தீபாவளியைக் கொண்டாடாதீர்

அன்பார்ந்த தொழிலாளர்களே! தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது? மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒரு அவதாரத்தின் போது நரகாசுரன் என்ற அசுரன் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவதே தீபாவளி என்கிறது, வேதமதமாகிய இந்து மதம். யார் இந்த நரகாசுரன்? இரண்யாக்சன் என்றொரு ராட்சசன் பூமியை பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒழித்து வைத்து விட்டான். பூமாதேவியை மீட்க மகாவிஷ்ணு பன்றியாக (வராக அவதாரம்) உருவெடுத்து கடலுக்குள் புகுந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது விஷ்ணு பூமாதேவியின் மீது காமமுற்றதால், நரகாசுரன் பிறந்தானாம். அவன் தேவர்களைக் கொடுமை … தீபாவளியைக் கொண்டாடாதீர்-ஐ படிப்பதைத் தொடரவும்.

யார் சொத்துக்கு யார் சண்டை போடுவது?

மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? … யார் சொத்துக்கு யார் சண்டை போடுவது?-ஐ படிப்பதைத் தொடரவும்.