ஆரியவதியும் சில ஆணிகளும்

நடப்பு வாரத்தில் மிகவும் அதிர்ச்சியடைய வைத்த நிகழ்வாக ஆரியவதி உலகெங்கும் பேசப்பட்டாள். சௌதியில் பணிபுரியச் செல்லும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளும், கொடூரங்களும் மனித உரிமை மீறல்களாக உலக அரங்கில் தொடர்ந்து எழுப்பபட்டே வந்திருக்கிறது. அடித்தல் உதைத்தல் காம இச்சைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவைகளிடையே உடலில் ஆணியை அடித்து ஏற்றுதல் என்பது மக்களிடையே ஒரு கொந்தளிப்பான மனோநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. பாத்திரம் கீழே விழுந்து உடைந்துவிடுதல் போன்ற சின்னச்சின்ன தவறுகளுக்கான தண்டனையாக ஆணிகள் உடலில் ஏற்றப்பட்டிருக்கின்றன என்பதை அறியும் போது … ஆரியவதியும் சில ஆணிகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது … பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே-ஐ படிப்பதைத் தொடரவும்.