ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மத எல்லை கடந்து அனைத்து மக்களும் இந்திய உணர்வோடு போராடும் இந்தப் போராட்டத்தை ஒரு மதப் போராட்டம் போல் சித்தரிக்க தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அது ஒரு பக்கம் இருந்தாலும் நின்று போகாமல் இடையறாது போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக கர்னாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 20ம் தேதி (20.02.2020) ஒவைசி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஒரு போராட்டத்தில் கலந்து … ஆயிரம் அமுல்யாக்கள் வரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?

நேற்று (14 பிப்ரவரி 2020) இரவு சென்னை வண்ணார்பேட்டையில் நடந்து கொண்டிருந்த தொடர் போராட்டத்தில் காவல் துறையினர் உட்புகுந்து கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், தமிழ் நாட்டில் இது முதல் கொலை. அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட போராட்டம் என்கிறார்கள். போராட்டம் நடத்துவதற்கு மக்கள் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்? அப்படி ஏதாவது ஒரு … என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்

கடந்த ஒன்பதாம் தேதி சென்னை ஐ.ஐ.டி யில் முதுகலை முதலாம் ஆண்டு மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்விக்கப்பட்டார். இது முதல் முறை அல்ல, கடைசி முறையாக இருக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால், அது உறுதியில்லை. ஏனென்றால் ஏகலைவனின் கட்டை விரலை துண்டித்த பார்ப்பனியம், பலப்பல உயிர்களை குடித்த பின்னும் உயிப்ர்புடன் நீடித்துக் கொண்டிருகிறது. தரம் குறித்து வெளியே கதை விடும் அம்பிகள், பாத்திமா லத்தீப் ஒவ்வொரு தேர்விலும் முதல் … IIT-M : அன்று கட்டை விரல், இன்று மொத்த உயிர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியார் தடியா? ஜெண்டில் பேயா?

இட ஒதுக்கீடு, பெரியார், தகுதி போன்றவை குறித்து தெரிந்திருக்காத இன்றைய பதின்ம வயதினருக்கு அவை குறித்த ஒரு அறிமுகத்தை பொட்டில் அடித்தாற் போல் புரிய வைக்கும் ஓர் எளிய குறும்படம். திருவள்ளுவரை காவியாக்கத் துடிக்கும் பார்ப்பன பாசிசங்களுக்கு வாலை நசுக்கும் ஆப்பறைய, இது போன்ற நிறைய குறும்படங்கள் பல தலைப்புகளில், பல அரசியல் விவரங்களைத் தாங்கி வர வேண்டும். அது இன்றைய பதின்ம வயதினருக்கு அரசியல் ஆர்வத்தை தூண்டும். நக்கலைட்ஸ் குழுவினருக்கு பாராட்டுதல்கள். மகிழ்ச்சி. பாருங்கள். பகிருங்கள். … பெரியார் தடியா? ஜெண்டில் பேயா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்

  பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பெற்ற அன்னையையே கொண்டாட்டப் பொருளாக மாற்றி, நுகர்வுப் பண்பாட்டில் மூழ்கடித்து அன்னையர் தினமாக கொண்டாடும் மேற்குலகு காதலை, காதலர்களை மட்டும் விட்டு விடுமா என்ன? கொண்டாடுகிறது. அதாவது, கொண்டாடத் தூண்டுவதற்காக கொண்டாடுகிறது. இந்தியாவில் மூன்று விதங்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களால் கொண்டாடப்படுவது. இன்று மட்டும் என்றல்ல, என்றும், கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளவே விரும்புவார்கள். என்றாலும் இன்று ஒரு தனிவித … காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்

  பார்ப்பன பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது அதற்கு மற்றுமோர் சான்று. ஒரு தேர்தல் வெற்றி என்பது ஒரு போதும் மக்களின் விருப்பங்களை எதிரொலிக்காது என்பதற்கு, தேர்தல்கள் எப்படி எந்த அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்பது தொடங்கி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன.  தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் இறங்க ஆயத்தமாக இருப்பவர்கள் தான் இந்த பார்ப்பன பாசிச ஓநாய்கள். அப்படியான இழி உத்திகள் மூலம் … எச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுவாதியை அறைஞ்சவன் எவண்டா.. .. .. ?

சுவாதி கொலை குறித்து தெரியாதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது எனும் அளவுக்கு ஊடகங்கள் மக்களிடம் இந்த படுகொலையை கொண்டு சென்று சேர்த்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக எத்தனையோ வன்புணர்வுக் குற்றங்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு படுகொடூரக் கொலைகள் நடந்திருந்த போதிலும் அவைகளெயெல்லாம் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்த ஊடகங்களும், அரசும் ஒரு நிர்பயாவுக்காக கொதித்தெழுந்தது. எத்தனையோ ஆவணக் கொலைகள் உட்பட கொடூரங்கள் நடந்திருந்தும் கூட அரசின், காவல்துறையின், ஊடகங்களின் அழுத்தத்தில் சுவாதி தமிழ்நாட்டின் நிர்பயாவாக … சுவாதியை அறைஞ்சவன் எவண்டா.. .. .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு

நண்பர் சாருவாகன் அண்மையில் ஒரு கட்டுரை “மோடியை எதிர்ப்பது எப்படி?” எனும் தலைப்பில் எழுதியிருந்தார். படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சரியின் பக்கம் இருப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எப்படி பிசிறடித்து பாசிசத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள் என்பதற்கான விளக்கமாக அந்தக் கட்டுரை இருந்தது. மட்டுமால்லாது அது புரட்சிகர இடதுசாரி அரசியலையும் மறுக்கும் விதத்தில் பயணித்திருந்தது. நண்பர் சாருவாகனின் எழுத்தின் மீது ஒரு மதிப்பு இருந்து வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அவரின் பிறழலை சுட்டிக்காட்டுவது கடமை என்றாவதால் இந்த மறுப்பு … மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு-ஐ படிப்பதைத் தொடரவும்.