மீள் தொடக்கம்

மக்களியம் - பகுதி 2 வாழ வேண்டும். உயிர் வாழ வேண்டும் இது மட்டுமே அனைத்து உயிர்களையும் உந்தும் ஒரே உள்ளாற்றல். இன்னும் அதிக காலம் உயிர் வாழ்வது எப்படி எனும் கேள்வியே அனைத்து உயிர்களையும், குறிப்பாக மனிதர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது. மனிதன் கண்டுபிடித்த அனைத்துக்கும் இது தான் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. மனிதனின் தொடக்க காலங்களை எடுத்துக் கொண்டால், ‘உண்ணு, உண்ணப்படாமலிரு’ என்பது தான் ஒரே இலக்கு. அந்த ஒற்றை இலக்கிலிருந்து மனிதன் வெகு தூரம் கடந்து … மீள் தொடக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

Interstellar: திரைப்படத்தை முன்வைத்து

இண்டர்ஸ்டெல்லர் என்றால் விண்மீன்களுக்கு இடையேயான பயணம் என்று பொருளாம். அறிவியல் புனைகதைகள் ஈர்ப்பு மிக்கவைகள். அவைகளின் கதைக் களம் மூன்றாம் தர மசாலை நெடியுடன் இருந்தாலும் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் புனைவு நம் கற்பனைகளை விரிக்கும் என்பதால், அறிவியல் மீதான ஆர்வத்தை தூண்டும் என்பதால் அவைகளின் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. அந்த வகையில் இண்டர்ஸ்டெல்லர் மிகச் சிறந்த படமாக கொள்ளலாம். இது 2014ல் வெளிவந்த படம். ஆங்கிலப் படங்களை பார்த்து தோராயமாக புரிந்து கொள்ள மட்டும் தான் … Interstellar: திரைப்படத்தை முன்வைத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.

அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!

  அரசியல் வெற்றிடம் என்றொரு சொற்றொடர் தமிழக அரசியலில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. யதார்த்தத்தில் அப்படி ஒரு வெற்றிடம் இருக்கிறதா? என்பது ஒருபக்கம் இருக்கட்டும். தமிழக இஸ்லாமியர்களிடம் ஓர் அரசியல் வெற்றிடம் நீண்ட காலமாகவே நிரப்பப்படாமல் இருக்கிறது. அதேநேரம் தமிழக இஸ்லாமியப் பரப்பில் வஹ்ஹாபிய இயக்கங்கள் செல்வாக்குடன் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒன்றாக இருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பில் தற்போது நடந்து கொண்டிருக்கும் குழப்பங்கள், தமிழ்நாட்டில் வஹ்ஹாபிய இயக்கங்கள் தங்களின் கடைசி மூச்சில் … அல்தாபி, பிஜே: சாக்கடைகளை விலக்கி மக்களுக்காக சிந்திப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்

  உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது. பொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா? பல காரணங்களுக்காக அது சரி தான்  என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும்  பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4

  கடவுள் எனும் மீப்பெரும் ஆற்றலின் இருப்புக்கான நோக்கம், மனிதனின் தினப்படி வாழ்வில் குறுக்கீடு செய்து அவனுக்கு வழிகாட்டுவது என்பதாகும். இது தான் பொதுவான, பெரும்பாலான மக்களின் கடவுள் மீதான  நம்பிக்கையாக, ஆன்மீகமாக இருக்கிறது. ஆனால், இதுவல்லாத மாற்றொரு முறையில் கடவுள் நம்பிக்கையை விவரிக்கிறார் நண்பர் விவேக். இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல, சங்கரர் அருளிய மாயை தத்துவத்திலிருந்து கொண்டு தான் நண்பர் விவேக் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு எளிமையாக சங்கரர் காலத்திலேயே பதிலும் அளித்திருக்கிறார்கள். நண்பர் … கடவுளை நம்புவோருக்கு ஒரு சவால் 4-ஐ படிப்பதைத் தொடரவும்.

பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்

சுவனப்பிரியனுக்கு மறுப்புரை – பகுதி 4 எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவுகள் 1. குரைஷி குலம் உயர்ந்ததாக நபிகள் நாயகம் சொன்னார்களா? 2. ஆண் பெண் பற்றிகம்யூனிசம் கூறிய கருத்துகளுக்கு மறுப்பு “தள்ளாத வயதிலும் நீங்கள் கடவுள் இல்லை என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், கடவுள் பக்தி குறையவில்லையே” இது ஒருமுறை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வி. இதற்கு பெரியாரின் பதில் என்ன தெரியுமா? “ரோஷம் இருப்பவர்கள் தான் புரிந்து கொள்வார்கள், மாற்றமடைவார்கள். ரோஷமில்லாதவர்களுக்கு புரியவும் … பெரியாரின் சொல்லை மெய்ப்பிக்கும் சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்

  சுவனப்பிரியனுக்கு மறுப்புரை - பகுதி 3   எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி”   இந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும். முதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும் … தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி

மதவாதி என்பதற்கான இலக்கணத்தை கொஞ்சமும் விட்டு விலகாமல் கடைப்பிடிக்கிறார் சுவனப்பிரியன். விசயத்தை குழப்புவது, தெளிவாகத் தெரியும் உண்மைகளை மறுப்பது, சுற்றி வளைப்பது, எது பேசுபொருளோ அதைத் தவிர மற்றெல்லாவற்றையும் பேசுவது, யதார்த்தத்தை பரிசீலிக்காமல் தான் சொல்வது மட்டுமே சரி என குருட்டுத்தனமாக வாதிடுவது இவைகளெல்லாம் மதிவாதியின் இலக்கணம். இவை அனைத்தும் சுவனப்பிரியனிடம் ஒருங்கே குடி கொண்டிருக்கின்றன. இந்த உலகம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? சூழலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன? மனிதன் எங்கணம் எதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான்? அதிலிருந்து … சுவனப்பிரியன் – தலையை மண்ணுக்குள் புகுத்தி இருட்டெனக் கூறும் நெருப்புக்கோழி-ஐ படிப்பதைத் தொடரவும்.

கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்

நேற்று கேள்வி பதில் பகுதியில் மணி எனும் நண்பர் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதற்கான பதில் சற்று நீளமாக வந்து விட்டதால், பதிவாக இட்டுவிட்டேன். பொருத்தருள்க.   நண்பரே,   சுவனப்பிரியன் என்பவர் நாத்திகர்களுக்கு நரக தண்டனை கொடுப்பது சரியானது தான் என்று கூறுகிறார். மனைவி எல்லோருக்கும் எல்லாப் பணிவிடைகளையும் சரியாகச் செய்து நல்ல பெயர் எடுத்து இருந்தாலும் பக்கத்து வீட்டு ஆடவருடன் உடலுறவு வைத்ததை எப்படி ஒரு கணவனால் ஏற்க முடியும்? அதேபோல் நாத்திகன் பல … கள்ள உறவுக்குள் ஒழியும் கடவுள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 25 குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள் மனிதப் பார்வையா? இறைப் பார்வையா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: நட்சத்திரங்களும் நகைப்புக்குறிய வாதங்களும்   நட்சத்திரங்கள் குறித்து குரான் கூறியிருக்கும் சில வசனங்கள் நகைப்புக்கிடமானவைகளாக இருக்கின்றன, அறிவியல் பார்வையாக இல்லை என்பது எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தப் பதிவில் மூன்று கருத்துகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்று கருத்துக்களையும் நண்பர் இஹ்சாஸ் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது முதன்மையான விசயமாக இருக்கிறது.   முதலாவதாக, … குரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.