"மக்கள் சேவையை மறந்த ஆட்சியாளர்கள்" வெளிச்சம் போடும் ஆய்வறிக்கை... தமிழ்நாட்டில் உள்ள 55 பொதுத்துறை நிறுவ னங்களும் 2017-18 ஆம் ஆண்டுக்கான கணக்குகளை இறுதிப்படுத்தியுள்ளன. அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு அறிக்கையை, மூன்று நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான செப்டம்பர் 16 அன்று பேரவையில் சமர்ப்பித்தனர். அது குறித்து ஒரு கண்ணோட்டம்: 276 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கைக்கு தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் முன்னுரை … பொதுத்துறை ஆய்வறிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: போக்குவரத்து
ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்
வெறும் நான்கு மணி நேர கால அவகாசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை அமல்படுத்தியதற்குக் காரணம் என்னவாக இருந்திருக்கக் கூடும்? பொதுமக்களை வீட்டுக்குள்ளேயே இருத்தி வைத்திருக்கவும், சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் தான் இதன் தேவையெனில், இந்நடவடிக்கை படுமோசமாகத் தோற்றல்லவா போயிருக்கிறது! இலட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பகல், இரவு, வெயில், மழை எனப்பாராமல் நடந்து, வெட்ட வெளிகளில் படுத்துறங்கி, போலீசின் பார்வையிலிருந்து சாதுர்யமாகத் தப்பி, சில சமயங்களில் லாரிகளின் தார்ப்பாய்களுக்குள்ளும்கூட ஒளிந்துகொண்டு ஏதாவதொரு வழியில் முண்டியடித்துக் … ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அமெரிக்காவை விட்டு சீனாவுக்கு அடியாளாகிறதா இந்தியா?
சீன அதிபர் ஷி ஜின் பிங் கும் இந்திய பிரதமர் மோடியும் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து பேசவிருக்கிறார்கள். இந்தச் சந்திப்புக்காக தடை விதித்ததாக கருத்தப்பட்ட விளம்பர தட்டி வைக்க நீதி மன்றம் அனுமதித்தது ஒருபக்கம் இருக்கட்டும். சிறு கடைகள் அடாவடியாக துடைத்தெறியப் பட்டிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும். பேரூந்துகள் தடை செய்யப்பட்டிருப்பதும், போக்குவரத்து மட்டுப்படுத்தப் பட்டிருப்பதும் ஒருபக்கம் இருக்கட்டும். மாமல்லபுரம் தங்கும் விடுதி சீன அதிகாரிகளுக்கு உவப்பில்லாததால் கிண்டிக்கு மாற்றப்பட்டதால் சென்னை நகரில் ஏற்படவிருக்கும் போக்குவரத்து நெரிசல் ஒருபக்கம் … அமெரிக்காவை விட்டு சீனாவுக்கு அடியாளாகிறதா இந்தியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
போக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் 7 நாட்களை கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் குடும்பத்தினர் போராட்டம், மக்களின் ஆதரவு என தொடர்ந்து விரிவடைந்து கொண்டும், வீரியமடைந்து கொண்டும் இருக்கிறது. இந்தப் போராட்டம் திடீரென நடைபெறவில்லை, தொடர்ச்சியாக நடைபெற்று வந்த போராட்ட முயற்சிகளின் தொடரியாகவே இந்த காலவரையற்ற போராட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், இந்தப் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தையும் மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். 7 நாட்களைக் கடந்த பின்பும் மக்கள் எதிர்ப்பு எதையும் பெரிதாக காட்டாதிருப்பத்லிருந்தே இது … போக்குவரத்து வேலை நிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?
நேற்று அரசுப் பேரூந்து நடத்துனர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 15ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தம் தொழிலாளர்களுக்கு உவப்பான முடிவை எட்டாமலேயே ஒத்தி வைக்கப்பட்டது குறித்து அவருக்கு உளச் சோர்வு இருந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோருக்கு இதே எண்ணம் தான் இருக்கக் கூடும். ஒரு போராட்டம் வெற்றியடைவது அல்லது சரியான திசையை நோக்கிச் செல்வது என்பது, போராடும் பிரிவினருக்கு அப்பால் சமூகத்தின் பிற மக்கள் அந்தப் போராட்டம் குறித்து என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. … போக்குவரத்து வேலைநிறுத்தம்: மிச்சமிருப்பது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.