ஊரடக்கின் முரண்கள்

கொரோனா பரவியிருக்கும் நாடுகள் ஊரடக்கின் மூன்றாம் நாள் இன்று. கொரோனாவின் தாக்குதல் மிகக் கடுமையாய் இருக்கிறது. பன்னாட்டளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொடுகிறது. 22,000க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அறுநூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப் பட்டிருக்கிறது. பத்து பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் 30 பேராகவும் மரணமடைந்தது இரண்டு பேராகவும் இருக்கிறார்கள். கொரோனா பரவும் வேகம் அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. சற்றேறக் குறைய 90 நாளில் ஐந்து லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. … ஊரடக்கின் முரண்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4

  கடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான  நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள். நண்பர் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.