இன்று விநாயகர் சதூர்தியாம். கொரோனாவால் இந்தக் கூத்துகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கடவுளை வைத்து வழிபடுவதற்கும், கடவுளை வைத்து அரசியல் செய்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. பிற மதத்தினர் செய்வதெல்லாம் கடவுளை வைத்து வழிபடுவது தொடர்பான திருவிழாக்கள், இந்து மதத்தில் செய்யப்படுவதெல்லாம் கடவுளை வைத்து அரசியல் செய்வது தொடர்பான விழாக்கள். ஆனால் இதில் சிக்கல்கள், தடைகளை எதிர் கொள்ளும் போதெல்லாம் கடவுளை இழிவுபடுத்துகிறார்கள், கடவுளை வழிபட தடை விதிக்கிறார்கள் என்றெல்லாம் கூப்பாடு போட்டு, அரசியல் கடவுளை, … இந்து மதப் பண்டிகைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மதவெறி
கொரோனாவிட நீங்க தாண்டா தொல்லை
தங்கள் தோல்வியை மறைக்க ஊடகங்கள் துணையுடன் இஸ்லாமிய வெறுப்பை பரப்பி வருகிறது அரசு. மக்கள் முன்வைக்கும் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பது தங்கள் கடமையல்ல என்று கறாராகவும், கண்ணும் கருத்துமாகவும் செயல்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அரசு, தில்லி தப்லீக் மாநாட்டை முன் வைத்து கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என்பது போன்ற, வைரஸ் ஜிகாத் என்பது போன்ற வதந்திகள் மூலை முடுக்கெங்கும் பரவுவதை வேடிக்கை பார்க்கிறது. தப்லிக் மாநாட்டுக்கு முன்னும் … கொரோனாவிட நீங்க தாண்டா தொல்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே. 1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?
அண்மையில் நண்பர் சாதிக் சமத் முகநூலில் பதிவொன்றை இட்டிருந்தார். அதன் உள்ளடக்கத்தை அவரின் சொற்களாலேயே குறிப்பிடுவதென்றால், சிந்தாந்த அடிப்படியில் ஹிந்துவமும் இஸ்லாமும் வேறு வேறு அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் இந்துதுவ பாஸிசத்திற்கு எதிராக முஸ்லிம் மௌலவிகளுடன் கை கோர்த்து போராடலாம் என்று எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை இரண்டு இஸங்களும் நம்மை போன்ற சாதி கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரானதே என்பதை பலர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் கோவை குண்டு வெடிப்பு, இலங்கை தேவலாய குண்டு … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?
தோழர் செங்கொடி, மதங்கள் என்பவை பகுத்தறிவை முடமாக்குபவை, நிலப்பிரபுத்துவத்தையும், முதலாளித்துவத்தையும் கட்டிக்காப்பவை, பெண்களை அடிமையாக்குபவை என்பன போன்ற உண்மைகளை சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள் உணர்ந்துகொள்வார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இஸ்லாம் எனும் மதத்தில் மட்டும் ஒரு புதிரான மற்றும் கொடுமையான, அதாவது, பகுத்தறிவுக்கு நேர் எதிரான ஒரு நம்பிக்கை வேர்விட்டு தளைத்திருக்கிறதே, அதுகுறித்துதான் உங்களின் விளக்கத்தை வேண்டுகிறேன். கேள்வி – அல்லா தனது தூதர் முகமது மூலமாக வழங்கிய குரான், மனித … அழகிய முன்மாதிரி முகம்மதா? ஏகாதிபத்தியமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கோவை ஃபாரூக்: இரண்டு முனையிலும் முன்னேற்றமில்லை
கடந்த 16/03/2017 அன்று இரவு திராவிடர் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தோழர் ஃபாரூக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் அதன் அதிர்வலைகள் அடங்கவில்லை. அந்த அளவுக்கு அந்தப் படுகொலையின் தாக்கம் இருக்கிறது. முதலில், ஒரு பெரியாரிய செயற்பாட்டாளரை இஸ்லாமிய மதவாதிகள் கொல்லத் துணிவார்களா? எனும் கேள்வி முதன்மையானது. அடுத்து, இந்தப் படுகொலையின் பிறகான எதிரொலிப்புகள் இஸ்லாமிய இயக்கங்களிடமிருந்தும், பெரியாரிய, இன்னும்பிற சமூக இயக்கங்களிலிருந்தும் மிக நிதனாமான, உணர்ச்சிவயப்படாத அணுகுமுறை. இந்தக் … கோவை ஃபாரூக்: இரண்டு முனையிலும் முன்னேற்றமில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..
உலக ஊடகங்கள் கண்களை மூடிக் கொண்டனவா? கடந்த பத்து நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் கேள்வி இது தான். ஊடகங்கள் ஜநாயகத்தை காக்கின்ற தூண்களில் ஒன்று என்றும், உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அவைகளை உலக மக்களின் முன் வைக்கும் கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது என்றும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் உண்மையான தகவல்களை மக்களிடம் சேர்க்கும் முனைப்புடன் இருப்பவையே ஊடகங்கள் என்றும் மூடநம்பிக்கையில் இருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட கேள்வியை எழுப்ப முடியும். அரசு … ரொகிங்கியா இனப்படுகொலைகளை முன்னிட்டு .. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.
மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு
நண்பர் சாருவாகன் அண்மையில் ஒரு கட்டுரை “மோடியை எதிர்ப்பது எப்படி?” எனும் தலைப்பில் எழுதியிருந்தார். படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. சரியின் பக்கம் இருப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் எப்படி பிசிறடித்து பாசிசத்தின் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள் என்பதற்கான விளக்கமாக அந்தக் கட்டுரை இருந்தது. மட்டுமால்லாது அது புரட்சிகர இடதுசாரி அரசியலையும் மறுக்கும் விதத்தில் பயணித்திருந்தது. நண்பர் சாருவாகனின் எழுத்தின் மீது ஒரு மதிப்பு இருந்து வந்திருக்கிறது எனும் அடிப்படையில் அவரின் பிறழலை சுட்டிக்காட்டுவது கடமை என்றாவதால் இந்த மறுப்பு … மோடி: முதலாளித்துவ சுரண்டலுக்கும் பார்ப்பன பாசிசத்திற்குமான குறியீடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்
கடந்த சில ஆண்டுகளாக டிசம்பர் ஆறு என்றதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் என்பதாக நினைவுக்கு வரும். 1992 க்கும் 2010 க்கும் இடைப்பட்ட எல்லா டிசம்பர் ஆறிலும் இந்த உணர்வு முஸ்லீம்களை போராட்டத்தின்பால் திரட்டியிருக்கிறது. ஆனால் அகமதாபாத் கட்டப்பஞ்சாயத்திற்குப் பிறகான இந்த முதல் டிசம்பர் ஆறில் ஒரு வெறுமை சூழ்ந்திருக்கிறது. சில அமைப்புகள் போராட்டம் வேண்டாம் என முடிவு செய்திருக்கின்றன. சில அமைப்புகள் போராட்ட நாளை மாற்றியிருக்கின்றன. சில அமைப்புகள் சுரத்தின்றி போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. … பாபர் மசூதி இடிப்பும் டிசம்பர் ஆறும்-ஐ படிப்பதைத் தொடரவும்.