மீள் தொடக்கம்

மக்களியம் - பகுதி 2 வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து … மீள் தொடக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களியம்

உலகம் முழுவதிலும் உள்ள மக்களை கொரோனா எனும் நுண்ணுயிரி கடும் நெருக்கடிக்குள் தள்ளி இருக்கிறது. முன் காலங்களிலும் பலமுறை இது போல கொள்ளை நோய் உருவாகி மக்களை வதைத்திருக்கிறது. ஆனாலும், கொரோனா போல முன் எப்போதும் அரசே மக்களை முடக்கும் நடவடிக்கைகள் எடுத்ததில்லை. கொரோனா அச்சம் அந்த அளவுக்கு மக்களின் மனதை ஆட்கொண்டிருக்கிறது அல்லது, ஆட்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தொற்று நோயினால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட்சம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது இந்த நோயினால் … மக்களியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.