தோழர் கோவன் செய்த குற்றத்தை நானும் செய்வேன்.

ko arr

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக்குழு தோழர் கோவன் நள்ளிரவில் கைது.

இன்று 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் அவரைக் கைது செய்து செய்தனர். அவர் மீது

124 ஏ தேசத்துரோக நடவடிக்கை,

153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல்,

502/1 அவதூறு செய்தல்

ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

“மூடு டாஸ்மாக்கை” என்று பாடியது தான் தேசத் துரோகம்.

டாஸ்மாக்கை மூடு என்று பிரச்சாரம் செய்தது சமூகத்தில் மோதலை ஏற்படுத்தும் செயல்.

அரசே சாராயக் கடை நடத்தலாமா? என்று கேட்டால் அது அவதூறாம்.

என்ன செய்யப் போகிறோம் நாம் .. .. ..?

இதோ தோழர் கோவன் செய்த குற்றத்தை நானும் செய்கிறேன். 

நீங்களும் செய்யுங்கள்.

%d bloggers like this: