ஆர்எஸ்எஸ் என்றால் என்ன?அதன் நோக்கம் என்ன?இந்தியாவில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்ஸை எப்படி எதிர்கொள்வது?இதுபோன்ற பல விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் மருதையன். திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்ததா என்பது தலைப்பு.தலைப்பைப் பார்க்கும்போதே, திமுக ஆட்சியில் அல்ல என்று சொல்லத்தான் விழைகிறார்கள் என்பது புரிந்து விடுகிறது. (திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்று சொல்ல முடியாதுதான்.ஆனால் திமுக ஆட்சியிலும் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்பதை மறைக்க முயற்சி செய்கிறது இந்த நேர்காணல்) தமிழ்நாட்டில் … ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்கொள்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மருதையன்
திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை
தமிழ்நாட்டின் 2021 சட்ட்மன்ற தேர்தல், திமுக, அதிமுக வுக்கு இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இந்திய அளவில் ஓர் இன்றியமையாத திருப்புமுனையைக் கொண்டிருக்கும் தேர்தல். பாஜகவின் இறுதி இலக்கை நோக்கிய பயணம், அதை தடுக்கும் வாய்ப்பில் குறைந்த அளவிலேனும் தகுதியும் ஆற்றலும் கொண்டிருக்கும் அமைப்பு எது? இது தேர்தலுடன் முடிந்து போகும் ஒரு விதயமல்ல போன்ற பலவற்றை விளக்குகிறார் தோழர் மருதையன். ஜீவசகாப்தனின் லிபர்டி தமிழ் யூடியூப் வலையோடைக்கு அளித்த செவ்வி இது. பாருங்கள் .. புரிந்து … திமுகவின் வெற்றி இந்தியாவின் தேவை-ஐ படிப்பதைத் தொடரவும்.
SOC: சில கேள்விகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே SOC க்குள் நடக்கும் குழப்பங்கள், தங்கராசு முறைகேட்டுக்குப் பிறகு வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றன. செயலர் பக்கமும், அதற்கு எதிர்ப் பக்கமும் தங்கள் தன்னிலை விளக்கங்களை அறிக்கைகள் எனும் பெயரில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் புரட்சிகர இயக்கங்களுள் தனி(!) என நம்பப்படும் SOCயில் இவ்வாறான நேர்வுகள் நிகழ்வது கண்டு, பொதுவான சமூக செயற்பாட்டாளர்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்திருக்கலாம். ஆனால், இவை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியனவல்ல. SOCயின் தொடக்க காலத்திலிருந்தே விலகல்களும், விலக்கல்களும், பிளவுகளும் இருந்தே வந்திருக்கின்றன. … SOC: சில கேள்விகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது
தில்லியில் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக, கடுங்குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளும், விவசாய அமைப்பினரும், இன்னும் பலரும் போராடி வருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்குவதை தவிர வேறெதையும் ஏற்க முடியாது என்று உறுதியுடன் போராடி வருகிறார்கள். அரசு நடத்தும் பேச்சுவார்த்தை நாடகங்கள் எடுபடாமல் போய்க் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று அரசு சிந்திப்பதன் அடுத்த கட்டமாக நீதி மன்றம் களத்தில் குதித்திருக்கிறது. போராடும் மக்களை நேரடியாக மிரட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் நீதி … விவசாயிகளை அப்புறப்படுத்த சதி நடக்கிறது-ஐ படிப்பதைத் தொடரவும்.
தூத்துக்குடி மக்களால் தலைநிமிர்ந்த தமிழ்நாடு
மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பதே அரிதான இந்த இருண்ட நாட்களில், ஒரு சிறிய ஒளிக்கீற்று போல வந்திருக்கிறது ஸ்டெர்லைட்டுக்கு எதிரான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. உலகெங்கும் தனது குற்ற நடவடிக்கைகளால் இழிபுகழ் பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான வேதாந்தாவுக்கு எதிராகப் பெற்றிருக்கும் இந்த வெற்றிக்காக, தமிழகம் திமிருடன் தலை நிமிர்ந்து நிற்கலாம். போராட்டம் நடைபெற்ற அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன. அன்று மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திளைத்திருந்தபோது, தூத்துக்குடியில் மெரினாவைப் போன்ற ஒரு மக்கள் திரள் கூடி … தூத்துக்குடி மக்களால் தலைநிமிர்ந்த தமிழ்நாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்
எந்த வர்க்கத்தினரின் உயிரை கொரோனாவிடமிருந்து பாதுகாப்பதற்காக, எந்த வர்க்கத்தினர் சாக வேண்டும்? மும்பை – பாந்த்ராவில் நேற்று நடைபெற்றிருக்கும் தடியடி, சிதறிக் கிடக்கும் செருப்புகள், ஏழைத் தொழிலாளிகளின் கண்ணீர் – இவற்றைக் காணச் சகிக்கவில்லை. “யாரோ ஒருவர் சோறுபோடுவார் என்று நாங்கள் எப்படி கையேந்தி நிற்க முடியும்?” என்று கேட்கிறார் ஒரு தொழிலாளி. “சோறு போட வக்கில்லாத அரசுக்கு எங்களைத் தடுத்து வைக்க என்ன உரிமை இருக்கிறது?” என்று அந்த அப்பாவி மக்களுக்கு கேட்கத் தெரியவில்லை. எல்லோருக்கும் … பட்டினியால் சாவதை விட கொரோனாவால் சாவதே மேல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா!
அனிதாவின் தற்கொலை தோற்றுவித்திருக்கும் தமிழக மக்களின் கோபத்தை திசைதிருப்ப ஆர்.எஸ்.எஸ் கும்பலால் இறக்கிவிடப்பட்டிருக்கிறார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி. நீட் தேர்வை ஆதரித்து பேசும் தமிழக பாஜக தலைவர்கள் இப்போது முன்னிலும் அதிகமாய் இதுதான் எதிர்காலம், மாணவர்கள் தயாராக வேண்டும் என கட்டளை இட்டு வருகின்றனர். நீட் தேர்வை ஏற்பதற்கு அதுதான் தரம் குறித்த தரமான சோதனை, தரமான மருத்துவர்களை கண்டுபிடிக்கும் தரமான தேர்வு, இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள், மருத்துவக் கவுன்சில் முடிவு செய்வதை … நீட் அடிமைகள் மீது காறி உமிழ்கிறாள் அனிதா!-ஐ படிப்பதைத் தொடரவும்.