ஒரு குறும்படத்தால் என்ன செய்ய முடியும்? ஒரு குறும்படத்தைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்? கலையின் அழகியலில் யதார்த்தம் என்பது என்ன? அரசு என்றால் என்ன? பாசிசம் என்றால் என்ன? ஒரு பாசிச அரசின் கீழ் நாம் இருக்க நேர்ந்தால் என்ன செய்யலாம்? உண்மைகளை பேசும் வழிமுறை என்ன? இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கு மிக எளிமையாகவும், கூர்மையாகவும், ஆறே நிமிடத்தில் புரியவைத்துவிட முடியும் என்று காட்டியிருக்கிறார்கள் இந்த குறும்படத்தில். பாருங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் … இதை முதல்ல பாருங்க!-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: மாணவர்கள்
குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?
2017 லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் முதுகலை ஆங்கில பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த, அருந்ததி ராய் எழுதிய “Walking with the Comrades” என்ற நூலின் பகுதிகள் தற்போது பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமாய் இருந்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவ குண்டர் படையான ஏபிவிபி எனும் அமைப்பின் மிரட்டல். இதை கண்காணிக்க வேண்டிய, சரி செய்வதற்காக தலையிட வேண்டிய அதிமுக அரசாங்கமோ மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த பாடம் நீக்கப்பட்டது … குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கற்க கசடற விற்க அதற்குத் தக
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என அரசு அறிவித்திருப்பதை தொடர்ந்து, எல்லோரும் தங்கள் உவகையை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த கொரோனா அச்சத்திலும் தேர்வை நடத்தியே தீர்வது என்று அரசு கடைசி வரை முயன்றது. இதற்கு மேலும் இழுத்துப் பிடித்தால் இருக்கும் கொஞ்ச மதிப்பையும் இழக்க நேரிடலாம் என்பதால் வேறு வழியின்றியே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி நிறுவனங்களின் வேட்டை எனும் காரணம் இருக்கிறது. மறுபக்கம், புதிய கல்விக் கொள்கை என்பதன் … கற்க கசடற விற்க அதற்குத் தக-ஐ படிப்பதைத் தொடரவும்.
விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?
முன் குறிப்பு: இந்தக் கட்டுரை ஓரிரு ஆண்டுகளுக்கு முன் எழுதி சில காரணங்களுக்காக வெளியிடாமல் வைத்திருந்தேன். தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், மாணவர்கள், இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் குறித்த அடிப்படை புரிதலை இக் கட்டுரை வழங்கும். வியாபம் ஊழல் எப்படி கோடிக்கணக்கான மாணவர்களின் கல்வி எனும் உழைப்பை மிகக் கொடூரமாக சுரண்டியதோ, அதே போலவே, தமிழ்நாட்டின் டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளும் கொடூரமான சுரண்டலே. ஆனால், மாணவர்கள் இளைஞர்களிடமிருந்து இதற்கு போதிய … விருப்பப்பட்ட வேலை வேண்டுமா இளைஞர்களே?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஏவல் நாய்கள்
தில்லி ஜாமியா மாணவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய போது காவல்துறை கண்மூடித் தனமாக தாக்கியது. காவல் துறை உயர் அதிகாரிகளும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதை மறுத்தனர். காவலர்களே தீ வைக்கும், கல்லெறியும், காணொளிகள் இணையத்தில் வெளியாயின. இரண்டு மாதங்களைக் கடந்த பின்னும் காவல்துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மெரீனா எழுச்சியின் போது கூட காவல் துறையினர் வாகனங்களை அடித்து நொறுக்கும், வாகனங்களுக்கு தீ வைக்கும், குடிசைகளை சேதப்படுத்தும், திருடும் காணொளிகள் வெளியாகி … ஏவல் நாய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
