புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மக்களுக்கு எதிராக கல்வியை முழுக்க முழுக்க கார்ப்பரேட் பிடியில் ஒப்படைக்கும் ஒன்றிய அரசின் கொள்கைக்கு, அதன் வரைவை வெளியிட்டபோதே பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஒரு கொடுந்தொற்று காலத்தில் தேசிய கல்விக் கொள்கை வரைவை இந்தியா முழுவதிலுமிருந்து அளிக்கப்பட்ட பரிந்துரைகள், எதிர்ப்புகள் என எதையும் கணக்கில் கொள்ளாமல் சட்டமாக்கியது. இன்று கொரோனாவின் இரண்டாவது அலையில் பிணக் குவியல்களுக்கு நடுவே அந்தக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் … பொதுக் கல்வி – லெனின்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: புதிய கல்விக் கொள்கை
கல்விக்கான கூட்டமா? கட்டளையா?
இன்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் புதிய கல்விக் கொள்கையை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பான கூட்டம் நடக்கவிருக்கிறது. இதற்கு, மாநிலங்களின் கல்வித்துறைச் செயலர்கள் அனைவரும் காணொளி வாயிலாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏன் மாநிலங்களின் கல்வித்துறை செயலர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்? மாநிலங்களின் கல்வித்துறை அமைச்சர்கள் அல்லவா அழைக்கப்பட்டிருக்க வேண்டும்? என்றொரு வாதத்தை தமிழ்நாடு முன்வைத்திருக்கிறது. இது சரியான வாதம் தான். செயலர்கள் போதுமென்றால் இந்தக் கூட்டத்தை ஒன்றிய கல்வித்துறை செயலர் தலைமையில் நடத்தி இருக்க … கல்விக்கான கூட்டமா? கட்டளையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்து என்பது யார்?
கந்த சஷ்டி கவசம் பிரச்சனைக்கு ஸ்டாலின் ஏன் பதிலளிக்கவில்லை? இந்துக் கடவுளா? தமிழ் கடவுளா? அது அவதூறா? இல்லையா? இடஒதுக்கீடு பிரச்சனை? மருத்துவ கல்லூரி இடங்களில் என்ன பிர்ச்சனை? புதிய கல்விக் கொள்கை? என நாலாபுறங்களிலும் சிக்சர்கள் பறக்கின்றன. எந்தப் பந்தை எப்படிப் போட்டாலும் அடிப்பது சிக்சர் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அடிக்கப்படும் ஒவ்வொரு பந்தும் பார்வையாளனுக்கும் விளையாட்டுக்கும் இடையிலிருக்கும் ‘யார் இந்து?’ எனும் மாயக் கண்ணாடியை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போடுகிறது என்பது தான் சிறப்பு. … இந்து என்பது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மணமக்களை அழைக்காத திருமணம்
புதிய கல்விக் கொள்கையின் அவலங்களை பலரும் விளக்கி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசோ மக்களிடம் கருத்துக் கேட்பதாக படம் காட்டி தன் ஜனநாயகத் தன்மையை நிரூபிக்கப் பார்க்கிறது. எப்படி? மக்களை அழைக்காமல் மக்களிடம் தெரிவிக்காமல், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பாமல் கைத்தடிகள் சிலரை வைத்துக் கொண்டு மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்துகிறார்களாம். இது ஒன்றே புதிய கல்விக் கொள்கை மக்களுக்கானது இல்லை என்பதை காட்டுவதற்கு. இவ்வாறான ஒரு கூட்டம் கோவையில் நடந்த போது தோழர் கு.இராமகிருட்டினன் இதை … மணமக்களை அழைக்காத திருமணம்-ஐ படிப்பதைத் தொடரவும்.