சில நாடகளுக்கு முன் முகநூலில் ஒரு பதிவைப் பார்த்தேன். எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாமல் நாத்திக கோமாளிகள் என தொடக்கத்திலேயே விளித்திருந்தார் அந்த பதிவர். அந்த சொல்லினால் உந்தப்பட்டு அவருக்கு பதிலளித்தேன். அது ஒரு விவாதமாக நீண்டது. ஒரு கட்டத்துக்குப் பிறகு வழக்கம் போல பதில் வரவில்லை. அதையே ஒரு பதிவாக்கி முகநூலில் பகிர்ந்தேன். அவரைக் குறித்த பதிவுக்கு அவருக்கு தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல எனும் எண்ணத்தில் அதில் அவரையும் கோர்த்திருந்தேன். அதற்கு அவர் வினையாற்றி இருந்தார். … தேவையற்றவனின் அடிமையே வா-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பெரியார்
செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்
கடந்த 29ம் தேதி மதுரையில் செஞ்சட்டைப் பேரனி மீகச் சிறப்பாய் நடந்து முடிந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிவப்பு சட்டையணிந்து கலந்து கொண்டது மிகுந்த உவகையூட்டக் கூடியதாக இருந்தது. இது இடதுசாரிகள் நடத்திய பேரணி அல்ல. கருப்புச் சட்டைகள் முன்னின்று நடத்திய செஞ்சட்டைப் பேரணி. சிவப்பு, கருப்பு, நீலம் மூன்றும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பது ஆசையாகவும், கருத்தியலாகவும் இங்கு நீண்ட காலமாக நிலவில் இருக்கிறது. அதற்கு இது பெருந் தொடக்கமாக இருக்க வேண்டும். இந்தப் பேரணி … செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?
மகஇக வின் பாடல்கள் என்றால் உள்ளம் துடித்து எழும். பறையின் அதிர்வுகளைப் போல் மனம் அதிர்ந்து சோம்பலை உதறித் தள்ளி வீரெழும். ஆனால், நேற்று அந்த பாடலைக் கேட்ட போது உள்ளம் துணுக்குற்றுப் போனது. முனை மழுங்கி விட்டால் வாட்கள் கரும்புத் தோகை ஆகிவிடுமோ! மூளை மழுங்கி விட்டால் கோவன் கத்தார் ஆகி விடுவாரோ! கடந்த 7ம் தேதி ‘திராவிட மாடலாகும் இந்தியா’ எனும் தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மகஇக நடத்திய … மார்க்சியத்தின் சாரம் அடையாள அரசியலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
யார் அந்த லூலூ?
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே லூலூ குழுவின் பாலியல் சுரண்டல் தமிழ் இணையப் பரப்பில் பேசுபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால், பொள்ளாச்சி பாலியல் கொடுரத்தை விட அளவிலும் தன்மையிலும் விரிந்த அளவில் இருக்கும் லூலூ குழு பாலியல் விவகாரம் பொள்ளாச்சி விவகாரம் அளவுக்கு மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் என்ன என்று பார்த்தால், முதன்மையான ஊடகங்கள் - அது அச்சு ஊடகமாக இருந்தாலும், காட்சி ஊடகமாக இருந்தாலும் - இதை வெளிக் கொண்டுவரவில்லை என்பது தான். … யார் அந்த லூலூ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரு சம்பவம் நடந்த போது .. ..
முகநூல் நேரலை 1 மேற்கண்ட இந்த முகநூல் நேரலையை பாருங்கள். இந்த நேரலையில் தோழர் தமிழச்சி ஒரு சம்பவம் செய்யப் போவதாக குறிப்பிடுகிறார். அந்த நேரலையில் மிக விரிவாக ஒரு சிக்கல் குறித்து, பாலியல் சுரண்டல் குறித்து பேசுகிறார். ஆனால், முதன்மையான அதை விடுத்து ஒரு சம்பவம் செய்யப் போவதாக கூறிய ஒற்றைச் சொல்லை மட்டும் எடுத்துக் கொண்டு காவல் துறையில் புகார் அளித்திருக்கிறார்கள் ஒரு அமைப்பினர். அவர்கள் வேறு யாருமல்லர், தன் மீது ஒற்றைச் செருப்பை … ஒரு சம்பவம் நடந்த போது .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெரியாரும் அம்பேத்கரும் இன்று
ஆ. ராசாவை ஒரு அரசியல்வாதியாக மட்டுமே தெரிந்த பலர் இருக்கிறார்கள். துணிச்சலாக தன் வாதங்களை எடுத்துவைக்கக் கூடியவராக 2ஜி வழக்கிலும், அண்மையில் ஜெயலலிதா குறித்த பிரச்சனையிலும் ஊடாக சிலர் தெரிந்திருக்கிறார்கள். ஆனால் இவைகளுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு சிறந்த திராவிடவியல் பேச்சாளர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? இந்த சிறு நூலை படிப்பவர்கள் அதை தெரிந்து கொள்ளலாம். 2008 பிப்ரவரி 22ம் தேதியன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து … பெரியாரும் அம்பேத்கரும் இன்று-ஐ படிப்பதைத் தொடரவும்.
நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்
கம்யூனிஸ்ட் எனும் அடிப்படையில் நான் ஒரு சர்வதேசியவாதி. வரலாற்றியல் பொருள்முதல்வாத அடிப்படையைத் தாண்டி, இனம், தேசியம் குறித்தெல்லாம் எனக்கு மயக்கங்கள் எதுவும் இல்லை. என்றாலும், நடப்பில் நடந்து கொண்டிருக்கும் விவாதம் என்ற விதத்தில், பார்ப்பனியத்துக்கு எதிர்க் கருத்தியல் என்ற முறையிலும், மக்களை மயக்கும் புதிய தமிழ்த்தேசியர்களுக்கு எதிர்க்கருத்தியல் எனும் முறையிலும், இதை உவந்து இங்கே பதிகிறேன். “நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்” WE BELONG TO DRAVIDIAN STOCK கரோனா என்னும் பெருந்தொற்று பரவிக் கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், … நாம் திராவிட மரபைச் சேர்ந்தவர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா மறைந்தார்
பெரியாரின் பெருந்தொண்டர், பெரியாரிய மார்க்சிய அறிஞர் வே. ஆனைமுத்து அய்யா அவர்கள் இன்று புதுச்சேரியில் இதயம் இயங்க இயலாமல் போனதால் காலமானார்கள். அவரது சொந்த ஊரான இரும்புலியூரில் நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என தெரிகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்து கொள்ளுங்கள். பெரியாரின் தொண்டராக தன்னை அறிவித்துக் கொண்ட ஆனைமுத்து அய்யா, பெரியாரின் மறைவுக்குப் பின் திக விலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறி பெரியார் சம உரிமைக் கழகம் எனும் அமைப்பை 1975ல் தோற்று வித்தார். அதையே … பெருந்தொண்டர் ஆனைமுத்து அய்யா மறைந்தார்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நெல்லையில் சமூக நீதி மாநாடு
அன்புமிக்க நண்பர்களே வணக்கம். தந்தை பெரியார் 1920 நெல்லையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 26 வது மாநாட்டில் முதன்முதலாக சமூகநீதிக்கான குரலை எழுப்பினார். அதிலிருந்து அவரது சமூக நீதிக்கான பயணம் தொடங்குகிறது. 1920-2020 நூற்றாண்டு கால சமூகநீதி வரலாற்றை இன்றைய இளைஞர்களுக்கு அறியப்படுத்தும் வகையில் 2020 டிசம்பர் 27 காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை முழுநாள் சமூகநீதி மாநாட்டை நெல்லையில் நடத்துகிறோம். கொரோனா பிரச்சனையால் முன்பதிவு செய்த பிரதிநிதிகளை மட்டும் வைத்து … நெல்லையில் சமூக நீதி மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பெரியார் 142
கீழே சொல்லப்பட்டவை யாவும் ஏறத்தாழ 76 வருடங்களுக்கு முன்பு சொல்லப்பட்டவை என்றால் உங்களால் நம்ப முடியாது. இவை ஆருடம் அல்ல, ஏற்ற தாழ்வுடைய தன் சமூகத்தைப் பற்றி சதா காலமும் சிந்தித்த ஒரு கிழவனின் பெருங் கனவு அது.. "போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும், அதி வேக சாதனமுமாகவே இருக்கும்" "கம்பியில்லா தந்தி சாதனம் ஒவ்வொரு சட்டைப் பையிலும் இருக்கும்" "உருவத்தை தந்தியில் அனும்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்" … பெரியார் 142-ஐ படிப்பதைத் தொடரவும்.