பிப்ரவரி 14 காதலர் தினம் என்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. பெற்ற அன்னையையே கொண்டாட்டப் பொருளாக மாற்றி, நுகர்வுப் பண்பாட்டில் மூழ்கடித்து அன்னையர் தினமாக கொண்டாடும் மேற்குலகு காதலை, காதலர்களை மட்டும் விட்டு விடுமா என்ன? கொண்டாடுகிறது. அதாவது, கொண்டாடத் தூண்டுவதற்காக கொண்டாடுகிறது. இந்தியாவில் மூன்று விதங்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர்களால் கொண்டாடப்படுவது. இன்று மட்டும் என்றல்ல, என்றும், கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் தங்கள் காதலை பகிர்ந்து கொள்ளவே விரும்புவார்கள். என்றாலும் இன்று ஒரு தனிவித … காதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: பெற்றோர்கள்
குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்
கடந்த 25ம் தேதி சென்னை சேலையூர் ஜீயோன் மெட்ரிகுலேசன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படித்த சுருதி என்ற சிறுமி, பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே சாலையில் தவறி விழுந்து, பயணித்த பேருந்தின் சக்கரத்திலேயே மாட்டிக் கொண்டு துடிக்கத் துடிக்க உயிரிழந்தாள். காட்சி ஊடகங்கள் இதை தங்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்தும் விதத்தில் பரபரபரப்பான செய்தியாக மாற்ற, தமிழகம் பற்றிக் கொண்டது. பார்த்த கணத்திலேயே பதற வைக்கும் செய்தி என்பதால் சலை மறியல், கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்கள், … குழந்தை சுருதி மரணம்: கேட்க மறந்த கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு
கல்வியில் தனியார்மயத்தை ஒழித்தாலே உயர்ரக கல்வி வரை அனைவரும் இலவசமாக கல்வி பெற முடியும்! நக்சல்பாரி பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சியே இதற்கு ஒரே வழி! அன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, உழைக்கும் மக்களே, குறைந்த கட்டண நிர்ணயம், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு என்பதெல்லாம் இருக்கின்ற அரசுப் பள்ளிகளையும் ஒழித்து தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கவே. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக புகுத்தப்பட்டு வரும் … கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.