வெறிபிடித்து அலையும் காவல்துறை
"மர்ம உறுப்பை குறி வைத்து தாக்கினார்கள்", கேட்கும் போதே காதில் அமிலத்தை ஊற்றியதை போல் இருக்கிறது. தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவி தான் இப்படி கதறுகிறார். ஜாமியா மில்லியா மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று பிப்ரவரி 10 ஆம் தேதி காலை நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக கிளம்பியுள்ளனர். பாராளுமன்றம் நடைபெற்று வருவதால் கவன ஈர்ப்பாக இருக்கும் என இந்தப் போராட்டம். … வெறிபிடித்து அலையும் காவல்துறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
தாக்கியது ABVP தான்
ஞாயிற்றுக் கிழமை இரவில் ஜேஎன்யூ வில் நடத்தப்பட்ட தாக்குதலில், தாக்குதலில் ஈடுபட்டது RSS ன் மாணவர் அமைப்பான ABVP தான் என்று மாணவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் கூறினார்கள். ஆனால் பிஜேபியினரோ இடதுசாரிகள் தாம் கலகம் நடத்தினார்கள் என்றார்கள். இங்குள்ள நாரவாய் நாராயணனும் அதையே வாந்தியெடுத்தான். நடுநிலை என்ற பெயரில் சிலர் கல்வி வளாகத்தினுள் இப்படி கலகம் செய்வதை கண்டிக்கிறோம் என்று, தாக்குதலை கலகம் என்றார்கள். அமித்ஷா விசாரணை நடத்தப்படும் என நாடகமாடினார். இதோ, இப்போது ABVP … தாக்கியது ABVP தான்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!
ஜெயலலிதா செத்ததற்குப் பிறகு, கருணாநிதி செயல்பட முடியாமல் போனதற்குப் பிறகு, தமிழகமே தனக்கு ஒரு தலைவர் இல்லாமல் தவிப்பது போலவும், இக்கட்டான இந்த நேரத்தில் ரஜினியும், கமலும் விஜயும், விஷாலும் நம்மை காப்பாற்றி வாழவைக்க வரிசை கட்டி நிற்பதாகவும் ஊடகங்கள் பரபரப்பு ஏற்படுத்துகின்றன. அரசியலில் நமக்கான அடுத்த தலைமை யார்? என்பதை இவர்கள் வரையும் ஒரு வட்டத்துக்குள் நின்று நம்மை சிந்திக்க வைக்க பழக்குகின்றன ஊடகங்கள். “இனி எவன் வந்தாலும் நமக்கு ஒன்னும் ஆவப் போறதில்லை, … ரீல் ஹீரோக்களும், ரியல் ஹீரோக்களும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!
பதினைந்து நாட்களாக தொடர்கிறது நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம். மாணவர்களோடு தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும் கரம் கோர்த்திருக்கிறார்கள். ஊடகங்கள் வேறு நிகழ்வுகளுக்கு தாவி விட்டாலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, எரிந்து கொண்டிருக்கிறது மாணவர் இளைஞர்களின் போராட்ட நெருப்பு. பல தரப்பு மக்களும் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தின் தொடர் முயற்சிகளில் ஒன்றாக மாப்பிக்ஸ் எனும் யுடியூப் தளவரிசையில் இன்குலாப் ஜின்தாபாத் எனும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. உத்வேகத்தை தூண்டும் இசையாக, உணர்வேற்றும் குரலாக, பார்ப்பனிய, கார்ப்பரேட் பயங்கரவாதங்களை நினைவு … அஞ்சாத கூட்டமே, மாணவப் படையே!-ஐ படிப்பதைத் தொடரவும்.
நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மாணவர்கள் இளைஞர்களால் ஆறாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு தகுதித் தேர்வு என்பதைக் கடந்து புதிய கல்விக் கொள்கையின் பிரச்சனைகள், மோடி அரசு ஏன் இதை திணிப்பதற்கு இவ்வளவு பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது என்பன போன்ற கேள்விகளின் வழியாக அரசு என்றால் என்ன எனும் புரிதல்களுக்குள் மாணவர்களும் இளைஞர்களும் கடந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேடல்கள் அவர்களின் போராட்ட குணத்தை மேலும் வலுவாக்குகிறது. அந்த வகையில் நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிகும் … நீட்: கூட்டாட்சிக்கும் சமூக நீதிக்கும் எதிரானது – ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.