தீண்டாமைக் கொடூரங்கள் எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், பொதுப்புத்தியோ, “இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறா?” என்றிருக்கிறது. அண்மையில் மனு சுமிரிதி குறித்து சச்சரவு எழுந்த போது அதே பொதுப்புத்தி, “மனு சுமிரிதி பழம் பஞ்சாங்கம் சார். யாரும் இப்ப அதெல்லாம் படிக்கிறதும் இல்லை, அதன்படி நடக்குறதும் இல்லை” என்று குழைகிறது. ஆனால் மக்களின் வாழ்வில் அவை எப்படி நுழைத்து சிந்தையை கைப்பற்றுகின்றன என விளக்குகிறார், பேரா. கருணானந்தன்.
குறிச்சொல்: பேச்சு
அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்
அம்பேத்கரியர்களையும், கம்யூனிஸ்டுகளையும் எதிர்ரெதிராக நிறுத்தும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதன் பின்னாடும் அரசியல் சதிகளை காணாமல், காணச் செய்யாமல், தூண்டி விடப்படும் உணர்ச்சிகளை பற்றிக் கொள்வது இரண்டுக்குமே பலன் தரப்போவதில்லை. அம்பேத்கரா? மார்க்ஸா? யார் பெரியவர் எனும் கேள்வியும், சாதி ஒழிப்பா? புரட்சியா? எது முதலில் எனும் கேள்வியும், முட்டையா கோழியா எது முதலில்? எனும் கேள்வியின் தரத்துக்கு பொருளற்றும், ஊள்ளீடற்றும், நோக்கமின்றியும், திசையின்றியும் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தேவை என்ன? நாம் … அம்பேத்கரியர்கள்: நெருக்கடியும் சவால்களும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்க்சியமும் இலக்கியமும்
வறுமையின் தத்துவம் என்ற தலைப்பில் ஒரு நூலை புருதோன் எழுதினார். மார்க்ஸ் இதை மறுத்து விளக்கி எழுதிய நூலுக்கு வைத்த தலைப்பு தத்துவத்தின் வறுமை. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய போது ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது, கம்யூனிசம் எனும் பூதம் என்று எழுதினார்கள். இப்படி மார்க்சிய எழுத்துகளில் ஊடாடிக் கிடக்கும் அழகியலை சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு படைப்பின் இலக்கிய மதிப்பு எங்கிருந்து வருகிறது? சொற்கோர்ப்பால் உண்டாகும் அழகியலில் இருந்து மட்டுமா? … மார்க்சியமும் இலக்கியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனாவை விட கொடூரம்
பீலா ராஜேஷ். இது இடுகுறிப்பெயரா? காரணப் பெயரா? தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. ஊரடங்கின் பிறகு அது மட்டுப்பட்டிருக்கிறதா? என்பது இனிமேல் தான் தெரிய வேண்டும். இது குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தினமும் ஊடகங்களுக்கு அளித்து வருகிறார். முன்னர் ஊடகங்களுக்கு விவரம் அளிப்பதை அந்தத் துறையின் அமைச்சர் விஜய பாஸ்கர் தான் செய்து வந்தார். இவர் மாறி அவர் வந்ததும் தில்லி தப்லீக் மாநாடு குறி … கொரோனாவை விட கொடூரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது என்பது அரசுகள் பின்பற்றி வரும் பொருளாதாரக் கொள்கை. அந்தக் கொள்ளை, மன்னிக்கவும் கொள்கை சரியா தவறா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நட்டமடைந்து விட்டது அதனால் விற்கிறோம் என்பது எளிதான பதிலாக இருக்கிறது. ஆனால் ஏன் நட்டமடைந்தது என்பதை அரசு மக்களுக்கு விளக்குவதே இல்லை. உலகிலேயே பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரவையை ஏற்படுத்திய முதல் அரசாங்கம் பாஜக அரசாங்கம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். (வாஜ்பேயி அமைச்சரவையில் அருண்ஷோரி என்பவர் … பி.எஸ்.என்.எல் ஏன் விற்கப்படுகிறது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
புத்தகங்களே துணை
இது 24.11.2017 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் புத்தகங்களே துணை எனும் தலைப்பில் ஆற்றிய சிறப்புரை. நூல்களை வாசிப்பது, நூல்களை நேசிப்பது, நூல்களை சுவாசிப்பது என்று படிப்படியாக நூல்களுக்குள் நுழைவதை ஒரு அழகியல் ஒழுங்கோடு புதிய வாசகனுக்கு எப்படி பரிமாறுவது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால் இது நீங்கள் கேட்க வேண்டிய ஓர் உரை. இந்த உரையைக் கேட்கும் யாருக்கும் நாமும் நூல்களை வாசிக்க … புத்தகங்களே துணை-ஐ படிப்பதைத் தொடரவும்.