மின்சார தூக்குக் கயிறு

அண்மையில் தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தது. இதற்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வை அறிவிக்கச் சொல்லி எங்களை கட்டாயப்படுத்துகிறது என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் சொல்வது உண்மை தான் என்று கடந்த எட்டாம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டம் 2022 வெளிப்படையாக அறிவித்து விட்டது. தற்போது மின் பகிர்மானம் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை தனியாருக்கு மாற்றுவதை … மின்சார தூக்குக் கயிறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக

செய்தி: கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத கடன்களின் தொகை 2,40,000 கோடியை தாண்டி இருக்கிறது. 2012ல் 23,000 கோடியாக இருந்த வாராக்கடன் தொகை 2022ல் 2,40,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியவர்கள் 36 பேர். இந்த 36 பேரில் பெரும்பாலானோர் இன்று இந்தியாவில் இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி செய்தியின் பின்னே: இந்த 2,40,000 கோடி என்பது நேரடியாக இந்தியாவின் கொடூரங்களோடு, இந்தியாவின் … ஊழல் செய்யாத உத்தமக் கட்சி பாஜக-ஐ படிப்பதைத் தொடரவும்.

கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்

கொரோனா பரவத் தொடங்கிய தொடக்க நாட்களில் மத வழிபாட்டு இடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. குறிப்பாக, வாடிகன், மெக்கா, திருப்பதி போன்ற அனைத்து மத வழிபாட்டிடங்களும் காலவரம்பின்றி அடைக்கப்பட்டன. யாரும் வழிபாடு செய்ய வரவேண்டாம் என மத நிறுவனங்களாலேயே அறிவிக்கப்பட்டது. இது கடவுள் இல்லை அல்லது கடவுளுக்கு ஆற்றல் இல்லை எனும் விதமாக பகுத்தறிவுவாதிகளால் பரப்புரை செய்யப்பட்டது. இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம். ஆனால் இன்று உலகின் எந்த மூலையிலும் மேதினப் பேரணி நடைபெறப் போவதில்லை. கொரோனா அச்சத்துக்கு கம்யூனிஸ்டுகள் … கொரோனாவில் மே நாள்: பொருளாதாரமும் புரட்சியும்-ஐ படிப்பதைத் தொடரவும்.