நெடுமாறன் குண்டு நமுத்துப் போன மத்தாப்பு

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்வதன் பொருள் என்ன? யார் அவ்வாறு கூறுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன? விடுதலை புலிகளின் அழிவில் செயல்பட்ட இலங்கை, இந்திய உலக அரசியல் காரணிகள் என்ன? இப்போது அதை மீண்டும் பேசுவதின் உள்ளடக்கம் என்ன? போன்ற விவரங்களை அலசும் காணொளி https://www.youtube.com/watch?v=OZaFtaVBROY

ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்

  அண்மையில் ஆனந்த விகடன் இதழில் “ஒரு பெண் போராளியின் மனக் குமுறல்” என்ற தலைப்பில் ஒரு பெண் புலியின் செவ்வி வெளியாகியிருந்தது. பரவலாக கவனத்தை ஈர்த்த, அதிர்வலைகளை ஏற்படுத்திய கட்டுரையாக அது இருந்தது. அந்த செவ்வியின் மெய்த்தன்மையில் எனக்கு ஐயம் உண்டு. அது புனைவாகக் கூட இருக்கலாம். அதன் நோக்கம் பரிதாபம் காட்டுவது எனும் போர்வையிலான கேவலப்படுத்தலாகக் கூட இருக்கலாம். ஏனென்றால், உயிருடன் கைது செய்யப்பட்ட ஈழப் புலிப் போராளிகள் கைக்கூலிகளாக செயல்பட ஒப்புக் கொண்ட … ஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாவீரர் நாள் எனும் சடங்கு

நவம்பர் மாத இறுதியில் ஒருவார காலத்திற்கு போரில் மடிந்த வீரர்களை நினைவுகூறும் பொருட்டு மாவீரர் நாள் கொண்டாட்டங்களை 1989 லிருந்து நடத்தி வருகிறார்கள் விடுதலைப் புலிகள். இதன் இறுதி நாளன்று புலிகள் தலைவர் பிரபாகரன் உரை நிகழ்த்துவார். ஆனால் இலங்கை அரசு நடத்திய இன அழிப்புப் போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு நிர்மூலமாக்கப் பட்டதுடன் தலைமைப் பொருப்பில் இருந்தவர்களையும் அது நரவேட்டையாடியது. இதனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பிரபகரனோ வேறு புலித்தலைவர்களோ உரையேதும் நிகழ்த்தவில்லை. ஆனால் இந்த … மாவீரர் நாள் எனும் சடங்கு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு, பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு

            கடந்த சில நாட்களாகவே தமிழர்களிடம் சிக்கலும் சிரமமுமாய் ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது.மெய்யா? பொய்யா? கொல்லப்பட்டது பொய்யாயிருக்கவேண்டும், தப்பியது மெய்யாயிருக்கவேண்டும் எதிர்பார்ப்பின் எல்லைகள் நீள்கின்றன. சிங்கள அரசு வெளியிட்ட அசைபடத்தை கண்டவர்களுக்கு ஐயம் எழ வாய்ப்பே இல்லை, அது பிரபாகரன் இல்லை என்பதில். மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்திவிட்டோம் என்று சிலமணி நேரங்களிலேயே தொடர்ந்து வந்த சிங்கள அரசின் செய்தியில் நம்பகத்தன்மை இல்லை என்பது விபரமறிந்தவர்களுக்கு புரியும். இறந்த … ஈழத்திற்கு கிளஸ்டர் குண்டு, பிரபாகரனுக்கு கிராஃபிக்ஸ் குண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.