முட்டை அரசாங்கம்

அண்மையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் இருந்து மக்கள் செய்தி மையம் அரங்கு அநீதியாக நீக்கப்பட்டது. அதற்கு இசைவாக பபாசி தலைவர்களை தாக்க முயன்றதாக காரணம் கூறி வழக்கு தொடரப்பட்டது. அன்பழகனும் கைது செய்யப்பட்டார். இந்த அத்துமீறலை பலரும் தனித்தனியே கண்டித்திருந்தாலும், புத்தகக் கண்காட்சி வழக்கம் போல இயங்கியது. பின் அது ஒரு செய்தியாக கடந்து, மறந்தும் போனது. ஆனால், மெய்யாகவே அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கும், புத்தகக் கண்காட்சியிலிருந்து மக்கள் செய்தி மையம் அரங்கு நீக்கப்பட்டதற்கும், அவர் பபாசி … முட்டை அரசாங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

புத்தகங்களே துணை

இது 24.11.2017 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்களே துணை எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரை. நூல்களை வாசிப்பது, நூல்களை நேசிப்பது, நூல்களை சுவாசிப்பது என்று படிப்படியாக நூல்களுக்குள் நுழைவதை ஒரு அழகியல் ஒழுங்கோடு புதிய வாசகனுக்கு எப்படி பரிமாறுவது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் இது நீங்கள் கேட்க வேண்டிய ஓர் உரை. இந்த உரையைக் கேட்கும் யாருக்கும் நாமும் நூல்களை வாசிக்க … புத்தகங்களே துணை-ஐ படிப்பதைத் தொடரவும்.

கையூர் விவசாயிகள் சாகவில்லை

75 ஆண்டுகளுக்கு முன விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக  கண்ணணூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார்கள் நான்கு இளைஞர்கள்.  சாவதற்கு சில நாட்கள் முன்பாக அவர்களில் ஒருவரான சிருகண்டன் கூறுகிறார், "இந்த நான்கு விவசாயி மகன்களைத் தூக்கிலிடலாம்.  ஆனால், கோடிக் கணக்கான விவசாயிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.  அவர்கள் அனைவரையும் அழித்து விட முடியாது.  அவர்கள் வாழ்க்கையை வளமாக்க கூடுதலாக உழைக்க முடியவில்லையே என்பதைத் தவிர வேறு எந்த வருத்தமும் எங்களுக்கு இல்லை" என்கிறார். இதோ,  நம் கண் முன்னே கொத்துக் … கையூர் விவசாயிகள் சாகவில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.