காட்டுமிராண்டித் துறை

செய்தி: 8.2.2021 அன்று மாலை 4.30 மணியளவில் திருப்பதி மற்றும் அவரது நண்பர்கள் மூவர் பாண்டிகோவிலில்  விழாவிற்கு டோல் அடிக்கும் பணி முடிந்து  காரில் வீடு நோக்கி வந்துள்ளனர், அப்போது மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் அவர்களை வழிமறித்த போலீசார், அவர்களை மரியாதை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்தி விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அதற்கு அவர்கள் மரியாதையா பேசுங்க சார் என்று கேட்டுள்ளனர். இது போதாதா போலிசுக்கு, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அங்கிருந்த காவலர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு மிருகத்தனமாக … காட்டுமிராண்டித் துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்

சாத்தான்குளம் தந்தை மகனான ஜெயராஜ் பெனிக்ஸ் படுகொலையில் ஈடுபட்ட காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். எதிர்க்கட்சியும், மக்களும், சமூக ஊடகங்களின் பங்களிப்புமே இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது என்பது மிகையல்ல. என்றாலும் இது மகிழ்வை பகிர்ந்து விட்டு முடித்துக் கொள்ளும் நிலையில் இல்லை. காவலர்களை தவிர இந்தப் படுகொலைகளுக்கு உடந்தையாய் இருந்த மருத்துவர், நீதிமன்ற நடுவர் ஆகியோர் குறித்து எந்த விவாதமும் இல்லாமல், எந்தச் சாட்டும் இல்லாமல், அடக்கப்பட்டிருக்கிறது. இதை நீதி கிடைத்திருக்கிறது என்பதை விட … பெனிக்ஸ் கொலையின் முடிச்சுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?

ஒவ்வொறு முறையும் அது மிக நிதானமாக, எல்லையில்லா வெறியுடன் பாய்ந்து குதறுவதும், பின் பதட்டமே இல்லாமல் தன் பற்களில் சொட்டும் குருதியை நாவால் தடவி ருசித்துக் கொண்டு கடந்து செல்வதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதை அடக்க முடியாது, பாய்ந்து குதறுவதற்காகவே அதை பழக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அது யார் மீது பாய்ந்து சிதைத்து துப்பி இருக்கிறது என்பதைக் கொண்டு (என்கவுண்டர்கள், கழிப்பறையில் வழுக்கி விழுவது போன்ற நிகழ்வுகளில்) பூப் போட்டு வாழ்த்துவதும் (ஜெயராஜ், … பெனிக்ஸ், பிளாய்ட் ஆவாரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கந்து வட்டி : மாற்று என்ன?

கடந்த ஆண்டு சின்னஞ்சிறு குழந்தைகள் இருவரும் அவர்களின் பெற்றோருமாய் நான்கு பேர் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரிக்கட்டையாய் எரிந்து போனதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து போயிருக்க முடியாது. கந்து வட்டிக்கு எதிராக அன்று பலரும் பேசினார்கள். கடுமையான சட்டம் வேண்டும் என்பதில் தொடங்கி, ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளருமே காரணம் அவர்களை தண்டிக்க வேண்டும் என்பது வரை மக்களின் கோரிக்கைகள் நீண்டன. அதே நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அதே கந்து வட்டிக் கொடுமை, … கந்து வட்டி : மாற்று என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்

புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம். இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் … போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?

ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர் – இளைஞர்கள் – மக்கள் மீது தமிழகம் முழுவதும் போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறை குறித்து மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு பேசுகிறார். இந்த அடக்குமுறை ஏன் ஏவிவிடப்பட்டது? இதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள்? இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரமான மற்ற பிரச்சினைகளோடு இணைந்து விடக்கூடாது என்று அரசு காட்டிய அவசரமான ஒடுக்குமுறையே இந்த அடக்குமுறை. ரவுடிகள் போல வன்முறை ஆட்டம் போட்ட போலீசார் தண்டிக்கப்படவேண்டும். தமிழக மக்கள் தமது போராட்டத்தை தொடர … மெரினா : போலீசு வன்முறையின் நோக்கம் என்ன ?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்

கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு எனும் முகாந்திரத்துடன் அரசுகளுக்கு எதிராக நடந்த மாணவர்கள், இளைஞர்களின் மாபெரும் போராட்டம் அரசு ரவுடிகளின் வக்கிரமான வன்முறை வெறியாட்டத்தால் முடிவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கிறது. அமைதியான, அறவழியிலான, இந்தியாவுக்கே முன்மாதிரி எனக் குறிப்பிடப்பட்ட போராட்டம் அரசினால் திட்டமிட்டு தீய்க்கப்பட்டிருக்கிறது. அரைநாள் நேரம் கொடுங்கள் நாங்களே கலைந்து செல்கிறோம் என்று மாணவர்கள் கோரினார்கள்,  பத்து மணி வரையாவது நேரம் கொடுங்கள் என்று கேட்டுப் பார்த்தார்கள். இரண்டு மணி நேரம் மட்டுமாவது கொடுங்கள் என்று கெஞ்சிப் … தீப்பொறியின் நாவுகள் பேசட்டும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?

நவம்பர் எட்டாம் தேதி மோடியிடமிருந்து கிளம்பிய பணத்தாள் மதிப்பிழப்பு எனும் ஓங்கலை (சுனாமி) மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டது, இன்னமும் சுருட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோடியும் அதன் வீழ்படிவுகளும், அரசும் அதன் காலாட்படைகளும் அது சரியான நடவடிக்கை என்று தடிக் கம்புகளால் நம்மை கனிய வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.   கடந்த ஆண்டின் இறுதி நாளன்று, மோடி விதித்த 50 நாள் கெடு முடிந்த பின்னரும் நிலமை சீரடையவில்லை என்பதால் மோடியைக் கண்டித்து இந்திய ஜனநாயக … பொறுக்கிகளை கல்லால் அடித்து விரட்டுவது நம் பண்பாடில்லையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?

சுவாதி கொலை வழக்கில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறைக்குள்ளேயே கொல்லப்பட்டு விட்டார். மூன்று நாட்களுக்குப் முன்பு, கார்த்திக் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக அவரின் பெற்றோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து சரிக்கட்ட முயற்சித்திருக்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். கடந்த வாரத்தில் நிகழ்ந்த இவை வெறும் தகவல்கள் அல்ல. மக்கள் மீது காவல்துறை கொண்டிருக்கும் மதிப்பீடு. காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற … ரவுடித்துறையை என்ன செய்யப் போகிறோம்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்

தமிழகத்தில் தேர்தல் ஜுரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அப்படித்தான் குறிப்பிட விரும்புகின்றன அனைத்து ஊடகங்களும். அதாவது பொய்யாக சொல்லிக் கொண்டிருந்த கொள்கை நிலைப்பாடுகளைக் கூட காற்றில் கடாசி விட்டு காசுக்காகவும், சீட்டுக்காகவும் மாறி, மாறி; மாற்றி மாற்றி பேசுவதையும் செயல்படுவதையும் தேர்தல் ஜுரம் என அடையாளப்படுத்துகின்றன ஊடகங்கள். இதுவரை ஓட்டுக் கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தமிழக தேர்தல் களத்தில், அந்தக் கட்சிகளுக்கு நிகரான ஒரு பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறது தமிழக தேர்தல் கமிசன். அதாவது, … தேர்தல் கமிசனின் அயோக்கியத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.