பல எச்சரிக்கை அறிகுறிகுறிகளும், தொடர்ந்து அதிகரித்து வரும் பெருமளவிலான ஆதாரங்களும் ஆண்களின் பாலின ஆரோக்கியத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதையே குறிக்கின்றன.கடந்த ஐம்பதாண்டுகளில், உலகம் முழுவதும் விந்து எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. அசாதாரண விந்தணு மாற்றங்களும், ஆண் மலட்டுத் தன்மையின் விகிதமும், பெருமளவு அதிகரித்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இரு மடங்காகி இருக்கிறது. கேள்வி என்னவென்றால், "ஏன்"? நாற்பதாண்டுகளாக ஃப்ளோரிடாவில் ஒரு மாசடைந்த ஏரியில் வாழும் அலிகேட்டர் முதலை இனத்தை தொடர்ந்து கண்காணித்து, ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள், … ஆண்கள் மறைந்து கொண்டிருக்கிறார்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மருத்துவம்
நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,
“சித்தா வெறியர்ஸ்” பிரபல பதிவராக இருக்கும், எதையும் உளவியல் ரீதியாக அணுகும், கம்யூனிசத்தில் அக்கரை கொண்ட தோழர் ஒருவரின் சொற்கள் இவை. ஏன் இவ்வளவு வன்மம். தொடர்ந்து இப்படியான சொற்களும், முத்திரை குத்தல்களும் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன, கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதோ ஓரிரு எடுத்துக்காட்டுகள். “சித்தம், ஓமியோபதி, இயற்கை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது. கொஞ்சம் விஞ்ஞானத்தின் குரலை கொஞ்சம் கேளுங்கள்” இது இன்னொரு நண்பர். அதாவது அலோபதி தவிர வேறு … நாங்கள் தூக்கில் தொங்கி விடட்டுமா தோழர்களே,-ஐ படிப்பதைத் தொடரவும்.
‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?
செய்தி: எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற் கான 'நீட்' எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் … ‘நீட்’டா .. ? ‘தீட்’டா .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
உயிர்க் கொல்லி நோய்கள்
மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா? இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம். அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் … உயிர்க் கொல்லி நோய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
உடல் எனும் பொதுவுடமை சமூகம்
கொரோனா எனும் தொற்று நோய் அச்ச உணர்வு எனும் ஆயுதம் கொண்டு உலகை ஆண்டு கொண்டிருக்கும் காலகட்டம் இது. கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளில் பெரும்பாலானவை ஊரடங்கு எனும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சமூகத்தை பார்க்காமல் அல்லது பார்க்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அனைத்துக்கும், இந்த ஆறு மாத காலங்களில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு ஆட்பட்டிருப்பதும், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்து போனதும் காரணமாக இருக்கிறது. இந்த நோய்க்கு … உடல் எனும் பொதுவுடமை சமூகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: WHO வை நம்பலாமா?
டெட்ரோஸ் அதனோம் உலகம் முழுவதையும் கொரோனா பயம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அதாவது சமூக விலக்கம் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் மார்ச் 25 தொடங்கி ஏப்ரல் 14 வரை இருபத்தியோரு நாட்கள் ஊரடங்கு ஆறிவிக்கப்பட்டு நடமுறைப்படுத்தப்படுகிறது. இந்த 21 நாட்களை கொண்டாட்டமாக செல்பி எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிடுவது. என்ன சாப்பிட்டோம் என்பது தொடங்கி என்ன படம் பார்த்தோம் என்பது வரை பதிவிட்டு, பதிவிடத் தூண்டி ஆறாத … கொரோனா: WHO வை நம்பலாமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2
இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படித்து விட்டு இதை தொடர்வது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். அதை இந்த இணைப்பில் சென்று படிக்கலாம்: கொரோனா: ஊரடங்கின் பிறகு? திருட்டு அதிகரித்து விட்டது அதானால் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தலாம். பிற நாட்டினர் இங்கு சட்ட விரோதமாக வசிக்கிறார்கள் அதனால் குடியுரிமை சட்டம் திருத்தப்படலாம். மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க முடியவில்லை. முறைகேடு நடக்கிறது. அதனால், தேசிய அடையாள அட்டையை உருவாக்கி … கொரோனா: ஊரடங்கின் பிறகு? 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொரோனா: ஊரடங்கின் பிறகு?
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கில் அதிகரிக்குமோ எனும் அளவுக்கு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு எனும் வீட்டுச் சிறைக்குள் மக்கள் தங்களைத் தாங்களே பிணைத்துக் கொண்டுள்ளார்கள். போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் 200 கிமீ தூரம் கூட மக்கள் நடந்தே கடக்கிறார்கள் எனும் செய்திகளையும், ஊரடங்கு காலத்தில் இதுவரை பட்டினியால் 22 பேர் மரணமடைந்துள்ளார்கள் எனும் செய்தியையும், விளைந்தும் அறுவடை செய்ய முடியாத, கறந்த பாலை சாக்கடையில் கொட்டும் செய்திகளையும் காணும் போது, மழுங்கிய … கொரோனா: ஊரடங்கின் பிறகு?-ஐ படிப்பதைத் தொடரவும்.
நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்
இன்றைய போதில் கொரோனா அச்சம் மக்களிடம் பரப்பப்பட்டு, அதன் உச்சத்தை எட்டி நிற்கிறது. எவ்வாறெனில், உலக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அச்சப்பட்டு மாதக்கணக்கில் தங்களை வீடுகளுக்குள்ளேயே அடைத்துக் கொள்ள எண்ணும் அளவை எட்டியிருக்கிறது. இந்த பயம் தேவையா? தேவயில்லையா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். உலகின் மக்கள் அந்த பயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் எனும் போது, அதற்கு எதிராக பேசுவது, அதற்கான உண்மையை உணர்வதிலிருந்து விலகும் இடத்துக்கு மக்களை கொண்டு சென்று விடக் கூடாது. … நுண்ணுயிர் தேற்றம் – ஆந்தொய்னே பீச்சாம்ப்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊரடக்கின் முரண்கள்
கொரோனா பரவியிருக்கும் நாடுகள் ஊரடக்கின் மூன்றாம் நாள் இன்று. கொரோனாவின் தாக்குதல் மிகக் கடுமையாய் இருக்கிறது. பன்னாட்டளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தொடுகிறது. 22,000க்கும் அதிகமானோர் மரணமடைந்திருக்கிறார்கள். இந்தியாவில் அறுநூறுக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்குதல் கண்டறியப் பட்டிருக்கிறது. பத்து பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இதுவே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் 30 பேராகவும் மரணமடைந்தது இரண்டு பேராகவும் இருக்கிறார்கள். கொரோனா பரவும் வேகம் அச்சமூட்டக் கூடியதாக இருக்கிறது. சற்றேறக் குறைய 90 நாளில் ஐந்து லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. … ஊரடக்கின் முரண்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.