ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை

மாநில அரசாங்கங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிப்பதை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசாங்கம். மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காவல் துறையை ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்த நிகழ்வுகள் மூலம் சிந்திப்பவர்கள் கண்டுணரலாம். தமிழ்நாட்டில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கி இருக்கிறது. ஆளுனராக ரவி நியமிக்கப்பட்டவுடன் காவல்துறை உயரலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்தியதை அரசியல் உணர்வுள்ளவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அன்றிந்து இன்று வரை காவல்துறை அப்பட்டமான பக்கச் சார்புடன் … ஆளுனரின் கட்டுப்பாட்டில் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.

சமணர் கழுவேற்றம்

சமணர் கழுவேற்றம் - ஒரு வரலாற்றுத் தேடல் - கோ. செங்குட்டுவன். சேக்கிழாரால் பெரிய புராணத்தில் குறிப்பிடப்பட்ட்டிருக்கும் சமணர் கழுவேற்றம் வரலாறா? கற்பனையா? கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்ததாக கூறப்படும் மதுரையை ஆண்ட கூன்பாண்டியன் எட்டாயிரம் சமணர்களை கழுவேற்றிய நிகழ்வு, அன்றிலிருந்து இன்றுவரை பெரும் விவாதத்தை சுழித்துச் சுழித்து நடத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. இது குறித்த விரிவான வரலாற்று சான்றுகளை தேடித் தொகுத்திருக்கும் நூல் இது. வரலாற்றில் நிகழ்ந்ததாக கூறப்படும் எந்த ஒரு நிகழ்வையும் அதன் … சமணர் கழுவேற்றம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக

பத்தாவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது வழக்குறைஞர்களின் பட்டினிப் போராட்டம். நீதிமன்றங்களில் வழக்கு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் தமிழையும் அங்கீகரிக்கவேண்டும் எனும் கோரிக்கையுடன் மதுரையில் தொடங்கிய இந்த பட்டினிப் போர் சென்னை, புதுவை, கோவை, புதுக்கோட்டை என விரிவடைந்து கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்புகளும், மக்களும் ஆதரவளித்து வருகிறார்கள். தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் மாநிலத்தில் தமிழ் மொழியையும் வழக்கு மொழியாக செயல்படுத்துங்கள் என போராடும் நிலை என்பது முரண்பாடான ஒன்றாய் தோன்றலாம், ஆனால் இந்த முரண்பாடு மொழியோடு மட்டும் … வழக்குறைஞர்கள் பட்டினிப் போராட்டம்: தமிழ் வாழ்க, தமிழர் மடிக-ஐ படிப்பதைத் தொடரவும்.