தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?

தமிழச்சி. கடந்த பத்து நாட்களாக தமிழ் இணையப் பரப்பில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர். பல ஆண்டுகளாக இணையப்பரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக லூலூ குழுவின் பாலியல் சுரண்டல்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதிலும், இப்போது மட்டும் தோழர் தமிழச்சி மீது அதிக வெளிச்சம் விழுந்திருப்பதன் காரணம் என்ன? இதுவரை அவர் தன்னுடைய நாட்டிலிருந்து, பிரான்சிலிருந்து இவைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார், விவாதித்துக் கொண்டிருந்தார். தற்போது அதன் அடுத்த கட்டமாக நேரடியாக தமிழ்நாடு வந்து இதுவரை … தமிழச்சி மீது வீசப்படுபவை விமர்சனங்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

யார் அந்த லூலூ?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லூலூ குழுவின் பாலியல் சுரண்டல் தமிழ் இணையப் பரப்பில் பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் கொடுரத்தை விட அளவிலும் தன்மையிலும் விரிந்த அளவில் இருக்கும் லூலூ குழு பாலியல் விவகாரம் பொள்ளாச்சி விவகாரம் அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன என்று பார்த்தால், முதன்மையான ஊடகங்கள் - அது அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் - இதை வெளிக் கொண்டுவரவில்லை என்பது தான். … யார் அந்த லூலூ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெண்களின் அந்தரங்கம்

கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறுசில பள்ளிகளில் இதே குற்றச்சாட்டுகளால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகளின் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான மட்டுமீறல் என்பது இயல்பாகவே நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் வெளியில் தெரியவருவது மட்டும் ஒரு நாளுக்கு … பெண்களின் அந்தரங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

திகைத்து நிற்கிறோம்

இது எல்லா சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் பதிவு. ஒவ்வொரு நாளும் இது போன்ற பல கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவைகளை தடுப்பதற்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இந்த கொடூரத்தில் வெளிப்பட்டிருக்கும் வன்மம் ஆணாதிக்கத்திலும், பார்ப்பனிய ஜாதியப் படிநிலையிலும் வேர் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஊழல்மய அதிகாரம் இதற்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்தக் குற்றவாளிகளே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். நிகழ்த்துவோர்களாகவும், நிகழ்த்தப்படுவதை தடுப்போர்களாகவும். இப்போதும் இந்த கொடூரம் குறித்த புதிய செய்திகள் … திகைத்து நிற்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எந்தப் பொன்மகள் வரவேண்டும்?

பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார். இது ஒரு வகையில் புதிய … எந்தப் பொன்மகள் வரவேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

குடும்பம்

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் - பகுதி 6 மார்கன் தன்னுடைய வாழ்க்கையில் பெரும் பகுதியை இராகோஸ் மக்கள் மத்தியில் கழித்தார். அவர்கள் நியூயார்க் மாநிலத்தில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் (செனீகா என்ற) ஒரு இனக் குழுவினர் அவரைச் சுவீகரித்து ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே இருந்த இரத்த உறவுமுறை அவர்களுடைய மெய்யான குடும்ப உறவுமுறைக்கு முரண்பட்டிருந்தது என்பதை அவர் கண்டார். திருமணம் ஒவ்வொரு ஜோடிக்கிடையே நடைபெற்றது. இரு தரப்பினரும் திருமண உறவைச் சுலபமாக ரத்து செய்து … குடும்பம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..

  முன்குறிப்பு: கற்புக் கொள்ளையன் பீஜே எனும் தலைப்பில் கற்பு எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கற்பு எனும் சொல்லின் பொருளை, அந்தச் சொல் கட்டியமைத்திருக்கும் பண்பாட்டுப் பொருளை ஏற்றுக் கொண்டிருப்பதால் அந்தச் சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல. கற்பு எனும் சொல் ஆணாதிக்கத்தினால் பெண்களின் மீது பெருஞ்சுமையாக சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இன்று கற்புக் கொள்ளையர்கள் தினம் என்று சுவரொட்டி ஒட்டி, பேசி, எழுதி காதலையும் … கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?

நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

டெல்லி குற்றவாளிகள் – கல்லெறியும் யோக்கியர்கள்

டெல்லி குற்றவாளிகள்- கல்லெறியும் உரிமை எல்லோருக்கும் உண்டு… யோக்கியனான பிறகு அதை செய்யுங்கள் என்பதுதான் என் கோரிக்கை இந்தியாவை சில நாட்கள் கட்டிவைத்திருந்த ஒரு செய்தி கசப்பான முடிவுக்கு வந்திருக்கிறது. பாலியல் சாயம் பூசப்பட்ட செய்திகள் எப்போதும் சிறப்பான விற்பனையை கொண்டிருக்கின்றன. இம்முறை அது இன்னும் மெருகேற்றப்பட்டு விழிப்புணர்வு, பாதுகாப்பு, மனிதாபிமானம் என பல முகமூடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போராடுபவர்கள் எல்லோரையும் நக்சலைட் என்றும் அன்னிய கைக்கூலிகள் என்றும் பேசிய வாய்கள் எல்லாம் இந்த விவகாரத்தில், உணர்வுகளை … டெல்லி குற்றவாளிகள் – கல்லெறியும் யோக்கியர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.