இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: புரட்சிகர அமைப்புகள்
தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்
கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு எனும் முகாந்திரத்துடன் அரசுகளுக்கு எதிராக நடந்த மாணவர்கள், இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசு ரவுடிகளின் வக்கிரமான வன்முறை வெறியாட்டத்தால் முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது. அமைதியான, அறவழியிலான, இந்தியாவுக்கே முன்மாதிரி எனக் குறிப்பிடப்பட்ட போராட்டம் அரசினால் திட்டமிட்டு தீய்க்கப்பட்டிருக்கிறது. அரைநாள் நேரம் கொடுங்கள் நாங்களே கலைந்து செல்கிறோம் என்று மாணவர்கள் கோரினார்கள், பத்து மணி வரையாவது நேரம் கொடுங்கள் என்று கேட்டுப் பார்த்தார்கள். இரண்டு மணி நேரம் மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சிப் … தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை
பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் மட்டும் தொடர்பு கொண்டதோ என சிந்திக்கும் அளவுக்கு பலரும் முத்தலாக் பற்றி மட்டுமே கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டும் தானா எனும் எண்ணமும் வருகிறது. ஏனென்றால் அவர்கள் மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அண்மையில், பொது சிவில் சட்டம் பரவலாய் பேசப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால், நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சில ஊர்களில் பொது சிவில் சட்டம் குறித்த … பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?
இந்தியா மூன்றுபுறம் கடலால் சூழப்பட்டிருக்கிறது, நான்கு புறமும் கடனால் சூழப்பட்டிருக்கிறது என்று வேடிக்கையாய் சொலவடை சொல்வார்கள். இப்போது எட்டுத் திக்கிலிருந்தும் பார்ப்பனியம் சூழ்ந்து கொண்டிருக்கிறது எனச் சொல்வது தகும். இந்தியாவில் அரசு இயந்திரம் பார்ப்பனமயமாகி இருக்கிறது என்பதை உணர்வதற்கு சான்றுகள் எதுவும் தேவையில்லை. ஆனால் குறிப்பாக மோடி பிரதமரான பிறகு இது மிகுந்த விரைவுடன் செயலாற்றுகிறது. சமஸ்கிருதமயமாக்கம், உயர்கல்விக் கூடங்களில் ஆக்கிரமிப்பு, மாட்டுக்கறி, பகுத்தறிவுவாத அறிஞர்களின் படுகொலை என இதற்கு பற்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இவைகளுக்கு பலரும், … பெரியாரின் மண் என்பது மட்டும் போதுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 3 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி மூன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள். 3.1, 3.2 கற்பனை உரையாடலின் மூன்றாவது பகுதியில் கம்யூனிஸ்டின் வாதங்களே இடம்பிடித்திருக்கின்றன. அந்த வாதங்களுக்கு முறையான பதிலேதும் சொல்லாத அல்லது சொல்ல முடியாத சகோதரர்(!) ஃபாசில், சில இட்டு நிரப்பல்களைச் செய்துள்ளார். அவர்களின் வழக்கமான “குரானில் அனைத்துக்கும் தீர்வுண்டு” “நாத்திகர்கள், மாற்று மதத்தவர்களுடன் விவாதம் புரிந்து மார்க்கத்தை புரிய வைத்திருக்கிறோம்” “இஸ்லாம் சாந்தியும் … பதில் சொல்ல முடியாத டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான 150 கி.மீ. கிழக்குக் கடற்கரையில் கார்னெட், இல்மனேட் ருடைல், சிலிகான், மோனோசைட் ஆகிய விலைமதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கிறது. இக்கனிமங்கள் கடற்கரை மணலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனால் துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலான கடற்கரை முழுவதும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கனிமவளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறை சம்மந்தமான விதிகள் உட்பட எல்லா விதிகளையும் காலில் போட்டு … தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.