தமிழ்நாட்டு me too தொடரட்டும்

சில ஆண்டுகளுக்கு முன் மீடூ எனும் ஒரு இயக்கம், பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு, பாலியல் தாக்குதல்களுக்கு ஆளக்கப்படுதை உலக அளவில் பெரும் விவாதமாக்கியது. அவைகளில் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டது மிகமிகக் குறைவு என்றாலும், அவ்வாறான பொறுக்கிகளை அம்பலப்படுத்துவதில், எச்சரிக்கை செய்வதில், விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மீடூ பெரும் பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது. சற்றேறக்குறைய அதேபோன்ற ஓர் இயக்கம் தமிழ்நாடு அளவில் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. பத்மா சேசாத்திரி பள்ளியில் ராஜகோபால் எனும் ஆசிரியர் நடத்திய பாலியல் … தமிழ்நாட்டு me too தொடரட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது

  உலகம் முழுவதும் மார்ச் 8 ம் நாள் உழைக்கும் பெண்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டு முழுவதிலும் இது போல் பல நாட்கள் பல்வேறு சிறப்புகளாக கூறப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு நாளாக கடந்து போக முடியாத நாள் இது. இன்றில் கொண்டாடப்படுவது போல் கோலப் போட்டியாகவோ, பூனை நடை அழகிப் போட்டியாகவோ, சமையல் போட்டியாகவோ, பெண்களுக்கு மட்டும் என்று அரங்குக்குள் ஆட்டம், பாட்டு என கேளிக்கை கொண்டாட்டமாகவோ முடித்துவிட முடியாத, முடித்து விடக் … மார்ச் 8 நம்மை போராடச் சொல்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.