ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாண்டுகள் ஆகின்ற போதும் ஏன் புரட்சியை நோக்கி முகம் திருப்பக் கூட முடியவில்லை? என்றொரு கேள்வியை கம்யூனிஸ்டுகளிடம் எழுப்பினால் .. .. .. கிடைக்கும் பதிலை இரண்டாக பிரிக்கலாம். ஆசிய பாணி உற்பத்தி முறைசாதி முறை குறித்த போதாமை. இந்த இரண்டையும் குறித்து தத்துவத் தளத்தில் விவாதிக்கிறார் பேராசிரியர் முர்ஸ்பன் ஜல். இவர் புனேவின் இந்திய கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பொருளாதார மற்றும் அரசியல் வாராந்தரி - ஈ.பி.டபிள்யூ இதழில் - … ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. அதேநேரம் இந்த … நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இளம் கம்யூனிஸ்ட் கழகம் – ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்

தமிழ்நாட்டு நிலைமை: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 10 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிக்குப் பிறகு, குறிப்பாக 2016 முதல் பா.ஜ.கவின் பினாமியாக அ.தி.மு.க ஆட்சி நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு, தி.மு.க ஆட்சி அமைத்துள்ளது. இது அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் ஒரு விதமான ஆறுதலைத் தந்துள்ளது என்று கூறலாம். ஆனால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட அ.தி.மு.க கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. … இளம் கம்யூனிஸ்ட் கழகம் – ஆய்வுப் பணி என்ற செயல்தந்திரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

நமக்குள் நாமே கேட்போம்!

அன்பார்ந்த தோழர்களே, இன்று நவம்பர் 7. உலகெங்கிலுமுள்ள மக்களுக்கு - அவர்கள் அறிந்திருந்தாலும், அறியாதிருந்தாலும், - அதுவரையிலான வரலாற்றில் மக்களின் நல்வாழ்வுக்கான விதை ஊன்றப்பட்ட நாள். ரஷ்யப் புரட்சி நாளின் சிறப்பை இப்படி சொற்களுக்குள் சிறைப்படுத்தி விட முடியாது. என்றாலும், இந்த நாளை உணர்வு பொங்க கொண்டாடுவதற்கும், இங்கும் ஒரு புரட்சியைச் சமைப்போம் என்று சூளுரை ஏற்பதற்கும், இந்திய கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கிற நமக்கு தகுதி இருக்கிறதா? என்பது மிகப் பெரிய, பொருள் பொதிந்த, எதிர்கொள்ள … நமக்குள் நாமே கேட்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி

இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு 1870ல் இதே நாளில் (ஏப்ரல் 22) ரஷ்யாவில் ஓடும் வால்கா ஆற்றின் கரையோரம் உள்ள சிம்பிர்ஸ்க் எனும் நகரத்தில் இல்யா உல்யானவ் - மாயா உல்யானவ் தம்பதிகளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு விளாடிமிர் இலீச் உல்யானவ் என்று பெயரிட்டனர் பெற்றோர். பின்னர் அந்தக் குழந்தை வளர்ந்து தனக்குத் தானே ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. உலகத் தொழிலாளர்களின் ஒப்புயர்வற்ற தலைவனும், மார்க்சிய கோட்பாடுகளை செழுமைப்படுத்தியதோடு மட்டுமன்றி, சோவியத் புரட்சி … உலகின் கொரோனாக்களுக்கு ஒரே தடுப்பூசி-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்க்சியம் மட்டுமே தீர்வு

இன்று நவம்பர் ஏழு. உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மிகவும் மதிப்பு வாய்ந்த நாள் இன்று. அரசு தோற்றம் கொண்ட காலத்திலிருந்து உழைக்கும் வர்க்கம் சுவைத்தறியாத நிர்வாக அதிகாரத்தை சமைத்தறிந்த நாள். மனிதன் உருவாகி வந்த தொடக்கத்திலிருந்து சாதாரண மக்கள் பாவித்திராத வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தந்த நாள். 102 ஆண்டுகளுக்கு முந்திய அந்த நாளின் தனித் தன்மை இன்றும் மக்களின் உயிரோடு கலந்திருக்கிறது. மீண்டும் அந்த நாள் வாராதா? எனும் ஏக்கத்தை மக்களின் மனதில் ஏற்றிக் … மார்க்சியம் மட்டுமே தீர்வு-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்

செப்டம்பர் 12 தியாகிகளின் நாள். தோழர் அப்பு பாலன் நினைவுகளை உள்வாங்க வேண்டிய நாள். இந்த நாளில் தோழர் பாலன் வாழ்வை சுருக்கமாக கூறும் இந்நூலை படித்துப் பாருங்கள். பதிப்புரையிலிருந்து புரட்சியாளர்களின் வரலாறு வெறும் மையால் எழுதப்படுவதில்லை, அது குருதி கொண்டு எழுதப்படுகிறது. அது வெறும் காகிதங்களில் அச்சிடப்படுவதில்லை, உழைக்கும் மக்களின் இதயங்களில் அச்சிடப்படுகிறது. தியாகிகளின் பௌதிக வாழ்வு முடிவடைந்தாலும், அவர்கள் புரட்சியின் ஆன்ம பலமாக உயிர்த்திருக்கிறார்கள், உழைக்கும் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் ஒவ்வொரு போராட்டத்திலும், புரட்சிக்கான … தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு

கடந்த வாரம் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு எனும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அடுத்து வரும் ஓர் ஆண்டுக்குள் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். பாஜக வுக்கு தற்போது இருக்கும் மிருக பலத்தில் எளிதாக இதை நடைமுறைப் படுத்தி விட முடியும். ஆனால், இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அவ்வளவு எளிதில் தீர்த்து விட முடியாது என்பதால் … ஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு-ஐ படிப்பதைத் தொடரவும்.

உழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்!

தோழர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள். இந்தியாவிலும் அப்படியான புரட்சியைக் கட்டியமைக்க நாம அனைவரும் செங்கற்களாவோம்.   https://youtu.be/jtis45ReK5k