத இந்துக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்

செய்தி: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி, சண்முகா நகர் பேரூந்து நிறுத்தத்தில் இருந்த இறைச்சி கடை, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதாலும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது என்பதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. முகநூல் செய்தி செய்தியின் பின்னே: இது ஏதோ ஒரு சிறு பகுதியில் நடந்த சிறு நிகழ்வாக படலாம். ஆனால், இந்த நிகழ்வு அல்ல, அந்த நிகழ்வின் பின்னுள்ள அரசியலே இங்கு முதன்மையானது. கோவில் உள்ளிட்ட வணக்கத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் … மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சர்ணா மதம் காட்டும் வழி

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் முதன்மையான போராட்டம் ஒன்று நடந்தது. மிகமிக முதன்மையான இந்தப் போராட்டம் ஒரு நாள் செய்தியோடு முடிந்து போனது. அப்படி முடிந்து போகக் கூடாத இது போன்ற போராட்டங்கள் இந்தியாவெங்கும் நடக்க வேண்டும். ஜார்கண்ட், சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகள் தங்களை இந்து மதத்தில் சேர்க்காமல் சர்ணா எனும் மதமாக ஏற்க வேண்டும் என்று கோரி போராடியது தான் அந்த போராட்டம். … சர்ணா மதம் காட்டும் வழி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடியின் பாக்ய நகர்

செய்தி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று குறிப்பிட்டு பேசினார். பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் "ஏக் பாரத்" என்ற வார்த்தையை உருவாக்கினார் என்று தெரிவித்தார். இதனால் ஹைதராபாத் நகரின் பெயர் … மோடியின் பாக்ய நகர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உதைப்பூர் கொலையில் பாஜக

நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சு பெருங் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த நேரத்தில், “பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?” என்றொரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் உள்ள ஒரு பத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன். சிஏஏ சட்ட வரைவு கொண்டு வந்த போது, இஸ்லாமிய மண விலக்கு சட்ட திருத்தத்தின் போது, அடித்துக் கொல்வது தொடர்கதை ஆனபோது, பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு சட்ட அங்கீகரம் பெற்ற போது, முகத்திரை சிக்கலின் போது, கலவரம் செய்த போது, கலவரத்தை எதிர்த்தவர்கள் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு தரை … உதைப்பூர் கொலையில் பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்

அண்மையில் தெலுங்கானா ஆளுனர் தமிழிசை ஒரு நிகழ்வில் பேசும் போது, ‘காவியும் ஆன்மீகமும் கலந்தது தான் இந்தியா’ என்று கூறியிருந்தார். ஓரிரு மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டு ஆளுனர் ரவி, ‘சனாதனத்தினால் தான் இந்தியா உருவானது’ என்று கூறியிருந்தார். இப்படி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்கு தேவையான பொய்களையும் வரலாற்றுத் திரிவுகளையும் கூச்சமே இல்லாமல் கூவித் திரிவது பார்ப்பனர்களின் வேலைத் திட்டம். அதேநேரம், இதற்கு எதிராக வரலாற்றுத் தளத்தில் யாரேனும் கேள்வி எழுப்பினால் பக்தி இயக்க காலத்தை புறந்தள்ள … இந்திய நாத்திகமும் மார்க்சிய தத்துவமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சனாதனம் எனும் நஞ்சு

ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார். அதாங்க, பெண்கள் என்னை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதாக சொல்கிறார்களே அந்தக் கடவுள் தான். அவரைப் போற்றி ‘அரிவராசனம்’ என்றொரு பாடல் எழுதப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் தவறாமல் பாடும் பாடல் அது. அந்தப் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிறதாம். இதை கொண்டாடுவதற்கு, ஐயப்ப சேவா சங்கம் எனும் அமைப்பு சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் ஆளுனர் ரவி கலந்து கொண்டார். அதாங்க, இந்த திமுக காரங்க ‘ஆட்டுக்கு … சனாதனம் எனும் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.