தீண்டாமைக் கொடூரங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பொதுப்புத்தியோ, “இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?” என்றிருக்கிறது. அண்மையில் மனு சுமிரிதி குறித்து சச்சரவு எழுந்த போது அதே பொதுப்புத்தி, “மனு சுமிரிதி பழம் பஞ்சாங்கம் சார். யாரும் இப்ப அதெல்லாம் படிக்கிறதும் இல்லை, அதன்படி நடக்குறதும் இல்லை” என்று குழைகிறது. ஆனால் மக்களின் வாழ்வில் அவை எப்படி நுழைத்து சிந்தையை கைப்பற்றுகின்றன என விளக்குகிறார், பேரா. கருணானந்தன்.
குறிச்சொல்: பார்ப்பனிய மதம்
நான் இந்து அல்ல, நீங்கள்..?
கொரோனாவின் கோரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் காவி பாசிசங்களும் அவர்களின் காலாட்படையான சங்கிகளும் தங்களின் வன்மத்தை கைவிடவில்லை, கைவிட மாட்டார்கள் என்பதை தப்லீக் மாநாடு விதயத்தில் பார்த்தோம். வரலாறு நெடுகிலும் அவர்களின் நோக்கம் திட்டம் எல்லாம், சாதியக் கொடுங்கோன்மையை மீண்டும் பழைய விதத்தில் அட்டியின்றி நடப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டும் தான். இந்து என்றொரு மதமே இல்லை என்பதும், பார்ப்பன மதத்தின் மீது போர்த்தப்பட்டிருக்கும் போர்வை தான் அது என்பதும் … நான் இந்து அல்ல, நீங்கள்..?-ஐ படிப்பதைத் தொடரவும்.
காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!
கடந்த 29ம் தேதி சென்னையிலும் சில இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் பேரணி நடந்திருக்கிறது. 15 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். இனி இந்த காவி வானரங்கள் தமிழகத்தில் தங்கள் பயங்கரவாத செயல்களை எந்தத் தடையுமின்றி அரங்கேற்றும். தமிழகத்தில் தற்போது இருக்கும் ஓபிஎஸ் அரசாங்கம் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும். அதாவது அதிமுகவின் போர்வையில் பாஜக ஆட்சி செய்யும். இதன் அண்மை எடுத்துக்காட்டு தான் மாணவர்கள் … காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.