17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி

17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன? பகுதி 2 மேட்டுப் பாளையத்தில் நடந்த 17 பேர் கொலையை ஒரு பேச்சுக்காக அதை விபத்து என்றே கொள்வோம். 17 பேர் மரணமடைந்துள்ள ஒரு விபத்தில் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் காவல் துறை நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது? நடந்தது வெறும் விபத்தில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் காவல் துறை நடந்து கொண்ட விதம் சரியா? இப்படி … 17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன?

கடந்த இரண்டாம் தேதி (02.12.2019) அதிகாலையில் கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள நடூர் எனும் பகுதியில்  கட்டப்பட்டிருந்த நீண்ட சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். எந்த ஈர்ப்பும் இல்லாமல், பத்தோடு பதினொன்றாய் கடந்த போகவிருந்த இச்செய்தி, நாகை திருவள்ளுவன் அவர்களின் போராட்டம், திரைப்பட இயக்குனர் இரஞ்சித், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகள் ஆகியவற்றால் உயிர் பெற்று தமிழ்நாட்டின் விவாதப் பொருளாய் ஆகியது. துல்லியமாய் பார்த்தால் 17 பேரின் உயிரிழப்பு எந்த விவாதத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, … 17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்

கடந்த ஒன்பதாம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்விக்கப்பட்டார். இது முதல் முறை அல்ல, கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அது உறுதியில்லை. ஏனென்றால் ஏகலைவனின் கட்டை விரலை துண்டித்த பார்ப்பனியம், பலப்பல உயிர்களை குடித்த பின்னும் உயிப்ர்புடன் நீடித்துக் கொண்டிருகிறது. தரம் குறித்து வெளியே கதை விடும் அம்பிகள், பாத்திமா லத்தீப் ஒவ்வொரு தேர்விலும் முதல் … IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கோமியோ கேர்: காவிகளை காறித் துப்பும் நக்கலைட்ஸ்

‘நக்கலைட்ஸ்’ நண்பர்களின் அடுத்த அரசியல் நகைச்சுவை வீடியோ “கோமியோ கேர்”. ஆர்.எஸ்.எஸ் ஆட்சியில் சர்வரோக நிவாரணியாக திணிக்கப்படும் மாட்டு மூத்திரத்தின் மணத்தை மரண மாஸாக நாறடிக்கிறது இந்தப் படம். புகையிலை பழக்கத்தால் புற்று நோயுடன் மும்பை மருத்துவமனையில் இறந்து போன முகேஷை நினைவிருக்கிறதா? எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய புகையிலை அபாயத்தினை எச்சரிக்கும் அரசு விளம்பரம் அது. இங்கேயும் ஒரு முகேஷ். அதே போன்றொதொரு ஒடிசலான தேகத்துடன். உடல்நலமற்று மருத்துவரிடம் செல்லும் போது அங்கே … கோமியோ கேர்: காவிகளை காறித் துப்பும் நக்கலைட்ஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!

கடந்த 29ம் தேதி சென்னையிலும் சில இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் வானரங்களின் பேரணி நடந்திருக்கிறது. 15 ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு தொடக்கமாகக் கொள்ளலாம். இனி இந்த காவி வானரங்கள் தமிழகத்தில் தங்கள் பயங்கரவாத செயல்களை எந்தத் தடையுமின்றி அரங்கேற்றும். தமிழகத்தில் தற்போது இருக்கும் ஓபிஎஸ் அரசாங்கம் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும். அதாவது அதிமுகவின் போர்வையில் பாஜக ஆட்சி செய்யும். இதன் அண்மை எடுத்துக்காட்டு தான் மாணவர்கள் … காவி பயங்கரவாதிகளின் கொட்டத்தை அடக்குவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீபாவளியைக் கொண்டாடாதீர்

அன்பார்ந்த தொழிலாளர்களே! தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒரு அவதாரத்தின் போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்து மதம். யார் இந்த நரகாசுரன்? இரண்யாக்சன் என்றொரு ராட்சசன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழித்து வைத்து விட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை … தீபாவளியைக் கொண்டாடாதீர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை?

கடந்த 6ம் தேதி நீதிமன்ற அடக்குமுறைக்கு எதிராக வழக்குறைஞர்கள் பேரணி சென்னையில் வெற்றிகரமாக நடந்தது.  ஊழலுக்கு எதிரான வழக்குறைஞர்களின் பேரணி, ஹெல்மெட் பிரச்சனை, விசாரணை என்ற பெயரில் மூத்த வழக்குறைஞர்களுக்கு அவமரியாதை. இந்த விசயத்தில் எந்த சட்ட, நீதிமன்ற மரபுகளும் பின்பற்றப்படாதது, எல்லாவற்றையும் விட, எட்டு மாதங்களுக்கும் மேலாக 43 வழக்குறைஞர்கள் வழக்குகளை நடத்த விடாமல் தடுக்கப்பட்டிருப்பது என, பல மாதங்களாக வழக்குறைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தின் … ஏன் அவர்களால் பதில் கூற முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

அஸ்ஸாம் ஆட்டங்கள்

நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாம். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் கிராமங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்தனர். ஆளாளுக்கு முகாம்களுக்கு சென்று போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தார்கள், எல்லாம் சரியாகிவிட்டது என்று அறிவித்தார்கள். ஆனாலும் அஸ்ஸாம் அவ்வப்போது எரிந்துகொண்டே இருக்கிறது. குழு மோதலாக தொடங்கி, இனக் கலவரமாக மாறி உயிருக்கும் உடமைகளுக்கும் பேரிழப்பாக தொடர்கிறது. மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரசே ஆட்சியில் இருந்தாலும் ஒன்றை … அஸ்ஸாம் ஆட்டங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்

கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் ஆறு என்றதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதாக நினைவுக்கு வரும். 1992 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட எல்லா டிசம்பர் ஆறிலும் இந்த உணர்வு முஸ்லீம்களை போராட்டத்தின்பால் திரட்டியிருக்கிறது. ஆனால் அகமதாபாத் கட்டப்பஞ்சாயத்திற்குப் பிறகான இந்த முதல் டிசம்பர் ஆறில் ஒரு வெறுமை சூழ்ந்திருக்கிறது. சில அமைப்புகள் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்திருக்கின்றன. சில அமைப்புகள் போராட்ட நாளை மாற்றியிருக்கின்றன. சில அமைப்புகள் சுரத்தின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. … பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல

வினவு அந்த இடுகையை வெளியிடுவது வரை பதிவுலகில் இருக்கும் இந்த அசிங்கமான, கோரமான, பார்பனீய ஆணாதிக்க வக்கிர அரசியல் தெரியவில்லை. மனிதனின் ஒவ்வொரு செயலும் அவனின் விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்டு அரசியலாகத்தான் வெளிப்படும். அது பதிவுலகில் பிரதிபலிக்காது என நான் நினைக்கவில்லை. ஆனால் சக பதிவரை பெண் என்பதனால் திட்டமிட்டு மிகவும் கீழ்த்தரமாக தூற்றி அதை புனைவு எனும் போர்வையில் தைரியமாக வலையேற்ற முடிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு கீழ்த்தரமான புனைவை வலையேற்ற வேண்டும் … இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.