இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?

தேசபக்தி - அண்மைக் காலங்களில் மிகவும் அச்சுறுத்தலை உண்டாக்கக் கூடியதாக மாறியிருக்கும் சொல். இனி, கத்தியைக் கொண்டு ஒவ்வொருவர் இதயத்தையும் பிளந்து தேசபக்தியை கீறி எடுத்தாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை. தேசிய கீதம், தேசியக் கொடி, பாரதமாதா, இந்தி, பசு, கருப்புப் பணம், காவி, கமண்டலம், யோகா .. .. .. என தேசப் பற்றுக்கான குறியீடுகள் நம்மை குறி பார்த்து தாக்கத் தொடங்கி விட்டன. தேசப் பற்று என்ற பெயரில் அரங்கேற்றப்படும் மதவாதம், இந்தியாவை அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியில் … இந்தியா: மக்களுக்கா, மதத்துக்கா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி

பொதுவாக நான் ஆங்கிலக் கட்டுரைகளை வாசிக்க முயல்வதில்லை. ஏனென்றால் என் ஆங்கிலப் புலமையின் உயரம் அவ்வளவு தான். தேவை ஏற்படும் போது மொழிபெயர்ப்புகளை நாடுவதும், கிடைக்காவிட்டால் மொழிபெயர்ப்பு கருவிகளை நாடுவதும் தான் என் வழக்கம். மொழிபெயர்ப்புக் கருவிகள் வழியாக புரிந்து கொள்ள முயல்வது என்பது இடியாப்ப இழைகளை நேர்படுத்தும் திறமையை ஒத்தது. அண்மையில் ஒரு மொழி பெயர்ப்புக் கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். படித்து முடிக்க முடியாத அளவுக்கு எரிச்சல் வந்தது. அந்த அளவுக்கு மனம்போனபடி, கட்டுரையின் கருத்தை … ஓராண்டுகளுக்குப் பிறகும் பதிலில்லாமல் தொடர்கிறது தாத்ரி-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்

  2009 ல் இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரின் இறுதிக் கட்டத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிங்கள பாசிச அரசால் கொல்லப்பட்டட்து அறிந்ததே. இது குறித்து ராஜபக்சே கூறிக் கொண்டிருந்தவை பொய் என்பதை சேனல் 4 நிறுவனம் அண்மையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அம்பலப்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவும் இலங்கையை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று சில கட்சிகளும் இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று வேறு சில கட்சிகளும் குரல் … ஈழம்: 80களின் எழுச்சியை மீண்டும் ஏற்படுத்துவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!

நண்பர்களே, திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது. மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், … குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஐ நா விலா? ஆத்தாங்கரையிலா? ஓநாய்களின் துணையோடு எங்கு பேசினாலும் அது ஆடுகளுக்கு பாதுகாப்பல்ல.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் உக்கிரமாக நடைபெற்றுவந்த இன அழிப்புப்போரானது, பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் கொன்றொழித்ததன் மூலம் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புலிகளிடம் சிக்கிக்கொண்டிருந்த மக்களை மீட்டுவிட்டதாக ராணுவம் அறிவித்தாலும்; முகாம் என்று பொதுப்படையாக சொல்லப்படும் வதை முகாம்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் வதைபட்டுக் கொண்டிருக்கின்றனர். காயமடைந்து உருக்குலைந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கின்றனர். குடியிருந்த இடங்களெல்லாம் மண்மேடாகிக் கிடக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான போர், புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக மிகப்பெரிய … ஐ நா விலா? ஆத்தாங்கரையிலா? ஓநாய்களின் துணையோடு எங்கு பேசினாலும் அது ஆடுகளுக்கு பாதுகாப்பல்ல.-ஐ படிப்பதைத் தொடரவும்.