ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்

வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

உங்களுக்கெல்லாம் எண்ணெய்த்தோலரைத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத்தெரியாது ஆனால் அவரைப்பற்றி பேசாமலோ, அவரைப்பார்க்காமலோ யாரும் இருக்க முடியாது, ஏன் அவர் வரலைன்னா அன்னைக்கு குழம்பு ஆகாதுன்னா பார்த்துக்குங்களேன் இந்தக்கிராமத்தில். அது என்ன எண்ணைத்தோலர்ன்னு கேக்குறீங்களா? நீங்களெல்லாம்  எண்ணை எங்க போய் வாங்குவீங்க? கடையிலதானே, அங்க போய் கோல்டு வின்னர், உஷா சன் பிளவர்ன்னு கேட்டு வாங்குவீங்க, ஆனா 100 மி.லி கேட்டா கிடைக்குமா? ஆனா எங்க எண்ணெய்த் தோலர்  எங்க வீட்டுக்கே வந்து எண்ணெய் கொடுப்பார். 100 … தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை

தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டம், மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்குச் சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள தனியார் "மெட்ரிக்" பள்ளிகளின் கட்டணக் கொள்கைக்குக் கடிவாளம் போடப்போவதாகக் கூறிக்கொண்டு, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது, தமிழக அரசு. இந்தக் கல்வியாண்டு முதலே இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது. இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கோவிந்தராசன் கமிட்டி, ஆரம்பப்பள்ளிகள் அதிகபட்சமாக ரூ. 3500 வரையிலும், நடுநிலைப் பள்ளிகள் ரூ. 5000 வரையிலும், உயர்நிலைப்பள்ளிகள் ரூ. 8000 வரையிலும், … சட்டபூர்வமானது கல்விக் கட்டணக் கொள்ளை-ஐ படிப்பதைத் தொடரவும்.

இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?

இந்தியாவின் வெறிபிடித்த ஆயுதக்குவிப்பின் பின்னே, அதன் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள் மறைந்துள்ளன. நிதியமைச்சர் அண்மையில் சமர்ப்பித்த பட்ஜெட்டில், இந்திய ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,47,344 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது, இது 8.13 சதவீதம் அதிகம். "பாதுகாப்பான எல்லைகள், பதுகாப்பான வாழ்க்கை என்பதுதான் வளர்ச்சியை துரிதப்படுத்தும். எனவே தான் இராணுவச்செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று இப்பூதாகரச் செலவை நியாயப்படுத்துகிறார், நிதியமைச்சர். அனைத்து தெற்காசிய நாடுகளின் இராணுவச்செலவுகளை விட, பல மடங்கு அதிகமாக இந்திய அரசு தனது இராணுவத்திற்கு … இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. "இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது" என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது. விவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத்தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு நடுத்தர விவசாயிகளையோ, விவசாய கூலித்தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியை குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள … பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது

போஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான ஒரிசா மக்களின் போராட்டம் எஃகுறுதியுடன் முன்னேறுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய அன்னிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத்திட்டத்திற்கு எதிஎராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி பி எஸ் எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிஸ்ஸாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர். தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக் டெல்லியில் கடந்த … உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது-ஐ படிப்பதைத் தொடரவும்.

இலங்கையில் தமிழர்களை கொல்வது இந்தியா(வும்) தான்: இலங்கை அமைச்சர் ஒப்புதல்

          விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்துவரும் இலங்கை அரசு, தன்னுடைய சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா மூலம் ஓர் உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்திய மருத்துவர் குழு இலங்கை சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அதற்கு விளக்கம் கூறுமுகமாக அமைச்சர் அதை அறிவித்திருக்கிறார். "இந்தியாவை குறை கூறாதீர்கள். அவர்களுடைய உதவி இல்லையென்றால் விடுதலைப்புலிகளை இந்த அளவிற்கு வெற்றி கொண்டிருக்க முடியாது" … இலங்கையில் தமிழர்களை கொல்வது இந்தியா(வும்) தான்: இலங்கை அமைச்சர் ஒப்புதல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழப்போர்: இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைக்கும் திராவிடக்கட்சிகளின் கபடத்தனம்.

ஈழத்தமிழ் மக்கள் மீது மிகக்கொடிய இன அழிப்புப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை எச்சரித்து வெளியேற்றிவிட்டு, ஊடகங்களுக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும் தடைவிதித்துவிட்டு, புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு, முல்லைத்தீவு மக்கள் அனைவரின் மீதும் குண்டு மாரி பொழிந்துள்ளது சிங்கள ராணுவம். முல்லைத்தீவின் பெரும்பகுதியை சுடுகாடாக்கி, புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள புதுக்குடியிறுப்பு பகுதியில் தற்போது மூர்க்கமான இருதித்தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உயிரிழந்தவர்கலை அப்புறப்படுத்த இயலாததோடு, காயமடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றி சித்திரவதை அனுபவித்து மெல்ல மெல்லச்சாகும் கொடூரம் … ஈழப்போர்: இந்திய மேலாதிக்கத்தை மூடிமறைக்கும் திராவிடக்கட்சிகளின் கபடத்தனம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.