கொலைகளின் நீர்த்த வடிவமே கைது

கொலைகளின் நீர்த்த வடிவமே கைது. சமூக ஊடக சலம்பல்களால் கடவுள் மறுப்பு பரப்புரையை தடுத்து விட முடியுமா? சாதிக்சமது கைதை முன்வைத்து கைது ஆத்திகர்களின் வெற்றியா? நாத்திகர்களின் தோல்வியா?அரசின் தன்மை என்ன? அரசு ஏன் கைது செய்கிறது? எது விமர்சனம்? எது அவதூறு? மனம் புண்படுவது ஏன்? உள்ளிட்ட பல சேதிகளை விளக்கும் காணொளி. https://www.youtube.com/watch?v=Ry88We4CoUU

கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள்.  “நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு … கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே-ஐ படிப்பதைத் தொடரவும்.

சனாதனம் எனும் நஞ்சு

ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார். அதாங்க, பெண்கள் என்னை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதாக சொல்கிறார்களே அந்தக் கடவுள் தான். அவரைப் போற்றி ‘அரிவராசனம்’ என்றொரு பாடல் எழுதப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் தவறாமல் பாடும் பாடல் அது. அந்தப் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிறதாம். இதை கொண்டாடுவதற்கு, ஐயப்ப சேவா சங்கம் எனும் அமைப்பு சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் ஆளுனர் ரவி கலந்து கொண்டார். அதாங்க, இந்த திமுக காரங்க ‘ஆட்டுக்கு … சனாதனம் எனும் நஞ்சு-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்

ரஹ்மத்நிசா செந்தில் குமார் திருமணம் கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் … கடையநல்லூர் நோட்டீசும் பெண்ணியமும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பிய்ந்த செருப்பு இருக்கிறதா?

ஜெகத் கஸ்பரின் யுடியூப் பேட்டி ஒன்றைப் பார்த்தேன் (liberty Tamil சானலில்). அதில் அவர் ஓரிடத்தில் தனக்கு தில்லியில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்தது என்கிறார். தமிழகத்தில் உள்ள கிறுத்துவர்களை ஒரு வாக்குவங்கியாக திரட்டி அவர்களிடம் பிரச்சாரம் பண்ணினால் 20 இடங்களை பெற்றுத் தருவதாக கூறியிருக்கிறார்கள். இவர் தனக்கு மதசார்பற்ற அரசியலில் மட்டுமே நம்பிக்கை எனச் சொல்லி அதை மறுத்திருக்கிறார். பாஜகவினரின் சிறுபான்மை அரசியல் குறித்த ஒரு சரியான புரிதல் இதில் … பிய்ந்த செருப்பு இருக்கிறதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?

நேற்று இரவு பெங்களூருவில் வன்முறை வெடித்தது, கடைகள், வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை அடக்க கண்ணீர்புகை குண்டு வீசியும் அடங்காததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மரணமடைந்தனர். தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளது, என்றாலும் நகரின் பல இடங்களில் மக்கள் கூட தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படித் தான் செய்திகள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன் தில்லியில் சங்கிகள் வன்முறை செய்தார்கள். இப்போது பெங்களூருவில் முஸ்லீம்கள் வன்முறை செய்திருக்கிறார்கள். இரண்டுமே கண்டிக்கத் தக்கது என்று ஒப்பீட்டு … பெங்களூரு வன்முறை: எதிலிருந்து புரிந்து கொள்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இஸ்லாம்: விவாத நேர்மை

விந்து குறித்த குரானின் விந்தைகள் என்ற என்னுடைய பழைய பதிவில் யாஸீன் என்பவருடன் கடந்த சில நாட்களாக நடந்த விவாதம் இது. இது அந்தப் பதிவின் மேலதிக விளக்கமாக இருக்கும் என்பதாலும், விவாதம் என்று வருகிற மதவாதிகளின் விவாத நேர்மை என்பது எந்த அளவுக்கு மட்டமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்பதாலும் இதை தனிப்பதிவாக வெளியிடுகிறேன். விந்து வெளிப்படும் இடம் குறித்து குர்ஆன் கூறினால், அது ஏன் உற்பத்தியாகும் இடம் குறித்து கூறவில்லை என … இஸ்லாம்: விவாத நேர்மை-ஐ படிப்பதைத் தொடரவும்.

நான் இந்து அல்ல, நீங்கள்..?

கொரோனாவின் கோரம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் காவி பாசிசங்களும் அவர்களின் காலாட்படையான சங்கிகளும் தங்களின் வன்மத்தை கைவிடவில்லை, கைவிட மாட்டார்கள் என்பதை தப்லீக் மாநாடு விதயத்தில் பார்த்தோம். வரலாறு நெடுகிலும் அவர்களின் நோக்கம் திட்டம் எல்லாம், சாதியக் கொடுங்கோன்மையை மீண்டும் பழைய விதத்தில் அட்டியின்றி நடப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பது மட்டும் தான். இந்து என்றொரு மதமே இல்லை என்பதும், பார்ப்பன மதத்தின் மீது போர்த்தப்பட்டிருக்கும் போர்வை தான் அது என்பதும் … நான் இந்து அல்ல, நீங்கள்..?-ஐ படிப்பதைத் தொடரவும்.

சட்டியில இருப்பது அம்புட்டுத்தேன். சிரிச்சே சாகுங்க!

பாகிஸ்தான், தீவிரவாதம், மதம், ராம், ஹிந்து, முஸ்லிம் இந்த 6 வார்த்தைகளை தவிர்த்துவிட்டு,2 நிமிடம் கூட சங்பரிவார்களால் பேசமுடியது..! தொலைக் காட்சி விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது காங்கிரஸைச் சேர்ந்த ஒருவர் சவால் விடுகிறார்... பிஜேபியினருக்கு 'பாகிஸ்தான், தீவிரவாதம், மதம், ராம், ஹிந்து, முஸ்லிம்' இந்த ஆறு வார்த்தைகளை பயன்படுத்தாமல் 2 நிமிடம் பேச முடியுமா? என்று பிஜேபியினருக்கு சவால் விட்டுப் பேசினார். சவால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிஜேபியை சேர்ந்த ஒருவர் பேச ஆரம்பிக்கிறார். பேச ஆரம்பித்து 10 … சட்டியில இருப்பது அம்புட்டுத்தேன். சிரிச்சே சாகுங்க!-ஐ படிப்பதைத் தொடரவும்.

விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?

ஹெல்மெட் பிள்ளயாராக அவதாரமெடுக்கும் பிள்ளையார் மக்களைக் கொல்லும் திட்டங்களுக்கு எதிராக ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பிள்ளையார், எட்டுவழிச் சாலை எதிர்ப்பு பிள்ளையார், கெயில் எதிர்ப்பு பிள்ளையார், ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிள்ளையார் என்பன போன்று அவதாரமெடுப்பாரா? வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரம், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் என்று தான் பொருள். அந்த அளவுக்கு திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்டு, முனைப்பெடுத்து, தன் மறை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படுபவைகள் தாம் இவ் விழாக்கள். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் … விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.