பொன்னியின் செல்வன் என்றொரு திரைப்படம் வந்தாலும் வந்தது. ‘இ’னா ‘ஈ’யன்னா தெரியாவிட்டாலும் கூட இராஜராஜனைப் பற்றி பேசுவோம் என்று சமூக வலைதளங்களில் எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலில் இதுவரை இல்லாத அளவில் அன்றாட நாட்களில் கூட பெருங்கூட்டம் கூடுகிறதாம். வரலாற்றை அறிந்து கொள்வது குறித்த விருப்பம் தற்காலிகமாக சற்று கூடியிருக்கிறது என்பதைத் தவிர இந்த அலப்பல்களில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் எதையும் தன்னுடைய மேலாதிக்கத்துக்கு ஏற்ப திரிப்பதையே நோக்கமாகக் கொண்ட அதிகாரத்தில் … அசோகர் இந்துவா? முஸ்லீமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மதவாதம்
இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?
தேசபக்தி - அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் … இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3
நண்பர் விவேக், உங்களின் பல பின்னூட்டங்களுக்குப் பிறகு தாமதமாக பதிலளிக்க நேர்வதற்கு வருந்துகிறேன். எழுதுவதை விட வேறு அலுவல்களுக்கு முதன்மை அளிக்க வேண்டிய தேவை இருப்பதால் தவிர்க்க இயலவில்லை. உங்களின் பல பின்னூட்டங்களின் கருத்தை தொகுத்தால் அது அறிவியல் குறித்தும் தத்துவம் குறித்துமான குழப்பத்துக்கே இட்டுச் செல்கிறது. தத்துவம் என்பதை அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக புரிந்து கொள்வதில் இருந்து தான் மேடா பிசிக்சின் அடிப்படை தொடங்குகிறது. நீங்கள் கூறும் விழிப்புணர்வு கொண்ட ஆற்றல் என்பதை என்ன அடிப்படையின் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 3-ஐ படிப்பதைத் தொடரவும்.
மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?
அன்பார்ந்த நண்பர்களே! தோழர்களே! நான் முகநூலில் அதிகம் உலவுவனல்லன். அதன் விருப்பக் கணக்குகளிலும், பகிர்வு எண்ணிக்கைகளிலும் சிக்கிக் கொள்பவனல்லன். காரணம், முகநூல் போன்ற சமூக அரட்டை ஊடகங்கள் நம் பெரும்பகுதி நேரத்தை விழுங்கும் பெரும்பசியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், அது நம் சமூக உணர்வுகளை வரம்பிட்டு மழுங்கடிக்கும் உத்தியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டிருகின்றன என்றும் நான் ஏற்றிருப்பதால் தான் முகநூலில் அதிக நேரத்தை செலவிடுவதில்லை. ஆனாலும் வெகு சில போதுகளில் சில குறு விவாதங்களில் … மல்லையாவும், ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளும், ரிலையன்ஸ் ராணுவமும் 251 ரூபாய் போனுக்கு ஈடாகுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்
விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 5 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பகுதி ஐந்தை படிக்க இங்கே சொடுக்குங்கள். 5.1, 5.2 கற்பனை உரையாடலின் ஐந்தாவது பகுதியை \\\கணபதி திக்குமுக்காடி அதிர்ச்சியுடன் நின்றார்/// என்று முடித்திருக்கிறார்கள், கடந்த பகுதிகளைப் போலவே இந்தப் பகுதியிலும் கம்யூனிஸ்டின் பேச்சாகவே இருக்கிறது. ஆனாலும் கடைசியில் ஒரு ‘பன்ச்’சுடன் முடித்திருக்கிறார்கள். அவர்களின் அந்த ‘பன்ச்’ஐ கேட்டுத்தான் கம்யூனிஸ்ட் அதிர்ச்சியில் திக்குமுக்காடி நிற்கிறாராம். இதுவரை முஸ்லீம், … எதிலும் மேலோட்டமாக இருப்பதே மதவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரிலுள்ள மதபிழைப்புவாதக் கும்பல் அன்மையில் காணொளி ஒன்றை வெளியிட்டது. இப்படி காணொளிகளையும், கேட்பொலிகளையும் அடிக்கடி வெளியிடுவது அந்த மதபிழைப்புவாதக் கும்பலுக்கு வாடிக்கை தான் என்றாலும் இந்த முறை அவர்கள் வெளியிட்டது வினவு தோழர்களை எதிர்த்து. அந்த காணொளியை கண்டு நமக்கு அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் வெளியிட்ட பல காணொளிகளை கண்டு தொலைத்த அனுபவம் நமக்கு இருக்கிறது என்பதாலும், இது அந்த மதவாதக் கும்பலுக்கு வழக்கமான ஒன்று என்பதாலும் … நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
செங்கொடியல்ல இஸ்லமே கற்பனைகளின் களம் 19
விந்து குறித்த குரானின் விந்தைகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு மறுப்புக் கட்டுரை என்றால் எதை மறுக்கிறோமோ அதில் எழுதப்பட்டவைகளை உள்வாங்கி அதன் ஒட்டு மொத்த சாரத்தை மறுக்கும் நோக்கில் விபரங்களையும் விளக்கங்களையும் எடுத்து வைக்க வேண்டும். நண்பர் இஹ்சாஸின் பதிவை எடுத்துக் கொண்டால் மேற்குறிப்பிட்ட ஏதாவது இருக்கிறதா? இந்த நிலையில் அதையும் மறுத்து எழுத வேண்டும் என்றால் .. .. .. மெய்யாகவே மிகக் கடினமான ஒரு வேலை தான். குரான் … செங்கொடியல்ல இஸ்லமே கற்பனைகளின் களம் 19-ஐ படிப்பதைத் தொடரவும்.