கடந்த இரண்டு ஆண்டுகளாகவே SOC க்குள் நடக்கும் குழப்பங்கள், தங்கராசு முறைகேட்டுக்குப் பிறகு வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றன. செயலர் பக்கமும், அதற்கு எதிர்ப் பக்கமும் தங்கள் தன்னிலை விளக்கங்களை அறிக்கைகள் எனும் பெயரில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்களுள் தனி(!) என நம்பப்படும் SOCயில் இவ்வாறான நேர்வுகள் நிகழ்வது கண்டு, பொதுவான சமூக செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருக்கலாம். ஆனால், இவை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியனவல்ல. SOCயின் தொடக்க காலத்திலிருந்தே விலகல்களும், விலக்கல்களும், பிளவுகளும் இருந்தே வந்திருக்கின்றன. … SOC: சில கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மக்கள் கலை இலக்கியக் கழகம்
சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!
சமச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் … சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!-ஐ படிப்பதைத் தொடரவும்.
சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!
தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு ஏற்கெனவே அமலில் இருக்கும் சமச்சீர் பாடத்திட்டம் தொடரவேண்டும். மற்ற வகுப்புகளுக்கான பாடநூல்களில் பல பிரச்சினைகள் இருப்பதாக தமிழக அரசு கூறியிருப்பதால், அவற்றை ஆராய தமிழக அரசு ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவேண்டும். அந்த நிபுணர் குழு 3 வாரத்திற்குள் தனது அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் மீது சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி … சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்
நண்பர்களே, அரசு என்பது ஆளும் வர்க்கத்தின் கையிலிருக்கும் போர்க்கருவி. இந்திய ஆளும் வர்க்கமான முதலாளிகளும், தரகுப் பண்ணைகளும் மக்கள் மீது தொடுத்திருக்கும் போர் தான் இந்த நக்சல் ஒழிப்புப் போர். நக்சல் ஒழிப்பு என்பது ஒரு காரணம், முதலாளிகளுக்கு எதிரான மக்களையும், முதலாளிகளுக்கு எதிரான மனோநிலையையும் அழித்து, துடைத்து எறிவது தான் நோக்கம். தீவிரவாதம், முன்னேற்றம் என்ற சொற்களையெல்லாம் யாருக்கு எதிரான தீவிரவாதம், யாருக்கு ஆதரவான முன்னேற்றம் என பிரித்து அறிந்து கொள்ள முடிந்தால் நக்சல்களுக்கு எதிரான … மக்கள் மீதான போர்தான் அரசு தொடுத்துள்ள நக்சல் ஒழிப்புப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.