ஹிஜாப்: இந்தியாவும் ஈரானும்

இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை போராட்டமாக மாறியது. அப்போது பலரும் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக நின்றனர், குறிப்பாக இடதுசாரிகள். ஒரு மதப் பழக்கத்தை இடதுசாரிகள் ஆதரிக்கலாமா? என்று அந்த நிலைப்பாடு அப்போது விவாதத்துக்கு உள்ளாகியது. கர்நாடக கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியலாமா கூடாதா அந்த வழக்கில் நீதிமன்றமே இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. அந்த வழக்கு தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ளது. கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியலாமா எனும் கேள்வி மதப் பழக்கம் எனும் … ஹிஜாப்: இந்தியாவும் ஈரானும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மீண்டும் நான்

தோழர்களுக்கு, நண்பர்களுக்கு வணக்கம். கடந்த 20 நாட்களாக பதிவு எதையும் நான் வெளியிடவில்லை. ஏன் என்று சிலர் செல்லிடப்பேசியிலும், பகிரியிலும் (வாட்ஸாப்) கேட்டிருந்தனர். நான் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணி பழுதாகி விட்டது. நான் தொடக்கத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்த மடிக்கணிணியை ஸ்டெர்லைட் போராட்ட வழக்கின் போது காவல்துறையினர் எடுத்துச் சென்று வழக்கில் சேர்த்து விட்டனர். இன்றுவரை அது கையில் கிடைக்கவில்லை. அதன் பிறகு அரசு தந்த மடிக்கணிணியைத் தான் பயன்படுத்தி வந்தேன். ஏற்கனவே இரண்டு முறை அந்த மடிக்கணிணி … மீண்டும் நான்-ஐ படிப்பதைத் தொடரவும்.

எது வன்முறை?

செய்தி: கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.என் .ரவி பங்கேற்றார். அதில் பேசிய அவர், எந்தவொரு சூழலிலும் வன்முறையை துளியும் ஏற்க முடியாது என கூறினர். நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான சக்திகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், சரணடைய மறுக்கும் எந்த ஒரு ஆயுத குழுவுடனும், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை ஒருவர் … எது வன்முறை?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சர்ணா மதம் காட்டும் வழி

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் முதன்மையான போராட்டம் ஒன்று நடந்தது. மிகமிக முதன்மையான இந்தப் போராட்டம் ஒரு நாள் செய்தியோடு முடிந்து போனது. அப்படி முடிந்து போகக் கூடாத இது போன்ற போராட்டங்கள் இந்தியாவெங்கும் நடக்க வேண்டும். ஜார்கண்ட், சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகள் தங்களை இந்து மதத்தில் சேர்க்காமல் சர்ணா எனும் மதமாக ஏற்க வேண்டும் என்று கோரி போராடியது தான் அந்த போராட்டம். … சர்ணா மதம் காட்டும் வழி-ஐ படிப்பதைத் தொடரவும்.

கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை

கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சிரீமதி மரணம் தொடர்பான போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையில் முடிந்தது. இதனால் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய, தீர்வு காணப்பட வேண்டிய சிரீமதியின் மரணம், அதற்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படும் மரணங்கள் உள்ளிட்டவை பின்னுக்கு தள்ளப்பட்டு, போராட்டத்தில் சிலரால் செய்யப்பட்ட வன்முறை பெரிய அளவில் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. எது சரி எது தவறு எனும் சமூக நிலைக்கு அப்பாற்பட்டு நீதித் துறையும், காவல் துறையும் வரைமுறையற்ற வன்முறையை … கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

வலிக்கிறது தம்பீ

துபாய் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்து வந்த என் தம்பி சிந்தா மதார் கடந்த ஜூலை 11 திங்கட் கிழமை மாலையில் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று துபாய் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. சரியாகச் சொன்னால் மரணமடைந்த பிறகு ஏழு நாட்கள் கடந்து எட்டாவது நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் மரண அறிக்கை போதிய விவரங்களின்றி இதயம் செயலிழந்ததால் மரணம் நேர்ந்திருக்கிறது என பொதுவாக குறிப்பிடுகிறது. எங்களுக்கு தெரியவந்த … வலிக்கிறது தம்பீ-ஐ படிப்பதைத் தொடரவும்.

போராட்டக் களத்தில்

ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 3 இந்தப் போராட்டத்தின் இலக்கே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மனு கொடுப்பது தான். இதை போராட்ட நாளுக்கு பல நாட்களுக்கு முன்பே போராட்டக் குழு வெளிப்படையாக அறிவித்து உள்ளது. ‘லட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம்’ என்பது போராட்டத்தின் முழக்கம். ஆனால் போரட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானோர் கூடி இருந்தனர். துல்லியமான எண்ணிக்கை தெரியாமல் போனாலும் இவ்வளவு அதிகமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது முன்கூட்டியே … போராட்டக் களத்தில்-ஐ படிப்பதைத் தொடரவும்.

இனவெறியூட்டும் ஊடகங்கள்

செய்தி: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .. .. .. நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு … இனவெறியூட்டும் ஊடகங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்

நெருப்புப் பாதை எனும் அக்னிபாத்தை அறிவிக்கும் போது, கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றச் சொன்ன அதே மனநிலையில் தான் மோடி அறிவித்திருப்பார் என எண்ணுகிறேன். எந்த எதிர்ப்பும் இன்றி அனைவரும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக விளக்கு ஏற்றுவதைப் போல் அக்னிபாத்தும் நடப்பு வந்து விடும் என மோடி எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் இந்த திட்டம் கடும் எதிர்ப்பை கண்டிருப்பதுடன், ரயில் எரிப்புப் போராட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டன. காவல் நிலையங்களும், பாஜக அலுவலகமும், ஒன்றிய அரசு … அக்னிபாத்: கட்டை விரல் கேட்கும் நவீன துரோணர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?

அரபு நாடுகளில் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்கிறார்கள். தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவிக்கிறார்கள், விளக்கம் கோருகிறார்கள். இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார்கள். குப்பைத் தொட்டிகளில் செருப்பாலடித்த மோடியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். தோஹா சென்றிருக்கும் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் கத்தர் அரசு நடத்தவிருந்த இரவு விருந்து ரத்து செய்யப்படுகிறது. இவைகளெல்லாம் நுபுல் சர்மா எனும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி … பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.