ஓங்கட்டும் நாட்டுப்பற்று! ஒழியட்டும் மறுகாலனியாக்கம்! மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்! அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலைகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியெடுத்தது. ஆனாலும் தனியார் கல்லூரிகளின் கொட்டம் அடங்கவில்லை. கடந்த … பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மறுகாலனியாக்கம்
கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்
அண்மையில் நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல் முடிவுகளின் மூலம் ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவாலும், யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை வாக்காக அளிக்கலாம் எனும் நோட்டோ முறையும் விவாதத்தைக் கிளப்பி வரவேற்பை பெற்றிருகின்றன. தேர்தல் காலங்களில் வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்களிடம் இவை புதிய நம்பிக்கையை தோற்றுவித்திருக்கின்றன. அரசும் கட்சிகளும் அப்படித்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்ய விரும்புகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தேர்தலில் வாக்களித்து, ஜனநாயகக் … கேஜரிவால், நோட்டோ – வழுக்குப் பாறைகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!
அன்பார்ந்த உழைக்கும் பெண்களே ! முதன் முதலில் மார்ச் 8 படைத்த பெண்கள் ஏதோ வேலைக்கு சம ஊதியம் என்ற கூலி உயர்வு பிரச்சனைக்காக போரடிய நாள் மட்டும் அல்ல. ஆண்களுக்கு இணையான ஊதியம், நிர்ணயித்த வேலை நேரம், வாக்குரிமை என தங்கள் அரசியல் உரிமைக்காக போரடிய நாள் தங்களுடைய உரிமைகளைப் பெற போராட வேண்டும், அமைப்பாக திரள வேண்டுமென பெண்கள் தங்களே உணைர்ந்த நாள். உலகிற்கும் உணர்த்திய நாள். டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹெகனில் … மார்ச் 8 – உலக உழைக்கும் பெண்கள் தினம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?
சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் மாவோயிஸ்டு கொரில்லாக்களால் கடத்தப்பட்டிருக்கும் சம்பவம், அரசு மற்றும் ஆளும் வர்க்க ஊடகங்களிடம் ஆத்திரத்தையும் வெறியையும் கிளப்பியிருக்கிறது. “அரசாங்கம் இனிமேலாவது முதுகெலும்புடன் நடந்து கொள்ளவேண்டும்” என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் நரைத்த மீசைகளின் ஊடாக ஆங்கில சானல்களில் உருமுகிறார்கள். “தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லையென்று மாவோயிஸ்டுகள் நிரூபித்துவிட்டதால், எதிரி நாட்டுப் படையாகக் கருதி மாவோயிஸ்டுகளை ஒடுக்கவேண்டும்” என்று தலையங்கம் தீட்டியிருக்கிறது தினமணி. இத்தகைய வழிமுறையைக் கையாண்டிருப்பதன் மூலம், உன்னதமான … மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தல் தவறா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் உச்ச நிலைக்கு வந்திருக்கிறது. கடந்த மே 1 உழைப்பாளர் தினத்திலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்றிலிருந்து ஐநூறு பெண்களையும் உள்ளடக்கி நான்காவது நாளாக போராட்டம் தொடர்கிறது. மக்கள் எந்த சஞ்சலமும் அற்று போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். போராடும் மக்கள் மீது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, ராஜதுரோகம் செய்தது போன்ற கருப்புச் சட்டங்களை வீசி மிரட்டிப் பார்த்தது அரசு; ஐநூறு கோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று எலும்புத் … இடிந்தகரை மக்களின் கம்யூனிசப் பண்பாடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்
சில நாட்களுக்கு முன்னர் ஒரு வாரம் இருமுறை இதழில் ஒரு செய்தி வந்திருந்தது. சென்னை தரமணியில் நுண்ணலை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சமீர்) மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செல்லிடப்பேசி, மின்னணுவியல் பொருட்களை மிகச்சிறிய அளவில் தயாரிக்கும் இதில் நடந்த 20 கோடி ரூபாய் ஊழல் குறித்து அந்தச் செய்தி தொடர்கிறது. நீங்களும்கூட இந்தச் செய்தியை படித்து கடந்திருக்கக் கூடும். ஆனால், மத்திய … குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?
கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜெயாவின் வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசுசாரா அமைப்புகள் அணு உலைகள் ஆபத்தானவை என்று கூடங்குளம் பகுதிகளில் மக்களிடையே செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அதனைத் தொடந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதும் அந்த மக்களிடையே மிகுந்த பய உணர்வை தோற்றுவித்தது. அதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் இங்கும் நடந்தால் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குக் கூட … கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்
ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம். 1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் … சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்
அண்மையில் இந்திய ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழுந்தன. இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி என்றன, அதாவது இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர் என்றன. போராட்டம் என்றாலே முகஞ்சுழிக்கும்; வாழ்வின் அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்கும் கணவான்களெல்லாம் மெழுகுதிரி ஏந்தி ஊழலுக்கு எதிரான தங்கள் பங்களிப்பை செய்தார்கள். இத்தனைக்கும் தொடக்கம் கதர் குல்லா அணிந்து காட்சியளிக்கும் அன்னா ஹசாரே. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சட்ட வரைவு நாடாளுமன்ற பரணில் முடங்கிக் கிடக்கிறது. உயர் பதவியில் … அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.
திருப்பூர்: மிரட்டும் சாயப்பட்டறை முதலாளிகள்
அண்மையில் சுத்திகரிப்பு முறையை செயல்படுத்தாத திருப்பூர் சாயப்பட்டறைகளை மூடச்சொல்லி உத்தரவிட்டது நீதிமன்றம். அதனையடுத்து திருப்பூரில் போராட்டம் கடையடைப்பு என தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நீதிமன்றம் சரியாக உத்தரவிட்டிருக்கிறது என்றும், தொழிலாளர்கள் வேலை இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் இருவேறு விதமாய் பேசி விவாதித்து வருகிறார்கள். ஆனால் இது திருப்பூர் மட்டுமே சார்ந்த விசயம் என்றோ, மாசுகட்டுப்பாட்டுத்துறையின் அலட்சியம் மட்டுமே காரணம் என்றோ இதை குறுக்கிவிடமுடியாது. உலக அளவில், குறிப்பாகச் சொன்னால் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் இருக்கும் இந்தப் பிரச்சனையின் … திருப்பூர்: மிரட்டும் சாயப்பட்டறை முதலாளிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.