கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் கல்லூரிகளை மையமாகக் கொண்டு ஒரு சிக்கல், மத மோதலை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனும் உத்தரவு போட்ப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் முஸ்லீம் மாணவிகள் கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்படாமல் படிக்கட்டுகளிலும் வெளியிலும் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளிவந்து சலசலப்பை ஏற்படுத்தின. ராகுல் காந்தி தொடங்கி திமுக எம்பி ஊடாக காஷ்மீரின் மஹ்மூதா முப்தி … ஹிஜாபும் பூனூலும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பெண்கள்
பெண்களின் அந்தரங்கம்
கோவை பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வேறுசில பள்ளிகளில் இதே குற்றச்சாட்டுகளால் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் இது போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. பள்ளிகளின் மட்டுமல்ல வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான மட்டுமீறல் என்பது இயல்பாகவே நடந்து வருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் வெளியில் தெரியவருவது மட்டும் ஒரு நாளுக்கு … பெண்களின் அந்தரங்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குடும்பம் 4
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகிவற்றின் தோற்றம் – பகுதி 9 3.இணைக் குடும்பம். குழு மணத்தின் போதோ அல்லது அதற்கு முன்னரோ நீண்ட காலத்துக்கோ, குறுகிய காலத்துக்கோ ஒரு வகையான இணை வாழ்க்கை இருந்தது. ஆணுக்குப் பல மனைவியர் இருப்பினும் அவர்களில் ஒருத்தி அவனுடைய பிரதான மனைவியாக (அவனுக்கு மிகப் பிடித்தமான மனைவி என்று அவளைக் கூறுவதற்கு அநேகமாக இடமில்லை) இருந்தாள். அதே போல், அவளுடையா பல கணவர்களில் அவனும் பிரதான கணவனாக இருந்தான். இந்த நிலைமை கிறிஸ்துவ … குடும்பம் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.
எந்தப் பொன்மகள் வரவேண்டும்?
பொன்மகள் வந்தாள். வெளிவருவதற்கு முன்பே பல விவாதங்களை கிளப்பி விட்ட திரைப்படம். இனி சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு திரைக்கூடங்களை ஒதுக்க மாட்டோம் என உரிமையாளர்கள் மிரட்டினார்கள். அதையும் மீறி OTT தளத்தில் வெளிவந்திருக்கிறது இத் திரைப்படம். இதற்கு முன்பே கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்திலும் கிட்டத்தட்ட இதே பிரச்சனை ஏற்பட்டு பின், பின்வாங்கப்பட்டு திரைக்கூடங்களில் வெளியானது. இயக்குனர் சேரன் கூட இதே திசையில் D2H எனும் நிறுவனத்தை தொடங்கி ஆதரவில்லாமல் கைவிட்டார். இது ஒரு வகையில் புதிய … எந்தப் பொன்மகள் வரவேண்டும்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அண்டப் புழுகு .. ஆகாசப் புழுகு .. ஆர்.எஸ்.எஸ். புழுகு
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு மதிப்பை வழங்கும் 370 ஆவது சட்டப் பிரிவை நீக்கி ஒரு மாதம் ஆகிறது. இது எந்த அளவுக்கு பயங்கரமான முடிவோ அதற்கு இணையான அளவில் அதற்கான எதிர்ப்பு இல்லை. உலகளாவிய அளவில் பாகிஸ்தான் எதிர்ப்புகளைக் கிளப்ப முயல்கிறது. உள்நாட்டில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளுக்கு -தேசியக் கட்சிகளானாலும், மாநிலக் கட்சிகளானாலும்- இதன் விளைவுகள் குறித்த சரியான புரிதல் இல்லையோ எனத் தோன்றுகிறது. ஓரிரு அறிக்கைகளோடு, அடையாளப் போராட்டங்களோடு முடித்துக் கொண்டன. எல்லாம் ஒரு குட்டையில் … அண்டப் புழுகு .. ஆகாசப் புழுகு .. ஆர்.எஸ்.எஸ். புழுகு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..
முன்குறிப்பு: கற்புக் கொள்ளையன் பீஜே எனும் தலைப்பில் கற்பு எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், கற்பு எனும் சொல்லின் பொருளை, அந்தச் சொல் கட்டியமைத்திருக்கும் பண்பாட்டுப் பொருளை ஏற்றுக் கொண்டிருப்பதால் அந்தச் சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதல்ல. கற்பு எனும் சொல் ஆணாதிக்கத்தினால் பெண்களின் மீது பெருஞ்சுமையாக சுமத்தப்பட்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று இன்று கற்புக் கொள்ளையர்கள் தினம் என்று சுவரொட்டி ஒட்டி, பேசி, எழுதி காதலையும் … கற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது
உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.
அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்
உழைக்கும் பெண்களே! மார்ச் 08 ம் நாள் அனைத்துலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர் தினம். ஆனால் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலை என்ன? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணூர் ரித்திகா, பெங்களூர் விமானப் பணிப் பெண், நடிகை பாவனா .. .. .. ஒவ்வொருவரும் மகளிர் தினம் பற்றி பேச முற்படும் போது இப்படி ஒரு பட்டியல் வரிசை … அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?
நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்
1908 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி எட்டு மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், பெண்களுக்கும் வாக்குரிமை என அடிப்படை உரிமைகளுக்காக போராடி, அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இரத்தம் சிந்தி வென்றார்கள். இதன் மூலம் சாமானியப் பெண்களும் போராடி உரிமைகளை வென்றெடுக்க முடியும் என உலகிற்கு உணர்த்திய நாள் மார் 8. அதன்பிறகு 1910ல் கோபன்ஹேகனில் இரண்டாவது அகிலத்தில் மார்ச் 8 ஐ உலக உழைக்கும் பெண்கள் … மார்ச் 8 உலக உழைக்கும் பெண்கள் தினம்-ஐ படிப்பதைத் தொடரவும்.