இந்த சமூகம் மிக நீண்ட காலமாக ஆணாதிக்க சமூகமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிரான அனைத்துக் குற்றங்களும் ஆணாதிக்கத்திலேயே வேர் பிடித்து நிற்கின்றன. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் பெண்ணியவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வோரில் சிலர் பெண்ணியம் எனும் சொல்லையே கேலிக்குறியதாக்க்கி, ஆணின் பலதார வேட்கைக்கு பெண்ணை ஆயத்தப்படுத்துவதே பெண்ணியத்தின் உள்ளீடு என விளம்பித் திரிகின்றனர். இந்தப் போக்கிலிருந்து சமூகத்தை திசை மாற்றுவது என்பது இடையறாதும், உறுதியோடும், சமரசமின்றியும் செய்யப்பட வேண்டியதாகும். அதற்கு இந்த … நான் ஒரு பெண்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பெண்ணியம்
யார் அந்த லூலூ?
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லூலூ குழுவின் பாலியல் சுரண்டல் தமிழ் இணையப் பரப்பில் பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் கொடுரத்தை விட அளவிலும் தன்மையிலும் விரிந்த அளவில் இருக்கும் லூலூ குழு பாலியல் விவகாரம் பொள்ளாச்சி விவகாரம் அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன என்று பார்த்தால், முதன்மையான ஊடகங்கள் - அது அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் - இதை வெளிக் கொண்டுவரவில்லை என்பது தான். … யார் அந்த லூலூ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரு சம்பவம் நடந்த போது .. ..
முகநூல் நேரலை 1 மேற்கண்ட இந்த முகநூல் நேரலையை பாருங்கள். இந்த நேரலையில் தோழர் தமிழச்சி ஒரு சம்பவம் செய்யப் போவதாக குறிப்பிடுகிறார். அந்த நேரலையில் மிக விரிவாக ஒரு சிக்கல் குறித்து, பாலியல் சுரண்டல் குறித்து பேசுகிறார். ஆனால், முதன்மையான அதை விடுத்து ஒரு சம்பவம் செய்யப் போவதாக கூறிய ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் ஒரு அமைப்பினர். அவர்கள் வேறு யாருமல்லர், தன் மீது ஒற்றைச் செருப்பை … ஒரு சம்பவம் நடந்த போது .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெண் என்றால் அவ்வளவு இழிவா?
அண்மையில் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் பெரியாரின் நூலை ஒரு பள்ளி மாணவிகளுக்கு விளம்ப முற்படுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அதை தடுத்தன என்றொரு செய்தியை பார்த்திருப்போம். ஆர்.எஸ்.எஸ் போன்ற படு பிற்போக்கான அதிகாரத்தை கையில் கொண்டிருக்கும் அமைப்புகள் அப்படித்தான் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரிய அமைப்புகள் இதில் செய்த எதிர்வினைகள் ஏன் மொன்னையாக இருக்கின்றன? அண்மையில் கோவை பொன்தாரணியின் ‘தூண்டப்பட்ட தற்கொலை’ நிகழ்வில் கிட்டத்தட்ட எல்லோருமே கொதித்துப் போனோம். பெண்களை சமூகம் அணுகும் … பெண் என்றால் அவ்வளவு இழிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழ்நாட்டு me too தொடரட்டும்
சில ஆண்டுகளுக்கு முன் மீடூ எனும் ஒரு இயக்கம், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் தாக்குதல்களுக்கு ஆளக்கப்படுதை உலக அளவில் பெரும் விவாதமாக்கியது. அவைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது மிகமிகக் குறைவு என்றாலும், அவ்வாறான பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில், எச்சரிக்கை செய்வதில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மீடூ பெரும் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. சற்றேறக்குறைய அதேபோன்ற ஓர் இயக்கம் தமிழ்நாடு அளவில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. பத்மா சேசாத்திரி பள்ளியில் ராஜகோபால் எனும் ஆசிரியர் நடத்திய பாலியல் … தமிழ்நாட்டு me too தொடரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை
பத்மா சேசாத்திரி பள்ளி மாணவிகளுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது. தனியார் பள்ளிகள் பெரும்பாலானவற்றில் இவ்வாறான கொடுமைகள் அன்றிலிருந்து இன்றுவரை நடந்து கொண்டே இருக்கின்றன. சில வெளியில் தெரிகிறது, பல தெரியாமல் மறைக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் மட்டுமோ, அல்லது பள்ளிகளில் மட்டுமோ அல்ல, சமூகம் முழுவதுமே பெண்ணை தனக்கு கீழானவளாக, பாலியல் பண்டமாக, ஆணாதிக்கத்துடன் பார்க்கும் பார்வை நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்த ஆணாதிக்கப் போக்கு சமூகத்தில் இருக்கும் வரை இது போன்ற … இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.
நான் ஒரு பெண்
அண்மையில் "The Indian Kitchen" எனும் மலையாளப் படம் வெளிவந்த பின்னிலிருந்து சமூக தளங்களில் பெண்ணியம் சார்ந்து பலரும் பதிவுகள் இட்டு வருகிறார்கள். இது ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், சமையல் குறித்து மட்டுமே பேசுவது, ஒரு விதத்தில் பெண்ணை இழிவுபடுத்துகிறதோ என்றும் தோன்றுகிறது. ஏனென்றால், வரலாற்றில் மிக நீண்ட காலம் மனித குலத்துக்கு தலைமை தாங்கி, சமூகத்தை வழிநடத்தியவள் பெண். மருத்துவம், விவசாயம், கட்டடக்கலை என பல துறைகளையும் கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி சமூகத்தை வளர்த்தெடுத்தவள் பெண். … நான் ஒரு பெண்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது
உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.
இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது
வணக்கம் ராஜ்ரம்யா, ஆம். நீங்கள் குறிப்பிடுவது போல இலுமினாட்டி எனும் சொல் சமூக வலைதளங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை விளக்குவதற்கு வேறொரு புள்ளியிலிருந்து தொடங்கலாம். ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து உலகெங்கும் தற்போது வலதுசாரி அமைப்புகள் தலை தூக்கி வருகின்றன. தேர்தல் வெற்றிகளை சம்பாதித்திருக்கின்றன. இதை ஆராய்வோர்கள், உலகின் இந்த போக்கு கம்யூனிசம் தோல்வியடைந்து வருவதன் குறியீடு என்கிறார்கள். அதாவது, கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவளிப்பார்கள். தங்களுடைய பிரச்சனைகளை கம்யூனிஸ்டுகள் மூலம் தீர்த்துக் கொள்ள … இலுமினாட்டி: நகைக்கவும் தகுதியற்றது-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெண்கள் என்றால் .. .. ..
மூதூர் மொகமட் ராபி செங்கொடி தளத்தை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்த பெயர் தான். பலமுறை கேள்வி பதில் பகுதியில் தன்னுடைய கேள்விகளால் இந்தத் தளத்தின் ஈர்ப்புக் கவர்ச்சியை கூட்டியவர். அந்தக் கேள்விகளும், சில பின்னூட்டங்களும் அவரின் அகத் தேடல்களை, அற உணர்ச்சிகளை புறம் கொண்டு வந்தவைகள். அண்மையில் ஆணாதிக்கம் குறித்து ஒரு கட்டுரையை அனுப்பியிருந்தார். வெகு எதார்த்தமான கேள்விகள், எளிமையான விளக்கங்கள். அந்தக் கட்டுரையை உங்களுக்கும் அறியத்தருவதில் எனக்கு மகிழ்ச்சியே. இவருடைய வேறு ஆக்கங்களை வாசிக்க … பெண்கள் என்றால் .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.