கடந்த 29ம் தேதி மதுரையில் செஞ்சட்டைப் பேரனி மீகச் சிறப்பாய் நடந்து முடிந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிவப்பு சட்டையணிந்து கலந்து கொண்டது மிகுந்த உவகையூட்டக் கூடியதாக இருந்தது. இது இடதுசாரிகள் நடத்திய பேரணி அல்ல. கருப்புச் சட்டைகள் முன்னின்று நடத்திய செஞ்சட்டைப் பேரணி. சிவப்பு, கருப்பு, நீலம் மூன்றும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பது ஆசையாகவும், கருத்தியலாகவும் இங்கு நீண்ட காலமாக நிலவில் இருக்கிறது. அதற்கு இது பெருந் தொடக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பேரணி … செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பெரியாரியம்
மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?
மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெண் என்றால் அவ்வளவு இழிவா?
அண்மையில் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் பெரியாரின் நூலை ஒரு பள்ளி மாணவிகளுக்கு விளம்ப முற்படுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அதை தடுத்தன என்றொரு செய்தியை பார்த்திருப்போம். ஆர்.எஸ்.எஸ் போன்ற படு பிற்போக்கான அதிகாரத்தை கையில் கொண்டிருக்கும் அமைப்புகள் அப்படித்தான் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரிய அமைப்புகள் இதில் செய்த எதிர்வினைகள் ஏன் மொன்னையாக இருக்கின்றன? அண்மையில் கோவை பொன்தாரணியின் ‘தூண்டப்பட்ட தற்கொலை’ நிகழ்வில் கிட்டத்தட்ட எல்லோருமே கொதித்துப் போனோம். பெண்களை சமூகம் அணுகும் … பெண் என்றால் அவ்வளவு இழிவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா மறைந்தார்
பெரியாரின் பெருந்தொண்டர், பெரியாரிய மார்க்சிய அறிஞர் வே. ஆனைமுத்து அய்யா அவர்கள் இன்று புதுச்சேரியில் இதயம் இயங்க இயலாமல் போனதால் காலமானார்கள். அவரது சொந்த ஊரான இரும்புலியூரில் நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். பெரியாரின் தொண்டராக தன்னை அறிவித்துக் கொண்ட ஆனைமுத்து அய்யா, பெரியாரின் மறைவுக்குப் பின் திக விலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி பெரியார் சம உரிமைக் கழகம் எனும் அமைப்பை 1975ல் தோற்று வித்தார். அதையே … பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா மறைந்தார்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்
பெரியாரியம் , அம்பேத்கரியம் , மார்க்சியம் கொஞ்சம் எளிமையா தெளிவு படுத்துங்க தோழர். திரு ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து நண்பர் ராஜ் ரம்யா, பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் இவை மூன்றும் தனித்தனியான, ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத இயங்களல்ல. நோக்கங்களால் ஒன்றியவை. தனித்தனியாக குறிப்பிடப்பட்டாலும் இவைகளை இணைக்கும் மையச் சரடு தலித்தியம். அந்த வகையில் முன்னிரண்டைக் காட்டிலும் மார்க்சியம் முழுமையானது. பெரியாரியம், அம்பேத்காரியம் என்பவை தலித்தியம் எனும் சொல்லின் பின்னுள்ள அரசியல் தொழிற்பாடுகளால் தனித்தனியானதாக உயர்த்தப்படுபவை. இங்கு … பெரியாரியத்துக்கும், அம்பேத்காரியத்துக்கும் எதிராக பெரியாரியமும், அம்பேத்காரியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சிபிஎம் போலிகளும் பெரியாரிய பிழைப்புவாதிகளும்: இதோ ஒரு சவுக்கடி.
நெய்யாறு கேரள அடாவடியும் சிபிஎம் எடுபிடியும் என்ற தலைப்பில் அண்மையில் இட்ட ஒரு பதிவிற்கு விஜிடன் லதிப் எனும் நண்பர் ஒருவர் தனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை பின்னூட்டமாக இட்டு விளக்கம் கேட்டிருந்தார்.அந்த பதிவையும் மகஇகவே இதோ உனக்கு ஒரு சாவுமணி என்ற தலைப்பிலான பின்னூட்டத்தையும் காண இங்கே சொடுக்கவும். மதவாதிகளிடம் பேசும் வாய்ப்புகளில் நாம் எடுத்து வைக்கும் அறிவியல் ரீதியிலான வாதங்களை மறுக்கமுடியாமல் கண்களில் கோபம் தெறிக்கும், உதடுகள் துடிக்கும். ஆனால் வார்த்தைகள் வராது. அது … சிபிஎம் போலிகளும் பெரியாரிய பிழைப்புவாதிகளும்: இதோ ஒரு சவுக்கடி.-ஐ படிப்பதைத் தொடரவும்.